மோதலில் ஒரு காதல் அடுத்த நாள் காலை இனிதாக விடிய, முதலில் எழுந்த மகிழினி, “போடப்போறன் போடப்போறன் நான் இன்னைக்கு முதன் முதலாக காஃபி போடப்போறன் “….. எனப் அவள் பாட்டுக்கு பாடிக் கொண்டு சமயலறையில் நுழைந்தாள். கெட்ட நேரம் என்ன சொல்லிட்டா வரும் வர வேண்டிய நேரத்துல இந்த விசக்கிருமி போழ வந்து விடும்”…என மகிழை தூற்றி கொண்டு எம தர்ம ராஜா கொஞ்சம் இந்த குழந்தைய காப்பாற்றுப்பா என வேண்டினான் மகிழின் தம்பி மாதவன். என்னடா தம்பி அங்க சத்தம் என மகிழ் அதட்டி கேட்கவும், “ஒன்னும் இல்லைக்கா படிச்சிட்டு இருக்க”…என எதையும் செய்யாத பச்சை பிள்ளை போல பேசினாலும் “தவளை தன் வாயாலே கெட்டுவிட்டது” என மூக்கு புடைக்க மகிழ் மிரட்ட , மாதவனோ படிப்பதை போல் நடிக்க அப்போது வந்த தேவசேனா “படிக்கிற பிள்ளை கிட்ட என்னடி பேச்சு”, ” அவன் என்ன உன்ன மாதிரி வெட்டிப்பையானா ” என கூறினார், அத்தோடு மாதவனின், ” தலையை கோதி நீ படிடா செல்லம்”அந்த பிசாசு கடக்குறா என கூற வாயை கட்டிக்கொண்டு சிரித்தான். பின் சமையலறைக்கு நுழைய போன அம்மாவை செல்லாதே அங்கு செல்லாதே என கோசம் போட்டு தடுத்தாள் மகிழ். ஏன்டி நான் உள்ள போகலனா எப்படி காஃபி குடிக்கிறது என ஹிட்லர் அம்மா கத்த, ஆமா மேடம் போடுற காஃபி அப்படியே தேனருவி மாதிரியா இருக்கப்போது எப்படியும் மாட்டுக்கு ஊத்துற கலனித்தண்ணி மாதிரி தான் இருக்கும் இதுல பில்டப்பு வேற , சிரியதாக கோப காற்று காதில் பொசுங்க, அடியேன் உங்க அப்பா இன்னும் கொஞ்ச நேரத்தில காஃபி கேட்பாருடி , நான் போய் போடுற என திரும்பிய தேவசேனாவிடம், அம்மா நானே காஃபி போட்டன். அப்பறம் அது ப்ரிச்சுல வச்சிருக்கேன் போ போய் அது எடுத்துட்டு வாமா எனச் சொல்ல, என்னது ப்ரிச்சுலயா என வாய் வாயாய் அடித்து கொண்டு படியிலிருந்து கீழே இறங்கினாள் மதுரவாணி. ஆமான்டி குட்டிமா , அதுக்கு என்ன ?… என அப்பாவி தனமாக மகிழ் கேட்க, ஓஓஓஓ அதுக்கு என்னவாஆஆஆ காஃபிய பிரிச்சுல வச்ச உன் மூளையை அடுப்புல வைக்கலானு நினைக்குறேன் என பிரியா கூற, போங்க டி, நான் என் அப்பாவுக்கு கொண்டு வருவேன் என சொல்லி சமையலறைக்குள் நுழைந்தாள் மகிழ். அனைவரும் வந்து அமர, காஃபியை எடுத்துக் கொண்டு வந்து அவள் சென்று அப்பாவிற்கு கொடுத்தாள். சிரித்த முகத்துடன் வாங்கினாலும் அவரது வயிற்றில் சடுகுடு சடுகுடு என நாட்டியமாட நாவோ குடிக்காதே குடிக்காதே எனக் கதறியது. மகளின் முதல் சமையல் திறமைக்கு குறை சொல்ல கூடாது என நினைத்து குடிக்க ஆரம்பிக்க, மாதவன்: வேணா டாடி வேணா என சைகை செய்ய,மது& பிரியா: எப்படி இருக்கு என சொல்வார் என நினைத்து அவரையே கூர்ந்து பார்க்க,தேவசேனா: “விதி இது எல்லாம் என் தலைவிதி ” என மகிழின் மண்டையில் கொட்டினார். (கொட்டிட்டாளே பாவி மக என பொறிந்தால்) காஃபியின் ரிசல்ட் என்னவாக இருக்குமென தலையை தேய்த்து கொண்டே மகிழ் அவளது தந்தையைதிரும்பி பார்க்க, சாரிடா எனக்கு நாக்கு செத்துப்போச்சு போல, உப்புல காஃபி கொஞ்சம் கம்மியாகவும், காரத்துல கரக்ட்டாகவும் இருக்கு என மெச்ச என்னது காரமா என பிரியாவும், மதுவும் தப்பித்தோம் பிழைத்தோம் என்றல்லாவா அடித்து பிடித்து தப்பித்து ஓடினார்கள். மாதவனோ அடியாத்தி இனிமே இவகிட்ட வம்பே வச்சிக்க கூடாது இல்லனா ஜுசு கீசுனு விசத்தக்கூட தருவாள் என முழித்தான். மகிழ் ஈஈஈஈஈ என அசடு வழிய , ஏன்டி “உப்புக்கும் சர்க்கரைக்குமே உனக்கு வித்தியாசம் தெரியல.. உனக்கு எதுக்குடி இந்த வேண்டாத வேலை என ஹிட்லரம்மா அதட்ட, “சம்திங் ஸ் பெட்டர்தென் நத்திங்”என கூறுபவளை , “சரிடா செல்லம் டைம் ஆச்சு போய் ரெடி ஆகுடா ” என அனுப்பி வைத்தார் கிருஷ். ஜாடிக்கேத்த மூடி “பிள்ளைக்கு ஏற்ற அப்பா” உங்களால் தான் அவ இப்புடி கெட்டுப்போறா என தேவசேனா அதட்ட, ஏன்டி தேவுமா என் பிள்ளை இப்ப சின்ன குழந்தை அவ போகப்போக கத்துப்பாடி என உரிமையாக பேச, ” நீங்கதான் மெச்சிக்கனும் “எனக்கு தான் வாழ்த்து கிடைக்கும் அவங்க மாமியார் கிட்ட என வருத்தப்பட்ட தேவசேனாவிடம் , “பெண் பிள்ளையை பெற்ற எல்லா தாயும், மருமகளை மகளாகதான் பார்ப்பாங்க நீ கவலைப்படாதே தேவசேனா என கூறினார் _______________&&&&&&&__________________ தயாராவதற்க்காக ரூமிற்கு சென்ற மகிழ் , அவர்களின் பேச்சுக்களை கேட்டு கதவின் முன்னரே நின்று விட்டாள்.மது: அக்கா, மகியோட கணவர் போன ஜென்மத்தில ஒரு நல்லது கூட பண்ணல போல , பாவம் அந்த மனுசன் என கூறபிரியா: ஆமான்டி , காஃபியே போட மாட்றா? பாவம் டி அவ புருஷன் என உச்சுக்கொட்ட,மது: சரிசரி கவலைபடாதே மாமா சமைக்குற மாதிரி பாத்துக்கலாம் என ஐடியா கொடுக்க,மகி: அதெல்லாம் பாத்துக்கலாம் வாய மூடிட்டு போய் ரெடி ஆகுங்க என அதட்டி கொண்டே உள் நுழையபிரியா: நன்றிகள் ஆயிரம் உங்களது வார்த்தை இனிமையாக உள்ளது என சொற்பொழிவு நடத்தமகி: பொறுமையிழந்த மகிழ் போய் ரெடி ஆகி தொலை கருவாச்சி என கத்த ஓடோடி விட்டாள்.வம்சி மற்றும் கௌரி நிதானமாக ரெடியாகி டியூட்டிக்கு புறப்பட்டனர். போகும் வழியெங்கும் கீச்கீச் என்ற பறவை சத்தத்தை ரசித்து கொண்டே சென்றான் வம்சி, கௌரி காரை ஓட்டுவதிலே மும்முரமாக இருந்தான்.____________________&&&&&_________________மகிழும் ப்ரியாவும் ஹாஸ்பிடல் தன் வேலைகளை வம்சி சிறப்பாக செய்து கொண்டிருக்க, என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் வாழ்க்கை முடியட்டுமே தன்னாலே நீயும் கலங்காதே………. என பாடலை பாடிக்கொண்டே நுழைந்த மகிழைப்பார்த்து எதுப்பேசினாலும் வம்பாக முடியும் என முடிந்த வரை தனது வாயை பெவிக்கால் போட்டு ஒட்டப்பட்ட பொருளைப் போல வைத்திருந்தான் வம்சி. “அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்ட வசிப்பையா”… என அவனை ஆராய்ந்து அறிந்து மனதில் நினைத்து கொண்டே ஹாஸ்பிடல் கோட்(உடை) போட, “வாவ் மகி பேபி யூ ஆர் லுக் ஸ் வெரி ஆஷம் ” எனக்கூறி இவளுக்கு இந்த ஜீன் பேண்டும், லெவண்டர் கலர் டாப்பும் சூப்பரா இருக்குல்ல வம்சி என ராகேஷ் கூற அவளை பார்த்து சிரித்து விட்டு ஆமாடா ராக்கி இருந்தாலும் ஜீன்க்கு பிளாக் ஆர் பிங் டாப் போட்டாதான் இன்னும் சூப்பரா இருக்கும் என வம்சி சொல்லவும் சிக்கிட்டான் என மனதில் நினைத்து சிரித்தாள் மகிழ். ஓஓஓஓ பட் என் பேபி இதுலையும் குயூட்தான் என அவளின் கன்னத்தை கிள்ளினான் ராகேஷ். “போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு ” என பாடிய சுமித்ராவும் வம்சியும் ஹைபை போட்டுக் கொண்டனர். வம்சிராசா பொறுமை முக்கியம் என சிரிப்பாக மகிழ் சொல்ல, என்னையவாமா என புரியாமல் விழித்தான் வம்சி.