Skip to content
Home » 16) மோதலில் ஒரு காதல்

16) மோதலில் ஒரு காதல்

ஓஒ ஓஒ ஓஒ   எங்கிருந்தாய் நான்   

மண்ணில் பிறந்திடும்போது     

  எங்கிருந்தாய் நான்   

   கொஞ்சம் வளர்ந்திடும்      

              போது!!!!!!    

எங்கேயோ பிறந்தாய்     

    அடி எங்கேயோ வளர்ந்தாய் 

    இன்று என் முன்னால்     

     நீயாய் வந்தாய் 

   இதற்கென்ன அர்த்தம்    

      என் உயிரெல்லாம் சத்தம்  

  அடி எனக்காக நீயும்          

     வந்தாய்!!!!!!!!          

    என்ற பாடல் வரி லோகேஷின் மொபைலில் இருந்து ஒழிக்க, தனக்காகவே இந்த பாடலை ஹரிஸ் ராகவேந்தர் பாடியுள்ளார் போலவென எண்ணி ஒரு அமைதி கலந்த மகிழ்ச்சியில் திகைத்த வம்சி அமைதியாய் பாடலையும் மகிழையும் ஒரு சேர இரசித்தான்.   

  இவன் அமைதியாக இருக்கவும் மகிழுக்கு குற்றயுணர்ச்சி எட்டிப்பார்த்தது. ஒரு வேளை அவனுக்கு என்னை பிடிக்கவில்லையோ ?….என குழப்பத்துடன்  முட்டியிட்டு அமர்ந்திருந்தவள் எழுந்து,      அடப்பாவி நான் ஸ்கூல்ல கூட இவ்ளோ நேரம் முட்டி போட்டதில்லை. 

உனக்காக முட்டிப் போட்டு ப்ரப்போஷ் பண்ணி கால் வழிக்க உட்கார்ந்திருந்தால் பேனு வெறித்து பார்த்துட்டு இருக்க ” “அப்ப என்ன உனக்கு பிடிக்கலையா?”…. என வாயை கோணல் மானலாக வளைத்த மகிழையே பார்த்திருக்க கோபமடைந்த மகிழ் சுவற்றில் போய் முட்டிக்கொள்ள,       இதழை சுளிக்காதே     இயங்காமல் போவேன்        இடையை வைக்காதே      இணைந்தே நான் சாய்வேன்         அடியே சிரிக்காதே        இன்றே உடைவேன்    ஐயோ நெளியாதே          அழுதே விடுவேன்  ஒரு ஊசி முனை வழியே           உயிரை நீ    வெளியேற்றினாய்!!!!!!  

   என மீண்டும் பாடிலின் மீதி வரிகளும் எங்களுக்காகவே என அதில் உள்ளூர்ந்து மகிழ் அவளது காதலை படபடவென மின்னலாக  பளிச்சென்று சொல்லி மின்னியவளின் செயலை நினைத்து நகைத்தான்.     அவனையே பார்த்திருந்த மகிழுக்கு பைத்தியம் பிடிக்காத குறை ஒன்றுதான்.    “இரண்டு நிமிடம் உர்றென்று இருக்கான், இரண்டு நிமிடம்  சிரிக்கிறான்” இதுக்கு மேல என்ன பண்ண போறானோ என நெற்றியில் நெத்தியடி அடித்துக்கொண்டாள்.

ஒரு குழப்பமான முகத்துடனே வம்சியை பார்க்க,     ஓடோடி வந்து மகிழை தூக்கி நன்றாக சுற்று சுற்றென சுற்றி அவளை இறக்கிவிட, அவனது செயலில் திகைத்தவள் மெதுமெதுவாக இறங்க, கண்களை இறுக மூடி மூடி திறந்த மகிழின் இமையும் வம்சியின் இமையும் ஒரு சேர  சந்திக்க  படாரென இதழ் முத்தம் பதித்தான் வம்சி.  அவன் செயலில் பெண்ணவளுக்கு வெட்கம் தாளவில்லை.  

கண்களை மூடிக்கொண்டு இருந்தவளை பார்த்த வம்சிக்கு சிரிப்பு எழ, அவளை இறக்கி விட்டு கன்னத்தை பிடித்து , ” நானும் உன்னை காதலிக்கிறேன், ஐ லவ் யூ டூ , எனக்கும் நீனா ரொம்ப இஷ்டமாக்கம், இச் லிபே டிச் , எனது வாழ்வின் துணையாக நீ ஒருத்தி மட்டும் தான் என ” அவளை போலவே அழகு மொழிப்பேசி சம்மதித்தவனை கண்கள் விரித்து இரசித்தாள் மகிழ்.   

  அவனது குறும்பில் இழகியவள் தன்  ஒருதலை காதல்  நினைவுகளை  பறைசாடினால்,      கர்ப்பிணி பெண்ணிற்கு எந்தவித கலக்கமின்றி ஆப்ரேஷன் செய்தபோதே வம்சி மகிழின் இதயத்தின் பூட்டை தட்டி உடைத்துவிட,     ஷாப்பிங்கின் போது பதறியடித்து பில் கட்டிய வம்சியின் குறும்பில் மகிழ் இதயத்தில்  உள்நுழைந்தவன்.          

   மகிழின் தந்தை கிருஷ்ணாவிற்கு ஏற்பட்ட நஷ்டத்தால், அவருக்கு ஹார்ட்ஹட்டாக்  வந்து ஹாஸ்பிடலில் சேர்த்திருந்த சமயத்தில் பண உதவியிலும், மகிழைவிட்டு சிறுதுளி கூட நகராமலிருந்து அவளுக்கு ஆறுதல் அளித்ததால், மகிழின் அந்த இதய சிறையில் காதல் மொட்டை உருவாக்கியவன்,     கல்லாரியில், இரண்டாம் ஆண்டு விழாவிற்காக மகிழ் நடனமாடும் போது, சுமித்ரா எரிச்சலில் மகிழின் சேரியை மிதித்து விட, அது நழுவும் நேரத்தில் வம்சி அவனது சட்டையால் மகிழின் மானத்தை காத்தபோது “மொத்தமாக இதயச்சிறையில் காதல் என்னும் பூவை மலர வைத்தாள்”….    

  இருப்பினும் அவனுக்கு தகுதியானவள் நானா ?…. என சிந்தித்து ஒரு தலை காதலியாகவே இருந்த மகிழ் வம்சியின் மார்பில் புதைந்திருக்க, 

    இதற்கென்ன அர்த்தம்   

என் உயிரெல்லாம் சத்தம்

அடி எனக்காக நீயும்     

வந்தாய்!!!!!!!!    

      ஓஒ ஓஒ ஓஒ         

எனப்பாடல் முடிந்ததும் போனை அணைத்து விட்டு  திரும்பி பார்த்த யாஷினி

, ஆனந்த், லோகேஷ், மதுப்பிரியா என அனைவரின் முகத்திலும் ஒரே ஆச்சர்யம் தான்  நிலவியது.    ஆம்! ஈராண்டாக மகிழினியை வம்சி ஒரு தலை காதலாக விரும்பகிறான் என்பது அனைவரும் நன்கு அறிந்த ஒரு தெளிவான உண்மை.   ஆனால் மகிழின் இந்த நடவடிக்ககையே இவர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது.   

மகிழினி தன் காதலை உயிர் தோழியான பிரியாவிடம் கூட பகிர்ந்திராததாலே இவ்வளவு ஆச்சர்யம்.         இரண்டு வருடங்களாக மறைத்து வைத்திருந்த தன் காதலை வெளிப்படுத்தி விட்ட மகிழ்ச்சியிலும், அதை வம்சி ஏற்றுகொண்ட மகிழ்ச்சியிலும் ஆனந்த நீரூற்றாக மாறியிருந்தாள் மகிழினி.     

  வம்சியோ,” தன் காதலை  பத்து தடவையாவது இன்டேரக்டா நம்ம லவ்வ சொல்லிறுப்போம், ஆனால் இந்த மக்கு மகாராணிக்கு புரியவே இல்லை, இவ சொன்னவுடனே லவ்வ ஏத்துக்கிட்டயே வம்சி,..  ..     இவள கொஞ்சம் அலைய விட்டிருக்கனுமோ?. ‌என ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவனின் தோளில் ஒரு அடி அடித்தனர் நால்வரும்.       விழிப்பு வந்தவன் ,டே நீங்களும் இங்கதான் இருந்திங்களா,அப்போ ! இங்க நடந்ததெல்லாமே பாத்திட்டிங்களா?…. என கேட்டவுடன், அந்த அறையே சிரிப்பின் உருவமாக தெரிந்தது.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

   ஒரு மணி நேர அரட்டைக்கு பிறகு , வம்சியின் தாயார் அழைப்பால் மகிழின் ரூமிலிருந்த அனைவரும் வெளியேறினர்.    சிங்கம் போன்ற நிமிர்ந்த நடையுடன் வம்சி படியிறங்க, பதிங்கி பதிங்கி  ஓடும் முயலைப்போல வெட்கத்துடனே மகிழினி படியிறங்க,       இவர்கள் இருவரையும் கலாய்த்த வண்ணம் யாஷினியும் ஆனந்தும்  படியிறங்க,       மகிழைப்போன்றே வெட்கத்துடன் மதுப்பிரியா படியிறங்க ,       பத்து வீரர்களை வென்று குவித்த வெற்றியாளனை போல படியிறங்கினான் லோகேஷ்.  

