Skip to content
Home » மகாலட்சுமி 106

மகாலட்சுமி 106

வேணி முகில் இருவரும் கீழே இறங்கி வரும் போது தான் மகிழ் அவர்கள் கல்லூரிக்குள் வந்தான்  மகிழ் வேணியை பார்த்து சிரித்து விட்டு தனது  கட்டை விரலையும் தூக்கி காண்பித்தான் வேணியும் மகிழைப் பார்த்துவிட்டு முகிலுக்கும் காண்பித்து விட்டு அவனை பார்த்து சிரித்தாள் பிறகு தன் வீட்டு ஆட்கள் இருக்கும் இடத்திற்கு மகிழ் வந்தான் நிலா அவனைப் பார்த்து முறைத்தாள்…..

மகிழ் தனது காதில் கை வைத்து சாரிடா நிலா குட்டி என்றான் நான் மேலே ஏறும் போது நீ ஏன் வரவில்லை என்று கேட்டாள் நான் அதற்கான காரணத்தை அப்புறமாக சொல்கிறேன் என்றான் அவன் வேறு ஏதாவது பேசி இருந்தால் நிலா மேற்கொண்டு பேசி இருப்பாள் அவன் அதற்கான காரணத்தை நான் பிறகு சொல்கிறேன் என்று பிறகு நிலாவால் அவனிடம் வாதாட தோன்றவில்லை மதிய உணவு சாப்பிட்டுவிட்டு அனைவரும் வீட்டிற்கு வந்தார்கள் ….

நிலா வீட்டில் உள்ள அனைவரிடமும் நான் மகிழ் மாமாவுடன் செல்கிறேன் என்று சொல்லிவிட்டாள் அவள் அவ்வாறு சொன்னவுடன் காவேரி மட்டும் நிலாவை முறைத்தார் நான் என்னுடைய மாமாவுடன் செல்வதற்கு யாருடைய பர்மிஷனும் எனக்கு தேவையில்லை என்று காவேரிடம் சொல்லிவிட்டு மகிழ் கையை பிடித்துக் கொண்டு அவனை அழைத்துக்கொண்டு சென்றாள் ….

மகிழ் பைக்கில் தான் வந்திருந்தான் நிலா அவனுடன் பைக்கில் ஏறி உட்கார்ந்தால் எங்க நிலா குட்டி போகணும் என்றான் உனக்கு எங்கு போக தோணுதோ அங்க கூட்டிட்டு போ மாமா என்றாள் மகிழ் நிலாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றான் அவர்கள் கல்லூரியில் சாப்பிட்டுவிட்டு கிளம்புவதற்கு மாலை 3 மணிக்கு மேல் ஆகிவிட்டது நிலாவை மலை கோவிலுக்கு அழைத்துச் சென்றான் …..

மாலை நான்கு நான்கே கால் ஆகிவிட்டது நான்கு மணி போல்தான் கோவில் சன்னதியும் திறந்திருந்தார்கள் கீழே ஏற்கனவே மகிழ் அர்ச்சனைக்கு சொல்லியும் இருந்தான் அனைத்தும் வாங்கிக் கொண்டு மேலே சென்றான் நிலா வேணி இருவரின் பெயரில்தான் அர்ச்சனை செய்துவிட்டு அன்னதானமும் போட செய்து இருந்தான் நிலா மகிழைக் கட்டிக் கொண்டு அழுதால் உனக்கு என் மேல் அவ்வளவு நம்பிக்கையா நான் உனக்கு அவ்வளவு முக்கியமா என்றால்……


நான் என் நிலா குட்டி மேல் நம்பிக்கை வைக்காமல் வேறு யாருடா வைப்பாங்க எனக்கு தெரியும் நீ நல்ல மார்க் எடுப்ப என்று என்ன நான்  வேணியும் நல்ல மார்க் எடுப்பாள் என்று எண்ணினேன் ஆனால் உங்க டிபார்ட்மெண்ட் இரண்டாவது மார்க் வருவா என்று எதிர்பார்க்கல என்று சொன்னான் பிறகு சாமி கும்பிட்டு விட்டு ஒரு இடத்தில் உட்கார்ந்தார்கள்  நிலா மகிழையே பார்த்துக்கொண்டு இருந்தால்….

மகிழ் நிலாவின் கையில் ஒரு பத்திரத்தை வைத்தான் நில ஒரு நிமிடம் மகிழையே பார்த்துவிட்டு அதை பிரிக்கும் வேளையில் அங்கு எழில் மகா இருவரும் வந்திருந்தார்கள் இருவரும் எதர்ச்சியாக தான் கோவிலுக்கு வந்திருந்தார்கள் வேணி நிலா இருவரின் பெயரிலும் அர்ச்சனை செய்துவிட்டு செல்லலாம் என்று ஆனால் அங்கு மகிழ் நிலா இருவரும் இருப்பதை அதன் பிறகு தான் பார்த்தார்கள்….

எழில் மகா இருவரும் மகிழ் நிலா இருக்கும் இடத்திற்கு வந்தார்கள் எழில் தான் வேகமாக வந்து நிலாவின் கையில் இருக்கும் பத்திரத்தை பிடுங்கினான் நிலா எழிலை முறைத்துவிட்டு அமைதியாக இருந்தால் பிறகு எழில் அதைத் திறந்து படித்தான் அவனது கண்கள் கலங்கியது நிலா எழில் அருகில் வந்து மாமா என்னாச்சு இதில் என்ன இருக்கு என்று கேட்டால் ….

எழில் நிலாவின் கையில் வைத்தவுடன் நிலாவும் அதை பிரித்து பார்த்தவுடன் அவளது கண்களும் கலங்கியது பிறகு மகா இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தவுடன் நிலாவே மகாவின் கையில் அதை திணித்தாள் மகா அதை படித்துவிட்டு நிலாவை கட்டிக்கொண்டு சிரித்தால் நீ ஆசைப்பட்ட இடம் கிடைத்து விட்டது தானே அப்புறம் எதற்கு டி அழுகிறாய் என்று நிலா மகிழை கட்டிக் கொண்டு அழுதால் மாமா என்ன இது என்றால்…..


என்ன நிலா குட்டி நீ ஆசைப்பட்டது தான் உனக்கு தனியா ஒரு லேப் வைக்கணும்னு சொல்லுவ இல்ல அது தான் நீ ஆசைப்பட்ட இடத்தை தான்  உனக்கு இன்னிக்கு ரிஜிஸ்டர் பண்ணி தரணும்னு நினைச்சேன் அதனால்தான் காலைல 10 மணிக்கு மேல் தானே ரிஜிஸ்டர் ஆபீஸ் ஓபன் ஆகும் அதனால் தான் என்னால் நீ மேடை ஏறும் போது வர முடியவில்லை நம்ப நினைத்த நேரத்தில் ரிஜிஸ்டர் பண்ண முடியாது அல்லவா முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா ரிஜிஸ்டர் பண்ணி வாங்கிட்டு வரதுக்கு லேட்டாயிடுச்சுடா  என்று சொன்னவுடன் நிலா மகிழ் நெஞ்சில் வேகமாக சாய்ந்து கொண்டு வாய் விட்டு அழுதால்…..

எழில் தான் தன்னைத் தேற்றிக்கொண்டு நிலாவின் தலையில் கொட்டிவிட்டு லூசு நல்ல நாள்ல நல்ல விஷயம் நடந்திருக்கும்போது எதுக்கு அழுவுற என்றான் இல்ல மாமா என்றாள் இது உனக்கு புடிச்சது உனக்கு விருப்பப்பட்ட இடத்தை வாங்கி கொடுத்திருக்கான்   மாமா என்றாள் இதுல என்ன இருக்கு ஒன்னும் இல்ல சந்தோஷமா இரு என்றான் நிலா மண்டையாட்டினாள் ….


இடம் மட்டும் தான் கிடைச்சிருக்கு நிலா லேப் வைக்க அப்ரூவல் வாங்கணும்னா மேற்கொண்டு இனிமேதான் பார்க்கணும் கொஞ்சம் டைம் ஆகும் ஒரு ரெண்டு மூணு மாசம் ஆகலாம் என்றான் அப்பொழுது எழில் சிரித்துக் கொண்டே அண்ணா அவ லேப் வைக்க அதற்கு ப்ரோசீட் பண்றதுக்கு தேவையான எல்லா ப்ராசஸையும் நான் பாத்துக்குறேன் நான் வாங்கி தரேன் என்றான்…..

மகிழ் அமைதியாக கண்ணை மூடி திறந்தான் பிறகு அனைவரும் சாமியை தரிசனம் செய்துவிட்டு வீட்டிற்குச் சென்றார்கள் சுந்தரி தான் இவ்வளவு நேரம் எங்க டி சென்று விட்டு வருகிறாய் என்று கேட்டார் அவர்கள் நான்கு பேரும்  வருவதற்கு இரவு 7 மணி ஆகி இருந்தது நிலா அவனை கட்டி அணைத்து விட்டு அவரது தாடையில் முத்தமிட்டு அந்த பத்திரத்தை அவரது கையில் வைத்தால் சுந்தரி அதை படித்துப் பார்த்துவிட்டு தனது மகன் மகிழை முறைத்தார் ….

அவன் சிரித்துவிட்டு அமைதியாக மாடிப்படி ஏறி விட்டான் மகாவும் அமைதியாக மாடிப்படி ஏறிவிட்டாள் காவேரி தான் சுந்தரியிடம் அது என்ன சுந்தரி என்று கேட்டார் அண்ணி நிலா லேப் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள் இல்ல அதற்கு ஒரு இடத்தை வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள் இல்ல அதற்கு மகிழ் ஒரு இடத்தை பார்த்து ரிஜிஸ்டர் பண்ணி இருக்கிறான் நிலா பேரில் தான் ஆனால் கார்டியன் ஆக மகிழ் தான் கையெழுத்து போட்டு வாங்கி கொண்டு வந்திருக்கிறான் ….

இவள் தான் ரிஜிஸ்டர் ஆபீஸ் செல்லவில்லையே என்றார் சுந்தரி அதன் பிறகு காவேரி  வேறு எதுவும் பேசவில்லை அமைதியாக இருந்தார் அப்பொழுது மணி தான் அதற்கு அப்ரூவல் வாங்கணுமே என்ற கேட்டார் எழில்  சிரித்துவிட்டு அதை ஒரு மூன்று நான்கு மாதங்களில் வாங்கிவிடலாம் மாமா ஒன்றும் பிரச்சனை இல்லை நான் அதற்கு தேவையான அனைத்து ஏற்படும் பார்க்கிறேன் என்றான்…

மணி கோதை இருவரும் நிலாவை முறைத்து விட்டு தனது இரண்டு மருமகன்களையும் எண்ணி மனதிற்குள் சந்தோஷம் அடைந்தார்கள் பிறகு வீட்டில் கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டார்கள் வேணி சாமி கும்பிட்டவுடன் வேகமாக மாடி படிச்சென்றாள்  மகாவை கட்டிக்கொண்டு அழுதால் வேணி நல்ல விஷயம் நடந்திருக்கிறது இப்பொழுது எதற்கு அழுகிறாய் என்று கேட்டால் ….

அண்ணி இதற்கு முழுக்க முழுக்க நீங்கள் மட்டும்தான் காரணம் நீங்கள் இல்லை என்றால் நான் இந்த அளவிற்கு படித்திருக்க முடியாது என்றால் லூசா நீ நான் சொல்லி மட்டும் தான் கொடுத்தேன் படித்தது தினமும் நீதானே இருந்தாலும் எனக்கு புரியும் படியாக சொல்லிக் கொடுத்தது நீங்கள் தானே என்றால் மகா சிரித்துவிட்டு கல்லூரியில் ஒரு ஆசிரியராக சொல்லிக் கொடுப்பதும் என்னுடைய கடமையாக இருந்தது இங்கு என்னுடைய அண்ணிக்கோ நாத்தனார்க்கோ சொல்லிக் கொடுக்க வேண்டியது எனக்கு ஆசையாக இருந்தது சரியா இதில் படித்ததென்னவோ நீ தான் நான் உன்னைப்போல் நிறைய மாணவர்களுக்கு சொல்லித் தருகிறேன் ஆனால் அனைவரும் நல்ல மதிப்பெண் எடுத்து விடுவதில்லையே ….

நீ உன்னுடைய முயற்சியில் உறுதியாக இருந்ததால் மட்டும் தானே இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய் என்று அவளது தலையில் கைவைத்து சொன்னால் பிறகு மகிழ் வேணியின் கையில் ஒரு பேப்பரை திணித்தான் அண்ணா இது என்ன என்று கேட்டால் திறந்து பார்  என்றான் வேனியும் திறந்து பார்த்தால் அதை திறந்து பார்த்துவிட்டு மகிழை கட்டிக்கொண்டு அழுதால் அண்ணா நான் இந்த விஷயத்தை உங்ககிட்ட சொன்னது இல்லையே என்றால் …


நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்லையே என்றவுடன் வேணி மகாவை பார்த்தால் மகா சிரித்தால் பிறகு மகிழைப் பார்த்து அண்ணா சாரி என்றால் எதற்கு வேணி என்றான் இல்லை நேற்று நடந்ததற்கு நான் தானே அண்ணா  காரணம் என்றால் மகிழ் வேணியின் தாடையில்  லேசாக தட்டி விட்டு வேணி நீ பேசியதால் எனக்கு ஒரு சில விஷயங்கள் புரிந்தது இதில் யார் மீதும் தவறு இல்லை சரியா என்னை நான் திருத்திக்க முயற்சி பண்ணுவேன் என்று விட்டு அமைதியாக வெளியே வந்து நிலவை பார்த்துக் கொண்டிருந்தான்….

வேணி மகாவை பார்த்தால் மகா சிரித்தால்அண்ணி உங்களுக்கு வருத்தமாக இல்லையா என்று கேட்டால் எனக்கு வருத்தமாக இல்லை என்னுடைய மனதில் இருப்பதை கீழே இறக்கி வைத்து விட்டேன் அவ்வளவுதான் என்றால் அதில் என்ன இருக்கிறது என்று கேட்டால் அண்ணி எம் பீல் பண்ணிவிட்டு நான் அவருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன் அதுதான் எனக்கே தெரியுமே நீ  அண்ணனுக்கு உதவியாக இருக்க ஆசைப்படுகிறாய் என்று என்றால்…


அது மட்டும் இல்லை என்று விட்டு அமைதியாக இருந்தால் என்ன வேணி  அண்ணி எனக்கு இப்பொழுது திருமணத்திற்கு பிறகு தான் உங்களை எழில் அண்ணனை பார்த்த பிறகு நானும் ஒரு ஆசிரியராக வேண்டுமென்று ஆசை வந்தது என்றால் சரி வேணி அதற்கு என்ன என்றால் நான் மேற்கொண்டு பிஎட் படிப்பதற்கான அப்ளிகேஷன் ஃபார்ம் என்றால் மகா அமைதியாக வேணியை பார்த்துக் கொண்டிருந்தால் ….

என்னை அண்ணி நான் சொல்கிறேன் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள் என்று கேட்டால் ஒன்றுமில்லையே என்று விட்டு அமைதியாக இருந்தால் அண்ணி அது மட்டும் இல்லை என்றால் பிறகு என்றால் நான் பி.எட் படிப்பதற்கான மொத்த பணமும் மகிழ் அண்ணன் கட்டிவிட்டு வந்திருக்கிறார் என்னுடைய கையெழுத்து மட்டும் தான் நான் இதில்  போட வேண்டும் என்னுடைய கார்டினாக அவரே கையெழுத்தும் போட்டு இருக்கிறார் பார்ம் பில் செய்திருக்கிறார்…..

அது மட்டும் இல்லாமல் நானும் அவரும் ஹனிமூன் செல்வதற்கு டிக்கெட் இருக்கிறது என்றால் மகா வேகமாக அதை வாங்கி பார்த்துவிட்டு வேணியை கட்டிக்கொண்டு சிரித்தால் அப்பொழுது எழில் நிலா இருவரும் மாடி படி ஏறி வந்தார்கள் இருவரும் என்ன ஹனிமூன் டிக்கெட்டா என்று அதிர்ச்சியாகி கேட்டார்கள் இருவரும் ஏன் அதிர்ச்சியாகி அவ்வாறு கேட்டார்கள் …

மகிழ் வேணி இருவரையும் ஹனிமூன் அனுப்பி வைப்பானா அவர்கள் இருவரும் ஹனிமூன் சேல்வதற்கு வீட்டில் உள்ள யாரும் எந்த எதிர்ப்பும்  சொல்வார்களா இல்லை அனுமதிப்பார்களா என்பதை வரும் பதிவுகளில் பார்க்கலாம்

அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️

1 thought on “மகாலட்சுமி 106”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *