Skip to content
Home » இதயனின் ஹிருதயம் அவள் -4

இதயனின் ஹிருதயம் அவள் -4

குணம் ஆர் .கே மருத்துவக் கல்லூரியில் ப்ரொபசர் ஆக பணி புரிய அதில் வரும் வருமானம் மற்றும் இருவரது பொற்றோரின் தோப்பு மற்றும் வயலில் இருந்து வரும் குத்தகை பணம் என அவர்கள் அன்றாட வாழ்க்கையில் பணம் பற்றிய எந்த விதமான பிரச்சனை இல்லாமல் சென்றது……

              குணம் மட்டும் வருடத்திற்கு ஒரு முறை அல்லது ஏதேனும் பிரச்சினை என்ற பச்சத்தில் கிராமத்திற்கு சென்று வருவார் சிறுவயதில் அவருடன் சென்று தனுவிற்கு அதன் பின் தன் படிப்பின் காரணமாக செல்ல முடியாமலே போய்விட்டது அதனால் குணம் மட்டுமே சென்று வருகிறார்.....

                 தனு தன்னுடைய படிப்பை முடித்து விட்டு இப்பொழுது கே .எஸ் மருத்துவமனையில் பார்மசியில் வேலை செய்கிறாள்.....

              சமையலை முடித்த வள்ளி அனைத்தையும் எடுத்து டைனிங் டேபிள் வைக்க அதைப் பார்த்த படி வந்த குணம் வள்ளி மா இந்த வேலையை எல்லாம் யார் உங்களை செய்ய சொன்னது சுமதி எங்க ......

           ஏன் யார் சொல்லி செய்யனும் அது நம்ம வீட்டு வேலையா இல்லையா  , அது இல்லாம சுமதி வர லேட் ