Skip to content

தாரமே தாரமே வா-12

56 / 100 SEO Score

தாரமே தாரமே வா-12

அத்தியாயம்-12

 

இரவு வந்து விட்டாலும் அறைக்கு செல்ல மனம் முரண்டியது. ஆனால் போகாமலும் இருக்க இயலாது. மணி வேறு எட்டு ஆகின்றன. ரியா எட்டு முப்பதிற்க்கே உணவினை உண்பாள் என்று அக்கா வைதேகி சொல்லிய தகவல் தான். என்னதான் செய்ய என்றிருக்கும் நேரத்தில் தான் போன் அழைப்பு வந்தது.

எடுத்து பார்க்க அதில் மஸ்தான் என்றதும் எடுத்து காதுக்கு வைத்தான்.

”சார் இந்த போனில் இருக்கும் நபர் நல்லா தண்ணியை போட்டுட்டு மட்டையா இருக்கார் சார்.. கொஞ்சம் வந்து கூட்டிட்டு போறிங்களா?” என்றது எதிர் குரல்.

”எங்கே?” என்று ரித்தீஷ் கேட்க எதிர்ப்பக்கம் இடத்தை சொல்ல ”சரி வர்றேன்.. கொஞ்சம் பார்த்துக்கோங்க” என வைத்தவன் ஆட்டோ எடுத்து அவர்கள் சொன்ன பாருக்கு சென்றான். உள்ளே நுழையும் பொழுதே குப்பென்ற வாடை அடிக்க கர்சீப் கொண்டு முகத்தை மூடியபடி போனான்.

”மஸ்தான்…” என நெருங்க

”சார் நீங்க தான் போனில் பேசியவரா? என்ன சார் முதல் தடவை குடிச்சு இருப்பான் போல, பாருங்க எல்லாம் வாந்தி எடுத்து இடத்தை நாற வச்சிட்டான். கிளீன் பண்ண எவ்ளோ நேரமாச்சு தெரியுமா?” என கடை ஓனர் கத்தினான்.

”எத்தனை குடும்பம் இப்படி குடிச்சி அழிஞ்சு இருக்கும் பின்ன இங்க வாந்தி எடுக்கமா வேற எங்க எடுக்க?” என்றான் ரித்தீஷ் பொறுமையாய்.

கடைக்காரனோ அடப்பாவி அமைதியா இருக்கான் பார்த்தா ரொம்ப தான் பேசறான்

மஸ்தானை கை தாங்களுடன் அழைத்து கொண்டு ஆட்டோவில் ஏற்றினான்.

அவனோ குழலறாக ”ஈஸ்வர் நீயா? எதுக்கு டா நீ எல்லாம் இங்க வந்த.. நான் தான் வரணும் நீ வரக்கூடாது” என்று தத்துவம் பேசினான்.

”என்ன பாய் இப்படி பண்ணிட்டீங்க?” என்றான் ரித்தீஷ்

”ஈஸ்வர்… முடியலை… தினம் தினம் செத்து போற மாதிரி இருக்கு… எப்ப தான் முடிவு வரும்” என்றதும் மஸ்தானை பார்க்க பாவமாக இருந்தது.

மஸ்தான் பன்னிரெண்டாம் வரை தான் படித்தவன்… ரித்தீஷ் போலவே அந்த வயதிலே ஆட்டோ ஒட்டியவன் தான். அவன் மனம் இலக்கியா மீது நாட மதம் காரணம் கொண்டு அவனே பின்னர் மனதை வேறுப்பக்கம் செலுத்தினான். தூரத்து உறவில் அப்பாவின் ஒன்றுவிட்ட அக்கா கணவர் இங்கு வர உதவி புரிந்தவர், திடீரென தனது மகளை மணக்க கேட்க, அவனும் இலா மீது இருக்கும் விருப்பம் தீயாக மாறுவதற்குள் தனக்கு ஒரு துணை வந்து விட்டால், அப்படி தோன்றாது என அவனும் ஒப்பு கொண்டான். இடையில் அந்த தூரத்து உறவின் மகள் போனில் தான் வேறு ஒருவரை விரும்புவதாக சொல்லி அதற்கு மஸ்தானிடமே உதவி கேட்க, அதற்கு தூரத்து மாமா அவரோ உனக்கு செய்த உதவிக்கு நன்றி கடனாக மகளை மணந்து கொள். அதுயிது என்று சொல்லி, எப்படியோ அவர் மகள் பாத்திமாவை மஸ்தானுடன் சேர்த்து நிக்காஹ் செய்து வைத்திட, பாத்திமா- மஸ்தான் இருவருமே வாழ முடியவில்லை. பாத்திமாவிற்கு மஸ்தான் இலாவை விரும்புகின்றான் என அறிந்த பின்னர், என் காதலை சேர முடியாம செய்ததால இப்ப நான் உன்னை விட்டு போக மாட்டேன் அவளோட நீ எப்படி வாழுவ?’ என்று அவளும் ஒரு கட்டத்தில் இலாவுக்கு மஸ்தான் தன்னை போலவே அவனும் விரும்பி இருக்கின்றான் என்று அறிந்து கொண்டாள்.

