வேண்டும் நீ எந்தன் நிழலாய்
அத்தியாயம் – 4
“எஸ் மிஸ்.அரு..மை பிரதர் ரியோட்டோ இஸ் ஹர் ஹஸ்பண்ட் அண்ட் ஃபாதர் ஆஃப் ஹர் சைல்ட்.. இஃப் யூ ஹாவ் டவுட்ஸ் ஆஸ்க் ஹர்” என்று கூற அதுவரை அமைதியாய் தலையை குனிந்து அமர்ந்திருந்த தேஜு அவனது பேச்சில் உடல் அதிர எழுந்து நின்று..
“நோஓஓஓ..அது..அது என் குழந்தை..அவனுக்குலாம் என் குழந்தைகிட்ட எந்த உரிமையும் இல்ல..அவன் எனக்கு புருஷனும் இல்ல நான் அவனுக்கு பொண்டாட்டியும் இல்ல..என் மூஞ்சிலேயே முழிக்க வேணாம் சொல்லுங்க அவனை..அண்ணா அண்ணா அது என் குழந்தை அவனோட குழந்தை இல்லண்ணா” என்று அவள் உணர்ச்சி மிகுதியில் கத்த அவளையே வேதனையோடு பார்த்தான் ரியோட்டோ..
“எந்தா மோளே இது.. நீ இப்படி ரியாக்ட் பன்ற? உன் புருஷன் அவருதானா?” என்று கோவமாய் கேட்க
கையறு பட்ட நிலையில் ஆம் என்று தலையாட்டினாள் தேஜு..
(‘ஃபாரின் கண்ட்ரி கான்ட்ராக்ட் எடுத்தாச்சு நாம ஃபாரின் ஃபிகர சைட் அடிக்கலாம்னு நினைச்சா..நம்ம ஃபேமிலி பையித்தியங்க ரெண்டும் ஜப்பானுக்கு வாக்கப்பட்டு போச்சே..வாழ்க்கையில ஒரே ஒரு ஃபாரின் ஃபிகர கரெக்ட் பன்ன நினைச்சேன் அதுல அக்கா குப்பை லாரிய குப்புற கவுத்துட்டா..ஹம்ம்..நமக்கு லோக்கலே போதும் ஐ.எஸ்.டி ஆல்வேய்ஸ் எங்கேஜ்டு போல.. இப்படி வரவன்பூராம் எனக்கு ரிலேஷனா ஆகிட்டா நான் எப்புடிடா ரிலையன்ஸ் ஆக்குறது..இன்னைல இருந்து நான் தேவதாஸ் ஃபீமேல் வெர்ஷன்டா..எங்கடா அந்த டாக்)’ என்று மனதோடு புலம்பியபடி அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள் அருந்ததி..
அவள் ஆம் என்று தலையாட்ட நிதினோ அவளை பளாரென அறைந்தான்..
“அண்ணா” என்று அனைவரும் ஒருசேர அழைக்க தேஜுவோ அதிர்ச்சியில் கன்னத்தில் கைவைத்தபடி நிதினை பார்க்க ஆராஷிக்கும் ரியோட்டோவிற்குமே இது அதிர்ச்சி தான்..எழுந்து நின்ற ரியோட்டோ..
(“Mr.nithin.. warui no wa watashitachi futaridesuga, watashi wa anata no koto ga sukide wa srimad en”)”மிஸ்டர்.நிதின் தப்பு எங்கே ரெண்டு பேர் மேலேயு இருக்கி.. நீங்க என் வைஃப்ப அடிக்கிறது எனக்கு பிடிக்கலே” என்றான்..
அதை கேட்ட நிதின் “வாட்” என்று கேட்க அவன் தமிழில் பேச அதை கேட்டதும்
உடனே கோவமான தேஜு
“அவரு என்னோட அண்ணா அவரு என்னை கொலை கூட பண்ணுவாரு அதை கேட்க உனக்கு உரிமை இல்லை ப்ரண்ட்காக கல்யாணம் பண்ணவள தூக்கி எறிஞ்ச நீயெல்லாம் பேசவே தகுதி இல்லாதவன்..அண்ணனும் தம்பியும் ப்ளான் பண்ணிதான் எங்க வீட்டுக்கு வந்து இருக்கீங்களா? எதுக்கு திரும்ப வந்த உன்னால நான் பட்ட கஷ்டம்லாம் போதாதா? இன்னும் என்னையும் என் பொண்ணையும் கொல்லலாம்னு வந்து இருக்கியா? அதான் என்னை எப்பவும் அடிக்காத அண்ணனையே அடிக்க வெச்சுட்டியா?” என்று ஆவேசமாய் கேட்டாள் தேஜு..
“ஷட்அப் ஶ்ரீ” என்று ரியோட்டோவும்..
“என்ன பேச்சு பேசுற தேஜு? உங்களுக்குள்ள என்னதான் ஆச்சு அப்படி?” என்று நிதின் கேட்க கோவமாய் திரும்பியவள்..
“என்னை எதுவும் கேட்காதீங்க அண்ணா நான் போறேன் பேபி தனியா இருப்பாங்க..இந்த ஜென்மத்துல இவன் மூஞ்சில முழிக்கவே எனக்கு விருப்பம் இல்ல ஃபவுண்டர்கிட்ட சொல்லி தயவுசெய்து இந்த கொலாபுரேஷன கேன்சல் பண்ணுங்க” என்று விட்டு விறுவிறுவென வெளியே போய்விட்டாள்..
“ஐயம் எக்ஸ்ட்டீரீம்லி சாரி..நான் இங்க வந்ததுலே தான் எல்லா ப்ராப்ளம்ஸ்ஸும்..எனக்கு ஒரே ஒரு முறே என் டாட்டரை காட்டுங்க நான் பார்த்துட்டு போயிடுறே.. தேஜுவை டிஸ்டர்ப் பண்ண நான் விரும்பலே..அண்ட் என் தம்பிக்கு தேஜுவும் நானும் லவ் பண்ணி மேரேஜ் பண்ண விஷயமே இப்போதான் தெரியும் அவனை தப்பா நினைக்காதீங்க” என்று ரியோட்டோ வருந்த..
அவனை ஆறுதலாய் தோள் பற்றினான் ஆராஷி..
“நான் ஏதும் வேணாம் சொன்னேன்..என்னால அவ பீஸ்ஃபுல் லைஃப் போயிடும் சொன்னேன் நீதான் கேட்கலே ஆரா..வா போய்டலாம்..எனக்கி என் குழந்தையை பாக்கலேனா கூட பரவாலே வா போயிடலாம்” என்றான் வருத்தமாய்..
“எல்லாம் சரியாகிடும்னா..பொறுமையா ஹாண்டல் பண்ணுங்க..எனக்கு எல்லாம் சொல்லி கொடுத்த நீங்களே பொறுமையா இல்லனா எப்படி?” என்று ஆராஷி கூற அவ்வளவு நேரம் அவர்களது உரையாடலை பார்த்த நம் பட்டாளம் கொந்தளித்து விட்டது..
“என்ன நடக்குது இங்க? யாராவது சொல்றீங்களா? அவ பாட்டுக்கு அவ போறா? நீங்க பாட்டுக்கு நீங்க போலாம்னு சொல்றீங்க அப்போ நாங்கலாம் என்ன பையித்தியகாரங்களா?” என்று அரூ பேச..
“அதானே..மூனு வருஷமா அவ வாழ்க்கையில நடந்தத பத்தியும் அவளோட புருஷன பத்தியும் கேட்டு கேட்டு நாங்க நொந்து போய் இருக்கோம்.. ஒரு வார்த்தை சொல்லாம சாகடிக்கிறா..இதுல இப்போ நீங்கதான் ஹஸ்பண்ட் னு சொல்லி வந்து நிக்குறீங்க அவ கத்திட்டு போறா? என்ன ஆச்சு ஏதுனு சொல்லாம உங்க இஷ்டத்துக்கு முடிவு பன்ன இது என்ன கேம்மா?” என்று சாஹித்யன் கத்த..
“தேஜு லைஃப்ல என்ன ஆச்சு? உங்களுக்குள்ள எப்படி பழக்கம் கல்யாணம்லாம் ஆச்சு? ஏன் அவ உங்கள விட்டு பிரிஞ்சு வந்தா? நீங்களாவது சொல்லுங்களேன்?” என்றாள் ஷரத்தா..
“சாஹி தேஜுவ பாத்துக்க ஆள் அனுப்பு..சொல்லுங்க மிஸ்டர். ரியோட்டோ” என்றான் நிதின்.. எந்த சூழ்நிலையிலும் நிதாதனம் மாறாதவன் தங்கையின் வாழ்க்கையை பார்த்து நிதானம் இழக்க ஆரம்பித்து இருந்தான்..
அவ்வளவு கோவத்திலும் அவன் தங்கையை பார்த்துக்கொள்ள ஆள் அனுப்பியது மனநிறைவை கொடுத்தது இருவருக்கும்..
நிதினை பார்த்தவன் “இது தெரிஞ்ச அப்புறம் நீங்க என்மேலே கோவம் கூட படலாம்..ஆனா இந்த கான்ட்ராக்ட் மட்டும் க்ளோஸ் பண்ண கூடாது சார் ப்ளீஸ்..இந்த கான்ட்ராக்ட் ல தான் அவன் லைஃப் இருக்கு” என்று கேட்க
“எந்த சுச்சூவேஷன்லயும் இந்த கான்ட்ராக்ட் க்ளோஸ் பன்ற உரிமை எங்க யாருக்குமே இல்ல..எங்க வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணி கர்ப்பம் ஆக்கிட்டு காணாம போன உங்கமேல கொலைவெறியே வருது ஆனா அவ வாழ்க்கையில என்னதான் நடந்ததுனு தெரிஞ்சுக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கோம் சோ சொல்லுங்க..என்னதான் ஆச்சு அவளுக்கு?” என்று கேட்க..
“எனக்கு என்ன குழந்தை பொறந்து இருக்கு?” என்றான் ரியோட்டோ..
“என்ன சொல்றீங்க? உங்களுக்கு என்ன குழந்தைனே தெரியாதா?” என்றான் நிதின்..
“எனக்கு குழந்தை இருக்குனே தெரியாது..ராஷி உங்க வீட்டுல நடந்த பங்ஷன் பிக் காட்டினான் அதுல தான் தேஜுவையும் பேபியையும் பார்த்தேன்” என்றான் ரியோட்டோ..
“அப்படி என்னதான் பிரச்சினை உங்க ரெண்டு பேருக்கும்?” என்று நிதின் கேட்க
காதலை சொல்ல ஆரம்பித்தான் ரியோட்டோ..
ஐந்து வருடங்கள் முன்பு..
ஜப்பானின் தலைச்சிறந்த நகரங்களில் ஒன்றான kyoto மாநகரத்தின் கல்லூரி அது வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்து அங்கேயே தங்கி படிப்பவர்கள் பலர்.. அதில் சிலர் மட்டுமே ஜாப்பனீஸ் கற்று கொள்ள ஆர்வம் காட்டுவர்.. ஆனால் நிறைய ஜாப்பனீஸ் மக்கள் தமிழையும் அதன் கலாச்சாரத்தையும் ஆர்வமாய் கற்று கொள்ள ஆசைப்படுவர் அப்படி பட்ட ஒருவன்தான் ரியோட்டோ..
டோக்கியோவில் பிறந்து வளர்ந்தவன்..
தனது நண்பனையும் அவனே படிக்க வைக்கும் அளவுக்கு வசதி படைத்தவன் அதே நேரம் தமிழில் ஆர்வம் கொண்டு அதை கற்று தமிழர்களின் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கோட்பாடு வைத்து வாழ்பவன்.. அதனாலேயே அவனிடம் வழியும் எந்த பெண்ணையும் கண்டு கொள்ள மாட்டான்..
அவனது நண்பன் ரென்..சிறுவயது முதலே இருவரும் மிகச்சிறந்த நண்பர்கள்..ரென் ஏழையாக இருந்தாலும் அவன் ஆசைப்பட்டது கிடைக்கவேண்டும் என்று நினைப்பவன் அதனாலேயே ரியோட்டோவின் உண்மையான பாசமும் நட்பும் அவனுக்கு பணமாக மட்டுமே தெரியும்..
ஆனால் இந்த அவனது நிலைப்பாடு ரியோட்டோவிற்கு தெரியாமலே பழகி வந்தான்..
ரென் அதே ஊர் என்பதால் அவன் தினமும் வீட்டிற்கு சென்று வருவான் ஆனால் ரியோட்டோ அங்கிருந்து தூரம் என்பதால் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்தான்.. தன்னுடன் வீட்டை ஷேர் செய்ய ஆளை தேடிக்கொண்டு இருந்தான் அங்கு தங்கும் செலவு அதிகம் என்பதால்..
வருபவர்கள் எல்லாம் அவனது பணவளத்தை பார்த்தனரே தவிர அவனை மனிதனாக கூட யாரும் பார்க்கவில்லை.. அதனாலே நீண்டகாலம் தனியாகவே இருந்து வந்தான்..
முதல்நாள் கல்லூரி தொடக்கம் முதலே இருவரும் சேர்ந்தே சுத்த ஆரம்பித்தனர்.. ரியோட்டோவுடன் சேர்த்தே ரென்னும் தழிழ் கற்றான் ஓரளவுக்கு..
அதில் இரண்டாவது வருடம் அந்த கல்லூரியில் சேர்ந்தாள் தேஜுஶ்ரீ..தமிழ் பெண்ணான தேஜு அங்கு தங்க இடம் தேடி அலைந்தாள்..
அப்போது அவளது கிளாஸ் ப்ரொபசர் அவளது தந்தையின் நண்பர் அவர் மூலம்தான் ரியோட்டோ ரூம் ஷேர் செய்யாமல் இருப்பது கேள்விபட்டாள்..
அவனுக்கும் தமிழ் கற்றுக்கொண்டு இருப்பதால் அவளுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பினார் அதனாலேயே அவனிடம் பேச சொல்லி அவளிடம் அவனது அட்ரஸ் கொடுக்க அவளும் பார்க்க சென்றாள்..
NICE