ப்ரின்ஸ்பல் ஆறு பேரையும் ஒரு முறை பார்த்துவிட்டு இளவேனில் தாயிடம் அம்மா படிக்கும் பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பதே தவறு அது மட்டுமில்லாமல் மாப்பிளை எப்படிப்பட்டவர் என்று கூட விசாரிக்காமல் தான் திருமண ஏற்பாடு செய்தீர்களா…அதுவும் உங்களுடைய சொந்த தம்பி என்று சொல்கிறார்கள் அவர் எப்படிப்பட்டவர் என்று உங்களுக்கு தெரியாதா என்று இளவேனில் தாய் வசந்தியை திட்டினார் எங்களுடைய தப்புதான் மன்னித்து விடுங்கள் நாங்கள் எங்களது தவறை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாக தான் முகில் தம்பிக்கு எங்கள் பெண்ணை கொடுத்தோம்… என் பெண்ணுடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று தான் அந்த நேரத்தில் நாங்கள் உங்களுக்கு முதலிலே சொல்லாமல் கொள்ளாமல் முகில் தம்பிக்கு எங்கள் பெண்ணை திருமணம் முடித்து வைத்தோம் என்றார் …சரி நீங்கள் ஒரு சூழ்நிலையில் செய்து வைத்தீர்கள் சரி அது எப்படி இவரை மட்டும் நம்பி உங்களது பெண்ணை திருமணம் செய்து வைத்தீர்கள் அப்படி ஒரு சூழ்நிலையில் அன்றே பார்த்தவுடன் என்றார் நீங்களும் எப்படி மிஸ்டர் என்று முகிலை பார்த்தார் ….கார்முகிலன் சார் என்றான் ஓகே மிஸ்டர் முகிலன் அப்படியே அவர்கள் சொல்வது போல் நடந்து இருந்தாலும் நீங்கள் எப்படி அந்த சூழ்நிலையில் திருமணம் செய்ய எப்படி ஒத்துக் கொண்டீர்கள் என்று கேட்டார் ..பிரின்ஸ்பல் அவ்வாறு கேட்டவுடன் முகில் பதில் சொல்ல வருவதற்கு முன்பே வேணி தான் சார் பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது நான் குறுக்கே பேசுகிறேன் என்று என்னைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் மன்னித்து விடுங்கள் நான் உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன் என்றால்..சரி சொல்லுமா என்றார் இந்த திருமணம் என்னுடைய விருப்பத்தோடு தான் சார் நடைபெற்றது அதற்காக நான் இவரை விரும்புகிறேன் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது என்னை பெற்றவர்கள் என்னை நம்பாமல் அவர்களுடைய விருப்பமும் அவர்களது உறவும் வேண்டும் என்று எண்ணி என்னை ஒரு அயோக்கியனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார்கள்…இவர் நிலாவுடைய அண்ணன் தான் அதாவது என்னுடைய தோழி நிலாவுடைய அண்ணன் தான் அவளை விட வரும்போது அழைத்துக் கொண்டு போகும்போது நான் இவரை பார்த்திருக்கிறேன் அது மட்டும் இல்லாமல் எங்கள் அப்பாவிற்கு கொஞ்சம் வயல்கள் இருக்கிறது அதற்கு பொருட்கள் வாங்குவதற்காக என்று இவர் கடைக்கு சென்று இருக்கிறேன்.. இவர் அக்ரிகல்ச்சர் படித்திருக்கிறார் சொந்தமாக கடை வைத்துக் கொண்டிருக்கிறார் அங்கு தான் சென்று பொருட்கள் வாங்குவேன். அப்போது பார்த்திருக்கிறேன் எங்கள் ஊருக்கு பக்கத்து ஊர் தான் இவரது குணநலங்களை வைத்து மட்டுமே திருமணத்திற்கு ஒத்துக் கொண்டேன் அது மட்டுமில்லாமல் என்னை படிக்க வைப்பேன் என்று சொன்னார்கள்…ஏன் இப்போது உங்கள் முன்பு வந்து நிற்கிறேன் அவர்கள் சொன்ன வார்த்தையை காப்பாற்றி இருக்கிறார்கள் என்றால் பிரின்ஸ்பால் சிரித்துக் கொண்டே நீ சொன்னதெல்லாம் சரிமா உன்னை கல்லூரிக்கு அழைத்து வந்துவிட்டு அமைதியாக இருந்தால் என்ன என்றார்..மிஸ்டர் கார்முகிலன் இளவேனில் படித்துக் கொண்டிருக்கும் பெண் என்று விட்டு அமைதியாக இருந்தார் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரிகின்றது சார் நான் வேணியுடைய படிப்பு கெடும் அளவிற்கு எதுவும் நடக்காது நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறேன் என்றான்…ஓகே மிஸ்டர் அக மகிழன் நீங்கள் படித்தவர் ஒரு நல்ல பொறுப்பில் இருப்பவர் உங்களுக்கு தெரியாதது இல்லை பொதுவாக காலேஜ் ரூல்ஸ் என்று ஒன்று இருக்கிறது படிக்கும் பெண்ணை திருமணம் செய்து வைப்பது அவர்களது பெற்றோர்கள் விருப்பம் அதில் நாங்கள் தலையிட முடியாது ஆனால் முன்கூட்டியே எங்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாவது இன்பார்ம் செய்ய வேண்டும்…ஆனால் இதில் எதுவுமே நடைபெறவில்லை அப்படி இருக்கும் பட்சத்தில் நாளை இந்த பெண் வீட்டில் சொல்லித்தான் திருமணம் செய்துகொண்டால் என்று எங்களுக்கு தெரியாது என்பதாலும் நாளை பின்ன பிரச்சனை வரக்கூடாது அதேபோல் ஒரு பெண்ணை பார்த்து மற்ற பெண்களோ ஆண்களோ தவறு செய்யக்கூடாது என்ற நோக்கத்திற்காக மட்டும்தான் மற்றபடி உங்களை தவறாக எண்ணவில்லை என்றார் …ஓகே சார் நீங்கள் சொல்வதும் எங்களுக்கு புரிகிறது அதனால் தான் நானே நேரடியாக வந்து உங்களை பார்த்து நடந்த விஷயங்களை சொல்லிவிட்டு வேணியை கல்லூரியில் விட்டு விட்டு செல்லலாம் என்று வந்தேன் என்றான் ஓகே சார் தேங்க்யூ என்றார்..நீங்கள் இவர்கள் துரை ஹெட்ச்ஓடி மற்றும் கிளாஸ் டீச்சர் இருவரையும் பார்த்துவிட்டு ஒரு லெட்டர் எழுதிக் கொடுத்துவிட்டு செல்லலாம் என்றார் சரி என்று விட்டு அக மகிழன் அனைவரையும் அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான் அதன்பிறகு தான் இப்பொழுது அவர்கள் துணைத்தலைவர் கெமிஸ்ட்ரி ஹச் டி யை பார்க்க வந்திருந்தார்கள் …அப்போது தான் hd மகிழை அழைத்தார் குட் மார்னிங் எப்படி இருக்க பார்த்து ரொம்ப நாள் ஆகுது இதே காலேஜ்ல ஒரு ஸ்டூடண்ட்ஸ் பார்த்தது இப்போ சுற்றுவட்டராத்தில் இருக்க கிராமங்களுக்கு பிரசிடெண்ட்டா பார்க்கிறான் என்றார்…மகிழ் சிரித்துக் கொண்டே சார் நான் எப்பொழுது ஆக இருந்தாலும் உங்கள் ஸ்டூடண்ட்ஸ் தான் என்றான் தன்னடக்கம் என்று அவனது தோளில் தட்டினர் அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது எப்படி இருக்கிறீர்கள் சார் என்றான் அதெல்லாம் நன்றாக இருக்கிறேன் என்று விட்டு வா பா வந்து உட்காரு என்று என்ன இந்த பக்கம் என்று கேட்டார் …உங்களுக்கு உங்களது முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி இளவேனிலை தெரியும் தானே என்று கேட்டான் ஏன் தெரியாமல் அதெல்லாம் நன்றாக தெரியும் என்றார் அந்த பெண்ணுக்கு என்னுடைய கசின் பிரதர் உடன் திருமணம் ஆகிவிட்டது சார் அதான் உங்களை பார்த்து விட்டு செல்லலாம் என்று வந்திருக்கிறேன் என்றான். …நீங்கள் முதலில் பிரின்ஸ்பல் பார்த்துவிட்டு வாருங்கள் என்றார் நாங்கள் இப்பொழுது தான் பிரின்ஸ்பல் பார்த்து விட்டு வந்தேன் அவர்கள் உங்களை பார்க்க சொன்னார்கள் என்று சொன்னான் உங்களை பார்த்துவிட்டு கல்லூரிக்கு செல்லலாம் என்று எண்ணி வந்தோம் என்றால் நிலா உடனே ஹச் டி நிலாவை பார்த்து என்ன நிலா உன் அண்ணனோடு உன் பிரண்டுக்கு லவ் மேரேஜ் ஆகிவிட்டது போல என்றார்…சார் நீங்க வேற இது லவ் மேரேஜ் எல்லாம் சொல்லாதீங்க நானே கல்யாணத்திற்கு நிறைய துணி எடுத்துக் கொடுப்பவர்கள் என்று எண்ணினேன் இவர்கள் துணியும் எடுத்து தரவில்லை நல்ல சாப்பாடும் போடவில்லை என்றால் சிரித்துக் கொண்டே சரி சரி நிலா மகிழன் அதெல்லாம் நன்றாக ஜமாய்த்து விடுவான்…செய்யாமல் விட்டு விடுவான் என்று நிலா தோளிலும் மகிழ்ச்சி தோளிலும் தட்டி விட்டு அவருக்கு வேற ஒரு வேலை இருந்ததால் நீங்கள் இளவேனில் உடைய கிளாஸ் டீச்சரை பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்று அவரது வேலையை பார்க்கச் சென்று விட்டார் …குட் மார்னிங் சார் என்றான் மகிழ் தனது தம்பியாகிய இளவேணிலின் வகுப்பு ஆசிரியரிடம் குட் மார்னிங் சார் என்று அவனும் சொன்னான் தம்பி எழிலும் குட்மார்னிங் என்று சொன்னவுடன் முகிலும் நிலவும் சிரித்து விட்டார்கள் மகிழ் தான் திரும்பி இருவரையும் முறைத்தான் பிறகு இருவரும் அமைதியாக இருந்தார்கள்…எழில் தான் வாங்க சார் வந்து உட்காருங்கள் என்றான் மகிழ் உட்கார்ந்து பிறகு சார் திருமணத்திற்கு முன்பே இன்பார்ம் செய்ய வேண்டும் சார் இருந்தாலும் நீங்க சூழ்நிலையின் காரணமாக திருமணம் நடைபெற்றது என்று சொன்னதால் ஒரு லெட்டர் எழுதி கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்றான் மகள் இவ்வளவு நேரம் எச்ஓடியிடம் பேசிக் கொண்டிருந்தது எழும் கேட்டுக் கொண்டுதான் இருந்தால் அதனால் தான் அவ்வாறு மட்டும் சொன்னான்…சரி சார் என்றான் எழில் வருண் சார் என்றவுடன் வருண் ஏ 4 சீட் இரண்டு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான் பிறகு அதை மகிழ் கையில் எழில் கொடுத்தான் சார் நீங்கள் இளவேனிலுக்கு என்ன வேண்டும் என்று மகிழை பார்த்து கேட்டான் பின்பக்கம் நிலா கவுண்டர் கொடுத்தால் இவருக்கு தெரியாது பாரு என்ன வேணும்னு இவருக்கு என்று சொன்னால்…எழில் அமைதியாகவே இருந்தான் மகிழ் தான் இப்பொழுதும் திரும்பி நிலாவை முறைத்தான் இளவேனில் உடைய அண்ணன் இவர் கார்முகிலன் இவர்தான் இளவேனிலை திருமணம் செய்து இருப்பவர் என்றான் ஓகே சார் இருவரில் யார் கார்டியன் என்று தெரிந்து கொள்ளலாமா என்றான் எழில்..வேணி மற்றும் முகில் இருவரும் ஒரே போல் மகிழை தான் கை காண்பித்தார்கள் கார்டியன் என்று பெயர் போட்டு நீங்கள் கையெழுத்து போட்டு விடுங்கள் அதேபோல் அண்ணன் ஹஸ்பண்ட் என்றும் உங்களுடைய கையெழுத்தை போட்டுவிட்டு கொடுங்கள் என்றான்..இருவரும் சரி என்று விட்டு எழுதி கொடுத்தார்கள் அப்போது எழில் தான் ஓகே சார் இனி ஒன்னும் பிரச்சனை இல்லை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றான் மகிழ் தான் தேங்க்யூ சார் என்று விட்டு எழுந்தான் அப்பொழுது எழில் வேணி நிலா இருவரையும் பார்த்து உங்களுக்கு வகுப்பு இருக்கிறது அல்லவா நீங்கள் இருவரும் உங்களது கிளாசிக் செல்லலாம் என்றான்…சரி என்று விட்டு இருவரும் அவர்களது வகுப்பு செல்வதற்கு வெளியே சென்றார்கள் மகிழ் முகில் இருவரும் தேங்க்யூ என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள் மகிழ் கிளம்பும் வேளையில் மகாவை பார்த்து கண்ணடித்தான் அதை எழில் பார்த்தான் வெளியே சென்ற நிலா வேணி இருவரும் ஜன்னல் வழியாக இங்கு என்ன நடக்கிறது என்று பார்த்தார்கள்…அதனால் மகிழ் மகாவை பார்த்து கண்ணடித்ததை நிலாவும் பார்த்து சிரித்து விட்டு வேணியை அழைத்துக் கொண்டு அவளது வகுப்பிற்குச் சென்றாள் நிலா வேணி இருவரும் வகுப்பிற்கு சென்றவுடன் அவர்களது தோழிகள் மூவர் அவர்களை சூழ்ந்து கொண்டார்கள் என்னடி வேணி உனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று நம் கிளாஸ் பசங்கள் சொன்னார்கள்…உனது தாய் மாமாவுடன் கல்யாணம் ஆகிவிட்டதா இன்னும் ஒரு மாதத்திற்கு பிறகு தானே திருமணம் என்று சொன்னாய் என்ன இப்பொழுது திருமணம் ஆகிவிட்டதா என்னடி ஆச்சு என்று பதறி கேட்டார்கள் நீ வேறு பிரின்ஸ்பலை பார்க்க சென்றிருக்கிறாய் என்று சொன்னார்களே என்று கேட்டார்கள்..அப்போது நிலா சிரித்துக் கொண்டே வேணிக்கு திருமணம் ஆகிவிட்டது தான் ஆனால் அவளுடைய தாய் மாமாவுடன் இல்லை என்றால் அப்புறம் யாருடன் அப்புறம் எப்படி இவளுக்கு திருமணம் ஆகியது என்று கேட்டார்கள் அவளுக்கு என்னுடைய அண்ணன் முகிலுடன் திருமணமாகிவிட்டது என்றால்..என்ன உன்னுடைய அண்ணனுடன் திருமணமாகி விட்டதா என்று அதிர்ச்சியாகி வேகமாக கத்தி கேட்டார்கள் வேணி நிலா உடைய தோழிகள் வகுப்பில் உள்ள அனைவரும் இவர்களையே பார்த்தார்கள் அப்பொழுது எழில் நிலா தோழி அனைவரையும் முறைத்துக் கொண்டே வகுப்பிற்குள் வந்தான்…எழில் அனைவரையும் என்ன சொல்லுவான் என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …அன்புடன் ❣️தனிமையின் காதலி❣️கதையின் நகர்வு எப்படி உள்ளது என்று படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Nila counter koduthutu ezHil kitta yhitu vanganum
Sonthame aanalum mariyathai mukkiyam pa….ezhil and mazhil
சூப்பர்.. அன்ட் வெரி நைஸ் கோயிங்…
Super