கிளம்புவதற்க்கும் ஒரு நல்ல காலம் நல்ல நேரம்னு ஒன்னு இருக்கு நீ வாய மூடிட்டு அமைதியா வச்சிகிட்டு சும்மா இரு என மிரட்டியவரின் விரலை ஒரே கவ்வில் கவ்வினாள் மகிழ்.
நாய்க்கு பிறந்த பயப்புள்ளையா இருப்பாளோ???….. என கையை உதறினார் அந்த தற்காலிக டாக்டர்.
பசிக்குதுனு கேட்டிருந்தால் இந்த டாக்டர் சாப்பாட்டையே வாங்கி தந்திருப்பார், எதுக்குடி அந்த நல்ல மனுசன கடிச்சு வச்ச! “இனிமே டெய்லி அவரு தொப்புல சுத்தி நூறு ஊசி போடனும்”, என உச்சு கொட்டினாள் பிரியா.
ம்ம்ம் சரிசரி சீக்கிரமா எல்லாத்தையும் ரெடி பண்ணுங்க டாக்டர் “எனக்கு என் புருஷன் நியாபகமாவே இருக்கு”, என ஆயத்தப்படுத்தினாள் மதுப்பிரியா.
ஓஓஓஓஓஓ என அனைவரும் சிரிக்க, டிஸ்ஜார்ச் பைல்களை சரிசெய்து விட்டு, ஒரு வீல்சாரில் அமர்ந்த பெண்ணுடன் வந்து”ஹே மகி நல்ல நேரம் பிறந்திடுச்சு உன் பாட்டி மாவை வீட்டுக்கு கூட்டிட்டு போ”, என அந்த வீல்சாரை அவளிடம் கொடுத்தார் ரிஷிகேஷ்.
ரிஷிகேஷ் அந்த மருத்துவமனையில் வம்சியின் பாட்டியை பார்த்து கொள்வதற்காக வைக்கப்பட்டவன் அவர் சுயநினைவு வந்ததை வம்சியிடம் சொல்லாமல் மகிழிடம் சொன்னான். ஏனெனில் அவரை அப்பாய்ண்ட் செய்ததே நம்ம மகிழ் தான். ஆம் பாராமெடிக்கல் (DRTTஅண்ட் கேரிங் பேசண்ட்) கோர்ஸ் ஒன்றை முடித்து 19 வது வயதில் வெட்டியாக இருந்தவனை தன் வருங்கால பாட்டியை பார்த்து கொள்ளுமாறு சிலபல அறிவுரை கூறி டாக்டர் போல அந்த ஹாஸ்பிடலில் உலா வர வைத்தாள். ஆதலால் கெத்தாக டாக்டர் என பீத்தி கொண்டிருப்பான்.
நினைவு வந்த பாட்டியை இனியும் நீங்கள் சில மாதங்களுக்கு இப்படிதான் நினைவு, உணர்வு எதும் வராததது போல் நடிக்க வேண்டும் என ஆர்டர் போட்ட மகிழுக்கு, மஞ்சுப்பாட்டியும் சிரித்து சரி என தலையசைத்தார்.
காரில் வந்தவர்கள், பாட்டியை கூப்பிட்டு கொண்டு காரின் அருகில் வந்து நின்று கதவை திறந்து பாட்டியை உள் சீட்டில் அமர வைத்து கொண்டிருந்தான் ரிஷி. அவன் பின் நின்றிருந்த பெண்கள்” உங்கள் சேவை எங்களுக்கு தேவை”,…… என சொல்லி கிசுகிசுத்தனர்.
இங்கு ஒரு சண்டை காட்சி வரும், இதயம் பலவீனம் ஆனவர்கள் குழந்தைகள் இதை படிக்க வேண்டாம் 🤭🤭🤭🤭
இவர்களை தொடர்ந்து பாலோ செய்து ஒரு ஏளனப்பார்வை பார்த்த ஆருத்ரனும், சுமித்ராவும் அவர்களின் பின்னால் நின்றிருந்த வாசுவின் ஆருயிர் நண்பன் தேவா ( ஜெயிலுக்கு போனானே அவன்) தனது தொலைப்பேசியை எடுத்து ஒரு நம்பருக்கு கால் செய்திட மாட்டிகிட்ட மாட்டிக்கிட்ட வசமா மாட்டிக்கிட்ட என்ற காலர் டியூன் ஒலித்தது.
தன் கை முஷ்டியை இருக்கி பிடித்த தேவா போன எடு போன எடுடா என முணகி கொண்டிருந்தான்.
சாப்பிட்டு முடித்த பெற்றோரை ரெஸ்ட் எடுக்குமாறு அனுப்பி வைத்த வம்சி, போன் அடிக்க போனை எடுக்காமல் அன்னோன் நம்பரில் இருந்து கால் வந்ததால் அட்டன் செய்யாமல் வேடிக்கை பார்த்து சிந்தித்து கொண்டிருந்தான்.
போன் தொடர்ந்து அடித்து கொண்டு இருக்க, டொய்க் என வம்சி போனை அட்டன் செய்தான் ஆனந்த். அட்டன் செய்தவுடன் ஹலோ ஹூ ஸ் திஸ்…..என்ற சாந்த சுருபமாக கேட்ட ஆனந்தை,
ஹே நான் யாரா இருந்தா உனக்கு என்ன ” அதுலாம் இருக்கட்டும் என்ன உங்கள் பொண்டாட்டிங்கள இங்க ஒருத்தன் கூட ஊர் சுத்த விட்டுட்டு அங்க என்னடா பண்றிங்க வாசல் கூட்டி பாத்திரம் விளக்கிட்டு இருக்கிங்களா!!!!, என போனில் ஆனந்தை வெறுப்பேற்ற தனக்கு தோன்றியதை பேசிக்கொண்டு இருந்தான் தேவா.
இல்ல இல்லயே கடத்திட்டு போக இரண்டு தடிமாடுங்க வரும். அவங்க தேடி கண்டு பிடிக்கிறதுக்குள்ள விடிஞ்சிடும். சோ நீங்களா போய் சரண்டர் ஆகிடுங்கனு சொல்லி தான் அனுப்பினம். உங்களுக்கு எதுக்கு தெண்ட அழைச்சல்னும் தான்டா சொல்லி அனுப்புனம். சரியா வந்துட்டாங்களா?… வந்திருப்பாங்கனு நினைக்குறேன்.. சரி சரி அங்க யாஷினினு ஒரு பொண்ணு இருக்கும் அவகிட்ட போய் போன குடுத்து “உன் புருஷன் உன்கிட்ட பேசனுமானு சொல்லிட்டு நகர்ந்து போறையா?…. ஒட்டு கேட்க கூடாது”, என தேவாவின் கோபத்தை கோடாரி போட்டு தூண்டி விட்டான் ஆனந்த்.
ஹேஹேஹேஏஏஏஏஏஏஏஏ என்னடா திமிரா?????……. என கத்த அவனருகில் இருந்தவர்கள் பயப்பட போனில் இருந்த ஆனந்த் அவுட் ஸ்பீக்கர் போட்டு கௌரி,லோகி, வம்சி அனைவரையும் நெருங்கி வரச்சொல்லி, பீபீபீபீபீபீபீ என சத்தமிட்டார்கள்….. சிரித்த வண்ணம்,
அவர்களின் செயலில் எரிச்சல் கொண்ட தேவா டே என்ன பார்த்தா எப்படிடா தெரியுது என சத்தமிட,
தகவல் பரிமாறும் தாத்தா என ஆனந்த் சொல்லிட,
ஹே என்ன சொன்ன என கேட்டான் தேவா.
அட அதான்பா என் பொண்டாட்டிங்க எங்க இருக்காங்கன்னு சொன்னல்ல அதுக்கு சொன்னன் என்று வெறுப்பேற்ற, ஆனந்த் அருகில் இருந்தவர்கள் சிரிக்க அக்கினி மழையாய் மாறிய தேவா டே என் பொறுமைய ரொம்ப சோதிக்கிறிங்கடா என சத்தமிட,
தேவாவின் அருகில் வந்த யாஷினி, ஹலோ இது ஹாஸ்பிட்டல் ஸ்பீக்கர் பெட்டியில்ல சும்மா சும்மா கத்துறதுக்கு ஓரமா போய் பேசுங்க இல்லனா பைத்தியனு சொல்லி தூக்கி உள்ள போட்டுடுவேன் என ஆள்காட்டி விரலை நீட்டி மிரட்டிட, ஒன்றுக்கு ஒன்று சளைத்தது இல்லை என மனதில் நினைத்த தேவா எச்சிலை விழுங்கினான்.
டேடே தேவா இப்ப பேசுறது என் பொண்டாட்டி தான் குடுடா அவகிட்ட போன் பேசனும் போல இருக்கு என நெழிந்த ஆனந்தை கேவலமாக பார்த்தனர் மற்றவர்கள். போனை கடுப்புடன் கையில் பிடித்திருந்தவனுக்கு எரிச்சல் தாளவில்லை.
டே நான் ஒன்னும் புரோக்கர் இல்ல ஐ ம் வில்லன் என கோபம் பறக்கும் வார்த்தை பேச, “தம்பி ஓரமா போய் பேசுனு சொன்னமா இல்லையா”, என அவனை அதட்டினாள் யாஷினியின் அக்கா மதுப்பிரியா.
இப்ப என் பொண்டாட்டி பேசுறா அண்ணா அவ கிட்டயாவது போன குடுங்களே என குதூகளித்தான் லோகேஷ்.
என்னடா பஞ்சு மிட்டாய்க்கு ஆசைப்பட்டு அடம்பிடிக்கிற மாதிரி இப்புடி பண்றிங்களே என கௌரி செல்லமாக லோகியை அடிக்க அய்யோ வழிக்குது மச்சி என லோகி சொல்ல, டே லைன்ல நான் இருக்கன்டா என தேவா சத்தமிட்டான்.
அட ஆமாங்க மறந்துட்டோம் என ஆனந்த் சொல்லிட, இல்ல இல்ல எனக்கு இந்த மாதிரி வில்லன் என்ரி பத்தல எனக்கு வேற மாறி மாஸ்ஸா வேணும் இத எடிட் பண்ணிடுங்க ரைட்டரே நான் புதுசா பர்ஸ்ட்ல இருந்து ப்ரஸ்ஸா டிரை பன்ற, அவங்கள போன் பண்ணி மிரட்டுற அப்பிடி நீங்க பண்ணல உங்க கிட்ட கோச்சுகிட்டு கா விட்டுறுவேன் பாத்துக்கோங்க என இந்த அப்பாவி பிள்ளையான என்னை திட்ட ஆரம்பித்து விட்டான்.
நான் வெள்ளை கொடி காட்டி சமாதானப்புறாவை அனுப்பி விட்டு வம்சி கேங்கிடம் சென்று பயப்படும் படி கெஞ்சி விட்டு வந்தேன் என்ன பண்ண எல்லாம் என் நேரம். சப்ப்ப்ப்பா செத்த நேரம் கதைய படிக்க விடுறிங்களா ப்ளீஸ் என இவர்களிடம் மன்றாடி விட்டு மீண்டும் என் கதையை படிக்க ஆரம்பித்தேன்.
நாங்க மறந்துட்டோம் ரௌடி பாஸ், இப்ப என்ன பண்ணுவிங்கள். அவங்கள கடத்திட்டு போவிங்களா பாஸ், அப்புறம் அடிப்பிங்களா பாஸ், அண்ட் தென் அவங்க மயங்கிறுவாங்களா பாஸ் என ஆர்வமாக கேட்ட ஆனந்தை, அவனுடைய வஞச்ப்புகழ்ச்சி வார்த்தையை கேட்டு சிரித்தனர் மற்றவர்.
