தேவா அரசியிடம் நான் உங்களை அம்மா என்று உங்கள் வாயாலே என்னை சொல்ல சொல்லி கேட்கும் நாள் மிகக்கூடிய விரைவில் வரும் என்று மனதில் எண்ணிக் கொண்டே அவரது அறையை விட்டு வெளியில் சென்றான்…
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
தீரன் என்ன டா என்று கேட்டார் தீரனிடம் பேசாமல் நகர்ந்தான் டேய் தேவா என்றார் என்னிடம் எதுவும் பேசாதீர்கள் நீங்கள் பேசிய வரை போதும் என்றான் அவருக்கு மேலும் மேலும் அடி வாங்கிய உணர்வு ஏற்கனவே ஒருத்தியை இழந்து விட்டேன்…
இன்னொருவளும் என் அருகில் இருந்தும் என்னை விட்டு விலகி இருக்கிறாள் இப்பொழுது தான் பெற்ற மகனுமா என்று வருந்தினர் எல்லாம் தான் பேசிய பேச்சால் தனது செயலால் என்று வருந்தினார் …
இதை எப்படி திருத்திக் கொள்வது என்றும் அவருக்கு தெரியவில்லை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை இப்படியே இரண்டு நாட்கள் கழிந்தது அரசி ரொம்ப வீக்காக இருந்ததால் டிரிப்ஸ் போட வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள்…
இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்து விட்டு மூன்றாவது நாள் வீட்டிற்கு வந்தார்கள் அவர் வீட்டிற்கு வந்த பிறகு அரசியை பெற்றவர்கள் செய்தி கேள்விப்பட்டு அரசியை பார்க்க வந்தார்கள் …
நீ இவனை விரும்புகிறாய் என்று சொல்லும்போது நாங்கள் உனக்கு இவனை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணினோம் தானே அதன் பிறகு நீயாக தானே வந்து அவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான் என்று சொன்னாய்…
ஆனால் அவன் வேறு ஒரு பெண்ணின் கணவன் என்று தெரிந்த பிறகு உன்னை அவனுக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எங்களுக்கு விருப்பம் இல்லை என்றார்கள்…
இவனுக்காக என்று தேவாவை கை காமித்தார்கள் இவனுக்காக என்று இவரை திருமணம் செய்து கொண்டாய் ஆனால் அவன் உன்னை இப்பொழுது எந்த நிலையில் விட்டிருக்கிறான் இப்படி இருந்தும் ஏனடி இங்கே இருக்கிறாய் என்றார்கள் …
“அது வரை அமைதியாக இருந்த அரசி எதற்கு என்னை தேடி வந்தீர்கள் என்று கேட்டார் தேவா அம்மா என்று கத்தினான் தனது மகனை தேவாவை பார்க்க செய்தார்” தன் மகன் அரசியின் முழு வளர்ப்பு அரசின் வளர்ப்பு சோடை போகவில்லை என்று மனதிற்குள் எண்ணினார் தீரன்..
அரசியின் பெற்றவர்களுக்கு கூட தேவாவை அந்த ஒரு விஷயத்தில் பிடிக்க தான் செய்தது அம்மா வாக இருந்தாலும் அரசி செய்த தவறை சுட்டிக் காட்டுகிறான் என்று எண்ணினார்கள் அமைதியாக தேவாவை பார்த்தார்கள் …
தேவா அரசியின் பெற்றவர்கள் அருகில் வந்து தாத்தா பாட்டி என்னை முதலில் மன்னித்து விடுங்கள் அம்மாவை பார்க்காமல் விட்டது என்னுடைய தவறுதான் இனிமேல் நான் நன்றாக பார்த்துக் கொள்வேன் …
ஆனால் “அம்மாவை மட்டும் அழைத்து செல்லாதீர்கள் அம்மா உடனே இருந்து அம்மாவை பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் தம்பி பாப்பாவும் நன்றாக பார்த்துக் கொள்கிறேன்” அம்மாவை இங்கே விட்டு செல்லுங்கள் அம்மாவை உங்களுடன் கூப்பிட்டு சொல்லாதீர்கள் என்று அவர்கள் இருவரது கால்களையும் கட்டிக்கொண்டு அழுதான் ….
இருவருக்கும் அவனது பேச்சிலும் அவனது அன்பிலும் உள்ளம் குளிர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும் அரசியின் பெற்றவர்கள் இருவரும் தீரனை முறைத்துவிட்டு தேவாவின் தலையை லேசாக கோதிவிட்டு சரிடா என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் தனது மகளிடம் வேறு ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாக நகர்ந்து விட்டார்கள்…
இப்படியே மாதங்கள் சென்றது அரசியும் தேவாவிடம் பெரிதாக பேசவில்லை தேவாவும் அரசியிடமிருந்து ஒதுங்க ஆரம்பித்தான். தேவா அரசி அம்மாவாக என்னை அம்மா என்று கூப்பிடு என்று சொல்லும் வரை அவரிடம் பெரிதாக அவனும் பேசவில்லை …
அவன் அவரிடம் பெரிதாக பேசவில்லையே தவிர அவருக்கு என்னென்ன தேவையோ அனைத்தையும் செய்வான். காலை தன் உடனே உட்கார வைத்து சாப்பிட வைத்துவிட்டு மாத்திரை கொடுத்து விட்டு செல்வான் …
மதியத்திற்கு சாப்பிட்டு இருக்க வேண்டும் என்று சொல்லுவான் மதியம் அவன் பள்ளி முடிந்து வரும் போது அவர் சாப்பிடாமல் இருந்தால் அவனும் இரவு உணவு சாப்பிட மாட்டான் முதலில் இரண்டு நாட்கள் இப்படி தான் சென்றது அவன் இரவும் சாப்பிடவில்லை என்றவுடன் அவனது பிடிவாதம் தெரிந்ததால் அமைதியாக சாப்பிட செய்தார் …
மூன்று வேளையும் தேவா கவனிப்பில் நன்றாக சாப்பிட செய்தார் தன்னுடைய உடலை கொஞ்சம் தேர்த்தி கொண்டார் தீரன் எவ்வளவோ பேச முயன்றார் ஆனால் அதற்கான இடத்தையே அரசி கொடுக்கவில்லை என்று சொல்ல வேண்டும் …
“அவரால் எந்த அளவிற்கு விலக முடியுமோ அந்த அளவிற்கு தீரனை விட்டு விலகச் செய்தார் தேவா அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை இனி அது பெரியவர்கள் விஷயம் அவர்களே பேசிக் கொள்ளட்டும் “தனக்கு தன்னுடைய அம்மா தன்னுடன் பேச வேண்டும் அவரது உடல் நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் …
இதை மட்டும் தான் தேவாவின் எண்ணமாக இருந்தது அதற்காக அவனால் முடிந்த அனைத்தையும் செய்தான் இப்படியே மாதங்கள் உருண்டோடியது அரசிக்கு ஏழாவது மாதம் வளைகாப்பு வைக்க வேண்டும் என்று தீரன் எவ்வளவு கேட்டுக் கொண்டார் …
அரசி என்னுடைய குழந்தையை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு தெரியும் என்னுடைய குழந்தைக்கு யாரும் வளைகாப்பு வைக்க வேண்டியது இல்லை நாளை இந்த வளைகாப்பையும் செய்துவிட்டு உன் குழந்தைக்கு விமர்சையாக செய்து கொண்டாய் பார்த்தாயா என்று பேச்சு வரும் …
எனக்கு எதுவும் வேண்டியதில்லை என்றவுடன் அவரை ஒவ்வொரு வார்த்தையும் சுடு சொல்லால் கொன்றார் அவர் பேசிய ஒரு வார்த்தைக்கு அரசி ஒவ்வொரு வார்த்தையாலும் அவரை பேச்சாலே கொல்ல செய்தார்…
அரசி தீரனிடம் பேசுவது ஏதோ ஒரு வார்த்தை அந்த ஒவ்வொரு வார்த்தையும் குத்தி கொன்றார் தீரன் வேறு எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டார் தேவாவிடம் சென்று தேவா பேசுடா என்றார்…
அப்பா நீங்கள் அம்மாவைப் பற்றி பேசுவதாக இருந்தால் என்னிடம் பேச வேண்டாம் என்று நகர்ந்து விட்டான் தேவா தனது தந்தையிடம் பேசுவான் அது வேண்டும் இது வேண்டும் அப்படி இருக்க வேண்டும் இதைப் பற்றி மட்டுமே பேசுவானே தவிர மற்றபடி அவரிடம் உட்கார்ந்து பேச மாட்டேன் …
“தீரன் ரொம்பவே உடைந்து போய்விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் தான் பெற்ற மகனும் தான் கட்டியும் மனைவியை தன்னை முழுவதாக ஒதுக்கி விட்டார்களே” என்று வருந்தினார் ஒன்பதாவது மாதம் தொடங்கியவுடன் தேவா அரசியிடம் வந்து நின்றான்..
அவர் அமைதியாக நிமிர்ந்து பார்த்தார் ரொம்ப நேரமாக அவன் அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்ததால் என்ன என்றார் “அவன் தொண்டையை லேசாக சரி செய்து கொண்டு சித்தி உங்களுக்கு ஒன்பதாவது மாதம் தொடங்கிவிட்டது தம்பி பாப்பாவிற்கு வளைகாப்பு வைக்க வேண்டும் என்றான்”…
ஏன் உன்னுடைய அப்பாவிடம் நான் பேசியது உன் காதில் விழவில்லை என்றார் நான் அவரைப் பற்றி கேட்கவில்லை நான் என்னுடைய சித்திக்கும் என்னுடைய தம்பி பாப்பாவிற்க்கும் செய்வதற்கு கேட்கிறேன் என்றான்..
அவர் அமைதியாக இருந்தார் எப்படி உன்னுடைய அப்பா காசு இல்லாமல் எனக்கு செய்து விடுவாயா? என்று கேட்டார் அவன் லேசாக சிரித்துக்கொண்டே அவன் ஸ்கூல் பேகில் இருந்து ஒரு டசன் வளையல் சிறிது பூ எடுத்துக்கொண்டு வந்தான் அவர் அவனை அமைதியாக பார்த்தார் ..
இது ஏது என்றார் இது எதையும் நான் அப்பாவும் காசில் வாங்கவில்லை நீங்கள் நான் பள்ளி செல்லும் பொழுது எனக்கு கொடுத்த காசை வைத்து வாங்கியது சேர்த்து வைத்த காசில் வாங்கியது இது முழுக்க முழுக்க உங்களுடைய உழைப்பு பிளீஸ் எனக்காக சித்தி தம்பி பாப்பா வயிற்றில் இருக்கும் போது வளையல் போட வேண்டும் என்று என்னுடைய நண்பர்களின் அம்மாக்கள் எல்லாம் போட்டு இருக்கிறார்கள் என்றான்…
அவரின் அருகில் முட்டி போட்டுக்கொண்டு அவரை நிமிர்ந்து பார்த்து கேட்டான் அவனது கண்கள் குளம் கட்டியிருந்தது அவருக்குமே கண்ணீர் வர செய்தது அமைதியாக இருந்தார் அப்பொழுது சரி போட்டு விடு என்றார் இரு சித்தி என்று சொல்லிவிட்டு தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பாட்டியை அழைத்துக்கொண்டு வந்தான்…
அவரது கையில் வளையலை கொடுத்து போட்டு விட சொன்னான் அவர் அவர் வீட்டில் இருந்து ஐந்து வகையான சாதம் ரெடி பண்ணி எடுத்துக் கொண்டு வந்து நீயும் என் மகள் போல் தான் அரசி உன்னுடைய கணவன் ஏதோ கோபத்தில் பேசி விட்டார் …
ஆனால் அவர் பேசியதை நான் நியாயம் சொல்ல மாட்டேன் அது உங்கள் கணவன் மனைவி பிரச்சினை ஆனால் அதற்காக வயிற்றில் இருக்கும் குழந்தை என்ன பாவம் செய்தது அதற்கு நாம் முறையாக செய்ய வேண்டியதை செய்ய வேண்டுமே தேவா ஏற்கனவே என்னிடம் கேட்டுக் கொண்டான்…
இது என்னுடைய உழைப்பில் செய்தது தான் நான் தீரனிடம் எதுவும் வாங்கவில்லை அவரிடம் இதை பற்றி பேசவும் இல்லை என்று சொல்லிவிட்டு தேவா வாங்கிக் கொண்டு வந்து வளையலையும் அவர் சொந்த காசில் வாங்கிக் கொண்டு வந்த கொஞ்ச வளையலையும் வைத்து அக்கம்பக்கம் மூன்று பேரை அழைத்து ஐந்து வகையான சாதம் கிளறி வளையல் போட்டு விட்டார்கள்…
“ஏழாவது மாதம் தொடங்கிய உடனே அரசியின் பெற்றவர்கள் வந்து வளையல் போட்டு வளைகாப்பு போடுகிறேன் என்று சொன்னார்கள் எனக்கு எதுவும் நீங்கள் செய்ய வேண்டாம் நான் தான் உங்கள் பெண்ணில்லை என்று சொல்லிவிட்டீர்களே” அமைதியாக சென்று விடுங்கள் என்றார் ..
“அவர்கள் பெத்த மனது கேட்காமல் தேவாவை பார்த்தார்கள் தேவா நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது போல் கண்மூடி திறந்தான் பிறகு பக்கத்து வீட்டு அங்கிள் இடம் சொல்லி தேவா இவை அனைத்தையும் ஃபோட்டோ எடுத்து அரசியின் அம்மா அப்பாவிற்கு அனுப்பி வைத்தான்”.
அவர்களுக்கு தேவாவை எண்ணி மகிழ்ச்சியாக இருந்தது எப்படியும் இவன் தன் மகளை பார்த்துக் கொள்வான் என்று எண்ணினார்கள் அரசிக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது தன் பார்வையை திருப்பி கொண்டார்…
இப்போது தீரன் அரசியை ஏக்கமாக பார்க்க செய்தார் அப்படியே நாட்கள் சென்றது அரசிக்கு ஒன்பதாவது மாத இறுதி இருக்கும்போது தீரனுக்கு பயம் தொற்றிக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும் அவருக்கு ஒரு சில நேரங்களில் பார்வதி நினைப்பு வரும் …
அவள் வலியில் எப்படி துடித்தால் என்பதையும் எண்ணுவார் ஒன்பதாவது மாதம் தொடங்கிய பிறகு அரசி அருகில் வந்து படுக்க செய்தார் அரசி எவ்வளவு முறைத்தும் எவ்வளவு கேவலமாக கேட்டும் ஏன் இப்பொழுது கூட என்னுடைய உடல் தேவையா என்று கூட கேட்டுவிட்டார் அரசி…
ஆனால் தனது மனதை கல்லாக்கி கொண்டு நீ எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள் என்று விட்டு அரசியின் அருகிலே படுக்க செய்தார் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வலி வரலாம் இவள் தன் மீது உள்ள கோபத்தில் தன்னிடம் சொல்லாமல் விட்டுவிட்டால் இவளையும் இழக்க நான் விரும்பவில்லை என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வார் …
தேவாவும் அந்த பக்கம் படுத்து கொண்டு நடுவில் அரசியை படுக்க வைத்து விட்டு தீரன் இந்த பக்கமும் தேவா அந்த பக்கமும் படுத்துக் கொள்வான் மருத்துவர் கொடுத்த தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு அரிசிக்கு வலி எடுக்க ஆரம்பித்தது …
அவருக்கு இரவு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது சுருக்கென்று அடி வயிற்றில் வலி ஒன்று ஏற்பட்டது இது சூட்டு வலியாக இருக்குமோ இல்லை பொய் வலியாக இருக்குமோ என்று எண்ணி அமைதி காத்தார் அதன் பிறகும் வலி எடுக்க ஆரம்பித்த உடன் அருகில் இருக்கும் தீரனின் கையை வலியில் இறுக்கிப்பிடித்தார்…
தூக்கத்திலிருந்து எழுந்து தீரன் அரசியை பார்த்தார் அரசி என்ன பண்ணுது என்று கேட்டார் அரசியின் பார்வை தீரனின் கண்ணை உற்று நோக்கியதே தவிர அவர் வாயில் இருந்து ஒரு வார்த்தை வரவில்லை .
தீரன் என்ன பண்ணுகிறது என்று கேட்ட அடுத்த நொடி தேவாவும் கண் முழித்தான் என்ன டி பண்ணுது என் மேல் இருக்கும் கோவத்தில் உன்னை காயப்படுத்திக் கொள்ளாதே வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறாய் என் மேல் இருக்கும் கோவத்தை புறம் தள்ளி வைத்துவிட்டு என்ன செய்கிறது என்று சொல் மருத்துவமனை செல்லலாமா என்று கேட்டார்…
அரசி ஒரு வார்த்தை கூட பேசவில்லை அடுத்த நொடி அரசி வலியில் வேகமாக கத்த செய்தார் தீரன் தேவாவிடம் டேய் நீ அம்மா உடனே இரு நான் போய் ஆட்டோ பிடித்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வேகமாக சென்றார் அருகில் உள்ளவர்களை அழைத்து அவர்கள் வீட்டில் இருக்கும் கார் எடுத்துக்கொண்டு மருத்துவமனை நோக்கி ஓடினார்கள்…
தேவா அழுது கொண்டே தனது தாயின் கையை இறுக பற்றி கொண்டு வந்தான் அவன் திடமாக தான் இருக்க முயற்சி செய்தான் ஆனால் அரசி வலியில் துடிப்பதை பார்த்து அவனால் அழாமல் இருக்க முடியவில்லை..
இப்பொழுது தீரனுக்கு தேவாவை தேற்றுவதா? இல்லை இவளது வலியை போக்குவதா என்று புரியாமல் அமைதியாக தன் மனதிற்குள் புழுங்கிக் கொண்டு வந்தார்..
மருத்துவமனை போய் சேர்ந்தவுடன் அரசியை பிரசவ வார்டில் சேர்த்தார்கள் அரசிக்கு நல்ல முறையில் குழந்தை பிறக்குமா? அரசியும் குழந்தையும் நலமா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…
அன்புடன்
❣️தனிமையின் காதலி ❣️
Intha valilaum evlo vairakiyam arasi ku valikuthunu sollama iruka onum agathu deva unaku thambi vara poran
அதான் தம்பி பிறந்து வளர்ந்து ஆதுங்கற பேர்ல வலம் வரானே
அப்புறம் என்ன..???
Interesting
Nice epi