மஸ்தான் பாத்திமா வாழ்வு இப்படியாக நாட்கள் கழிய பாத்திமாவும் தற்பொழுது இப்படி வாழும் வாழ்வில் விருப்பம் குறைந்து விட்டது. தந்தைக்காக மஸ்தானோடு வாழ்வதா? என்ற முடிவில் தான் சிந்தனை சுழன்றது. அதுக்கும் மஸ்தான் ஓரளவு தாயரான முடிவில் இவன் இலா என்றும் அவள் அன்வர் என்றும் வாழ, மனதில் நிம்மதி இல்லாது போனது. எல்லாவற்றிருக்கும் காரணமும் மஸ்தான் என அவள் மனம் இடித்துரைக்க இன்று அளவுக்கதிகமாகவே திட்டிவிட்டாள்.

இலாவும் மஸ்தானுக்காக இங்கு போராட அவர்கள் இருவருக்குமே நான்கு நாட்கள் கடினமாகவே போனது. இதில் ரித்தீஷ் திருமணத்திற்கு இருவராலும் செல்ல முடியவில்லை. இங்கே சண்முகம் இலாவை துன்புறுத்த, அடிக்க என்றிருக்க அங்கே மஸ்தானின் மாறுதலில் பாத்திமா தனது வாழ்வின் எதிர்காலமே எண்ணி பயந்தாள்.

மஸ்தான் வீட்டு கதவை தட்ட பாத்திமா திறந்து விட்டு திட்ட போக அங்கே ரித்தீஷ் இருக்க ஷாலால் முகத்தினை மூடியபடி அமைதியானாள். அவளுக்கு மஸ்தான் மீது வாடை வீச கண்டு துணுக்குற்றாள்.

”இவர் குடிச்சு இருக்காரா?” என பாத்திமா புரியாமல் கேட்டுவிட அதற்கு ரித்திஷோ

”குடிக்கமா என்ன செய்வார்? ஒரு பக்கம் காதல் ஒரு பக்கம் நன்றி கடன் சொல்லி சொல்லியே திருமணம். ஏதாவது ஒரு பக்கம் தானே போக முடியும். முதல் முறை தப்பும் தவறுமா முடிவு எடுத்தான். இப்ப வாழவும் முடியாம சாகவும் முடியாம இருக்கார்”

”என் மேல தப்பு இல்லை நான் தான் முதலிலே நான் விரும்பறதை சொன்னேனேன்..’ என்றாள்.

”அவனும் தான் சொன்னான். உங்களுக்காக உங்க அப்பாகிட்ட பேசி பார்த்தான்.. என்ன செய்ய யாராவது ஒருத்தர் உங்க காதலில் தீர்மானமா இருந்து இருக்கணும்… இப்ப இவனும் வாழ முடியலை.. நீங்களும் வாழ முடியலை… தீர்வு அதுவா வராது நீங்க தான் எடுக்கணும்.. இன்னிக்கு ஒரு நாள் இந்த குடிக்கு போயி இருக்கான் தினமும் அவனை அந்த கடைக்கு மாற்றிடாதிங்க… அதுக்கு பிறகு என்ன நினைச்சாலும் மாற்ற முடியாதுங்க” என மஸ்தானை கட்டிலில் கிடத்தி விட்டு கிளம்பினான்.

ரியாவுக்கு பிடித்த ரவை தோசை வாங்கி கொண்டு வர கதவை தட்டிட திறந்தவளுக்கு முதலில் வந்தது மதுவின் வாசனையே… ரியா அதற்கே அதிர்ந்து போனாள்,.

ஏதோ ரித்தீஷ் மது அருந்திவிட்டு வந்தது போல தோன்றியது அவளுக்கு. அவளாகவே இலா ரித்தீஷ் விரும்புகின்றார்கள் என்று தவறாக புரிந்து கொண்டாள். இதுவரை பசி தங்காமல் இருந்த அவள் இப்பொழுது உணவு இருந்தும் உண்ண தோன்றாமல் இருக்க ரித்தீஷ் தான்

”ரியா உனக்கு தான் சாப்பிடு” என அவள் கையில் வைத்து குளிக்க சென்றான்.

மஸ்தானை அழைத்து சென்றதிலே ரித்தீஷ் கொஞ்சம் சோர்ந்து போனான். இதில் மஸ்தான் மனைவியிடம் அவள் மனம் நோகாமல் பேசிட கடினபட்டு முற்றிலும் சோர்ந்திட இங்கே ரியாவை மறந்தே போனான்.

குளிக்கும் அறையில் டவ் சோப் இருக்க கண்டவன் தான் காலையில் அவள் நின்ற கோலம் கண்ணில் மீண்டும் நிழலாடியது. அவனின் லிரில்ஸோப் எடுத்து குளித்தவன் ‘கடவுளே ரியாவை பார்க்காமல் உடனே துங்கிடனும் அதான் சரி’ என வெளியே வர ரியாவோ சாப்பிடாமல் அப்படியே வைத்து நிற்க அவளை பார்க்காமல் மடக்கு கட்டிலில் விரித்து கண்களை மூடி போர்வை போற்றி கொண்டான்.

ரியா தான் ‘இவரா இனி இப்போ பேச மாட்டான் நாம சாப்பிடாமல் இருக்கவும் முடியாது’ என்றே உணவை விழுங்கி நீரை பருகினாள்.

மாமா ஒரு வேலை ட்ரிங் பண்ணி என்கிட்ட நெருங்குவாரோ’ என பயந்தவள் அவளை அறியாமல் உறங்கினாள்.

அதிகாலை எழுந்தவனுக்கு இங்கு எதுவும் மாறவில்லை கட்டிலில் ரியா உறங்குவதை தவிர என்றவனின் மனம் அவள் இனி படிப்பை தொடர மாமாவிடம் பணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அவள் ஒன்றும் என்னை போல கரெஸ்ல படிக்கலை… பிரைவேட் காலேஜ் நிறைய செலவு ஆகும்… இதுல அவளுக்கு என்னை சுத்தமா பிடிக்காது… மாமா என்று முன்ன கூப்பிட யோசிச்சவா? இந்த வீடு அவளோட ரூம் அளவுக்கு என்று வேற பேசிட்டா.. அப்படியே மாமா குணம்.’ என்றவனின் புன்னகை விரிந்தது. ஆனா அக்கா வைதேகி மாதிரி பசி தங்கா மாட்டாள்’ என அவள் உண்டாளா என்றே பார்க்க அங்கு உண்ட விகிதம் அப்படியே தட்டுக்கள் இருக்க கண்டான்.

முதலில் அதனை எடுத்து சிங்கிள் போட்டுவிட்டு காபி கலந்து காலை சமையலுக்கு கிச்சடி செய்தான். சட்னி வைத்துவிட்டு, குளித்து முடித்து கிளம்பினான். ஆட்டோ உடுப்பான காக்கி எடுத்து அணிந்தவன் ரியா அவளாகவே, ”மாம்… காபி..” என கைகளை முறுக்கி எழுந்துகொள்ள அவனே காபியை கொண்டு வந்து அவளிடம் நீட்டினான்.

அவள் அப்பொழுது தான் இடம் பொருள் அறிந்து எழுந்தவள் அப்படியே காபி கப்பை வாங்க கை போக அவனோ அங்கே இருந்த ரீடிங் டேபிளில் வைத்தவன்

”பிரஷ் பண்ணிட்டு குடி” என்றான்.

”அக்காவும் தம்பியும் ஒரே மாதிரி உயிரை வாங்குங்க” என முனங்கி அவள் செல்ல அவனோ குறுநகை கொண்டு கிளம்பி கொண்டிருந்தான்.

அவள் கிளம்பி குளித்து வந்து காபி கப்பை எடுக்க அதுவோ சில்லென்று இருக்க அவனை முறைக்க அவனோ வேறொரு காபி எடுத்து நீட்டினான்.

” நாளைக்கு எல்லாம் நேரத்துக்கு எழுந்துக்கோ… இல்லை ஆறின காபி தான் கிடைக்கும்…” என்றான் அவனை பார்த்து உதட்டை கோணித்து காபியை நிதானமாக பருகி முடித்திட

”சரி கிளம்பு” என அவளின் குழந்தை தனமான ஐசு முகத்தினை பார்த்து சொன்னான்.

”எங்கே?” என்றாள் அவள்.

”எங்கே என்றால் என்ன? காலேஜ் தான்” என்றான் கீ எடுத்து காட்டி

”உங்களுக்கு மனசாட்சி இருக்கா? இப்படி கழுத்தில் தாலி கட்டிவிட்டு படிக்கற என் பேச்சை கேட்காம எல்லாம் உங்க முடிவா எடுத்துட்டு இப்போ காலேஜ் போ என்று ரொம்ப நல்லவரா பேசறிங்க? இந்த கழுத்தில தாலி காலுல மெட்டி… நெற்றி வகிட்டில் குங்குமம்… இப்படி காலேஜ் வாசலில் போயி நின்றேன் எல்லாரும் என்கிட்ட பள்ளி காலேஜ் படிப்பை பற்றி பேச மாட்டாங்க.. பள்ளியறை படிப்பை தான் பேசுவாங்க. எல்லாரும் கிண்டல் செய்வாங்க?” என்றவளின் முகம் கோவத்தில் பேச பேச ஐசு அங்கே இல்லை குமரியான ரியா வந்து போக பக்கென்று ஆனது அவனுக்குள்.

”அது மட்டுமில்லை.. உங்களுக்கும் இலாவுக்கு என்ன மாதிரி ரிலேன்ஷிப் அவ சொன்னா என்று படிக்க ஆரம்பிச்சு இருக்கிங்க? அவ எதுக்கு அவ அப்பாகிட்ட அந்த அடி வாங்கினா? அவளும் நீங்களும் லவ் பண்ணலை சொன்னிங்க ஆனா அவ அடி வாங்கினப்பா எனக்கு அது லவ் மேட்டர்னு தெரியுது” என கேவி கேள்வி எழுப்பி ரித்தீஷ் மனதிற்குள் ‘அக்கா உன் பொண்ணு நிஜமா குழந்தை இல்லை அவ எப்பயோ குமரி ஆகிட்டா.. இது தெரியாமா நான் இன்னும் அவளை குழந்தை குழந்தைனு சொல்றேன்’ என எண்ணிட அங்கே ஜக்கிலிருந்த நீரை எடுத்து ரித்தீஷ் மேலே ஊற்றினாள்.

”ரியா உன்னை… குழந்தை என்று நினைச்சேன் எதுக்கு இப்படி பண்ற?’ என்றான் அவன்.

”குழந்தையா நானா? அப்படி சொல்லி என்கிட்ட எதுவும் சொல்லாமல் போகலாம் கனவு காணாதிங்க” என்றாள்.

”ரியா முதலில் காலேஜ் போ அப்பறம் வந்து பேசலாம்” என்றான் ரித்தீஷ்.

”ரித்தீஷ்… இன்னும் என்ன செய்யற… காலேஜ் லேட் ஆகுது” என்ற இலா குரலில் ரியாவோ ”ஓஹ் அவளை ட்ராப் செய்ய தான் சார் கிளம்பி ரெடியா இருந்திங்களா? தண்ணீர் ஊற்றும் பொழுது என்னடா கோவம் எல்லாம் வருதே என் மாமனுக்கு நினைச்சேன்”

”நீ இன்னிக்கு ஒண்ணும் போக வேண்டாம் நான் கிளம்பறேன்.. உனக்கு என்ன பதில் வேணுமோ அது வந்து சொல்றேன்” என கிளம்பினான்.

ரியா அவன் செல்வதை பார்த்து இலா மீது பொறமையாக மாறி அவளையே பார்த்தாள். இலா ஆட்டோவில் இருந்து முறு

வல் செய்ய கண்டு கொதித்து போனாள்.

 

தொடரும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!