போனில் இருந்த தேவாவுக்கோ ஏன் இவர்களுக்கு கால் செய்தோம் என்றிருந்தது. டே நான் “அரவிந்த் சாமி ரேன்ஜுக்கு பில்டப் விட்டா இவனுங்க என்ன சல்லி காசுக்கு கூட மதிக்க மாட்றானுங்கடா”, என தன் அடியாளிடம் கம்ப்ளைண்ட் செய்தான்.
ஹலோ ஹலோ பாஸ் லைன்ல இருக்கிங்களா என கேட்ட ஆனந்த் ம்ம்ம்ம் என சொன்னவனிக்கு பாஸ் நீங்க அவளுங்கள தப்பா நினைச்சிட்டு இருக்ககிங்கள். அவங்க எப்படி பட்டவங்கனாஆ என இழுத்தவனை தடுத்து, அவங்க ஒரு குட்டி ஜான்சி ராணிங்க, அதுல குட்டியா ஒருத்தி இருப்பா பாருங்க அவ மங்கம்மா , கொஞ்சம் கொழுகொழுனு இருக்கா பாருங்க அவ தான் என் பொண்டாட்டி என அசடு வழிந்தான் கௌரி. இதற்கும் ம்ம்ம் ஆமா ஆமா நல்லா கொழுகொழுனு தான் இருக்காங்க பட் கருப்பா இருக்காங்க, ஆனாலும் கலையாத இருக்காங்க என தேவா வர்ணிக்க , ஹே அவ என் பொண்டாட்டி நீ ஏன்டா பார்க்குற என எகிறினான்.
ம்ம்ம்ம் என்னடா சொல்ற என கோப கனல் பறக்க கோபமாக பேசிய தேவாவிடம் சரி சரி வந்த வேலையை பார்க்காம எங்க கூட என்ன ஜாலியா வெட்டிப்பேச்சு போங்க போய் கடத்துங்க என சொல்லி விட்டு பதிலுக்கு காத்திறாமல் போனை கட் செய்தான் வம்சி.
திரும்ப அவர்களுக்கு கால் செய்த தேவா ஹலோஓஓஓஓஓஓஓ என சொல்ல, அதே கோரசாக ஹலோஓஓஓஓஓ என பதில் வர அட போங்கடா என மூச்சிரைத்தான் தேவா.
இந்த மடையன் கிட்ட சொன்னால் கேட்க மாட்டான் போல என தேவாவின் அருகில் நின்றிருந்த மகிழ் யோசித்து விட்டு ” டூ யூ ஹேவ் எனி சென்ஸ், ஸ்டுப்பிட், கண்ட்ரி புரூட் என அதட்டியவளை அவளது குரலை அடையாளம் கண்டு கொண்ட வம்சி பாஸ்பாஸ் இது என் பொண்டாட்டி இப்பவாவது என் பொண்டாட்டி கிட்ட போன குடுங்க பாஸ் முக்கியமான விஷயம் பேசணும் என கூற,
முடியாது முடியாது எதுனாலும் என்கிட்டயே சொல்லு என அடம்பிடித்தான் தேவா. சரி பாஸ் உங்க ஹெட் ரைட்டிங் (தலையெழுத்து) என்ன பண்ணுவிங்க உங்க கிட்டயே சொல்றேன் என்றான் வம்சி.
ம்ம் சொல்லு சொல்லு என தேவா ஆர்வம் காட்ட,
சொல்லிடுவேன் சொல்லிடுவேன் என இழுத்தான் வம்சி. வம்சி யின் அருகில் இருந்த மற்றவர்கள் சரமாரியாக சிரித்து விட, சிரித்தபடி அது ஒன்னும் இல்ல பாஸ் நீங்க கிட்னாப் பண்ணி முடிச்ச அப்பறம் அவங்க வீட்டுக்கு வரும் போது “பத்து பாக்கெட் பாதம்பாலும் பத்து ரூபாய்க்கு பச்சியும் வாங்கிட்டு வரச் சொல்லனும்”, அதுக்கு தான் பாஸ் என இழுத்தான் கௌரி.
அடப்பாவிங்களா என்ன முழு ஒரு பைத்தியமாவே மாத்திடு வாங்க போல என நினைத்தவன் படார் என போனை கட் செய்திட, தேவாவின் பதிலுக்காக எதிர்முனையில் காத்திருந்த மற்றவர்கள் கௌரியையை பார்க்க, மனுசன் என்ன நினைச்சானு தெரியில பொசுக்குனு கால கட் பண்ணிட்டாரு என உதட்டை பிதுக்க, அப்ப பச்சி வராதா ஆ மச்சி என ரைமிங் பேசிய ஆனந்தின் அருகில் வந்த லோகி, அவனது மண்டையை நன்றாக தடிவி ஒரு முத்தம் கொடுத்திட, வம்சி மூச்சு விட்டு கட்டுனவக் கிட்ட தான் பண்ண முடியலனு சொந்த தம்பிக்கே கிஸ் தரையா மச்சி என நக்கலடித்திட, அந்த இடமே சிரிப்பில் கலை கட்டியது.
இதற்கிடையில் ஆதி தனியாக பேச வேண்டுமென நித்யாவை அழைத்து சென்றிருந்தது அனைவருக்கும் நியாபகம் வர வாங்கடா அங்க என்ன நடக்குதுனு எட்டிப் பாரக்கலாம் என வம்சி கூறினான்.
அவன் தோள்மீது கைபோட்ட கௌரி டே நீ தம்பி, நித்யா உனக்கு அக்கா, நாங்க உனக்கு மச்சான்கள் என சொன்னான்.
சொல்லி முடித்தவுடன் ஆனந்த் நல்ல குடும்பம் நல்லா விளங்கும் என தலையில் அடித்து கொள்ள, இப்ப வரப்போறிங்களா இல்லையா என லோகேஷ் ஆர்வம் படுத்த படியேறினார்கள்.
காரில் பாட்டிமாவை அமர வைக்க முயற்சித்த ரிஷி பாட்டிமாவை போட்டு உலப்பி கொண்டிருக்க, “டே நெட்டக்குதிரை இன்னுமா பாட்டிய உட்கார வைக்கிற” என சவுண்ட் விட்டாள் மதுரவாணி.
யார்ரா இந்த சவுண்ட் பார்ட்டி என நிமிர்ந்து பாரத்தவனின் கண்கள் வேறு புறம் எங்கும் திரும்பாமல் இருந்திட, தம்பி ஜொல்லு ரொம்ப வழிஞ்சி வெள்ளம் வரதுக்குள்ள என் மருமகளுங்கள கூப்பிடு நாங்க கிளம்புறோம் என சொன்ன பாட்டியை பாராட்டவா இல்லை முறைக்கவா என பார்த்தான் ரிஷி.
மகிழ் திட்டிய வார்த்தைகளை உள் வாங்கிய தேவாவிற்கு கோபம் ஏற்பட, அவர்களை அட்டாக் செய்யும்படி ஆர்டர் போட்டான் தேவா.
தேவாவின் ஆட்கள் அவர்களை நெருங்க,
படியேறி கொண்டிருந்தவர்களில் முதலில் வம்சி, செகண்ட் கௌரி, தேர்ட் ஆனந்த், போர்த் லோகி என்று ஒரு ஒரு படியாக நின்று கொள்ள, இத பாருங்க எனக்கு சுத்தி வலைத்துலாம் பேசத்தெரியாது ” எனக்கு உங்கள பிடிச்சிருக்கு உங்களுக்கு பிடிச்சிருந்தா சொல்லுங்க வீட்டில பேசிடலாம்” என தன் மனதில் தோன்றிய அனைத்தையும் படபடவென ஒப்பித்தவன் நித்யாவின் பதிலுக்காக காத்திருந்து பொருமை இழந்தான்.
என்னடா சத்தமே வரல என லோகேஷ் கேட்க, அப்ப நாம பாண்டவர்களாக போறமா வம்சி என உடலை அசைத்து லோகி ஆனந்தமடைய, கௌரி பதில் வருமாடா வம்சி என்றான்.
டே இருங்கடா அக்கா என்ன நினைக்குறானு பார்க்கலாம் என கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தனர்.
நித்யா குனிந்த தலையாக இருக்க, டோண்ட் வரி நித்யா பிடிக்கலைனா விடு எதுக்கு இப்படி “இல்லாத மூளையே கசக்குறே”,… என்றவனை முறைத்தாள் நித்யா.
ஹே என்ன பிடிக்கலைனுட்டு “இப்புடி சைட் அடிக்கிற எனக்கு ஒரே வெட்க வெட்கமா வருது”,என முகத்தை கையால் மறைத்து அழகு காட்டினான்.
அவனை பார்த்து சிரித்தவள் பதில் சொல்ல வர, வெளியே படியில் நின்றிருந்த வம்சியின் போன் அடித்தது. போனை அட்டன் செய்து சொல்லுங்க அத்தை என கேட்டிட, மாப்பிள்ளை தம்பி நாங்க இன்னைக்கு எங்க பொண்ணுகளுக்கு நகைப்போட வந்துட்டு இருக்கம்.
இதை அவங்க கிட்ட சொல்லனும் என் மக கிட்ட போன் குடுக்கிறிங்களா?…. என கேட்ட அத்தையிடம் ” அத்தை அவங்க வாக்கிங் போயிருக்காங்க”, என அவன் பாட்டுக்கு உலர ஆரம்பித்தான்.
ஓஓஓஓ வாக்கிங்காஆஆ என்று கேசுவலாக சொன்னவர் சடாரென நினைவு திரும்ப என்னது வாக்கிங்கா?….. அதும் இத்தனை மணிக்கா என ஆச்சர்யமாக கேட்டார்.
அய்யயோ என்ன இன்னைக்கு எது சொன்னாலும் வம்பா வருது டைம் பாக்காம உலரிட்டனே என யோசித்து கொண்டே இருந்தவனை,
தம்பி தம்பி என்று அழைக்க நினைவு வந்து மற்றவர்களிடமும் பாடி ஆக்டிங் செய்து விளக்க மளித்து அவுட் ஸ்பீக்கர் போட்டான். அத்தை அது புதுவகை வாக்கிங் அத்தை என எதோ சொல்ல, அதென்னப்பா வாக்கிங் என்றார்.
அது அது வந்து அத்தை ம்ம் “பத்து மணி கார் வாக்கிங் அத்தை”,…… என்றான் மற்றொரு புது ஐடியா கிடைத்தது போல, அவர்கள் அப்படியே படியில் நின்ற படி பேசிக்கொண்டு இருக்க கதவை திறந்து வெளிவந்த வம்சியின் பெற்றோர் கண்ணில் பட்டனர் நால்வரும்.
அதே சமயம் காலிங் பெல் அடிக்க ஆண்களின் முகத்தில் ஈயாடவில்லை. சோ போனில் பேசிக்கொண்டே இருந்தவர்களிடம் அதற்குள் வந்து விட்டீர்களா?… என்று சிந்தித்தான் வம்சி.
தம்பி என்ன ஆச்சு உங்களுக்கு என அவனுடைய நலன் விசாரித்தார் கிருஷ்.
❣️❣️❣️❣️ சண்டை மீளும் ❤️❤️❤️❤️.
உங்களில் ஒருத்தி நான் 🥰💞.