மறுபுறம் பார்க்க அதே லெவண்டர் டாப், ஜீனில் உள் வந்த பிரியாவை , ஆனந்த், லோகேஷ் முறைக்க, கௌரி எப்பொழுதும் போல ரசிக்க ஆரம்பித்தான்.பிரியா: ஏன்டா என்னைய முறைக்கிறீங்க என ஆனந்த், லோகேஷை கேட்கலோகேஷ்: ஆமாடி ஆமா முறைக்காமல் கொஞ்சுவாங்களா? என வாயை பிதுக்க,பிரியா: என்னடா சொல்ற….. நான் என்னடா பண்ண என கேட்க,ஆனந்த்: பின்ன நேத்தென்னமோ குடும்ப குத்துவிளக்கு மாதிரி சாரியில வந்த ஆனா இன்னைக்கு குந்தானி மாதிரி தலையெல்லாம் விரிச்சு போட்டு கிட்டு வந்திருக்க என சொல்ல,..கௌரி: இதுதான்டா பேஷன். எப்பவும் ஒரே மாதிரி இருந்தால் போர் அடிக்கும்டா எனக்கூறிக்கொண்டே பிரியாவிடம் சென்று ” என்னடாமா வரவர மாமாவ கட்டி இழுக்குற” என கேட்க பிரியா: திருதிருவென முழித்தாள். உன்னால் தான் டி லேட் சீக்கிரம் வாடி என திட்டிக்கொண்டே யாஷினி உள்நுழைய அனைவரும் அவளை பார்க்க, ஆன்ந்த் காதல் பார்வை வீசினான், லோகேஷ் எங்க எங்க அவளை காணோம் என ஆர்வமாக கண்களில் தேடிக் கொண்டிருந்தான். பின் உள்நுழைந்த மதுப்பிரியா, ஹாய் பிரியா ஜீ ” யூ ஆர் சோ கியூட்” என கூற நீயும் தான் சோ கியூட் என லோகேஷ் உலரிவிட்டான் . அவனை அனைவரும் திரும்பி பார்க்க தன்னிலை மறந்தவனாய் லோகேஷ் இருக்க, ஓவென அனைவரும் கத்த அசடு வழிந்து எனக்கு வேலை இருக்கு என சொல்லி ” பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி” விட்டான். _________________&&&&&___________________ டாக்டர் அனைவரையும் கான்ப்ரண்ஸ் ஹால்க்கு வரும்படி கூறியிருந்த டீனின் ஆர்டரால் அங்கே அனைவரும் கூடினார்கள். மேடை ஏறிய ஆதித்யா ராஜ்(டீன்) , வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற ரீதியில் பேசும் குணமுடைய மனிதன்.மிகவும் ஹான்சம்மான , கம்பீரமான இளம் துள்ளல் உடைய ஆண்மகன். ஹாய் எவ்ரிபடி, இன்னைக்கு ஏன் இந்த கான்பிரண்ஸ் என்றால், ஒரு ஆப்ரேஷன் , “திஸ் பேசண்ட் கண்டிசன் ஸ் வெரி கிரிட்டிக்கல் , பட் வீ ஆர் கிவ் தி பெஸ்ட் டிரீட்மெண்ட்”தரனும்னு நான் ஆசைப்படுற , சோ விருப்பப்படுறவங்கஸ்டேன்ட் அப் என பேசி முடித்தார். ஆப்ரேஷன் பற்றி நன்கு அறிந்த செகண்ட், தேர்ட், போர்த் இயர் ஸ்டூடண்ட் யாரும் முன்வரவில்லை. பின் விளைவை பற்றி யோசித்து அமைதி காத்தார்கள். எதற்கும் துணிவோம் என வம்சி எழுந்து நிற்க, நாம எழலைனா ரூம்ல கும்மிறுவானென்று அடித்து பிடித்து கௌரியும் எழ , பிரியா முன்னரே எழுந்திருந்தாள் ( தைரியத்தின் மறு உருவம் போல) , பின் வம்சியின் முறைப்பால் தானாக எழுந்த மகிழை எதாவது செய்ய வேண்டுமென சுமியும் எழுந்தாள் எழலாமா? வேண்டாமா? என ஆனந்த் மற்றும் லோகேஷ் துடிதுடிக்க யாஷினி மற்றும் மதுப்பிரியா இருவரும் எழுந்ததை பார்த்து இவர்களும் எழுந்தனர். ராகேஷ் நானும் நானும் என எழுந்தான். ஆதி இவர்கள் அனைவரும் மேடைக்கு அழைக்க அனைவரும் சென்றனர். போகின்ற பாதையில் “”ஆடுகள் தானா போய் சிக்குதுங்க ” என பிரியாவின் செவிக்கு எட்டிப்பார்த்த குரலுக்கு சொந்தக்காரனை மட்டும் காண முடியவில்லை. சண்டை மீளும் ___________________________________________
எவன் அவன்’னு தெரியலையே…! கருவாயன்..!