திரும்பிப் பார்க்க அங்கே சிரித்த வண்ணமாக கௌரி நிற்க உனக்கும் அதே சோதனையா என்ற வம்சியிடம் நலல வேலை மச்சி கடவுள் எனக்கு மட்டும் தான் ஆப்பு வைக்குறாருனு ஃபீல் பண்ணேன். இப்ப நீயும் கூட வந்து எனக்கு பக்கத்துல பாய் போட்டு படுத்துட்டு இருக்குறத பார்த்த அப்புறம்தான் நெஞ்சு குளுகுளுன்னு இருக்குடா என்றான் கௌரி. அதெப்படி நல்லவனே உனக்கு அவ்வளவு நிம்மதி… தூ இப்ப ரெண்டு பேரும் எங்க வந்து நிக்குறோம்னு பாரு என்றவனை, சரி விடப்பா இதான் வாழ்க்கைல முதல் அடி என்றவனின் முதுகில் அடித்தான் வம்சி.ஒருவரையொருவர் தேற்றி கொண்டிருந்த சமயம்,
“சோதனை மேல் சோதனை போதும்டா சாமி வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி”…… பாடல் ஒலிக்க,
என்னடா இது நேரங்கெட்ட நேரத்துல நம்ம உசுர வாங்குறது என நினைத்து இருவரும் திரும்பி பார்க்க வயிறை பிடித்து கொண்டு சிரித்தான் ஆனந்த்.
ஏன்டா இந்த கதையில நாங்க தான்டா காமெடி பீசுங்க, நீங்களே எல்லாம் பண்ணிக்கிட்டா நாங்க எதுக்குடா இருக்கம்,அப்புறம் எப்படி டா இந்த ரைட்டர் மேடம் சம்பளம் தருவாங்க என ஆனந்த் கூற, என்னது சம்பளமா?.. அதும் இந்த ரைட்டர் மேடமா?…. அவங்களே சிங்கிள் டீக்காக நாயா பேயா திருஞ்சிட்டு இருக்காங்க நீ வேற , என வம்சி உச்சுகொட்ட, ( உன்ன கவனிக்கிற விதத்துல கவனிக்கிற வம்சி என ரைட்டரின் மைன்ட் வாய்ஸ் எட்டிப்பார்க்க கப்சுப் என அடங்கினான் வம்சி)
அதுலாம் இருக்கட்டும் எதுக்கு இங்க வந்து இப்படி எங்கள் டிஸ்டர்ப் பண்ண என கேட்க,
“என்னது டிஸ்டப்பா மவனே இன்னும் ஃபைவ் மினிடஸ்ல இங்க நீங்க இருக்கல டப்பா டேன்ஸ் ஆடிடும் பார்த்துக்க” என ஆன்ந்த் போனில் லைனிலிருந்த லோகேஷ் கத்த,
வரலனாஆஆஆ என்னடா பண்ணவன என கௌரி எகிற, சீச்சீ நாங்கலாம் ஒன்னும் பண்ண மாட்டம் , நம்ம சீப் டாக்டர் நம்மள தொவச்சு காயப்போற்றுவாறு எப்படி வசதி என வினவ,
அய்யோ என அடித்து பிடித்து ஓடினார்கள். போதும் போதும் சீக்கிரம் வரச்சொல்லு லோகி சார் வேற எங்க உங்க ரெப் எங்கனு கத்தறாறு என பிரியாவின் குரலுக்கு பின் ,
நான் வந்துட்ட என கத்த திரும்பி பார்த்து பெருமூச்சு விட்டு சந்தோஷப்பட்டாள் பிரயா.
சீப் டாக்டரின் சொற்பொழிவில், ஃபுட்பால் போல பந்தாடியது கௌரி யின் நிலைமை.
______________________&&&&___________________
அதே சமயம் உள் நுழைந்த வம்சியை ” எங்க போய் சுத்திட்டு இவ்ளோ நேரம் கழிச்சு வரிங்க வம்சி” என சீப் டாக்டர் புருவத்தை உயர்த்தி கேட்க,
பூவை முதுகின் பின்புறம் மறைத்து , டீன் சார் கூப்பிட்டாறு சார் , அவர போய் பார்த்து விட்டு வர டைம் ஆகிடுச்சி என கூறுபவனை,
“அடப்பாவி புலுகிணி மூட்டை வாய் திறந்தா ஃபுல்லா பொய் “…என நினைத்து சிரிப்பை அடக்கிக் கொண்டாள் மகிழ்.
” ஓக்கே ஓக்கே கேரி ஆன் ” என கூறிவிட்டு சென்றார் சீப் டாக்டர்.பின் மகியிடம் சென்ற வம்சி— வம்சி: மகிமா இந்தா இந்த பூவ தலையில வச்சிக்க என பூவை நீட்ட, மகிழ்: அட அறிவு கெட்ட முண்டம் , ரோபோட் என திட்டுபவளை கேள்வியாக பார்க்க மகிழ்:என்ன முழிக்கிற ஹாஸ்பிடல்ல போய் யாராவது பூ வைப்பாங்களாஆஆ?… இன்ஃபெக்ஷன் ( infection-நோய்த்தொற்று)ஆகிடாது, படிக்கிற பையன் தான உனக்கென்ன மூளையில் அறிவுனு ஒன்னு இருக்கா இல்ல களிமண் தான் இருக்கா என நக்கலடிக்க,
வம்சி: வாங்கிட்டு வரமுடியாதுனாஆஆ கும்முறா… வாங்கிட்டு வந்தா இப்படி கிழிகிழினு கிழிக்கிறாலே என மனதில் மட்டும் நினைத்து, ஏன்டிமா நானா பூ வாங்கிட்டு வரனு அடம்பிடிச்சேன் என பாவமாக 🙁 KH கேட்க, மகிழ்: பூ வச்சா நல்லா இருக்கும்னு சொன்னீங்களா? இல்லையா?..என இரு கைகளையும் இடுப்பில் வைத்து கொண்டு கேட்க, வம்சி: திரும்பவும் முதல்ல இருந்தா போதும்டா சாமி போதும் இதுக்கு மேல என் பாடி தாங்காது டெட் பாடி ஆகுறதுக்குல்ல ஓடிடலாம் என நகர்ந்து டியூட்டியில் மூழ்கினான். மகிழ்: அவனை பார்த்து அறைஞ்சில்ல இதுலாம் வெறும் ஆரம்பம் மட்டுமே என மெல்ல சிரித்தாள்.
இவையனைத்தையும் குரோதமாக இரு கண்கள் பார்த்து கொண்டிருந்தது
_______________&&&&&&________________
இரவு நேரத்தில்,
இன்று செய்த சேட்டை அனைத்தையும் வழக்கம்போல ஒப்பித்து கொண்டிருந்தனர் மகி மற்றும் பிரியா. பரவாயில்லை நல்ல இழிச்சவாயன்கள் கிடச்சிட்டாங்க போல என மது நக்கலடிக்க, அது அது அதேதான்டா என் செல்லக்குட்டி என வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தாள் மகிழ்.