   மகிழினியின் இந்த பதிங்கிய நடையிலேயே இந்த திருமணத்திற்கு அவளுக்கு சம்மதம் என அறிந்த பெரியவர்களின் முகத்தில் அத்தனை ஆனந்தம் அள்ளி கொண்டது.    சிறிது நேரத்தில் தந்தை அழைத்ததால் அங்கு வந்து சேர்ந்தாள் நித்யா. நித்யாவின் பின்னாடியே  ராஜா குடும்ப வக்கிலும் வந்துவிட,    ஆமா, பாருப்பா வம்சி உங்க வீட்டு வக்கில் வண்டுமுருகன் வந்துட்டாரு.  சோ நடக்க வேண்டிய வேலையைப் பாருங்கப்பா என நக்கலடித்த ஆனந்திற்கு,    

ஷட் அப் எனற பதிலை வக்கில் சொல்ல, வாயை பிடித்து கொண்டு என்ன வார்த்தையை சொல்லிட்டிங்க சேர் என நடிப்பு காட்ட,  ம்ம்ம் உன் வாய மூடச் சொன்னார் என வம்சி சொல்லிவிட்டு முறைக்க கப்சுப்பென அடங்கினான்.    பின் வக்கீல் அவர் பைல்களை சரிசெய்து கௌரியின் பெயரில் சொத்து மொத்தத்தையும் எழுதி வைத்தார். பிரியாவின் பெற்றோருக்கு ஒரே பேரானந்தம்.  

  பின் ஆதாரத்தில் கையொப்பமிட்ட வம்சி குடும்பத்தினரும், பிரியா மற்றும் மகிழ் குடும்பத்தினரும் சேர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.      இவங்க கல்யாணத்தை ஒரு பத்து பதினைந்து நாள வச்சிட்டால் நாங்களும் அமெரிக்கா போய்டுவம். அங்கேயும் நிறைய ஒர்க்ஸ் இருக்கு. சோ கல்யாணத்தை சீக்கிரம் வச்சிடலாம் என பிரியாவின் பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் ஒரு நல்ல திருமண முகூர்த்த நாளை தேர்த்தெடுத்தனர்.         மகிழிற்கும் , பிரியாவிற்கும் வெட்கத்தில் முகம் செவ்வானமாய் சிவந்தது.  

    மதுப்பிரியாவும், யாஷினியும் அவர்களை கிண்டல் செய்து கொண்டிருந்த போது உங்களுக்கும் தான் அந்த முகூர்த்தத்திலேயே  திருமணம் என சொன்னார் கிருஷ்ணன்.     தாய் , தந்தை அற்றவர்களை தன் குழந்தையை போலவே எண்ணியதால் அவர்களை போலவே யாருமில்லாதவர்களை விரும்பியதால் இப்படி ஒரு முடிவு.    இதில் மதிமாறனுக்கு பேரதிர்ச்சி. எங்கே சொத்தில் பங்கு எதாவது கேட்டுவிடுவானா என்று தான்.    ஆனந்தும் , லோகேஷூம் அவரை கட்டி அணைத்து கொண்டு சிறு பிள்ளைகள் போன்று அழத் தெடங்கினர். 

தங்களை பற்றியும் சிந்திக்க இந்த உலகில் ஆட்கள் இருக்கிறார்கள் என்ற ஆனந்த கண்ணீர் அது.     சிறிது நேரத்தில் கண்ணீர் தடம் மறைந்து, கல்யாண கலையில் வீடே கலைக்கட்டியது. அந்த சமயத்தில் மகழின் வீட்டில் நுழைந்த ஆருத்ரன்,

அவனது தோழியான சுமித்ரா, அவளது தோழனான ராகேஷ் என மூவரின் முகத்திலும் ஆனந்தம் தாண்டவம் ஆடியது. அந்த மண்டபத்தில் தாம் எதிர்பார்த்த அந்த பென்டிரைவ் கிடைத்ததால்….      வாமா சுமித்ரா ஆரு வந்தா தான் நாங்கலாம் இருக்குறதே உனக்கு தெரியுமா?…. என கேட்ட கிருஷ்ணாவிற்கு இனிமே வரன்பா என பதிலளித்தாள். 

    பின் அவர்களிடம் இந்த கல்யாண விசேஷத்தை சொல்ல மூவரின் முகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. பிறகு தங்களை சரிசெய்து கொண்டு ஒரு முடிவு எடுத்தனர்.  

காலைப்பொழுதை வெட்கத்துடன் கழித்தவர்கள் மொட்டைமாடியில் ஒன்றி கூடி பேசிக்கொண்டிருந்தனர்.   அப்போது அங்கு சுமித்ராவும் அவர்களது தோழர்களும் வர வம்சியை தவிர மற்றவர்கள் வீட்டிற்குள் சென்றனர்.      போகும் மகிழையே வெறித்து பார்த்த ஆருத்ரன் ” இந்த கல்யாணம நடக்காது மகிழ், நீ எனக்கு மட்டும் தான் “…. என எண்ணிக் கொண்டிருந்தான்.

    அங்கிருந்த அனைவரும் சென்று விட பெருமூச்சு விட்ட சுமி வம்சியின் முன் ஒரு லேப்டாப்பை நீட்ட,      என்ன சுமி குட்டி , எதுக்கு இது ?… என சிறுபிள்ளையை கொஞ்சுவது போல கொஞ்சிய வம்சியின் மீது ஏனென்று அறியாத அளவு கோபம் வந்ததது ராகேஷிற்கு.    இந்த பென்டிரேவ்வை போட்டு பாரு உண்மை புரியும். இதுக்கு மேல எதும் கேட்காத என கூறி நீட்டியவளிடமிருந்த லேப்டாப்பை பெற்று கொண்டான் வம்சி.   

அங்கு நிலவிய அழகிய இளங்காற்றில் அமர்ந்து, கிட்டத்தட்ட அந்த வீடியோவை பத்து தடவைக்கு மேலாக பார்த்திருந்தான் வம்சி. அவன் கண்கள் முழுவதும் வெறி, கோபக்காற்று அனலாய் பறந்திட மீண்டும் அந்த வீடியோ போட முயற்சித்தவனை தடுத்து,     இப்ப சொல்லு வசி, உன் பாட்டிய வெறும் ஐம்பதாயிரம் ரூபாய்காக மண்டையில் அடித்து, குத்துவிளக்கால் வயிற்றில் குத்தி பணம் பறித்தவலையா நீ திருமணம் செய்து கொள்ள போகிறாய்?…என வம்சியை  உலுக்கினாள் சுமித்ரா.  

   அவள் உலுக்கிய எந்தவித உலுக்கலும் வம்சியை பாதிக்கவில்லை.  ஏனெனில் மகிழ் அந்த பணத்தை பறித்திடும் போது பணத்தை என்கிட்ட குடுங்க என்ற வார்த்தையும்,  அந்த பணம் அந்த பணம் என்ற  பாட்டி கூறிய வார்த்தையுமே செவி வழியாக கேட்டுக்கொண்டிருந்தது. 

   சுமித்ரா அறைந்த அறையில் நினைவு வந்தவன், மண்டியிட்டு தலையில் இரு கைகளையும் பதித்து ஏன் மகிழினிகிருஷ்ணன் இப்படி பண்ணிங்க.      பணம் வேண்டுமென கேட்டிருந்தால் பாட்டியே வாரி கொடுத்திருப்பார்கள்!.. ‌ வெறும் பணத்துக்காக என் பாட்டிய படுத்த படுக்கையாக மாத்திட்டயா?… மகிழ் இதுக்குலாம் நீ ரொம்ப அனுபவிப்பாய் என எரிந்து எரிந்து விழுந்தான்.

     உனக்கு நான் பாடம் கத்துக்கொடுக்காமல் விடமாட்டேன் மகிழ் என சீற, அவன் முன் வந்த சுமி அப்ப இந்த கல்யாணத்தை நிறுத்திடு வம்சி என சொன்னவளிடம் , இல்ல சுமி குட்டி இந்த  கல்யாணம் என்ன பெத்த தெய்வங்களோட  விருப்பம் அத என்னால கெடுக்க முடியாது.    

ஆனால் ஏன் அவங்கள அடிச்சம்,…. ஏன் அவங்க கிட்ட இருந்து பணம் பிடுங்க ஆசைப்பட்டேன் என மகிழினி வருந்துவாள்.  நான் செய்யும் கொடுமையால் அவள்  வாழ்க்கையையே வெறுப்பா குட்டி …..என அந்த நேரத்திலும் அவளிடம் சாந்தமாக கூறினான். 

இப்பக்கூட பணத்துக்காக தான் என்ன காதலிப்பதாக சொன்னாலா? ….. என்ற எண்ணம் அவனுள் வந்தோடியது.   தன் பாட்டியின் இந்த நிலைக்கு காரணமாய் விளங்குபவளை திருமண மேடையில் கவனித்து கொள்ளலாம் என திட்டம் தீட்டியவன் ,    நகை, சேரி, மற்ற திருமண சம்மந்தமான பொருட்களை வாங்கும் போது சிரிப்பு என்னும் முகமூடியை மாற்றி கொண்டு கல்யாண நாளுக்காக காத்து கொண்டிருந்தேன் வெறிபிடித்த வம்சி.திருமண நாளான இன்று இவ்வாறு இதுவரை நடந்த அனைத்தையும் கண் இமைக்கும் நேரத்தில் சொல்லி முடித்து பெருமூச்சை விட்டான் வம்சி. 

   என்ன எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சுனு கல்லு போல நிற்கிறாயா?.., என மகிழிடம் எரிந்து விழுந்துவிட்டு தன் நண்பனின் முகம் நோக்கி சென்ற வம்சி     மகிழினி உனக்கு யாரு வெறும் ப்ரண்ட்.  அவ்ளோதானா என அனைத்தும் அறிந்த வம்சி கேட்க, அது வந்து என இழுத்த கௌரியிடம்,…..     இனிமேல் அவ எப்படி கதறுவானு  பாருடா மிஸ்டர் கௌரி சங்கர் என எச்சரிக்கை விடுத்தான்.

தன் ஆறு வருட உயிர் தோழன் இதுவரை தன் பெயரை அழைத்து கூப்பிடாதவன் இப்படி மரியாதை நிமிர்த்தமாக பேசியதை எண்ணி கலங்கினான்.    பின் வம்சியிடம் சென்று டே மச்சி என்ன நம்பலையாடா?…. என கேட்டவனுக்கு நம்புறேன் ஆனால் உன்ன இல்லை உன் தங்கச்சியை…. என கூறி முடித்தான் வம்சி.    

பின் மகிழிடம் திரும்பி     இங்க பாருங்க மகிழினி உங்களுக்கு இரண்டே இரண்டு ஜாய்ஸ் தான் இருக்கு என சொல்ல,   என்ன வசி மகிழினியா????

இப்படி ஏன் கூப்புற நீ எப்பவும் போல மின்னல்னே கூப்பிடு அதான் எனக்கும் பிடிக்கும்  என்று சொன்னவளை சுவற்றோடு சுவராக பிடித்து அவள் தொண்டையை நெருக்கி, அவளது பாதம் கீழே படாதபடி பிடித்திருந்தான் வம்சி.   

கொலைவெறியுடன் நான் என்ன சொல்றனோ அத மட்டும் நீ கேட்டா போதும்.  எதுக்காகவும் உன் பேச்சு சத்தம் வரக்கூடாது ஓக்கேவா என சீறியவனுக்கு சரி என தலையசைத்தாள்.  

   அவள் கண்கள் சொருக, மூச்சு முட்டவதை உணர்ந்து , அவளை கீழே இறக்கியவன்,…..     படபடவென இந்த கல்யாணத்தை நிறுத்தி, உங்க அப்பாக்கூட இந்த சொர்கத்துலயே இருந்து , அந்த ஹார்ட்ஹட்டாக் பேசண்ட்ட கொல்லு,   அப்படி இல்லைனா… இந்த கல்யாணத்தை ஏத்துகிட்டு , நீ விரும்பற வம்சிக்கூட நரகத்துல வந்து வாழ பழகிக்கோ….. என சொன்னவனையே கண்ணில் நீருடன் பார்த்து கொண்டிருந்தாள் மகிழினி.        

    சண்டை மீளும் ____________________________________________    

1 thought on “16) மோதலில் ஒரு காதல்”

  1. அடப்பாவி….! உண்மை எதுன்னு முழுசா தெரிஞ்சிக்காமலே இந்த குதி குதிக்கிறானே… சரியான கிறுக்கனா இருப்பான் போலவே..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *