புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content
61 / 100 SEO Score

The leader-9

அத்தியாயம்-9

ஷ்ரத்தா வரும் வழியெல்லாம் சிந்தித்திருந்தாள். சத்ரியன் ஓடும் காரை திறந்து குதி என்றானே தவிர, தள்ளி விடவில்லை. ஏன் தள்ள முயலவும் இல்லை.
அப்படியிருக்க, தானாக பயத்தை வெளிப்படுத்தி விட்டோம். எதிரே இருப்பவருக்கு பலம் பலவீனம் காட்டி விட்டால், நாம் தானே முட்டாள். ‌

தற்போது ஷ்ரத்தா அந்த முட்டாள் தனத்தை செய்துவிட்டாள்.

சத்ரியனை கண்டு பயப்பட அவளிடம் பயம் எஞ்சியுள்ளதா? அவன் சொல்லுக்கு கட்டுப்படவில்லை என்றால் உயிரை தானோ எடுப்பான். தந்தையில்லாத உலகில் தன் உயிரும் போனால் தான் என்ன?

அந்த எண்ணம் தோன்றவும், முற்றிலும் தைரியம் பெற்றவளாக நின்றாள். வீட்டுக்கு வந்ததும் சத்ரியன் இறங்கி நடக்க, வினோத் இவளது மெதுவான நடைக்கு சத்ரியனையும் அவளையும் பார்த்து கூடவே நடந்தான்.

ஷ்ரத்தா அந்த வீட்டை ஏறெடுத்து பார்த்தாள். ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தவளுக்கு, முன்பு அவளை இங்கிருந்து அனுப்பியவனுக்கு திரும்ப அழைத்து வர காரணம் என்ன? என்று நடந்தாள்.

சத்ரியன் தனி சாம்ராஜ்யம் பெற்றவனாக இரு கைகளை விரித்து ராஜாளி போல அங்கிருந்த விலை உயர்ந்த இருக்கையில் அமர, யோசனைகள் பல ஓடிய புள்ளி மானாக ஷ்ரத்தா வந்தாள்‌.

“வினோத் சார்.. இவர் என்ன பேசணுமாம்?” என்று ஆரம்பித்தாள்.

சத்ரியனின் முகத்தில் சிறு முறுவல், சின்ன பெண், தன் முன் வந்து அழைத்து வந்தும், எத்தனை கேள்வி? இதில் காரில் இருந்து இறங்கு, குதி என்றதும் அத்தனை பயத்தில் பின்னடைந்தவள், மீண்டும் என்ன தோரணையாக வினா எழுப்புகின்றாள்?

‘வினோத் சாராம்..’ என்று தோன்றியது.

தனது ஒரு பார்வையை வீசவே தன் எண்ணம் புரிந்த வினோத் எதிரேயிருப்பவரிடம் பேசுவான். அப்படியிருக்க இவளை அழைத்து வந்த காரணம் வினோத் அறிந்தும், அவன் பேசும் முன் சத்ரியனே ஷ்ரத்தாவிடம் பேசினான்.

“ஹே… நீ யாரோட பாதுகாப்புல அந்த காலேஜ்ல சேர்ந்திருக்க தெரியுதா? என் பவர் புரியாம சுத்திட்டு இருக்க.

உன்னை யாராவது டீஸ் செய்தா அதை வினோத்திடம் தெரிவிச்சிருக்க வேண்டாம்?

யாரோ ஒரு டீன் போன் போட்டு உன்னை கிளாஸ்ல காணோம்னு சொல்லறான். அதுக்கு பிறகு கம்பிளைன் பத்தி பேசறான்.

இந்த சத்ரியன் ரெக்கமெண்டேஷன்ல சீட்டு கிடைச்சதை அந்த டீன் எப்படி மறக்கலாம்?

நீயாவது என் பெயரை, பவரை யூஸ் பண்ணியிருக்கலாம்ல?

சீனியர் கம்பிளைன் பண்ணற அளவுக்கு இடத்தை தந்துட்ட. அவனவனுக்கு குளிர் விடவா?
இந்த சத்ரியன் பெயர் கேட்டாலே மத்தவங்களுக்கு ஒரு பயமிருக்கு. அது எந்த இடத்திலும் குறைந்தாலும், அது நான் உருவாக்கின சாம்ராஜ்யத்துக்கு ஆட்டத்தை தந்துடும்.
எந்த இடத்திலும் என் பெயருக்கே பயத்தை போதிச்சா தான் யாராலையும் என்னை நெருங்கிட முடியாதென்ற விஷயம் ஆழமா பதியும்.

நீ பாட்டுக்கு உன்னை கேலி செய்தாலும், காதலிப்பதா சொன்னாலும் புகார் தந்து நிற்க வச்சாலும், தேமேனு இருந்திருக்க. இதுல உங்கப்பா உயிரை தந்து காலேஜ் சீட் வாங்கியிருக்கார். நீ காலேஜை கட் அடிச்சிட்டு ஊர்ச்சுத்தற” என்றான்.

ஷ்ரத்தாவுக்கோ ‘ஓ.. இவன் பெயரால் நான் கல்லூரியில் நுழைந்ததால், எனக்கு கடுகளவு கஷ்டம் வந்தாலும் அது இவனது ஆதிக்க மனதிற்கு இழப்பாக எண்ணிவிட்டானா’ என்று எண்ணியவளுக்கு தந்தை உயிரை தந்து சீட் கிடைத்ததை சுட்டிக்காட்டவும் கோபம் கொப்பளித்தது.

“எங்கப்பா உயிர் ஒன்னும் இந்த மெடிக்கல் சீட்டுக்காக போகலை. உன்னை காப்பாத்தியதற்காக தான் போச்சு. உன்னை மாதிரி ஈனப்பிறவியை காப்பாற்ற போய், அந்த நீதிதேவதை எங்கப்பாவை தண்டிச்சிட்டுட்டா.” என்று குரல் தந்தார்.

சத்ரியனோ “திரும்ப திரும்ப உங்கப்பா இறப்புக்கு நான் தான் காரணம்னு பேசாத. அவர் ஒரு அட்வகேட். அப்படியிருக்க அவருக்கு வந்த கேஸை அவர் வாதாடி ஜெயித்தார். அதோட அவருக்கு பீஸா பணம் வீடு, சீட், பைசல் பண்ணியாச்சு. எனக்காக வாதாடியதுக்கு எல்லாம் உங்கப்பா இறந்துப் போகலை.’ என்றுரைத்தான்.

“அதை எவளாவது காதுல பூ வச்சி உன் மேல மயக்கத்துல இருக்கறவளிடம் சொல்லு சத்ரியன்.” என்று இறுமாப்பாய் கூறினாள் ஷ்ரத்தா.

“நானும் வந்ததிலருந்து பார்க்கறேன். ஒருமையிலயே பேசற? காலேஜ் அடியெடுத்து வச்சதும் நீ பெரிய மனுஷியா? அப்ப கூட என் பெயரை உச்சரிக்க உனக்கு என்ன தைரியம்? எனக்கு கீழே வேலை செய்யற வினோத் சார். நான் அவன் இவன்… ஆங்” என்றான்.

“உன்னை மாதிரி ஆட்களுக்கு மரியாதை ஒன்னு தான் குறைச்சல்” என்றாள்.

சத்ரியன் புருவம் சுருக்கி அவளை கூர்ந்து பார்வையிட்டான்.
“என் எதிர்ல ஒரு ஸ்கூல் முடிச்ச பொண்ணு, என்னை பெயர் சொல்லி கூப்பிடுற. அதுவும் பயமில்லாம… வினோத்… என்னவோ சொன்னியே… பாவம் சார். அப்பா இல்லாத பொண்ணு, தனியா ஹாஸ்டல்ல இருக்கு, சீனியர் வேற கேலி கிண்டல் பண்ணிருக்காங்க. டீன் வேற வார்னிங் செய்ததா சொல்லறார். தனியா எங்கயோ போய் செத்துட போகுதுனு சொன்ன.’ பார்த்தியா… என்ன பேச்சு பேசறானு” என்று கேட்க, வினோத் ஷ்ரத்தாவை கவனித்தான்.

“எனக்கு பதினெட்டு வயசாக போகுது. சரி தப்பு எதுன்னு எங்கப்பா எனக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கார்.
அப்படியிருக்க மரியாதையை யாருக்கு தரணும் தரக்கூடாதென்ற அறிவும் வளர்த்திருக்கார்.
நான் இந்த கேலி கிண்டலுக்கு பயந்து சாகறவ இல்லை. என் அப்பாவை கொன்றவனை சாகடிக்க நினைக்கறவ.
ஜாக்கிரதையா இருந்துக்கோ… அப்பா இறப்புக்கு நீ தான் காரணம் என்றால்… நான் உன்னை போட்டுத் தள்ளவும் தயங்க மாட்டேன்.” என்றாள் ஷ்ரத்தா.

வினோத் பதறியபடி சத்ரியனை கண்டான்.

சத்ரியனோ எவ்வித அலட்டலுமின்றி ஷ்ரத்தாவை பார்த்து நெருங்கினான்.

சத்ரியன் மூச்சு ஷ்ரத்தா மீது விழும் அளவிற்கு நெருங்கியவன் ”உனக்கு சரி தப்பு சொல்லி தந்த உங்கப்பா தான், தப்பான என்னை சரியான நேரத்துல வாதாடி வெளியே வரவழைச்சவர். அவருக்கு எனக்கு மரியாதை தரணும்னு தெரிந்திருக்கு… இல்லைன்னா‌… என்னோட டீல் பேசி, உனக்கு என்னை கார்டியனா போடற அளவுக்கு சூழ்நிலையை உருவாக்கியிருக்க மாட்டார்.

அப்பறம் என்ன சொன்ன..? கேலி கிண்டலுக்கு பயந்து சாக மாட்டன்னா… நல்லது… பொண்ணுங்க தைரியமா நின்று நான் பார்த்ததில்லை. எல்லாம் பணத்துக்காக படுக்கையில விழற அழகிகளை தான் நான் பார்த்தது.
பதினெட்டு ஆகலைன்னு தானே சொன்ன.. பதினெட்டு ஆனதும் சொல்லு… இந்த கொலை செய்ய எப்படினு நானே என் பெர்சனல் கன்னை வச்சி சொல்லி தர்றேன்.‌ நீ புத்திசாலி கத்துப்ப தானே? அதுக்கப்பறம் உங்கப்பா இறப்புக்கு காரணமானவங்களை நீ போட்டு தள்ளு. அது நானா இருப்பேன்னு நீ நினைச்சாலும்.. என்னை போட்டுத்தள்ளு.
ஆனா உன்னால முடியாது. இந்த சத்ரியன் உன்னை முழுங்கி ஏப்பமிட்டுடுவான்.” என்றவன், விலையுயர்ந்த கருப்பு கூலர் கண்ணாடியை அணிந்தான்.

“நீ காலேஜ்ல இருக்கன்னா, உன்னை ஒருத்தரும் கேலி கிண்டல் செய்ய கூடாத வகையில், அங்க சூழ்நிலை இருக்கணும். உன் சீனியருக்கு கொடுத்த ட்ரீட்மென்ட்ல இனி எவனும் வாலாட்ட மாட்டாங்கனு நம்பறேன். என் ரெக்கமெண்ட்ல படிக்கற உனக்கு அந்த கெத்து எப்பவும் இருக்கணும். உன்னை பார்த்து மத்தவங்க நாலடி தள்ளி நிற்கணும்.” என்று திரும்பினான்.

ஷ்ரத்தாவோ அவன் என்னென்னவோ பேசியதற்கு பதிலுக்கு “அழகான பொண்ணுங்க உன் படுக்கைக்கு வரலாம். ஏன்னா… உன் படுக்கைக்கு வர்ற பொண்ணுங்க எல்லாமே ஏதோவொரு விதத்தில கால்கேர்ளா தானே இருப்பாங்க.

ஆனா தைரியமான பொண்ணுங்கன்னா உன்னை கொல்ல தான் வருவாங்க. அவங்க குடும்பத்து பெண்ணா இருப்பாங்க. அவங்களை மாதிரி ஆட்களோட நிழலை கூட உன்னால தொட முடியாது.

பெருசா ஸ்டேடஸ் சாம்ராஜ்ஜியம், சத்ரியன்னு ஒரு கோட்டையை உருவாக்கியதா பேசிட்டு இருக்க, உன் இச்சையை தீர்க்க ஆப்ட்ரால் பணம் தந்து கூட படுக்கறவ தானே… அதுவே உன்னோட தராதரத்தை சொல்லலை. நீ எந்தளவு கீழ்த்தரமான நிலையில இருக்கனு. உன் பக்கத்துல ஒரு கூட்டம் இல்லைன்னா… நீ எல்லாம் ஜீரோ மட்டும் தான்.” என்றாள்.

சத்ரியனோ நெஞ்சு விம்ம கோபமாய் திரும்ப, சத்ரியனை கோபப்படுத்தியதில் திருப்தியுற்றாள் ஷ்ரத்தா.

அவளது கண்ணில் அந்த திருப்தியை கண்ட சத்ரியனோ புன்னகை முகமாக மாறி, “என் படுக்கைக்கு வர்றவங்க பணத்துக்கு வர்றவங்கனு என்று உனக்கு யார் சொன்னா… ஓ… இந்த கதையில எல்லாம் அப்படி தான் சித்தரிச்சு எழுதியிருப்பாங்க‌. படத்துலயும் அப்படி தான் காட்டியிருப்பாங்க… பாவம் சின்ன பொண்ணுல்ல.. அதை பார்த்து கணிச்சிருக்கலாம். பட் உன் கணிப்பு ரொம்ப தப்பு. என் கூட படுக்கறவங்க, என்றதும் உனக்கு பத்தாயிரத்துக்குள்ள வந்துட்டு போறவளுங்கனு நினைச்சியா? என் கூட படுக்க வர்ற அழகிகள் ஒவ்வொருத்தரும் வெவ்வேறு நாட்டுல மாடலிங் செய்யறவங்க, உலக அழகியா தேர்வில் கலந்து கொண்டவர்களும், நடிகைகளும்.
ஒரு நாள் நைட்டுக்கு நான் அவங்களுக்கு கொடுக்கற சம்பளம் என்னனு தெரியுமா?
லைப் டைம் செட்டில்மென்ட் மாதிரி..” என்றவன் சிரித்துவிட்டு, “பாவம் சின்ன பொண்ணுனு உன்னோட எந்த விஷயமும் பேசக்கூடாதுனு இருக்கேன். ஆனா நீ என்னை பேச வைக்கற.
உனக்கு வேண்டுமின்னா ஒரு ஆஃபர் தர்றேன். பதினெட்டு வயசு பூர்த்தி ஆனதும், என் மெத்தையை அலங்கரிக்க வந்து பாரு. நான் தர்ற லைப் டைம் செட்டில்மென்ட் பார்த்து வாயடைச்சி போயிடுவ.” என்று கூறியதும் பளாரென ரோஜாப்பூ முள்ளோடு கன்னத்தில் மோதியா உணர்வு.

சத்ரியனை ஷ்ரத்தா அறைந்திருக்க, அங்கே வினோத்தோ “பாஸ்ஸ்ஸ்” என்று அதிர்ந்து விட்டான்.

சத்ரியனோ ஷ்ரத்தா கூந்தலை கொத்தாக பிடித்திட, வலியில் முகம் சுணங்கினாள் ஷ்ரத்தா. “முள்ளோடு முத்தம் வச்ச மாதிரி ஒரு உணர்வு. எனக்கு இந்த முள்கீரிடம் பழக்கம். பாவம்.. இந்த வயசுல உனக்கு முள்கீரிடத்தை தாங்க வைக்கிற துர்பாக்கியத்தை நீயாவே ஏற்படுத்திக்காத. போய் படிக்கற வழியை பாரு” என்று பிடியை தளர்த்தினான்.

“வினோத்… இவளை இங்கிருந்து கிளம்ப சொல்லு. பிறகு என் பொறுமை பறந்துட்டா அவளுக்கான சேதாரத்துக்கு நான் பொறுப்பாக முடியாது” என்று அழுத்தமாய் தெரிவிக்க, வினோத் அவசரமாக ஷ்ரத்தாவை அழைத்து சென்றான்.

தனியாக வெளியே அழைத்து வந்து காருக்கு முன் நிறுத்தி, “ஏன்‌ மேம் இப்படி நடந்துக்கிட்டிங்க. சத்ரியன் பாஸையே அறைந்திருக்கிங்க.
அவர் பெயர் கார்டியனா போட்டும், யார் அந்த சீனியர்? டீன் இதெல்லாம் தெரிந்தும் அவர் பெயர் சரியாம பார்த்துக்க உங்களிடம் மத்தவங்க வாலாட்டவும் தான் அவர் அவங்களை வார்ன் பண்ண வந்ததே. நீங்க தேவையில்லாம அவரை கோபப்படுத்திட்டிங்க. இதுல அறைந்துட்டிங்க. அய்யோ… இதுக்கான விபரீதம் எப்ப வெடிக்கும்னு தெரியலை. தயவு செய்து படிப்புல கவனம் செலுத்தி நல்ல டாக்டரா வந்து வெளிநாட்ல போய் செட்டில் ஆகிடும்மா. இந்த வாழ்க்கை வட்டத்துக்குள்ள மேலும் மேலும் சிக்கிடாத. ஒரு வெல்வெஷரா சொல்லறேன். திரும்பி எந்த பிரச்சனையும் வராம பார்த்துக்கோ.” என்று காரில் ஏற்றினான்.

“அண்ணா… நிஜமா.. எங்கப்பாவை கொன்றது இவனால தான் அண்ணா. எப்படி சும்மா இருக்க முடியும்? உங்க குடும்பத்துல யாராவது சத்ரியனால பாதிக்கப்பட்டா அப்ப தெரியும்” என்று கூற, வினோத்தோ ஏதேதோ நினைவுக்குள் சென்று வந்து, சுதாரித்து, “அதெல்லாம் கடவுள் பார்த்துப்பார்…. கர்மா இருக்கு. தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான். அண்ணானு சொல்லிட்ட… என்னோட அறிவுரையை கேளு. தயவு செய்து உன்னை சுத்தி படிப்பை மட்டும் யோசித்து படிச்சி டாக்டராகு. சத்ரியன் பாஸோட எந்த வம்பும் சந்திப்பும் அமையாம பார்த்துக்கோ.” என்று அனுப்ப முயன்றான்.

“கடவுள் பார்த்துப்பானா அண்ணா..? கர்மாவா? அந்த கடவுள் இருக்கார்னு நம்பறிங்களா அண்ணா? எங்கப்பாவும் நானும் அழகான வாழ்க்கை வாழ்ந்தோம். சத்ரியன் மாதிரி ஒரு தொழிலதிபர் போர்வையில் கேங்க்ஸ்டாரா இருப்பவனை அறிமுகப்படுத்தி எங்கப்பா இறந்து இருக்கார். இந்த சத்ரியன் தினம் ஒரு பொண்ணுக்கூட, மதுவும் மாதுவும் நல்லா விலையுயர்ந்த உணவும் ராஜ வாழ்க்கை வாழறான். எங்கப்பா செத்து நெருப்புக்கு இரையாகி போயிட்டார். நான் அனாதையா இருக்கேன் அண்ணா.

தப்பு செய்த சத்ரியனை எந்த கர்மா அழிக்க வந்தது?

வினோத் அண்ணா…. இப்ப எல்லாம் எந்த தொழிலிலும், நெகட்டிவா இருந்து பணம் சம்பாதிக்கற கேவலமான பிறவிகள் தான் நல்லா வாழறாங்க. எங்க அப்பா மாதிரி இருக்கறவங்க எல்லாம் நேர்மை நேர்மைனு வாழ்ந்து கடைசில இக்கட்டுல ஒரு சின்ன தப்பு செய்து, அதுக்கான பெரிய தண்டனையோட வாழ்க்கையே முழுசா இழந்து நிற்கறோம். கர்மாவும் இல்லை… கடவுளும் இல்லை. ஆனா ஒன்னு ஒரு நாள் இந்த சத்ரியன் இறப்பான். அப்ப புரியும்.” என்று ஆவேசமாக காரில் ஏறினாள்.
வினோத்தோ பேசி சென்றவளை புதிராக பார்த்தான்.

சத்ரியனும் ஷ்ரத்தா பேசியதை கேட்டவனாக இளக்காரமாய் உதடு வளைத்தான்.

-தொடரும்.

 

8 thoughts on “The leader-9”

  1. தீ லீடர்…!!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 9)

    அடேயப்பா..! அவன் கோட்டைக்கே வந்து, அவனையே எகத்தாளமா பேசிதோ, சாபம் விட்டும், சவால் விட்டும் போறாளே…
    இவளுக்கு ரொம்பவே தில்லு அதிகம் தான். ஆனா, உண்மையாவே சத்ரியனா கொன்னான்..? சத்ரியனோட எதிரி தானே கொன்னான், அதுக்கு ஏன் அவனை அந்த காய்ச்சு காய்ச்சிட்டு போகணும்.. பகவானே..!

    😴😴😴
    CRVS (or) CRVS2797

  2. Super sis nice epi 👍👌😍 endha ponnuku dhairiyam adhigam pa aanalum edhuku avan enna Panna porano🙄😐

  3. இந்த பொண்ணுக்கு சத்ரியன் மேல் தவறு இல்லை என்று தெரிய வரும் அப்போது பார்ப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!