எங்க போனாலும் திருந்தாத ஜென்மம் என மனதில் வதக்கி கொண்டே தோசையை சாப்பிட்டான் மாதவன், சிறு புன்னகையுடன் மட்டுமே பிரியா இருக்க, ஏதோ சரியில்லையே என பிரியாவிடம் பார்வையாலே மது கேள்வி கேட்க, ஒன்னுமில்லை என கூறி சமாளித்தாள் பிரியா. தோசையுடன் வந்த அப்பாவை கண்ட மகிழ், ” மீசைக்கார நண்பா எனக்கு தோசை வேணுன்டா அதுக்கு மேல உன்
பாசம் வேணுன்டா” என பாடிய பதிவுக்கு தோசையுடன் முத்த மழை பொழிந்தார். அதுமட்டுமா அம்மா என ஆரம்பிக்க தலையில் கொட்டினார் தேவசேனா. ஈஈஈஈஈ என சமாளித்தாள்.அனைவரும் சாப்பிட்டு படுக்க போக , ஓடோடி சென்று ப்ரிச்சில் வைத்திருந்த சாக்கோபாரை ருசித்தாள் மகிழ், குலோப்ஜாமுன் தீர்ந்து விட்டதால் மகிழ் பின்னே பூனையை போல சென்று அவள் ருசிக்க கண் இமைக்கும் நேரத்தில் ஆட்டைய போட்டு நன்றாக மகிழிடம் மாட்டி கொண்டாள் பிரியா. இன்றைக்கும் சாப்பிட முடியாது என தலையில் அடித்து கொண்டு தூங்க சென்று விட்டாள் மது. ஐயோ போறாளே என்ன காப்பாத்தாம என மனதில் கூறினாள் பிரியா.
என்ன இந்த பக்கம் என நக்கலாக கேட்ட மகிழிடம் , அது அது தண்ணிய எடுக்க வந்த அதுக்குல்ல என்ன பிடிச்சு விசாரன கைதி மாதிரி கேள்வி கேட்டுட்டு இருக்க என கேவலமாக சமாளிக்க ,
மேலும் மகிழ் முறைக்க, அச்சச்சோ நம்பளையோ என நினைத்து, என்ன மகி நீ பாக்கறத பார்த்தா என் குலாப் ஜாமுன் தீந்ததால உன் சாக்கோபார திருடி திங்க வந்தனு நெனச்சிருக்க போல என சொல்ல, அதெப்படி கருவாச்சி கொஞ்சங்கூட வெட்கமா இல்லல்ல என பல்லை கடித்து கொண்டு கேட்க , அதுலாம் உன் கூட இருக்க வரைக்கும் எனக்கு எட்டிகூட பார்க்காது குள்ள என நழுவ ,
முதல்ல அந்த சாக்கோபார வச்சிட்டு போ என மகிழ் கூற ” கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை” என அப்பாவி போல மூஞ்சை வைத்து கொண்டு டப்பாவில் போட்டு விட்டு திரும்பி பார்க்காமல் ஓடினாள். _____________________&&&&&_______________
அதேசமயம் இன்று நடந்த அனைத்தையும் வம்சி அவனது அக்காவிற்கு சப்டைட்டில் மாறாமல் கூறி கொண்டிருந்தான். டே வம்சி உன்னையே இந்த பாடு படுத்துறாளா அவ எவ்வளவு பெரிய கெட்டிக்காரி என பதிவிற்கு சப்போர்ட் செய்தாள் நித்யா. நித்யா அடி வாங்குவ என சொல்லி கூட முடிக்கவில்லை, ஐய்யோ அம்மா என கத்தினான் வம்சி.
சண்டை மீளும் ——————————————————-
கதை எப்படி போகுதுன்னு சொல்லுங்க ப்ரண்ஸ்
கதை அங்கங்கே கோர்வையாக இல்லை… ஏதோ ஜம்ப் பண்ணி, ஜம்ப் பண்ணி போற மாதிரியே இருக்குது. தவிர, கதை பதிவு பண்ண பிறகு ஒருத்தடவை படிச்சு பார்த்தா உங்களுக்கே அதில் இருக்கும் குறைகள் தெரியும்.
Saringa akka frt story atha konjam thafu mastram kathukiren… Nandri
Story romba pichi pichi irukura mathiri theriyuthu! Niraya spelling mistakes. Yaar yaarkitta pesuranganu kooda sariya therila! Oru yugathulaye story read pannura mathiri iruku. But don’t give up, start pannurathu easy! Successful ah finish pannurathulathan challenging ah irukum
Thavara thiruthikiren… Frt story atha over pizhai sari pannikiren ka tq
Nice