Skip to content
Home » புன்னகை 65 (எபிலாக்)

புன்னகை 65 (எபிலாக்)

ஆறு மாதங்களுக்குப் பிறகு,…

“அந்த திருமண மண்டபமே களைகட்டி இருந்தது காலை வேலை முகூர்த்ததிற்கு மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு வாருங்கள் என்று ஐயர் சொல்ல..”

” கையில் மூன்று மாத குழந்தையுடன் வருவையும் அழைத்துக் கொண்டு சுவாதியின் அக்கா மலர் மணமகள் அறை நோக்கி சென்றார் “..

“அங்கு மணமகளாக முழு அலங்காரத்துடன் சுவாதி நின்று கொண்டிருந்தாள். மலர் தனது தங்கையை மணமகள் கோலத்தில் பார்த்தவுடன் தனது கண்ணீரை துடைத்துவிட்டு அவளை நெற்றி முறித்தாள் “..

“வரு சிரித்துவிட்டு அக்கா போதும் வாருங்கள் நேரம் ஆகிறது. ஏற்கனவே வாசு அண்ணன் இவள் வருவாள் என்று விழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறார் என்று சிரித்தாள் ‘..

“சுவாதி இவ்வளவு நேரம் தனது அக்காவின் பாசத்தில் உருகி கொண்டிருந்தவள். தனது தோழியின் கிண்டலில் அவளை முறைத்து விட்டு அவளது தோளில் தட்டினாள் “..

“ஏன் ,மேடம் என் அண்ணனை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லையோ என்றாள். சீ போடி என்று விட்டு தனது அக்காவின் குழந்தையை தூக்கி கொஞ்சினாள் உன்னை விட்டு போக தான் எனக்கு மனமே இல்லை டா குட்டி என்று சிரித்தாள்”..

” குழந்தையின் நெற்றியில் இதழ் பதித்து விட்டு  வரு தான் அம்மாடி தாயே போதும் உன்னிடம் மூன்று மாதமாக போராடி இப்போதுதான் உன்னை இந்த இடத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறோம்”..

“நீ என்னவென்றால் முதலில் இருந்து ஆரம்பிக்காதே என்று சொல்லி சிரித்தாள். போடி நாயே உனக்கு என்ன வந்தது அக்காவுடன் இன்னும் கொஞ்ச நாட்கள் இருக்கிறேன் என்றதற்கு நீதானே வந்து வசந்த் மாமாவிடமும் ,அத்தை மாமாவிடமும் வந்து பேசியது “.

“எனக்கு தெரியும் டி கேடி என்று முறைத்தாள்.ஏன் மா உனக்கு இங்கையே இருக்க வேண்டும் என்று ஆசையோ”..

” அப்பொழுது ,எனது அண்ணனுக்கு வயது கூடிக் கொண்டே இருக்கிறது அவருக்கும் ஒரு வருடத்தில் திருமணம் முடிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்களே மறந்து விட்டதோ “.

“ஏற்கனவே ,நிச்சயத்திற்கு மூன்று மாதம் தள்ளி நிச்சயம் செய்தது நிச்சயம் செய்தும் இப்பொழுது எட்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மேலும் இன்னும் எத்தனை நாட்கள் கடத்தலாம் என்று எண்ணம் என்று கேட்டாள் “..

“ஐயர் இன்னொரு முறை பெண்ணை அழைத்து கொண்டு வாருங்கள் என்றவுடன்   ஆது வந்து சொன்னவுடன் பிறகு சுவாதியை அழைத்துக்கொண்டு மணமேடைக்குச் சென்றார்கள்”..

” வாசு சுவாதியின் பார்வைக்காக ஏங்கிக் கொண்டிருந்தான். அவளை பார்த்து பெருமூச்சு விட்டான். அருகில் இருந்த தேவா தான் தனது நண்பனின் தோளில் தட்டிவிட்டு டேய் மச்சான் என்ன இதற்க்கே பெருமூச்சு என்றான் “..

“உனக்கு என்னடா எனக்கு தான் தெரியும் நான் பட்ட பாடு .கல்யாணமே வேண்டாம் என்று சொன்ன உனக்கு அம்மா உனக்கு பிடித்த வருவையே பிடித்து திருமணம் செய்து வைத்துவிட்டார்கள் “..

“நான் இவள்தான் வேண்டும் என்று வருடங்களாக இப்பொழுது நிச்சயம் செய்தும் மாதங்களாக காத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு தான் தெரியும் என்றான்.”..

” இவன் பேசும்போது அருகில் வந்து விட்டிருந்தாள் சுவாதி .வாசுவின் பேச்சை கேட்டு விட்டு அவனை முறைத்தாள்”..

” வாசு பேந்த பேந்த முழித்தவுடன் சிரிக்க செய்தாள் .பிறகு புரோகித மந்திரம் சொல்ல சொல்ல இருவரும் மந்திரம் சொன்னார்கள். “..

“நல்ல நேரத்தில் தாலி கட்ட வேண்டும் என்று ஐயர் தாலி எடுத்து கொடுத்தவுடன் வாசு தனது சொந்த பந்தங்கள் சூழ, ஊர் மக்கள் சூழ சுவாதியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்”.

“வாசு ,சுவாதியின் திருமணமும் நல்ல முறையில் நடந்தேறியது. வரு தான் இரண்டு மாதங்களுக்கு முன்பு வசந்த் மற்றும் வசந்த் பெற்றவர்களிடம் சென்று போதும் மாமா அக்காவிற்கு குழந்தை பிறந்து விட்டது “..

“நீங்கள் இப்பொழுது இருந்து திருமணம் பேச்சை ஆரம்பித்தாள் தான் இன்னும் மூன்று மாதத்தில் திருமணம் செய்து முடிக்க முடியும் என்றாள்”..

” வசந்த் பெற்றவர்கள் சரி என்று விட்டார்கள் ஒரே வார்த்தைக்காக .ஆனால் ,வசந்த் தான்  சிறிது யோசித்தான் “..

“ஏன் ,மாமா என்ன என்று கேட்டாள்.இல்லை இத்தனை நாட்கள் எங்களுடைய இருந்து விட்டு என்ற உடன் மாமா அனைத்து பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கும் இப்படிதான் வலிக்க செய்யும் “.

“நீங்கள் அவளை மகளாக பார்த்ததால் உங்களுக்கும் அந்த வருத்தம் இருக்க செய்கிறது. ஆனால் ,அவளுக்கு வயது கூடிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.”..

” வாசு அண்ணனின் நிலைமையும் ,அவர்கள் குடும்பத்தை பற்றியும் கொஞ்சம் யோசிங்கள் என்றுடன் வசந்த் பெற்றவர்களும் சரி என்று ஒரே வார்த்தையாக சொன்னவுடன் வசந்த் சரி என்று விட்டான் “..

பிறகு,”வருவையும் அழைத்துக் கொண்டு, வசந்த் பெற்றவர்களையும் வசந்த், தேவாவுடன் ஐந்து பேரும் வாசு வீட்டிற்குச் சென்றார்கள் “..

“வாசுவின் பெற்றவர்கள் குழந்தை பிறந்த உடனே எப்படி திருமணத்தை பற்றிய பேச்சு எடுப்பது என்று யோசித்தார்கள். “..

“வசந்த் வந்து பேசி எப்பொழுது திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டவுடன் சிரித்த முகமாக நாங்கள் வந்து இப்பொழுது கேட்டாள். நீங்கள் தவறாக எடுத்துக் கொள்வீர்கள் என்று தான் வசந்த் கேட்கவில்லை என்று வாசுவின் பெற்றவர்கள் சொன்னவுடன் நான் கூட முதலில் சுயநலமாக யோசிக்க தான் செய்தேன் “.

“வரு தான் அனைத்தையும் விளக்கி சொன்னாள் என்றவுடன் வாசுவின் தாய்  வருகைப் பார்த்து சிரித்தார். பிறகு இரு வீட்டிலும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு சுவாதியை ஒரே வார்த்தையில் சமாதானம் செய்து இப்பொழுது நல்ல முறையில் திருமணத்தையும் முடித்து விட்டார்கள் “..

” ஆது  நல்ல மதிப்பெண் எடுத்ததால் வெளிநாட்டில் சென்று அவன் விருப்பப்பட்ட டாக்டர் படிப்பை படிக்க வைப்பதாக நடேசன் சொன்னார்”..

” தேவா கூட தன் சொந்த காசிலே படிக்க வைப்பதாக சொன்னான் .ஆனால் , ஆதுவும் வருவும் ஒரே வார்த்தையாக ஏன் இங்கு நல்ல கல்லூரி எதுவும் இல்லையா ?”..

“இங்கு படித்தால் டாக்டர் ஆக முடியாதா ? இங்கிருந்து நான் படித்துக் கொள்கிறேன் என்று ஆதுவும் இங்கிருந்தே அவன் படிக்கட்டும் என்று வருவும் ஒரே வார்த்தையாக சொல்லி விட்டார்கள் “..

“தேவா தான் இருவரையும் முறைத்து விட்டு அமைதியாகி விட்டான். மற்ற அனைவரும் இவர்களை இதற்க்கு மேல் நாம் சமாதானம் செய்ய முடியாது என்று விட்டு இங்கே நல்ல கல்லூரி எங்கு இருக்கிறது என்று தேடி கண்டுபிடித்து தேவாவும் ,நடேசன் அந்த கல்லூரியில் போய் சேர்த்தார்கள்”..

” வரு தான் முதல் தவணை ஃபீஸ் கட்டினாள் .தேவா முறைத்ததற்கும் நடேசன் பாவமாக பார்த்ததற்கும் இப்பொழுது மட்டும் நான் கட்டி விடுகிறேன் மாமா “..

“இவனை படிக்கும் வைக்கும் அளவிற்கு என்னிடம் பணம் இப்பொழுது இல்லை. இதன் பிறகு நீங்கள் யார் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுங்கள் .நான் கேட்க மாட்டேன்”..

” ஆனால், இப்பொழுது மட்டும் நான் கட்டுகிறேன் என்றாள். ஆது தனது அண்ணியை கட்டிக்கொண்டு சிரித்தான். பிறகு அவனும் தினமும் வீட்டில் இருந்து கல்லூரி செல்ல ஆரம்பித்து விட்டான் “..

“இப்பொழுது ,கல்லூரி முதல் ஆண்டில் இரண்டு மாதமாக சென்று கொண்டிருக்கிறான். இனியா பன்னிரண்டாம் வகுப்பில் அடி எடுத்து வைத்திருக்கிறாள் “..

“அவளது படிப்பிலும் கவனம் சிதறாமல் நன்றாக படித்துக் கொண்டிருக்கிறாள். வரு அவ்வப்போது வந்து இனியாவை பார்த்துவிட்டு செல்வாள் “..

“தேவாவிற்காக எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க மாட்டாள். அவளுக்கு நேரம் கிடைக்கும்போது நடேசன் வீட்டிற்கு வந்து இனியாவை பார்த்துவிட்டு செல்வாள் “.

“இனியாவிற்குமே எந்த அளவிற்கு தேவாவை பிடிக்குமோ ,அதே அளவிற்கு இப்போது வருவையும் பிடித்திருந்தது .தேவா வீட்டில் உள்ள அனைவரும் வரு ஒரு நல்ல மனைவியாக மருமகளாக கிடைக்க தாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றுதான் எண்ணினார்கள்”..

” அரசி வருவை வம்பு இழுத்துக் கொண்டே அவ்வப்போது இருவரும் முட்டிக்கொண்டு ,மோதிக் கொண்டும் சிரித்துக் கொள்வார்கள் .இதற்கிடையில் தேவாவிற்கும் , தீரனுக்கும் தான் மண்டை பிய்த்துக் கொள்ளலாம் போன்று தோன்றும் “..

“இருவரும் எப்பொழுது சண்டை பிடிக்கிறார்கள். எப்பொழுது விளையாடுகிறார்கள் என்று கூட தெரியாமல் மண்டை பிடித்துக் கொள்வார்கள் “.

“ஆது எப்பொழுதுமே சிரித்த முகமாக இருவரையும் பார்த்துக் கொண்டிருப்பான். அவன் யார் பக்கமும் நிற்க மாட்டான் .அமைதியாக அவர்கள் செய்யும் சேட்டைகளை பார்க்க செய்வான். “..

“தன் தாய் ,தன் மனைவி இதற்காக தான் ஏங்கி இருக்கிறாள் என்பதை உணர்ந்த தீரன் ,தேவா இருவரும் அமைதியாக விட்டுவிடுவார்கள் அப்படியே அவர்களது வாழ்க்கை நன்றாக அழகாக சென்றது “..

“திருமணம் முடிந்த கையோடு நிறைய போட்டோக்கள் எடுக்கப்பட்டது. வரு இருவரையும் கேலி செய்து கொண்டே இவ்வாறு போஸ் கொடுக்க வேண்டும். அவ்வாறு போஸ் கொடுக்க வேண்டும் என்று சொல்வாள் “..

‘போட்டோகிராஃபரே ஒரு நேரத்தில் கோபமடைந்து ஏன் ,மா அவர்கள் இருவரும் மணப்பெண், மணமகனா ?இல்லை? நீயா ?இப்படி அப்படி என்று சொல்வதற்கு பதில் நீயே போட்டோவுக்கு போஸ் கொடுத்து விடலாமே” என்றவுடன் ..

“ஆது சிரித்துவிட்டு தேவாவை வருவின்  பக்கத்தில் தள்ளிவிட்டு ஏன் ,என் அண்ணனுக்கும் ,அண்ணிக்கும் என்ன குறைச்சல் .இப்பொழுது கூட புதுமண தம்பதிகள் போல் தான் இருக்கிறார்கள் “..

“அவர்களையும் ஒரு போட்டோ எடுங்கள் என்று சொல்லிவிட்டு தனது அண்ணன் அண்ணி இருவரையும் தனியாக ஒரு போட்டோ எடுக்க சொல்லிவிட்டு .இருவருக்கும் இடையில் நின்று ஒரு போட்டோவும் எடுத்துக் கொண்டான்”..

” பிறகு ,வாசு தான் சிரித்த முகமாக அனைவரையும் குடும்பத்துடன் நிற்க வைத்து ஒரு போட்டோ எடுத்துக் கொண்டான் .அனைத்து போட்டோக்களும் எடுத்த பிறகு அனைவருக்கும் பசி வயிற்றை கில்லியதால் பந்தி பரிமாறும் இடத்திற்கு சென்றார்கள்”..

” குடும்ப உறுப்பினர்கள் யாருமே சாப்பிடாததால் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். வரு 2 வாய் வைத்திருப்பாள் ஒரு மாதிரியாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தாள்”..

“தேவாவிடம் ஒன்றுமில்லை டி காலையில் சீக்கிரம் எழுந்ததும் ,இரவு நேரமாக தூங்கியதாலும் அப்படி இருக்கும் .அது மட்டும் இல்லாமல் இரண்டு வாரங்களாக அலைச்சல் வேறு இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தான் “..

“ஆனால் ஆது தான் அமைதியாக தனது அண்ணியை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்த்து கொண்டு இருக்கும் பொழுதே வரு வாந்தி எடுத்திருந்தாள் .”

“ஆது வேகமாக சாப்பிட்ட கையோடு தனது அண்ணி வாந்தி எடுப்பதை கையில் ஏந்தி இருந்தான் தேவாவிற்கு கண்கள் கலங்கியது “..

“வரு ஆதுவை பார்த்துவிட்டு எழுந்து வாஷ்பேஷன் அருகே  சென்று வாய் கொப்பளித்து விட்டு வந்தாள் . ஆதுவுமே தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து வருவின் கண்ணை நேருக்கு நேர் பார்த்தான் “..

“வரும் ஆதுவை பார்த்து சிரித்து விட்டு கன்ஃபார்மா என்று தெரியவில்லைடா. இப்பொழுது நான்கு நாள்தான் தள்ளி போயிருக்கிறது என்றுடன் வீட்டில் உள்ள அனைவருக்கும் இவள் என்ன சொல்கிறாள் என்று யோசித்தார்கள் “..

“ஆது வேகமாக தனது அண்ணியின் கையை பிடித்து பார்த்தான் .அப்பொழுது இனியா தான் சிரித்து விட்டு டேய் அண்ணா நீ இப்பொழுதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறாய் ?இன்னும் டாக்டராக இல்லை என்று சிரித்தாள் “..

“ஆது இனியாவை முறைத்து விட்டு அவளது கையை பித்து பார்த்தான் .அவனுக்கு இரட்டை நாடி துடிப்பது போல் தான் தெரிந்தது “..

“.பிறகு, தனது அண்ணனை பார்த்து முறைத்துவிட்டு தனது தாயிடம் அம்மா அண்ணியை மருத்துவமனை அழைத்து செல்லலாம் என்றான் அப்பொழுது அவன் கல்லூரியில் இருக்கும் பேராசிரியரையும் திருமணத்திற்கு அழைத்து இருந்ததால் அவர் நான் இருக்கும் பொழுது எதற்கு ஆது மருத்துவர் என்று விட்டு அவளை பரிசோதனை செய்தார்”..

” அவருமே அவள் கர்ப்பமாகத்தான் இருக்கிறாள் என்பதை உறுதி செய்தவுடன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. தேவாவிற்கு தான் சிறிது வருத்தமாக இருந்தது “..

“அவளுக்கு நாட்கள் தள்ளிப் போய் இருப்பது கூட தான் உணரவில்லையா ?என்று அப்பொழுது ஆதுதான் வேகமாக தனது அண்ணனின் அருகில் வந்து அண்ணா நீ சுவாதி அண்ணி வாசு அண்ணா திருமணத்தால் மறந்து விட்டாய் ?”..

“இதில் உன் மீது எந்த தவறும் இல்லை. அண்ணி திருமணம் முடிந்த பிறகு உன்னிடம் சொல்லலாம் என்று இருந்திருப்பார்கள். இப்பொழுது அவர்களையும் மீறி வாந்தி வந்து காட்டி கொடுத்து விட்டது என்றான் “..

“தேவா தனது தம்பியை கட்டிக்கொண்டு அழுதான் .என்னை விட உன்னால் மட்டும் தான் உன் அண்ணியை சந்தோஷமாக பார்த்துக் கொள்ள முடியும் என்றவுடன் நீ இல்லாமலா நான் அவர்களுக்கு மகனாகி விட்டேன் “..

“எனக்கு அவர்கள் பெறாத தாயாகி விட்டார்கள் என்று சிரித்தான். அரசி தனது இரண்டு மகன்களையும் பார்த்து சிரித்தார் .இவள் தன் வீட்டிற்கு வந்த தேவதை என்று மனதிற்குள் எண்ணினார்”..

பிறகு “வருவின் உச்சியில் இதழ் பதித்தார். கலை,மாணிக்கம் சகுவிற்கு அவ்வளவு ஆனந்தம். சகு வேகமாக வந்தவர் அங்கிருக்கும் ஸ்வீட்டை எடுத்து வருவின் வாயில் திணித்தார் “..

“வரு சிரித்துக் கொண்டே என்ன சித்தி உன் ஆசையை நிறைவேறி விட்டதா ?என்று கேட்டாள்.எனக்கு இது மட்டும் ஆசை இல்லடி எனக்கு நீ பேத்தி தான் பெற்று தர வேண்டும் என்றார் “..

“கலை ஏன் ,பேரன் பெற்றால் என்ன என்று கேட்டார்.ஏற்கனவே வீட்டில் ஒன்னுக்கு ரெண்டு பேர் இருக்காங்க இங்கேயும் ஒன்னுக்கு ரெண்டு பேர் இருக்காங்க இன்னும் என்ன உனக்கு பேரன் தான் வேண்டுமா?”..

“ஏன் ,பேத்தி பெத்த வளர்க்க மாட்டியோ ,நீ வளர்க்க வில்லை என்றால் நான் வளர்கிறேன் விட்டு  என்றார் .அப்பொழுது அரசி யாரும் வளர்க்க வேண்டாம் என்னுடைய பேத்தியை நானே வளர்த்துக் கொள்கிறேன் என்றவுடன் மற்றவர்கள்   சிரித்தார்கள் “..

“தீரன் தன் குடும்பத்தை எண்ணி சிரித்து விட்டு வருவின் அருகில் வந்தார் .வரு அமைதியாக தனது மாமாவை பார்த்தாள் .எனக்கு அரசி கிடைத்தது வரம் மா.”..

“அவளை முழுவதாக நான் புரிந்து கொண்டதற்கு காரணம் நீதான் .பார்வதி அப்பொழுது இருந்த சூழ்நிலையில் என்னை அரசியை திருமணம் செய்து கொள்ள சொல்லி இருக்கலாம் “..

ஆனால் ,”நான் தேவாவிற்காக என்று எண்ணி மட்டுமே தான் திருமணம் செய்தேன் .ஆனால் நாளடைவில் அவளது குண நலன்கள் எனக்கு பிடித்து போய் அவளுடன் வாழ செய்தேன்”..

. ஆனால்,” அவளை முழுமையாக புரிந்து கொண்டது என்றால் நீ வந்த பிறகுதான் அனைத்திற்கும் நீ தான் காரணம் என்று அவளது கையை பிடித்துக் கொண்டு அழுதார் “..

“மாமா என்றவுடன் ஒன்றும் இல்லைமா என்று தனது கண்ணீரை துடைத்துவிட்டு சிரிக்க செய்தார் .பிறகு அனைவரும் குடும்பத்துடன் புதுமண தம்பதிகளையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்கள்”..

“அனைவரும் ஓரிடத்தில் உட்கார்ந்து இருந்தார்கள் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு வரு,தேவா இருவரும் கோவிலை சுற்றி விட்டு வருகிறோம் என்று எழுந்தார்கள் ”.

“கோவிலைச் சுற்றிக் கொண்டிருக்கும் போது வரு தேவாவின் கையை பிடித்தாள் .தேவா அவளையே பார்த்துக் கொண்டிருந்தவுடன் அவனை பார்த்து கண்ணடித்தாள்”..

“ இவர்கள் செய்யும் காதல் சேட்டையை பார்ப்பதற்காகவே அவர்கள் பின்னோடு வந்த ஆது ,இனியா, சுவாதி ,வாசு வசந்த் ,மலர் அனைவரும் கைத்தட்டி சிரித்தார்கள்”..

“ தேவா அனைவரையும் பார்த்து நெளிந்தான். வரு சிரிக்க செய்தாள்”..

” இந்த குடும்பம் இப்பொழுது போல் எப்பொழுதும் ஒற்றுமையாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுவோம்”..

சுபம்.

அன்புடன்

தனிமையின் காதலி

5 thoughts on “புன்னகை 65 (எபிலாக்)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *