அவளோ அவனின் தவறிய அழைப்புகளை கண்ணிமைக்காமல் புன்னகைத்தபடியே பார்த்துக் கொண்டிருக்க, அப்பொழுது அவளுடைய வாட்ஸப் பக்கத்திற்கு ஒரு மெசேஜ் வந்தது.
அந்தக் குறுஞ்செய்தி புதிய எண்ணில் இருந்து தான் வந்திருந்தது. ஆனால் அந்த புதிய எண் அவளுக்கு ஒன்றும் புதிது இல்லை. தினமும் அந்த எண்ணில் இருந்து அவளுக்கு குட் நைட், குட் மார்னிங் மெசேஜ் வந்து கொண்டு தான் இருக்கும். இவள் யாரென்று கேட்டாலோ, அல்லது அந்த எண்ணிற்கு போன் செய்தாலும் எதிர்முனையில் இருக்கும் நபர் அவள் அழைப்பையோ அல்லது அவளுடைய மெசேஜ்ற்கு எந்தவித பதிலும் தர மாட்டார்.
சில சமயங்களில் அவளுக்கு காதல் கவிதைகள் கூட அந்த புதிய எண்ணில் இருந்து குறுஞ்செய்தியாக வரும்.
அவ்ளோ அந்த குட் மார்னிங் மெசேஜை ஓபன் செய்து பார்த்தது அடுத்த நொடியே….
மஞ்சள் வண்ணம் அத்தனை அழகானது என்பதை மங்கையவள் அணிந்த பிறகு தான் அறிந்து கொண்டேன்…
மறைந்தும்கூடமறந்துவிடமாட்டேன்இந்தமஞ்சள்வண்ணபூ(ஜா)வை ரசிப்பதற்கு….
என்ற கவிதையும் வந்தது. அந்த கவிதையை முழுதாக படித்த பிறகு தான் அவளோ தலையை குனிந்து, தான் அணிந்து வந்திருக்கும் சுடிதாரின் கலரை கவனித்தாள். ஆம் அது மஞ்சள் வண்ண சுடிதார் தான்.
பூஜா….
பெயரை போலவே பூ போன்று மென்மையான குணம் உடையவள். யாருக்கும் எந்த தீங்கும் செய்ய மாட்டாள். ஆனால் வாயடிப்பதிலும் அவளை மிஞ்ச ஆள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நடை உடை பாவனைகள் என்று அனைத்திலும் பார்ப்பவர்களின் மனதை கொள்ளை கொள்பவள்.
மாநிறம்… இடைக்கு மேல் வரை அழகான கூந்தல், பார்ப்பதற்கு இலட்சணமான முகம் என்று கண்களை கொள்ளை கொள்பவள்.
அந்த குறுஞ்செய்தியை உடனே கண்ணனுக்கு அனுப்பி வைத்து விட்டாள்.
அந்த குறுஞ்செய்தி கண்ணனை அடையும் முன்பே, அவனுக்கு போன் செய்து அந்த மெசேஜ் பற்றி எல்லாம் ஒன்று விடாமல் சொன்னாள்.
அவள் சொன்ன பிறகுதான் அந்த கவிதையை படித்தான் அவன்.
அந்த கவிதையை முழுமையாக படித்தவனோ “பூஜா… எனக்கென்னவோ இவன் ராங் நம்பரோ, இல்ல அன்நவுன் பர்சனோன்னு தோணல. உனக்கு நல்லா தெரிஞ்சவனா தான் இருக்கும். அதுவும் உன்னை தினமும் பார்க்கிறவனா தான் இருக்கும். அப்படி இல்லன்னா நீ போட்டிருக்க டிரஸ் வரைக்கும் அவனுக்கு எப்படி தெரிஞ்சிருக்கும்? சொல்லு?” என்று அவனும் சரியாக கனித்தான்.
“டேய் மக்கு…. அது எனக்கும் புரியுது. ஆனா அது யாருன்னு தான் தெரியல. அதை எப்படி தெரிஞ்சிக்கிறது?” என்று அவள் புரியாமல் கேட்டுவிட
“அவன் யாருன்னு தெரிஞ்சு நீ என்ன செய்யப் போற சொல்லு? சிம்பிள்… அந்த நம்பரை பிளாக் பண்ணிட்டு போ. அவ்வளவுதான்” என்று அவனும் அவளுக்கு உத்தரவு போட்டான்.
“இல்ல கண்ணா… அந்த புது நம்பர்னால நமக்கு எந்த பிரச்சினையும் இல்லயே. அதுமட்டுமில்லாம அவன் எதுவும் தப்பா எல்லாம் சொல்லல. சோ எதுக்கு பிளாக் பண்ணனும்? இதெல்லாம் பார்த்தா எனக்கு தெரிஞ்சவங்களா தான் இருக்கணும்னு தோணுது. அது என்னமோ தெரியல எனக்கு ப்ளாக் பண்ணனும்னு தோணல” என்று அவளோ அதை மறுக்க
“லூசாடி நீ ? அவன்தான் ஏதோ ஆர்வக்கோளாறுல உனக்கு மெசேஜ் பண்றான்னு பாத்தா…. நீயும் அதை ரசிச்சிட்டு இருக்க போல… இதெல்லாம் பார்த்தா மௌனம் சம்மதம்னு எடுத்துப்பான். அதுக்கப்புறம் உன்னை விடாமல் நேர்ல வந்து டார்ச்சர் பண்ணுவான். உனக்கு அது பரவாயில்லையா? இதுதான் பசங்க பிளான். ஃபர்ஸ்ட் இப்படி இன்டைரக்ட்டா ட்ரை பண்ணி அவங்களோட ரியாக்ஷன் என்னன்னு தெரிஞ்சுப்போம். அதுக்கப்புறமா பாசிட்டிவா ஏதாவது ரியாக்சன் தெரிஞ்சா நேராவே வந்து அப்ரோச் பண்ணுவோம். எனக்கு என்னமோ இப்படி அமைதியாவே இருந்தா அடுத்தது அவன் நேரா தான் வந்து அப்ரோச் பண்ணுவான்ன்னு தோணுது.” என்று அவளும் அவனுக்கு தெரிந்த சைக்காலஜியை பற்றி சொல்லிவிட
“டேய் லூசு…. நீ இப்படி இருந்தா எல்லாரும் அப்படித்தான் இருப்பாங்களா? எனக்கென்னமோ அவன் நேர்ல வந்து எல்லாம் டிஸ்டர்ப் பண்ணுவான்னு தோணல” என்று அவளோ முகம் தெரியாத ஒருவனுக்கு சாதகமாய் பேச,
“ஏய் நான் உன்னோட லவ்வர்டி … நான் சொல்றதை நம்ப மாட்டேங்குற. யாரோ ஒருத்தனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்க? எனக்கு என்னமோ உன்னோட நடவடிக்கை எல்லாம் பார்த்தா சரியா படல. இப்போ உன்னால அவனை பிளாக் பண்ண முடியுமா முடியாதா?” என்று இப்பொழுது கொஞ்சம் கோபமாய் பேசினான் கண்ணன்.
“இப்போ எதுக்குடா நீ இவ்ளோ ரியாக்ட் பண்ற? நான் ப்ளாக் பண்ண மாட்டேன்னு சொன்னனா? நீ பேசுறதை எல்லாம் பாத்தா என் மேலையை சந்தேகப்படுற மாதிரி இருக்கு” என்று பதிலுக்கு அவளும் கோபபட்டாள்.
“இங்க பாரு பூஜா…. இதுக்கு பேரு சந்தேகம் கிடையாது. நீ ஏதாவது தப்பான விஷயத்துல போய் சிக்கிவிடுவியோ, இல்ல உனக்கு தப்பா இதுவும் நடந்துருமோ அப்படிங்குற பயம் தான் இந்த அளவுக்கு உன்னை எச்சரிக்கை பண்ண வைக்குது. ஆனா நீ அதை புரிஞ்சுக்காம சந்தேகம் அப்படி இப்படின்னு பேசினா இருந்துட்டு போகட்டும். நான் சந்தேகப்படுறதாவே இருக்கட்டும், நீ முதல்ல அந்த நம்பரை பிளாக் பண்ற வழியை பாரு” என்று அவனும் கராராக சொல்லி விட்டான்.
“நான் என்ன சின்ன குழந்தையா கண்ணா? எனக்கு யாரு நல்லவங்க யாரு கெட்டவங்க…. எது தப்பு… எது சரின்னு கூட தெரியாதா? ஏதோ அந்த கவிதை நல்லா இருந்தது. நீ கூட இத்தனை வருஷத்துல எனக்கு இந்த மாதிரி கவிதை எல்லாம் சொன்னதே கிடையாது. அதனால தான் உன்னை வெறுப்பேத்த அப்படி பேசுனேன். அதை தவிர வேற எதுவும் இல்ல. ஜஸ்ட் ஒரு பாட்டு ரசிக்கிற மாதிரி தான். உனக்கு ஒரு பாட்டு பிடிச்சிருந்தா அந்த பாட்டை பாடுனவங்களையோ இல்ல எழுதுனவங்களையோ லவ் பண்றதா அர்த்தமா என்ன?” என்று அவளும் பதிலுக்கு கோபப்பட்டாள்.
“நீ என்ன நியாயப்படுத்தினாலும் நீ செய்யறது தப்புதான் பூஜா. எனக்கு உன்னோட சேஃப்டி ரொம்ப முக்கியம். நீ இந்த நம்பரை பிளாக் பண்ணிட்டு அதுக்கு அப்புறமா எனக்கு கால் பண்ணு. இல்லன்னா தயவு செஞ்சு என் கூட பேசவே பேசாத” என்று சொன்னவனும் அவள் மேல் உள்ள கோபத்தில் போனை வைத்து விட்டான்.
கண்ணன்….
பூஜாவின் அழகுக்கு எந்த விதத்திலும் சலைத்தவன் இல்லை என்பதை போல கம்பீரமான முக தோற்றம் உடையவன். 25 வயதானவன். பூஜாவிற்கும் கண்ணனிற்கும் ஏறக்குறைய ஒரே வயது தான்.
“இவன் ஏன் இப்படி நடந்துக்கிறான்? ஒருவேளை என் மேல தப்பு இருந்தா நான் எதுக்காக அந்த மெசேஜை அவனுக்கு பார்வேர்ட் பண்ண போறேன்? என்ன தான் உலகமோ… நாம உண்மையா இருந்தாலும் நம்ம சொல்றத நம்பவே மாட்டிக்கிறாங்க.” என்று தன் மனதில் நினைத்தவள் அந்த அந்த புது என்னை பிளாக் செய்து விட்டு, தன் அருகில் அமர்ந்திருக்கும் தன்னுடன் வேலை செய்யும் தோழி ஜமுனாவிடம் இதை எல்லாம் பகிர்ந்து கொண்டாள்.
அவள் சொல்வதை எல்லாம் நிதானமாக கேட்டவளோ “பூஜா… எனக்கு என்னமோ இந்த மெசேஜ் அனுப்புனது நம்ம ஆபீஸ்ல ஒர்க் பண்ற அந்த கிஷோரா தான் இருக்கும் தோணுது. ஏன்னா அவன் தான் உன்ன எப்பவுமே வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்கான். அது மட்டும் இல்லாம அவன் நல்லாவே கவிதை எழுதுவான். உனக்கு தெரியுமா… ரீசண்டா வந்த ஏதோ படத்தோட பாட்டுக்கு கூட கிஷோர் லிரிக்ஸ் எழுதி இருக்கான். சோ எனக்கு அவன் மேல தான் சந்தேகமா இருக்கு” என்று தன்னுடன் வேலை செய்யும் கிஷோரை பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள் ஜமுனா.
“யாராயிருந்தா எனக்கு என்னடி? இதுனால தேவை இல்லாம எனக்கும் கண்ணனுக்கும் இடையில பிரச்சனை வருது. இவ்ளோ வருஷம் நாங்க நல்லா தான் இருந்தோம். இப்போ எதுக்கு என்னன்னே தெரியாம சும்மா சும்மா என் மேல எரிஞ்சு எரிஞ்சு விழுகிறான்.” என்று பூஜா வருத்தமாக சொன்னாள்.
“சரி விடுடி… எல்லாமே சரியாயிடும். சரி நான் போயி என்னோட ஆளை பார்த்து ஒரு சின்ன அட்டனன்ஸ் போட்டுட்டு வந்துடுறேன்” என்று சொன்னவளோ எம்டியின் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
“எக்ஸ்க்யூஸ் மீ சார்….” என்று கதவை தட்டியப்படியே எம்.டி தருண் அறைக்குள் நுழைந்தாள் ஜமுனா.
“எஸ்… கம்மின்” என்றான் அவன்.
அவளோ எந்த காரணம் இல்லாமல் தருணை பார்க்க வர முடியாது என்பதால் பொய்யாக சில கோப்புகளை எடுத்து வந்து அவனிடம் கையெழுத்து வாங்குவது போல் நீட்டினாள்.
அந்த பைலை கையில் வாங்கியவனோ திறந்து பார்த்தபடியே “என்ன பைல் இது?” என்று கேட்டான்
“இல்ல சார்… நேத்தே எல்லா பைல்லையும் சைன் போட்டுடீங்க. அதுல இது ஒன்னு மட்டும் மிஸ் ஆயிடுச்சு. அதனால தான் இப்போ சைன் வாங்கிடலாம்னு வந்தேன்” என்று சொன்னாள் ஜமுனா.
அவனும் அவள் முகத்தைக் கூட பார்க்காமல் சரி என்ற படியே பைலில் கையெழுத்து போட்டு, அவள் கையில் கொடுத்து விட்டான். அந்த பைலை வாங்கியவளோ சோகமாக தன்னுடைய இருக்கையில் போய் அமர்ந்தாள்.
போகும் பொழுது பிரகாசமாக போன தன் தோழியின் முகமோ திரும்பி வரும் பொழுது வாடி இருப்பதை கவனித்தவள் “என்ன டி ஆச்சு?” என்று கேட்டாள்.
“இந்த தருண் ஏண்டி இப்படி இருக்காரு? பார்க்க நல்லா தான் இருக்காரு. நம்ம ஆபீஸ்ல இருக்கா நிறைய பொண்ணுங்க அவருக்கு ரூட் விடுறாங்க. ஆனால் எந்த பொண்ணோட முகத்தையும் தலைய தூக்கி கூட பார்க்க மாட்டிராறு. அதனாலேயே என்னவோ அவர் மேல இன்னும் இன்ட்ரஸ்ட் அதிகம் ஆகுது” என்று சோகமாக சொல்லிக் கொண்டிருந்தாள் ஜமுனா.
“இதுக்கெல்லாம் பீல் பண்ணா எப்படி? வேணும்ன்னா ஒன்னு பண்ணலாம். இப்படி சுத்தி வளச்சு ட்ரை பண்றதுக்கு பதிலா பேசாம அவரு வீட்டுக்கே டைரக்ட்டா போய் மாப்பிள்ளை கேட்டு கல்யாணம் பண்ணிக்கோ” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் பூஜா.
“அட ஆமா… இது கூட நல்லா யோசனையா தான் இருக்கு. இந்த யோசனை ஒர்க் அவுட் ஆகுமா டி?” என்று அவளும் நக்கலாக சிரித்துக் கொண்டே கேட்க அப்பொழுது அங்கே வந்தான் கிஷோர்.
Nice epi