முகில் உன் வீட்டிற்கு வண்டியை விடு என்றவுடன் என்னுடைய வீடு எது என்று உங்களுக்கு தெரியும் தானே என்று எதிர் கேள்வி கேட்டால் முகில் வேனியை பார்த்து முறைத்துவிட்டு உன்னை பெற்றவர்கள் வீட்டிற்கு வண்டியை விடு என்றான் அங்கு எதற்கு நீங்கள் தான் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சென்று அவர்களைப் பார்த்து வருகிறீர்களே என்று கேட்டால்…
உன்னால் இப்பொழுது அங்கு வண்டியை விட முடியுமா இல்லை நான் இறங்கி கொள்ளட்டா என்று கேட்டவுடன் வேணி முகில் பார்த்து முறைத்து விட்டு அமைதியாக உட்காருங்கள் நான் அங்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு வண்டியை அவளது பிறந்த வீட்டை நோக்கி விட்டால் அவர்கள் வேணி வீட்டிற்கு செல்லும் வேலையில் வேணியின் தந்தை வெளியில் தான் உட்கார்ந்து ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்….
வேணியை பார்த்து விட்டு வசந்தி யார் வந்து இருகிறாங்க என்று. வந்து பார் என்று வேகமாக கத்தினார் யார் வந்திருக்காங்க என்று கேட்டுக் கொண்டே வசந்தி வந்தார் தனது மகளைப் பார்த்துடன் வேகமாக ஓடிவந்து அவளை கட்டிக்கொண்டு அழுதார் நான் செய்தது தவறு தாண்டி அதற்காக எங்களுக்கு இத்தனை நாட்கள் தண்டனை தேவையா அதுவும் உன்னுடைய அப்பாவிற்கு தேவையா…
உன் மேல் உயிரையே வைத்திருக்கிறார் என்று உனக்கே தெரியும் தானே நான் செய்த தவறுக்கு அவர் என்ன செய்வார் என்று உடன் வேணி தனது தாயை முறைத்தாள் அவர் இந்த திருமணத்திற்கு உனது அப்பா இறுதி வரை ஒத்துக் கொள்ளவில்லை நான் தான் செத்து விடுவேன் என்று சொல்லி அவரை திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள வைத்தேன்.என்றவுடன் வேணி தனது தந்தையை பார்த்தால் ..
அவர் தலையைக் கீழே கொண்டு இருந்தார் வேணி திருமணத்திற்கு முன்பு எத்தனையோ முறை தனது தந்தையிடம் கேட்டால் அப்பா அம்மா உங்களை மிரட்டினார்களா அதனால் தான் நீங்கள் இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறீர்களா என்று ஆனால் அவர் வாயைத் திறக்கவில்லை அதனால் தான் அவரை முறைத்தாள் அவருக்கு மகளும் வேண்டும் மனைவியும் வேண்டும் மனைவியை விட்டுக் கொடுக்க அவர் விரும்பவில்லை மகளிடம் கூட அதனால் தான் அமைதியாக இருந்தார்…
அதை எண்ணி தான் இப்பொழுது வேணி அவரை முறைத்தாள் முகிலை வேணி முறைத்துவிட்டு தனது தந்தையை பார்த்தால் அவர் அமைதியாக இருந்த பிறகு அமைதியாக வீட்டிற்குள் சென்று உட்கார்ந்தால் அவளுக்குமே தெரியும் தனது தந்தைக்கு தான் என்றால் உயிர் என்று அதுவும் வீட்டிற்கு ஒரே பிள்ளை பெண் பிள்ளை என்றும் அவளுக்கு தெரியும் …
அவள் வந்து உட்கார்ந்தவுடன் அவளுக்கு பிடித்ததை செய்வதற்காக அனைத்தையும் ஒவ்வொன்றாக வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார் வசந்தி வேணிக்கு இடியாப்பம் தேங்காய் பால் பிடிக்கும் என்பதால் அதை செய்து கொடுத்தார் இருவரும் நன்றாக சாப்பிட்டு விட்டு வேணியும் தனது தாய் தந்தை இடம் எப்பொழுதும் போல் பேச ஆரம்பித்து விட்டாள் பிறகு கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு சரி கிளம்புகிறோம் என்றார்கள்…
வசந்தி ஒரு சிறிய பாக்ஸில் இடியாப்பமும் தேங்காய் பாலும் போட்டு கொடுத்தார் எதற்கு என்று கேட்டதற்கு மகாவிற்கு என்று சொன்னார் வேணி தனது தாயைப் பார்த்து சிரித்துவிட்டு கிளம்பினால் அப்பொழுது ராமுவும் வசந்தியும் இரு கட்டபையில் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் காய்த்த காய்கறிகள் பழங்களை கொடுத்தார்கள் இல்லை அங்கே இருக்கிறது எனக்கு வேண்டாம் என்றால்…
முகில் வேணி அமைதியாக வாங்கிக் கொண்டு வா என்றவுடன் முகிலை பார்த்த முறைத்துவிட்டு அந்த இரண்டு கட்ட பைகளையும் வாங்கிக் கொண்டு இரவு 7 மணி போல் அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பினார்கள் வேணி கொஞ்ச தூரம் சென்ற பிறகு நம் வீட்டில் இருக்கும் பொழுது இங்கு இருந்து எதற்காக வாங்கி கொண்டு வர சொல்கிறீர்கள் என்று கேட்டால்….
வேணி புரியாமல் பேசுகிறாயா இல்லை இன்னும் அவர்கள் மேல் கோபமாக தான் இருக்கிறாயா என்று கேட்டான் நீங்கள் பார்த்தீர்கள் தானே நான் நன்றாக தானே பேசிவிட்டு சாப்பிட்டு விட்டேன் அப்புறம் என்ன என்று கேட்டால் பிறகு அவர்கள் கொடுத்ததை ஏன் வேண்டாம் என்று சொல்கிறாய் என்று கேட்டான் நம் வீட்டில் தான் இருக்கிறதே என்றால் ….
வேணி நம் வீட்டில் ஆயிரம் தான் இருந்தாலும் தாய் தந்தை வீட்டில் இருந்து சிறிய பொருள் எடுத்துட்டு வந்தாலும் அது உனக்கும் சந்தோஷம்தான் உனக்கு பெருமையும் கூட ஏன் நான் எடுத்துக் கொண்டு செல்லவில்லை என்றால் அனைவரும் என்னை தவறாக எண்ணுவார்களா என்று கேட்டால் உனக்கு அப்படித்தான் தோன்றுகிறதா என்று கேட்டான்….
அதேதான் நானும் கேட்கிறேன் இத்தனை நாட்களாக நான் ஏதாவது எடுத்துக் கொண்டு வந்தேனா அவர்கள் வீட்டிற்கு சென்று வந்தேனா என்றால் உனக்கு புரியவில்லை அம்மா வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு சென்றால் உனக்கும் சந்தோஷம் தான் உனக்கு பெருமை கூட அதை நீ உணரும் போது உணர்வாய் அமைதியாகவா என்றான் …
இதுவரை உன்னை பார்ப்பதற்காக அத்தை மாமாவும் வீட்டிற்கு வரும் பொழுது அவர்கள் காட்டில் காய்க்கும் காய்கறிகளை பழங்களை எடுத்துக் கொண்டுதான் வருவார்கள் என்றான் அவள் முகிலைப்பார்த்து சிரித்து விட்டு எனக்கும் அது எல்லாம் தெரியும் என்று சொல்லிவிட்டு அமைதியாக வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தால் பிறகு எங்கு செல்லலாம் என்று கேட்டான்…
நாம் கயல் அண்ணியை பார்த்து விட்டு வரலாமா என்று கேட்டாள் இந்த நேரத்திலா என்றான் ஆமாம் என்றவுடன் சரி என்றான் வேணி முகில் சரி என்றவுடன் கயலுக்கு என்னென்ன பிடிக்கும் என்று அனைத்தையும் கடையில் வாங்கிக் கொண்டு பழம் பூ எல்லாம் வாங்கிக் கொண்டு சென்றார்கள் பிறகு எட்டு மணிக்கு சென்றார்கள் அப்போதுதான் கயலுக்கு அவளது கணவன் அன்பு கால் வீக்கமாக அவளுக்கு இருப்பதால் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தான் …
வண்டி சத்தம் கேட்டவுடன் யார் என்று எட்டிப் பார்த்தான் யாரு அன்பு என்று கயல் கேட்டவுடன் உன்னுடைய அண்ணன் முகிலும் வேணியும் வருகிறார்கள் என்றுடன் வேகமாக ஓடி வந்தால் அண்ணி எதுக்கு இவ்வளவு வேகமா ஓடி வரீங்க என்று வேணியும் எதுக்குடி இவ்வளவு வேகமாக ஓடி வர என்று முகிலும் கேட்டார்கள் வா வேணி அழைத்தால்…
முகில் கயலை முறைத்து விட்டு அப்போ நான் வர வேண்டாமா என்று கேட்டான் கயல் முகிலை பார்த்து சிரித்து விட்டு நீ உன் தங்கையை பார்க்க வருவதற்கு யாருடா உன்னை தடுப்பார்கள் என்று கேட்டுக் கொண்டே அவனை ஒரு பக்கமாக கட்டி அணைத்துக் கொண்டு வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள் பிறகு ஒரு இடத்தில் அமர்ந்து விட்டு அவனையும் அருகில் அமர்த்திக் கொண்டால் …
பிறகு அவனது தோளில் சாய்ந்து கொண்டாள் இருவரும் இரட்டையர்கள் அவர்களது பாசத்தை வெளியே காண்பித்துக் இருக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் இருவருக்கும் அப்படி ஒரு ஒற்றுமை பாசம் இருக்கிறது என்று வேணி தெரிந்து கொண்டு இருந்தால் இருவரையும் பார்த்து வேணி சிரித்து விட்டு வாங்கிக்கொண்டு வந்த தின்பண்டங்களை கயல் கையில் கொடுத்தால் ….
எதற்கு வேணி இது எல்லாம் என்று கேட்டால் அண்ணி இங்கு வருகிறேன் என்று தெரிந்திருந்தால் என் கையாலையே செய்து எடுத்துக் கொண்டு வந்திருப்பேன் இப்பொழுது தான் வரலாம் என்று முடிவு செய்து வந்தோம் அதனால் தான் கடையில் வாங்கிக் கொண்டு வந்தோம் என்றால் அதற்காக இந்த நேரத்தில் என்று கேட்டால் இல்லை அண்ணி அம்மா வீட்டுக்கு சென்று வந்தோம் என்றால்…
வேனியை கயல் அமைதியாக பார்த்தால் பிறகு வேனியை சிரித்து கொண்டே இன்று தான் முதல் முறையாக சென்று வந்தேன் என்றவுடன் இப்போது தான் உனக்கு மனசு வந்ததா என்று கேட்டு விட்டு பிறகு வேறு எதுவும் பேசாமல் வேணி எடுத்துக் கொண்டு வந்ததை கயல் சாப்பிட ஆரம்பித்தாள் கயலின் மாமியார் அம்பிகா வந்து வேணி முகில் இருவருக்கும் காபி கொடுத்துவிட்டு சென்றார் ….
பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் சரி வாங்க சாப்பிடலாம் என்று ஒன்பது மணி போல் கூப்பிட்டார் இல்லை நாங்கள் இப்போதுதான் சாப்பிட்டு விட்டு வந்தோம் என்றால் என்ன சாப்பிட்டு விட்டு வந்தீர்களா கொஞ்சமாக சாப்பிட்டு செல்லலாம் என்றவுடன் கயலுக்கு பிடித்த காளான் பிரியாணி தான் என்றார் என்ன இந்த நேரத்துல என்று கேட்டால் ..
கயலுக்கு பிடிக்கும் என்று கேட்டதால் இப்பொழுது செய்தேன் என்றார் அம்பிகா சரி என்று விட்டு இருவரும் கொஞ்சமாக சாப்பிட்டார்கள் ஏற்கனவே வேணியின் பெற்றவர்கள் வீட்டில் சாப்பிட்டிருந்தால் மீதம் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு இரவு ஒன்பதரைப் போல் அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பினார்கள் கிளம்பும் வேலையில் அம்பிகா இரண்டு டிபன் பாக்ஸில் காளான் பிரியாணி போட்டுக் கொடுத்தார் எதற்கு நாங்கள் தான் சாப்பிட்டு விட்டோமே என்றவுடன் ஒன்று மகாக்கும் மற்றொன்று நிலாவிற்கும் என்று கொடுத்தார்…
சிரித்து விட்டு வேணி வாங்கிக் கொண்டால் சரி நேரமாகி இருந்தால் சரி என்று சொல்லிவிட்டு இருவரும் அவர்கள் வீட்டிற்கு சென்றார்கள் முகில் வேணி இருவரும் அவர்கள் வீட்டிற்கு வரும்போது இரவு 10 மணி ஆகி இருந்தது அவர்கள் வீட்டு பெரியவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு வரவேற்பு அறையில் இருவருக்காக காத்துக் கொண்டிருந்தார்கள் …
அவர்கள் உள்ளே வந்தவுடன் நிலா தான் வேண்டும் என்றே என்ன வேணி உன்னுடைய பிறந்த வீட்டிற்கு சென்று வருவதற்கு இவ்வளவு நேரமா அதுவும் தனியாகச் சென்றாய் இப்பொழுது அண்ணனோடு வருகிறாய் அவரும் அங்கு வந்திருந்தாரா என்று கேட்டால் அண்ணா உன்னுடைய வண்டி எங்கே இருவரும் ஒரே வண்டியில் வருகிறீர்கள் என்று கேட்டால் ….
வேணி நிலாவைப் பார்த்து முறைத்துவிட்டு அவளது தலையில் கொட்டி விட்டு இந்த என்று கயலின் மாமியார் கொடுத்த காளான் பிரியாணியை எடுத்துக் கொடுத்தால் உன் வீட்டில் செஞ்சதா என்றால் இல்லை நாங்கள் எங்கள் வீட்டிற்கு சென்று விட்டு கயல் அண்ணியை பார்த்து விட்டு வருகிறோம் அம்பிகா அம்மா கொடுத்து விட்டது என்று சொல்லிவிட்டு தனது மாமியாரை வேணி பார்த்தால் ….
அவர் வேணியை முறைத்துவிட்டு அமைதியாக அவரது அறைக்கு சென்று விட்டார் சுந்தரி தான் கயல் நன்றாக இருக்கிறாளா என்று கேட்டார் நன்றாக இருக்கிறார்கள் என்றவுடன் சரி இருவரும் சாப்பிட்டுவிட்டு படுங்கள் என்றார் நாங்கள் இருவரும் சாப்பிட்டு விட்டோம் என்று உடன் உங்களுக்காக இவர்கள் இருவரும் சாப்பிடமால் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றவுடன் எதற்காக அண்ணா சாப்பிட்டிருக்கலாமில்ல என்று எழிலை பார்த்து வேணி கேட்டாள் ….
எழில் வேணியை பார்த்து சிரித்து விட்டு இப்போ என்ன வந்தது நாங்கள் இப்பொழுது சாப்பிட்டுக் கொள்கிறோம் என்றவுடன் நிலாவிடம் கொடுத்தது போல் இன்னொரு டிபன் பாக்ஸ் எடுத்துக் கொண்டு வெளியில் சென்றால் சுந்தரி தான் அது என்ன என்று கேட்டார் அம்பிகா அம்மா மகா அண்ணிக்கும் கொடுத்து விட்டிருந்தார் என்று உடன் வீட்டில் அனைவரும் அமைதியாக இருந்தார்கள் …
பிறகு கயல் இடியாப்பத்தையும் எடுத்துக் கொண்டு சென்றால் என்ன வேணி இவ்வளவு நேரம் வீட்டில் ஆள் இல்லை என்று கேட்டால் மகா அண்ணி என்று வேணி முறைத்தாள் சரி அம்மா அப்பா எப்படி இருக்கிறார்கள் என்றாள் நன்றாக இருக்கிறார்கள் அதுதான் நீங்களும் உங்கள் அண்ணனும் அடிக்கடி சென்று பார்த்துவிட்டு வருகிறீர்களே அப்புறம் என்ன என்று கேட்டால் மகா வேனியை பார்த்து சிரித்தாள்…
அண்ணி அம்மா உங்களுக்காக இடியாப்பம் கொடுத்திருக்கிறார்கள் இது அம்பிகா அம்மா கொடுத்தது காளான் பிரியாணி என்றுடன் கயலை சென்று பார்த்துவிட்டு வந்தீர்களா என்று கேட்டான் ஆமாம் அண்ணி என்றவுடன் சரி வேணி மாமாவுக்கு கொடு காளான் பிரியாணி அவருக்கு ரொம்ப பிடிக்கும் அவர் சாப்பிடட்டும் என்றால் சரி அண்ணி நீங்கள் இந்த இடியாப்பத்தை சாப்பிடுங்கள் என்றாள் ….
இல்லை வேணி எழிலுக்கு கொண்டு போய் கொடு அவன் சாப்பிடுவான் என்றால் ஏனென்று கேட்டாள் இல்லடா நான் இட்லி ஊத்தி விட்டேன் அதை சாப்பிட்டுக் கொள்கிறேன் இடியாப்பம் அவனுக்கு பிடிக்கும் அவனிடம் கொடு என்றவுடன் சரி என்று விட்டு இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்குங்கள் நேரம் ஆகிறது என்று சொல்லிவிட்டு இவ்வளவு நேரமா அண்ணி சாப்பிடாமல் இருந்தீர்கள் என்று கேட்டாள்….
நீங்கள் இருவரும் சென்று இன்னும் வரவில்லை என்று பார்த்துக் கொண்டிருந்தேன் நீங்கள் இருவரும் வந்த பிறகு தான் சாப்பிட உட்கார்ந்தோம் என்றால் சரி அண்ணி என்று சொல்லிவிட்டு இடியாப்பத்தை எடுத்துக் கொண்டு சென்று எழிலிடம் கொடுத்தால் என்ன என்று நிலா கேட்டால் அம்மா மகா அண்ணிக்கு இடியாப்பம் கொடுத்தார்கள் மகா அண்ணி எழில் அண்ணனுக்கு கொடுக்க சொன்னார் என்று உடன் அதை என்னிடம் கொடுத்திருக்க வேண்டியதுதானே என்று கேட்டாள்…
நீ காளான் பிரியாணி சாப்பிடுகிறாய் தானே அதை சாப்பிடு என்றால் எழில் இருவரையும் பார்த்து சிரித்துவிட்டு இடியாப்பத்தை சாப்பிட ஆரம்பித்தான் இருவரும் சாப்பிட்ட பிறகு சரி நேரமாகிறது போய் நீங்கள் இருவரும் தூங்குங்கள் என்றவுடன் வேணி முகில் இருவரும் அவர்கள் அறைக்கு சென்று விட்டார்கள் நிலா போகும் இருவரையும் பார்த்துவிட்டு மாமா இவர்கள் இருவரும் இப்பொழுது போல் எப்பொழுதும் சந்தோஷமாக இருந்தால் நன்றாக இருக்கும் ….
வேணி அவளது விருப்பத்தை சொல்லி விட்டாளா இல்லையா என்று தெரியவில்லையே என்றால் எழில் நிலாவைப் பார்த்து சிரித்துவிட்டு பிறகு முறைத்தான் இது அவர்களது வாழ்க்கை நிலா அவர்கள் என்ன முடிவு என்றாலும் எடுக்கட்டும் அவளுக்கு எப்போது தோன்றுகிறதோ அப்பொழுது அவளது விருப்பத்தை சொல்லட்டும் இதில் நாம் யாரும் தலையிடக்கூடாது என்றவுடன் நிலா எழிலை பார்த்து முறைத்தால் ….
நிலா எண்ணியது போல் வேணி முகிலிடம் விருப்பத்தை சொல்லி விட்டாளா இல்லை எழில் சொன்னது போல் அவளுக்கு எப்போது தோன்றுகிறதோ அப்பொழுது சொல்வாளா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…
அன்புடன்
❣️ தனிமையின் காதலி ❣️
Nice