Skip to content
Home » பூவிதழில் பூத்த புன்னகையே 5

பூவிதழில் பூத்த புன்னகையே 5

  • தீரன் பார்வதி இறக்கும் தருவாயில்  கேட்கிறார் என்பதால்  அரசியின் கழுத்தில் தீரன் தாலி கட்டினார் தீரன் தாலி கட்டிய அடுத்த நொடி பார்வதியின் உயிர் இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்றது …
  • “தீரன் பார்வதி என்று கத்திக்கொண்டே பார்வதியை தன் தோளில் சாய்த்துக் கொண்டு அழுதார் இங்கு அரசு தேவாவை தனது நெஞ்சில் சாய்த்து கொண்டு சமாதானம் செய்தார் “…
  • அன்றில் இருந்து அரசிக்கு அவர் வயிற்றில் பெறாத மகனாக ஆகிப்போனான்  தேவா அதன்பிறகு “பார்வதிக்கு அனைத்து சடங்குகளில் ஏற்பாடு செய்யப்பட்டது இறுதி சடங்கும் முடிந்த பிறகு முற்றிலுமாக தீரன் உடைந்து போய் இருந்தார்” …
  • அவர் ஒரே அடியாக உடைந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் இப்படியே அவர்களது வாழ்க்கைச் சென்றது ஏன் வருடங்கள் ஓடியது என்று கூட சொல்லலாம் “அரசி தேவாவை தனது மகனாகவே வளர்த்தார் மகனாகவே என்று சொல்வதை விட அரசியின் மகனாக தான் தேவா வாழ்ந்தான் “..
  • வார்த்தைக்கு வார்த்தை அரசி மா அரசி மா என்று தான்  அழைக்கப்படுவான் தீரன் அரசி இடம் பெரியதாக எதுவும் பேச மாட்டார் தேவாவை பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் சொல்லுவார் “தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை அழிந்து விட்டது என்று எண்ணினார்”…
  • அவருக்கு திருமணமாக புதிதில் “அரசிடம் நீ உன்னுடைய வாழ்க்கை பார்த்துக் கொண்டு செல் நான் எனது குழந்தையை எப்படி வளர்த்துக் கொள்கிறேன்” என்றார் …
  • இதை நீங்கள் பார்வதிக்காக கட்டியிருக்கலாம் நானும் பார்வதிக்காக என்று ஏற்றுக்கொண்டேன் ஆனால் நான் தேவாவை எனது மகனாக வளர்ப்பேன் என்று பார்வதிக்கு சத்தியம் செய்தேன் ..
  • “நான் உங்களை என்னை உங்களுடைய மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை” ஆனால் உங்கள் மகனுக்கு அம்மாவாக ஏற்றுக் கொள்ளலாமே “எனக்கு இனி  வேறொரு வாழ்க்கை என்று எதுவும் இல்லை “உங்களை மனதில் நினைத்துக் கொண்டுதான் இருந்தேன்…
  • எப்போது நீங்கள் வேறு ஒருவருக்கு கணவன் என்று தெரிந்ததோ அதன் பிறகு உங்களை மனதில் இருந்து தூக்கி எறிந்து விட்டேன். அதற்காக “என்னுடைய முதல் காதல் ஏதோ ஒரு மூலையில் கூட இல்லாமல் மொத்தமாக அழித்துவிட்டேன் என்று அர்த்தம் இல்லை” என் மனதில் நீங்காத  விடுவாக நீங்கள் இருக்க தான் செய்கிறீர்கள் ..
  • அதற்காக “நான் உங்களை என்னை மனைவியாக ஏற்றுக் கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன் என்று அர்த்தமில்லை தேவாவிற்கு ஒரு அம்மாவாக இருந்து விட்டு செல்கிறேன் “என்று விட்டார் …
  • நாம் தேவாவை அதுவும் பச்சிளம் குழந்தை வளர்ப்பது கடினம் தானே என்று அஞ்சி சரி என்று ஒத்துக் கொண்டார் இப்படியே வருடங்கள் ஓடியது” தீரனுக்கு அரசியின் மேல் நல்ல எண்ணம் கூடியதே தவிர காதல் எல்லாம் வரவில்லை” …
  • அவர் இப்பொழுது வரை அரசியை தேவாவின் அம்மாவாக மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார் இப்படியே வருடங்கள் ஓட்ட தேவா பள்ளி செல்லவும் ஆரம்பித்திருந்தான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான் அப்போது தேவா வீட்டில் வந்து “தனது தாய் தந்தையிடம் அம்மா எனக்கு ஏன் தம்பி பாப்பா இல்லை எனது நண்பர்கள் அனைவருக்கும் இருக்கிறார்கள் என்று கேட்டான் “..
  • அப்பொழுது அரசி சமாளித்தவராக அது ஒன்றும் இல்லைடா தங்கம் அம்மாவிற்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை அதனால் உனக்கு தம்பி பாப்பா எல்லாம் வராது என்று சொல்லி சமாளித்து விட்டு  அரிசி தேவாவை சமாளித்ததை பார்த்து தீரன் அமைதியாக சென்றுவிட்டார் …
  • அதன் பிறகு ஒரு வாரம் தேவா அதைப்பற்றி கேட்கவில்லை பிறகு திரும்பவும் கேட்க ஆரம்பித்தான் தீரன் இது என்ன பேச்சு இந்த மாதிரி எல்லாம் கேட்கக்கூடாது என்று திட்டிவிட்டார் அரசி தீரனை முறைத்து விட்டு தேவாவை தன் மடியில் உட்கார வைத்துக்கொண்டு தங்கம் ஏனடா இப்படி எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறாய் …
  • அம்மா தான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் அல்ல “அம்மாவிற்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை அதனால தம்பி பாப்பாவை பற்றி எல்லாம் கேட்கக்கூடாது” என்று அதன் பிறகு ஏன் கேட்டுக் கொண்டிருக்கிறாய் யார் உன்னிடம் இவ்வாறெல்லாம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்…
  • நான் வந்து பேசுகிறேன் என்றார் இல்லை அம்மா வேண்டாம் எனக்கு தம்பி பாப்பா தான் வேண்டும் என்றான் தீரன் அடிப்பதற்கு கை ஓங்கி கொண்டு வந்தார் ஒருமுறை முறைத்து பார்த்து விட்டு தேவாவை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு தங்கம் உன்னுடன் விளையாடுவதற்கு தான் நான் இருக்கிறேன் …
  • “அம்மா  நீங்கள் எப்போதும் என்னுடன்  இருப்பீர்களா என்றான் அம்மா உன்னை விட்டு எங்கு செல்ல போகிறேன் எப்போதும் உன்னுடன் தான் இருப்பேன் உன்னுடன் தினமும் விளையாட செய்வேன் நீ இனிமேல் தம்பி பாப்பா பற்றி கேட்காதே” அப்பாவிற்கு கவலையாக இருக்கும் பார் என்றவுடன் தீரன் முகம் வாடி இருப்பதை பார்த்துவிட்டு “தீரனிடம் சென்று சாரி பா இனிமேல் நான் அப்படி கேட்க மாட்டேன் என்று தீரனின் கண்ணை துடைத்து விட்டு அரசியின் மடியில் சென்று படுத்துக்கொண்டான்” …
  • கொஞ்ச நேரத்தில் உறங்கியும் விட்டான் “அவன் உறங்கிய பிறகு அரசி தீரனை திட்டிவிட்டார் சின்ன பிள்ளையிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாதா அவன் தெரியாமல் ஏதோ உடன் படிக்கும் பசங்கள் பேசியதால் வந்து கேட்கிறான் என்றார் அரசி …
  • ஒருநாள் கேட்டான் சரி ஆனால் அடிக்கடி கேட்கிறானே என்று கத்தினார் “அதை நாம் சொல்லித்தான் புரிய வைக்க வேண்டும் இப்படி அடித்து அல்ல அதை முதலில் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்” குழந்தைகளிடம் பாசமாக நடக்க செய்யுங்கள் என்றார் …
  • “நான் பாசமாக இல்லையா அவனிடம் என்றார் நீங்கள் பாசமாக இருக்கிறீர்களா இல்லையா என்று நான் சொல்லவில்லை இப்படி அடிக்க கை ஓங்குவது சரி இல்லை என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்”…
  • அரசியும் தேவாவும் அவர்கள் வீட்டில் இருக்கும் ஒரு அறையில் படுத்துக் கொள்வார்கள் தீரன் வெளியே ஹாலில் படுத்து கொள்வார்  இப்படியே வருடங்கள் ஓடிவிட்டது …
  • ஆனால் தேவா அன்று எனது தாய் தந்தையிடம் தனக்குத் தம்பி பாப்பா வேண்டும் என்று கேட்ட  பிறகு “தேவா தினமும் தனது அம்மா அப்பாவுடன் பேசிக்கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும் இருவரும் தனித்தனியாக படுக்கிறீர்கள் என்று சொல்லி அப்பாவை உள்ளே அவர்கள் இருக்கும் அறைக்கு படுக்க கூப்பிட்டான்” …
  • அவர் வரமாட்டேன் என்று சொன்ன பிறகு தனது தாயை அழைத்துக் கொண்டு வந்து ஹாலில் படுத்துக்கொண்டான் அவனது ஆசை நியாயம் என்பதால் தீரனும் எதுவும் பேசவில்லை “அரசியும் தேவாவை நடுவில் போட்டுக் கொண்டு இந்த பக்கம் அரசியும் அந்த பக்கம் தீரனும் படுத்து தூங்க ஆரம்பித்தார்கள்”…
  • இப்படியே நாட்கள் உருண்டோடியது தேவா அதன் பிறகு தம்பி பாப்பா வேண்டும் என்றெல்லாம் அடம் பிடிக்கவில்லை “அரசியும் அவன் அவ்வாறு கேட்கும் படியாக நடந்து கொள்ளாமல் ஒரு நண்பனை போலவே  அவனிடம் பழகுவார் விளையாடச் செய்வார்” ..
  • “யார் கண் பட்டதோ அவர்களது வாழ்க்கையில் இடி இறங்க ஆரம்பித்தது” தேவா நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருந்தான் அப்போது “அவனுடன் படிக்கும் நண்பர்கள் யாரோ சொல்லியிருக்கிறார்கள் அம்மாவும் அப்பாவும் ஒன்றாக படுத்து உறங்கினால் தானே குழந்தை வரும் என்று” குழந்தையான தேவா என்ன நினைத்தானோ “நானும்   அவர்களுடன் இருப்பதால் தான் தனக்கு  தம்பி பாப்பா கிடைக்க வில்லையோ என்று எண்ணி தனது தாயிடம் அடம் பிடித்தான்”..
  • நான் மட்டும் உள்ளே படுத்துக் கொள்கிறேன் நீங்கள் வரவேற்பு அறையில் படுங்கள் என்று சொன்னான் ஏன் என்று கேட்டதற்கு அவன் அப்படியே தனது நண்பன் சொன்னதையும் சொன்னவுடன் அரசி சிரித்தார் தீரன்  தேவா முறைத்து விட்டு  நீ கொடுத்த செல்லம் இப்பொழுது எந்த அளவிற்கு சொல்கிறான் என்று பார் என்று கேட்டார்…
  • “அவன் வயது பிள்ளைகள் ஏதோ பார்த்ததை கேட்டதை சொல்கிறார்கள் அதற்கு நீங்கள் இப்படி பேசுகிறீர்கள் என்று விட்டு தீரனை பார்த்தார் போதும் நான் உங்கள் பேச்சு என்று கை எடுத்து கூப்பிட்டு விட்டு “தேவா நீ உள்ளே போய் படு என்று தேவாவை அனுப்பி வைத்துவிட்டு அவனை வைத்துக்கொண்டு என்ன பேச வேண்டுமோ அதை மட்டும் பேசுங்கள்”
  • ” நான் தேவாவிற்காக மட்டும்தான் உங்களை திருமணம் செய்து கொண்டேன் என்பதை மறந்து விடாதீர்கள்” எனக்கு உங்கள் மீது விருப்பம் இருக்கிறது ஏன் இப்போதும் விருப்பம் இருக்கிறது “இல்லாத ஒருத்திக்காக நான் உங்களை நினைக்க கூடாது என்று அர்த்தமில்லை என்றவுடன் தீரன் அதிர்ச்சியாக்கி பார்த்தார்”
  • அதற்காக உங்கள் மீது எனக்கு தவறான எண்ணம் இருக்கிறது என்று ஆகிவிடாது அதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் “இத்தனை வருடங்களில் நான் உங்களிடம் தவறான நோக்கத்தில் நடந்து கொள்ளவும் இல்லையே” என்பது உங்களுக்கு தெரியும் அதற்காக தேவா கேட்டது போல் நடக்கும் என்றும் நான் சொல்லவில்லை ..
  • அவனது மனது காயம்படியாக நடந்து கொள்ளாதீர்கள் என்று மட்டும் தான் சொல்கிறேன் “அவன் இப்படி நம் இருவரையும் ஹாலில் படுக்க வைத்து விட்டால் ஒன்றாக குழந்தை வந்து விடும் என்று குழந்தை எண்ணுகிறான்” அப்படி படுக்க வைத்து விட்டால் குழந்தை வராது என்று அவனுக்கு இன்னும் சில நாட்கள் சென்றால் உணர்ந்து விடுவான்..
  • அதற்காக இப்பொழுது அவனை துன்புறுத்தாதீர்கள் திட்டாதீர்கள் என்று சொல்லிவிட்டு அமைதியாக கொஞ்சம் இடைவெளி விட்டு ஹாலில் படுத்துக் கொண்டார் …
  • தீரனும் அரசியை பார்த்துவிட்டு போட்டோவில் இருக்கும் பார்வதியை பார்த்து கொண்டே பார்வதியிடம் புலம்பி கொண்டே படுத்தார்…
  • பார்வதி எப்போதுமே தீரனின் கனவில் வந்து சொல்லுவார் “அரசி நல்லவள் அவள் உங்களை விரும்பியது உண்மை அவளுக்கு என் மீதுதான் கோபமே தவிர உங்கள் மீது இல்லை” …
  • அது கூட அவள் என்னிடம் “உங்கள் மீதான விருப்பத்தை சொன்ன பிறகு அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் நான் உங்களை திருமணம் செய்து கொண்டேன் என்று எண்ணம் கோபம்” தான் இப்பொழுது “நான் பெற்ற மகனை அவள் வயிற்றில் பிறந்த பிள்ளை போல் பார்த்துக் கொள்ளவில்லையா” அவள் உண்மையாக நல்லவள் தான்..
  • நீங்கள் அவளை உங்கள் மனைவியாக ஏற்றுக் கொண்டு அவளுடன் உங்களது வாழ்க்கையை தொடங்குங்கள் எனக்காக நீங்கள் இப்படியே இருக்க வேண்டிய அவசியம் இல்லை “நீங்களும் வாழாமல் அவளும் வாழாமல் எதற்காக இப்படி ஒரு வாழ்க்கை” தேவாவுக்கு என்று சொல்லி இன்னும் எத்தனை ஆண்டுகள் இருவரும் இப்படியே உங்களை ஏமாற்றிக் கொள்ளலாம் என்று இருக்கிறீர்கள்…
  • அவளுக்கு உங்கள் மீது விருப்பம் இருக்கிறது நீங்கள் என்னை நினைத்துக் கொண்டிருக்காதீர்கள் அதற்காக என்னை நினைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை அவளை உங்களது மனைவியாக ஏற்றுக் கொண்டு உங்களது வாழ்க்கையை தொடங்குங்கள் என்பார்..
  • அதே போல் அன்றும் “அவரது கனவில் வந்த தீரனுக்கு வேர்த்து ஊற்றியது எழுந்து உட்கார்ந்து தனது வியர்வையை துடைத்துக் கொண்டே தூங்கும் அரசியை பார்த்தார் அரசி அமைதியாக தூங்கினார். “தூங்கியது மட்டும் இல்லாமல் அவரது அந்த பக்கம் அறையில் தூங்கிக் கொண்டிருந்த தேவாவை தூக்கிக் கொண்டு வந்து தனது அருகில் போட்டு அவனை தட்டிக் கொடுத்துக்கொண்டே தூங்கினார்.”….
  • நாம்தான் இவளை தவறாக எடுத்துக் கொண்டோமோ என்று எண்ணினார் சாதாரணமாக தூக்கத்தில் இந்த பக்கம் திரும்பிய அரசி தீரன் உட்காந்து கொண்டிருப்பதை பார்த்து விட்டு என்ன ஆச்சு ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கிறீர்கள்..
  • ” ஏதாவது கெட்ட கனவு கண்டீர்களா என்றார் ஆமாம் இல்லை என்பது போல் இரு பக்கமும் தலையாட்டினார் தீரன்”..
  • “அரசி  வேறு எதுவும் பேசாமல் ஒரு சொம்பு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார் தீரன் வாங்கி குடித்துவிட்டு அரிசியை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தார்” அமைதியாக படுத்து தூங்குங்கள் நீங்கள் நினைத்து எதுவும் நடக்காது என்று சிரித்தார்…
  • அரசி வேறு  எதுவும் பேசாமல் படுத்துக்கொண்டார் இவருக்கு இந்த நேரத்தில் என்ன கனவு வந்தது ஏன் இப்படி வியர்த்து விருவிருக்க உட்கார்ந்திருக்கிறார் “காலை கோவிலுக்கு சென்று வர வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டு உறங்கி விட்டார் அரசி” …
  • இப்படி நல்ல உள்ளம் கொண்ட அரசி எப்படி தேவாவிற்கு வினையாக வந்தார் அதேபோல் தீரன் அரசியை எப்படி ஏற்றுக் கொண்டார் என்பதையும் நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …
  • அன்புடன்
  • ❣️தனிமையின் காதலி ❣️

4 thoughts on “பூவிதழில் பூத்த புன்னகையே 5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *