Skip to content

The leader-11

53 / 100 SEO Score

அத்தியாயம்-11

 

ஷ்ரத்தாவை அழிக்க வேண்டாம்.’ என்று சத்ரியன் சொன்ன அந்த ஒரு வார்த்தை, அங்கே நின்றிருந்த எல்லாருக்கும் புரியாத புதிராக விழுந்தது.

 

யாமினி புருவத்தை சுருக்கினாள். ‘சத்ரியன் அவ உங்களை அடிச்சா. அவ பேசுறது எல்லாம் லிமிட்டை கடந்து போயிருக்கு. இப்ப நீ அவளை விட்டுட்டன்னா… அது நீ எடுத்து வச்ச பெயரை சரித்திடும்” என்று அச்சமூட்டினாள்.

 

”நான் சொன்னேன்ல… வேண்டாம்.” என்றவன் குரலில் சத்தம் அதிகமாக இல்லை. ஆனால் அதிலிருந்த அழுத்தம் மற்றவர்களை வாயை மூட வைத்தது.

 

வினோத்திற்கு விலாவரியாக புரிந்து விட்டது. ஷ்ரத்தாவை சத்ரியனிடமிருந்து இனி யாராலையும் காப்பாற்ற இயலாதென.

 

அடுத்த நாள் சத்ரியனின் எதிரிகளுக்கு எல்லாம் ஷ்ரத்தாவை பற்றி தான் செய்தி பரவியது.

 

சிலர் ஷ்ரத்தா தன் தந்தைக்காக சத்ரியனை பழிவாங்க துடிப்பதாக சரியாக கணித்து பேசினார்கள்.

 

ரிதுராஜோ “அந்த பொண்ணு பழிவாங்க துடிக்கின்றா.. ஓகே… உங்க லீடர்… சத்ரியன் எதுக்கு அவளுக்காக காலேஜ் போய் சீனியரை அடிச்சி துவைச்சான்?” என்று கேட்டதற்கு, சத்ரியனை கொல்ல வந்த ஆசாமியோ “கார்டியன் என்ற பெயர்ல சத்ரியன் பெயர் போட்டும் யார் அந்த பொண்ணுக்கிட்ட  வாலாட்டுறாங்க என்ற கோபம். சத்ரியன் என்ற பெயருக்கு ஒதுங்கி போயிருக்கணும் இல்லையா? அப்படின்னு சத்ரியன் நினைத்து ஷ்ரத்தாவுக்காக போனதா யாமினி சொன்னா சார்.” என்று பணிவாக கூறினான் மைக்கெல்.

 

ரிதுராஜோ “ஏ.. மைக்கெல். வாட் அபௌட் யாமினி? அவளா காண்டெக் பண்ணறதா சொன்னா. இல்லை… நம்ம பிளேஸுக்கு வருவதா சொல்லியிருந்தா. இன்னமும் காணோம்” என்று கேட்டான்.

 

மைக்கெல் என்பவனோ “எனக்கும் அதான் சார் தெரியலை‌. எனக்கு கெட் திறந்து பால்கனில அந்த ஜன்னலை மட்டும் சத்ரியன் சம்டைம் திறப்பான். இன்னிக்கு மூட் சரியில்லைனு தெரியுது. பிரேசில் அழகியையே அனுப்பிட்டான்

ரூமிலிருந்து வெளியே வந்து நிற்க வாய்ப்பிருக்குனும், நேரா சுடுனு பிளான் எல்லாம் போட்டுக் கொடுத்துட்டு போனா. ஆனா அதுக்கு பிறகு ஒரு தொடர்பும் இல்லை.

 

அட்லீஸ்ட் பிளான் சொதப்பியதுக்கு திட்டறதுக்காகவாது போன் போடுவானு வெயிட் பண்ணினேன். ஆனா இதுவரை கால் வரலை. சத்ரியன் ஏதோ மினிஸ்டரை பார்க்க போறதா மட்டும் கேள்விப்பட்டேன்” என்றான்.‌

 

ரிதுராஜோ ”ஓ… ஷிட்.. அப்ப அந்த நம்பரை தூக்கி போடு. அவ சத்ரியன் கையால செத்து எமலோகம் போயிருப்பா” என்று கணித்தான்.

 

“சார்?” என்று மைக்கெல் அதிர, “சத்ரியனை பத்தி நீ என்ன நினைச்ச? அவனை கொல்ல வந்தவங்களை அவன் விட்டுட்டு கூலா மினிஸ்டரை சந்திக்க போயிருக்கான்னா, அவனை கொல்ல வந்தவங்களை கொன்னுட்டு தான் டீ குடிக்க போயிருப்பான்.” என்றான்.

 

தனஞ்செயனோ “அதெப்படி நம்பறது” என்று கேட்க, ரிதுராஜோ “நீ வேண்டுமின்னா வினோத்திடம் ஏதாவது சந்தேகம் வராத வகையில் கேட்டுப் பாரு.” என்றவன் மதுவை சரித்துவிட்டு, “சத்ரியனை வீழ்த்த எடுத்து வைக்கற எல்லா முயற்சியும் தூளாகுது.

 

இதுல இந்த திவாகர் பொண்ணு.” என்றவன், “ஆனா இவளை வச்சி கூட நாம காய் நகர்த்தலாம். சத்ரியனை கொல்ல எந்தவொரு வழியிருந்தாலும் அதை யூஸ் பண்ணணும்.

இந்த பொண்ணு எப்படி ஏதுனு விசாரிக்கணும்.” என்று கூறினான்.

 

தனஞ்செயனோ “அந்த பொண்ணு நம்ம திட்டத்துக்கு எல்லாம் ஒத்துவராது. ஏதாவது நீதி நியாயம்னு பேசலாம். அதோட நம்மிடம் கைகோர்ப்பானு என்ன கேரண்டி? அவளுக்கு நம்ம மேல சந்தேகம் திரும்பினா?” என்று வினா எழுப்பினான்.

 

மதுவை அருந்திய ரிதுராஜனோ, “ஒரு ரூபா லஞ்சம் கூட வாங்காத நேர்மையான வக்கீல் திவாகரையே, அந்த சத்ரியன் வக்கீல் பீஸா, பணம் தந்ததில் அவன் பக்கம் அழைத்து போட்டுட்டான். ஆப்ட்ரால் திவாகரோட பொண்ணு… தந்தை இறப்புக்கு சத்ரியனை பழிவாங்க துடிக்கறா.. நாம ஆதரவு தந்தா வலையில் சிக்க மாட்டாளா?

அதோட அவளுக்கென்ன திவாகரை கொன்றது யாருனு தெரியுமா என்ன?” என்றான் இகழ்ச்சியாக.

 

“உண்மை தான்… நீ சொல்வது எல்லாம் சரி, ஆனா சீனியர் வாலாட்டியதையே தெரிந்து காலேஜில போய் அடி வெளுத்திருக்கான். நாம ஏதாவது ஸ்டெப் எடுத்தா தெரிந்துடுமே? அந்த பொண்ணிடம் எப்படி பேசறது?” என்று கேட்டான்.

 

ரிதுராஜனோ “இதான் எனக்கும் புரியலை. அவன் கண் பார்வைக்குள்ள தான் அந்த பொண்ணை வச்சியிருக்கான். ஆனா அந்த பொண்ணுக்காக பெருசா பீல் பண்ணற மாதிரி தெரியலை. எதுக்காக அந்த பொண்ணை ஆர்வமா பார்க்கான்?” என்றான்.

 

தனஞ்செயனோ “இதென்ன பெரிய ரகசியம். அந்த பொண்ணை பார்த்தல்ல… சும்மா தளதளனு… சின்ன பொண்ணு. ஜஸ்ட் காலேஜ் பஸ்ட் இயர் படிக்கறா. ஸ்கூல் முடிந்து வோட்டு போடற வயசுல அடியெடுத்து வைக்கிறா. யாராயிருந்தாலும் ஆசை வராதா. சத்ரியனுக்கு பல நாட்டு பொண்ணை ருசித்ததை காட்டிலும், சின்ன பொண்ணை ருசிக்க ஆசைப்பட்டிருக்கலாம்.” என்று கூறினான்.

 

தனஞ்செயன் அசட்டையாக கூறினாலும் ரிதுராஜ் ‘அதென்னவோ உண்மை தான். ஷ்ரத்தாவின் அழகு யாருக்கு தான் பிடிக்காமல் போகும்.’ என்று புன்னகை சிந்தினான்.

 

இந்த யாமினியை கூட அப்படி தான் அனுப்பி வைத்தான். ஆனால் சத்ரியன் கண்ணுக்கு யாமினி எல்லாம் அழகானவளா தெரியலை. அவளும் தலைகீழ தண்ணி குடிச்சி பார்த்துட்டா, சத்ரியன் நெருங்க விடலைனு தான் சொன்னா. தினமும் ஒரு மாடலிங் அழகி பணம் செலவு செய்து வரவழைச்சான். யாமினி பக்கமிருந்தும் நெருங்க விடலை.

 

இந்த ஷ்ரத்தாவை எப்படி நெருங்குவான்.

இந்த யாமினி நிஜமாவே செத்துட்டாளா? இல்லை சத்ரியனிடம் மாட்டிக்கிட்டாளா?’ என்று தலைவலியுடன் சிந்தித்தான்.

 

இங்கே மறுபுறம் நாயகி ஷ்ரத்தா கேன்டீனில் வந்து நிற்க தானாக வழிவகட்டு சீனியர் ஜூனியர் எல்லாம் ஒதுங்கி நின்றார்கள்.

 

உணவை சாப்பிட நின்றவளுக்கு கைகள் நடுங்க பரிமாறியவர் பயத்துடன் கவனித்தார்.

 

ஹாஸ்டல் வார்டன் கூட அவள் தாமதமாக எழுந்ததற்கு திட்டவில்லை‌. ஹாஸ்டல் நிர்வாகியான பெண்மணி கூட, ஷ்ரத்தா செல்லும் பொழுது, ஏதோ சத்ரியனே நடந்து செல்வது போல தான் பயந்து பார்வையிட்டார்.

 

அப்படியிப்படி அவரவர் பார்வைக்கு ஷ்ரத்தாவையே நோட்டமிட்டனர்.

 

ஷ்ரத்தாவுக்கு தான் அனைத்தும் எரிச்சலுண்டானது. கல்லூரி வந்தாலாவது நேற்றைய பாதிப்பு குறையுமென எண்ணியதற்கு மாறாக, அங்கே மேலும் அவளை குதர்கமாக மாறியே பார்த்தனர்.

 

அதுவும் ஜானின் நண்பர்கள் எல்லாம் பயத்தில் வெளிற, ஷ்ரத்தாவுக்கு ஏதோ இவள் சீனியர் அராஜகம் செய்தது போல தோற்றத்தை உருவாக்கியது.

 

வகுப்புக்கு வந்து அமர, பக்கத்தில் அமரும் கனிமொழியும் எழுந்து செல்ல முயல, முதல் முறை நட்பில்லாத ஏமாற்றத்தில் துவண்டாள்.

 

வகுப்பில் தியரி நடத்த வந்த டாக்டர் புரபஸரை கண்டு ‘குட்மார்னிங்’ உரைத்திட, அவரோ இவளை கண்டு குட்மார்னிங் மா’ என்றது தான் கூடுதலாக அல்டிமேட் ஆனது.

 

ஏனோ முதல் ப்ரியட் முடிய, மூச்சு முட்டியது. அடுத்த தியரி வகுப்பு வரும் நேரம், கனிமொழி நேத்து ஆப்டே நடத்தினாங்கனு சொல்லறியா?” என்று கேட்டாள்.

 

கனிமொழியோ, “அய்யோ.. நீங்க வேறயாரிடமாவது கேட்டுக்கோங்க” என்று பயந்தாள்.

 

ஆளாளுக்கு ஒருவர் மாற்றி ஒருவர் கிசுகிசுக்க, ஷ்ரத்தா உடைந்துவிட்டாள்.

 

அடுத்த பீரியட் தியரி வகுப்புக்கு மேம் வந்து பாடம் நடத்த, ஷ்ரத்தா அசையாத சிலையாக கண்ணீர் வடித்தாள்.

 

ஆளாளுக்கு அதையும் கிசுகிசுத்து பேச, கனிமொழி திரும்பி பார்த்துவிட்டு, சோகமானாள்.

 

கனிமொழிக்கு ஒரு நேரம் பாவமாக இருந்தது. மறுபுறம் அச்சமாகவும் இருந்தது.

ஒரு பீரியட் முழுவதுமே ஷ்ரத்தா சத்தமின்றி சலனமின்றி வெறித்த பார்வையில் கண்ணீரை மட்டும் உகுத்திட, பிரேக்டைம் வந்தது.

 

ஆளாளுக்கு வகுப்பை விட்டு வெளியேறினார்கள்.

கனிமொழி கூட சென்றுவிட்டாள். ‘மனிஷாவுக்கு அழைத்து மனதை கொட்ட நினைத்தாள். ஆனால் மனிஷாவும் எத்தனை நாளைக்கு தனக்கு ஆறுதலுரைப்பாள்? அவளும் கல்லூரிக்கு சென்றியிருப்பாளே.

தன் மனகாயத்திற்கு எல்லாம் மருந்தை வெளியே தேட முடியுமா? நம் மனம் தான் அதற்கு ஏற்ற மருந்தாக எண்ணத்தை மாற்றி கொள்ள வேண்டும்.

 

கொஞ்சம் கொஞ்சமாக திடம் வந்து இடத்தை கண்டதும் கன்னத்தை துடைத்தாள்.

 

வகுப்பில் அவளது வகுப்பு மாணவ மாணவியர்கள் வந்து சேர, கனிமொழியும் வந்தாள்.

 

கனிமொழிக்கு ஷ்ரத்தாவை தனித்து விட்டு வந்ததே கஷ்டமாக இருந்தது. இதில் ஷ்ரத்தா அழவும் ஒரு மாதிரி வருத்தம் உண்டானது.

இங்கே முன்பும் ஷ்ரத்தா தனித்து தான் அடியெடுத்து வந்து சேர்ந்தாள். இதே அமைதி இருந்தது. ஆனால் அவள் துவண்டு விடாமல் இருந்தாள். இத்தனைக்கும் அவளது தந்தை மறைந்த கொஞ்ச நாட்கள் தான். இன்றோ நட்பாக தன்னிடம் பழகியப்பின், ஓரளவு படிப்பில் கவனம் செலுத்தி தள்ளாடி நின்றவளை மீண்டும் ஏதோ உலுக்கிய உணர்வு. தான் மட்டுமே நட்பாக எண்ணி அவளாக பேசியது.  இன்று தானும் நழுவி விலகுவதை தாங்க முடியாமல் அழுதாளோ? என்று எண்ணி, “ஷ்ரத்தா..” என்று அழைத்திட, கனிமொழியை கூப்பிடுவதை கேட்டும் வகுப்பை தாண்டி வெளியேற சென்றாள். எதிரே மேம் வரவும், பின்தொடர்ந்த கனிமொழி தயங்க, ஷ்ரத்தாவோ இந்த மேமும் எதிர்த்து கேட்காமல் செல்வதற்கு வழி விடவும், வெளியேறிவிட்டாள்.

 

ஷ்ரத்தா செல்லவும், “தொழிலதிபரோட பணத்துல மிதக்கறவ, கிளாஸை கவனிக்கணும்னு என்ன அவசியம். ஸ்டூடண்ட்ஸ் லெசனை கவனிங்க” என்று பாடம் நடத்த, அதெல்லாம் கூட ஷ்ரத்தா காதில் விழுந்தது.

 

ஷ்ரத்தா கால் போன திசையில் கல்லூரியின் செயற்கை நீர் ஊற்று பக்கம் வந்தாள்.

 

அங்கே சில சீனியர் நின்று பேசவும், ஜானுக்கு என்ன ஆனதென்ற மோசனைக்கு சென்றாள். அவனது வகுப்பிற்கு சென்று தோழர்களிடம் கேட்க, அவர்களோ இதேப ஹாஸ்பிடலில் சிகிச்சை பிரிவில் இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

 

ஷ்ரத்தா அதை கேட்டு ஜானை தேடி சென்றாள். ஜான் கையிலும் காலிலும் கட்டு போட்டு அங்கே படுத்திருந்தான்.

ஷ்ரத்தா சென்றதும், அங்கேயிருந்த பெண் எழுந்தாள். ஜானின் அம்மாவாக இருக்க வேண்டும்.

 

“ஜானோட அம்மாவா?” என்று கேட்டாள். சேலை தலைப்பால் ஆமென்றார்.

 

“போலீஸுக்கு போய் அந்த சத்ரியன் மேல கம்பிளைன் பண்ணிருக்கலாமே? இப்படி அழுதுட்டு இருக்கிங்க” என்றாள்.

 

“என்னனு புகார் தர, இவன் செய்ததும் தப்பாச்சே? மலையோட மோதினா பாறை உடைந்து குழாங்கல்லா மாறும்.

 

நீ ஏன்மா இங்க வந்த? பிறகு திரும்ப பிரச்சனை பண்ணுவதா என் பையன் உசுரை எடுத்திட போறாங்க. நீ இங்கயிருந்து போம்மா” என்றார்.

 

உயிர்களை காப்பாற்றவே ஷ்ரத்தா மருத்துவம் பயில ஆசைப்பட்டது. ஆனால் இன்றோ நீ இருந்தா என் பையன் உசுருக்கு ஆபத்து. தள்ளி செல் என்கின்றார். இதை கேட்கவா இங்கே அடியெடுத்து வைத்தது என்று மௌனமான நடந்தாள்.

 

தூரத்தில் யோகேஷ் நின்று ஷ்ரத்தாவின் ஒவ்வொரு அடியையும் கவனித்து நின்று பார்வையிடுவதை கண்டான்.

 

இவனை… முதல் முதல்லா என்னை தூக்கிட்டு வந்தப்பையும் இவன் இருந்தான். இப்பவும் என்னை வேவு பார்க்கறான். இந்த சத்ரியன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கான்’ என்று கோபமாக வந்தாள்.

 

“இங்க எதுக்குடா வந்திருக்க. உங்க சத்ரியன் வேவு பார்க்க சொன்னானா? அவனுக்கு அறை வாங்கியது போதாதா? என்னையும் எங்கப்பா போன இடத்துக்கே அனுப்பற வரை அவனுக்கு தூக்கம் வராதா?” என்று கொதித்து முன்னே வர, கார் கதவை திறந்திட, ஷ்ரத்தாவை வேவு பார்க்க அனுப்பவில்லை, மாறாக சத்ரியனே இறங்கினான்.

 

அடுத்த நொடி யோகேஷ் அருகேயிருந்த மற்ற இரண்டு பாடிகாட்ஸ் விலகி தள்ளி சொன்றனர்.

 

“உங்கப்பா செத்த இடத்துக்கே உன்னை அனுப்பறது ரொம்ப சுலபமான விஷயம். ஆனா எனக்கு கஷ்டமான விஷயத்தை செய்து பார்க்க தான் பிடிக்கும். அறை வாங்கியது போதாதானு கேட்கற.. ஒரே அறையில போதும்னு நீ சொல்ல சொல்ல துடிக்கவைக்கற வரை எனக்கு தூக்கம் வராது போல.

நீ சொன்னதிலயிருந்து… எந்த நாட்டு அழகியும் என் மெத்தையை அலங்கரிக்க வரச்சொல்ல மனசு வரலை. என்னை காப்பாற்றிய திவாகரோட மகளே… என் கன்னத்துல பூப்போல அறைந்த நீயே வேண்டும்னு மனசு பேயாட்டும் அலருது.

உன்னோட பார்ம்ல பார்த்தேன். பதினெட்டு வயசு முடிய, ஆறுபத்தி ஆறு நாள் இருக்கு.

பார்த்தேன்… ஏகப்பட்ட க்ரைம் என் வரலாற்றுல இருக்கலாம். அதுக்காக பதினெட்டு பூர்த்தியாகாத பொண்ணை தொடற கேஸும் பைல் ஆக எனக்கு பிடிக்கலை. அதனால கொஞ்சம் காத்திருக்கேன். அடிச்ச கையால அரவணைக்க வைக்கிற ட்ரிக்குக்காக

மேட்லி… நீ என்னை மேக்னட் போல இழுத்துட்ட” என்று தோளைக் குலுக்கினான்.

 

உதடு துடிக்க, “பலபேர் மத்தியில சத்ரியன் ஒரு பொண்ணிடம் அறை வாங்கிட்டான்னு மறுபடியும் பேச வைக்கிற சூழலை கிரியேட் பண்ணவச்சிடாத. நான் சாகவும் தயாரான நிலையில் இங்க நிற்கறேன்” என்றாள்.

 

“நானு ஒவ்வொரு நொடியும் மரணத்தை வெல்கம் பண்ணிட்டு தான் இருக்கேன். மரணம் முத்தமிடுவதும், நீ முத்தமிடுவதும் ஒன்று தான்.” என்றான்.‌

 

ஷ்ரத்தாவுக்கு வேர்த்துவிட்டது

. அச்சத்தில் அடுத்து என்ன பேசுவது, தப்பிப்பது, ஏன் அவ்விடம் விட்டு நகர்வது என்று கூட தோன்றாமல் நின்றாள்.

 

-தொடரும்.

 

 

 

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!