குக்கர் சத்தம் கேட்டு தனது தூக்கம் மெல்ல கலைய புரண்டு படுத்த ரியா தலையணையை இறுக பற்றி உறக்கத்தை தொடர தான் கீழே தலையனை இல்லாமல் தானே உறங்கினோம் எப்படி தலையனை வந்தது எண்ண மெத்தையில் இருக்க கண்டாள்.
நாம தான் தூக்கத்தில் எழுந்து இங்க படுத்து கொண்டோமோ ‘ஆஹா இந்த மாமா இவ சொகுசு பேர்வழி பெரிசா கீழே படுத்தா இப்ப கட்டிலில் தூங்கிட்டு இருக்க நினைப்பாரோ’ என்றே ரித்தீஷ் பார்க்க அவனோ ‘நாம பார்த்தா நாம தான் அவளை தூக்கி மெத்தையில் படுக்க வைத்தோம் என்று கண்டு பிடிச்சிடுவாளோ என அவளை பார்ப்பதை தவிர்த்து சமையலில் முழ்கினான்.
முட்டை வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு பொரியல் செய்து சுண்டக்காய் வத்த குழம்பு டிபன் பாக்சில் வைத்து கட்டி அவனே ரியா பார்க்க அவளின் பையில் வைத்தான்.
எல்லாம் பார்த்து கொண்டு இருந்தாளே தவிர மறுக்கவில்லை அவளுக்கு பசி. குளித்து முடித்து உணவை விழுங்கி, பேசாமல் அவனின் ஆட்டோவிலே சென்று அமர்ந்தாள். ரித்தீஷிற்கு அதுவே நிம்மதி அளிக்க வண்டியை எடுத்தான்.
அடிக்கடி அவள் தன்னை பார்க்கின்றாளா என இவன் தான் பார்த்தபடி வந்தான். ரியாவோ ஆட்டோவில் சாய்ந்தவள் அவனை பார்க்கவே இல்லை.
‘அடிப்பாவி அன்னிக்கு எப்படி சைட் அடிச்சுக்கிட்டு வந்தா, இப்போ திரும்ப கூட மாற்றா’ வேண்டுமென்றே சடன் பிரேக் போட்டு நிறுத்த, பின்னால் வந்த ஆட்டோ இவனின் ஆட்டோவிலே மோதியது.
”டேய் இது என்ன உங்க அப்பன் போட்ட ரோடா…” என்று முன்னே வந்து கேட்க ரித்தீஷ் ஐஸூவை அறிந்த ஆட்டோகாரன்
”அடப்பாவிகளா நீங்களா?” என்ற நொடி
”ஐ அண்ணா நீங்களா அப்ப பரவாயில்லை…. அது ஒன்னுமில்லைனா ஒய்ப் சைட் அடிச்சுக்கிட்டே வந்தேன் அவ கண்டுக்கலை அதான்” என்றான். ரியா ரித்திஷை மயங்கி நின்று பார்த்தவள் உடனே சுதாரித்து
”அண்ணா இந்த ஆட்டோக்காரன் சரியில்லை போலீஸ்ல புடிச்சு கொடுத்துடுவேன் சொல்லுங்க” என்றாள்.
”இனி உங்க வண்டி ரிஜிஸ்டர் பார்த்தா கிட்டவே வரமாட்டேன் டா சாமி…” என்று ஓடிட அவனோ மேலும் ”புருஷனும் பொண்டாட்டியும் நல்லா ஜாடிக்கு கேற்ற மூடி பா… ஷங்கரு ஓடிடு” என்று அவனின் ஆட்டோ எடுத்துக்கொண்டு விழுந்தடித்து ஓடினான்.
ஐஸ்வர்யா அவளை அறியாமல் சிரிக்க, ரித்தீஷ் அதனை கண்டு ”இப்படி சிரிச்சா எவ்ளோ அழகா இருக்கு” என்றான்.
”ஹலோ எனக்கு காலேஜ் டைம் ஆகிடுச்சு வண்டியை எடுங்க.” என்றாள்.
காலேஜ் சென்றதும் இறங்கி ஆட்டோவிற்கு பணம் எடுத்து நீட்ட… ரித்தீஷ் கோவமாக மாறினான். ஆனால் அங்கே பூர்வீ ஒரு பக்கம் வெங்கட் ஒரு பக்கம் வர கண்டு தன்னை கட்டுப்படுத்தி கொண்டு மெலிதாக
”என்னடி காசு எல்லாம் கொடுத்து எட்டி நிறுத்தறியா? நான் உன் புருஷன்.. நினைவு இருக்கா… உன்னை அந்த உரிமையில் தான் அடிச்சது” என்று பேச அவளோ காசை அங்கே சீட்டில் அருகே இருக்கும் அவனின் சட்டையில் வைத்துவிட்டு மடமடவென சென்று கொண்டிருந்தாள்.
”நைட் ரூமுக்கு தானே வருவ…. அப்போ இருக்கு டி” என்றான். அவனின் ரியா திரும்பி பார்த்து உதட்டு சுழித்து செல்ல ரித்தீஷ் கிளம்பினான்.
‘எங்க இருந்து இந்த திடீர் உரிமை எல்லாம் வந்துச்சாம்… அவர் பாட்டுக்கு கன்னத்தில் அறைந்தார்… இப்போ காதல் வசனம் எல்லாம் பேசறார்.. சைட் அடிக்கிறார்… இதே தானே நான் செய்தேன் அப்போ மட்டும் இனக்கவர்ச்சி சொன்னாரே…. இப்போ என்னவாம்… இதுல டி வேற… ஆனா ரித்தீஷ் மாமா இதுவரை என்னை டி போட்டு பேசியது இல்லையே…. இது என்ன புதுசா? அது பேசிய தோரணையும் சரியில்லை…’ என்று வந்தவள் எதிரே யுகேந்திரனை பாராமலே மோத வர யுகேந்திரன் அவளை இடிக்காமல் அதே சமயம் அவள் அருகே வர கண்டு
”ஹலோ ஹலோ ஹலோ…” என்றதும் நின்றவள் சுற்றி முற்றி பார்த்து முழிக்க
”ஹலோ உன்னை தான்…. எதிர்க்க யாரு வர்றா.. என்று எல்லாம் பார்க்க மாட்டா… கூப்பிடலைனா இந்நேரம் மோதி இருப்ப” என்றான் யுகன்.
”அதான் எதிர்க்க வர்றேனு தெரியுதுல… நீ ஒதுங்கி போக வேண்டியது தானே.. போனில் பேசற மாதிரி ஹலோ ஹலோ பேசிட்டு இருக்க…” என்று ஐஸூ கவுண்டர் கொடுத்தாள்.
”ஏய் நான் யாருனு தெரியுமா? இந்த காலேஜ்..” என்றதும்
”நிறுத்தறியா…. என்ன சீனியரா? காலேஜ் ஏதாவது பெரிய தலையோட பையனா… எதுவா இருந்தாலும் இருந்துட்டு போ… தள்ளு” என்று ஐஸ்வர்யா அவள் பாட்டுக்கு வகுப்புக்கு சென்றாள்.
”என்ன வாயி இதுக்கு இவளை கட்டிக்க போறவன் செத்தான்” என யுகேந்திரன் ஆசிரியர் அறைக்கு சென்றான்.
யுகேந்திரன் உள்ளே வர எல்லோரும் எழுந்து கொண்டு இவன் தான் ஆசிரியரா என அதிர்ந்தாள்.
”மார்னிங் சிட் டவுன்…” என எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தபடி இருக்க ஐஸூவை கண்டு பார்வை அகற்றாமல் நின்றவன் ‘நீ இங்க தான் இருக்கியா’ என்று பார்க்க அவளோ அசடு வழிந்து மெல்ல சிரிக்க முயன்றாள்.
”ஹாய் நான் யுகேந்திரன்… இங்க உங்களுக்கு ஃபினான்சியல் மேனேஜ்மென்ட் சொல்லி தர வந்திருக்கேன். நான் யாரோட பெரிய தலையோட பையன் எல்லாம் இல்லை சாதாரண இந்த காலேஜ் பிசிக்ஸ் hod பையன் அவ்ளோ தான். நீங்க என்ன பேராசிரியர் என்று எல்லாம் நடத்தணும் இல்லை.. ஒரு ஃப்ரெண்ட் அஹ் பேசி பழகலாம்.. பாடம் சந்தேகம் கேட்கலாம்.. ஓகே இப்ப எல்லாரும் பேரை சொல்லுங்க.. முடிந்தவரை நினைவில் வச்சிக்கறேன்” என்று அவனின் இருக்கையில் அமர்ந்தான்.
ஒவ்வொருத்தராக அறிமுகம் செய்ய பெயர் சொல்லி முடிக்க ஐஸ்வர்யா முறையும் வர ”ஐ அம் ஐஸ்வர்யா…” என்று சொல்லி அமைதியாக உட்கார்ந்து கொண்டாள்.
யுகனும் அமைதியாக விட்டுவிட்டு பாடம் நடத்த துவங்கினான். ஐஸூவோ ‘தூக்கமா வருதே.. இவன் பாடம் நடத்தறானா, தாலாட்டு பாடறானா முடிலை.’ என்று இமை சொருக இவளை பார்த்து அடிக்கடி பாடம் நடத்தும் யுகனோ அவளின் பூவிழிகள் உறங்க செல்வதை கண்டு
”ஓகே ஸ்டூடண்ட் இது போதும் கொஞ்ச பேர் தூங்க ஆரம்பிக்கறிங்க.. நாளைக்கு பார்க்கலாம்..” என்று ஐஸூவை பார்த்து தலையை ஆட்ட, ஐஸூவோ உறக்கம் பறிபோக முழித்தாள்.
இவன் என்ன என்னை பார்த்து சொல்ற மாதிரி இருக்கு…? கடவுளே… காலையில் வழியிலே போற இவனிடம் வாயை கொடுத்து நல்லா மாட்டிக்கிட்டேன் போல’ என்று எண்ணி கொண்டாள்.
மாலையில் ஆட்டோ ஏறி அமைதியாக வர ஆட்டோவில் எஃப்எம் ஆன் செய்தான்.
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
ஓரப்பார்வை பார்வை பார்கும்போதே உயிரில் பாதி இல்லை
மீதிப் பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே
உயிரே உயிரே உடம்பில் சிறந்தது எதுவென்று தவித்திருந்தேன்
அதை இன்றுதான் கண்டு பிடித்தேன்
கண்ணே உன்னை காட்டியதால் என் கண்ணே சிறந்ததடி
உன் கண்களைக் கண்டதும் இன்னொரு கிரகம் கண்முன் பிறந்ததடி
காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது.. ஆ..
காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது
அது காலத்தை கட்டுகின்றது
என் மனம் என்னும் கோப்பையில் இன்று
உன் உயிர் நிறைகின்றது
என் மனம் என்னும் கோப்பையில் இன்று
உன் உயிர் நிறைகின்றது
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
மார்புக்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே மனசை மறைக்கதே
என் வயதை வதைக்காதே
புல்வெளி கூட பனித்துளி என்னும் வார்த்த பேசுமடி
என் புன்னகை ராணி ஒரு மொழி சொன்னால் காதல் வாழுமடி
வார்த்தை என்னை கைவிடும் போது மௌனம் பேசுகிறேன்
என் கண்ணீர் வீசுகிறேன்
எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன் புரியவில்லை..
எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன் புரியவில்லை
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
ஓரப்பார்வை பார்வை பார்கும்போதே உயிரில் பாதி இல்லை
மீதிப் பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே
என்று ‘பார்த்தேன் ரசித்த்தேன்’ பாடல் ஒலிக்க அதனை இதமாக கேட்டு முடிக்க இடமும் வர இறங்கினான்.
அவள் அந்த பாடலின் தாக்கத்திலே அப்படியே சிலாகித்தாள்
”ஹலோ காசு கொடுத்துட்டு போ” என்ற ரித்தீஷ் கேட்க, காசை எடுத்து நீட்ட.. பிறகு .”வேணாம்” என்று சொன்னவன்.
”காலையில் முதல் சவாரி ஒரு தேவதை தான். அவ கையால காசு வாங்கினேன்.. பாரு எல்லாமே லாங் டிராவல் சட்டுனு காசு சேருது… நான் காலையில் மட்டும் உன் கையல வாங்கிக்கறேன் ரியா” என்று சொல்லி கண் சிமிட்ட ஐஸ்வர்யா வேகமாக மாடி ஏறினாள்.
ரியா ரித்தீஷ் பேச்சு செய்கை எதுவும் சரியில்லை வர்றதுக்குள் சாப்பிட்டு படுத்து குறட்ட விட்டு தூங்கிடு… அவன் பேசியதுக்கு ஒரு வாரம் கூட நீ கோவமா இல்லை உன்னை இன்னும் கேவலமா எண்ணிடுவான். இனி அவன் இந்த ரியாவை பேசணும் என்றால் யோசிக்கணும் சோ அவன் பேசிய தவறு உணரனும்… என் லவ் ட்ரூ என்று அவன் வாயல சொல்ல வைக்கணும் என்று உறுதி கொண்டாள்.
அந்த உறுதி எல்லாம் அவனின் ஒரு தீண்டலில் கரையும் என்று அறியவில்லை பேதை.
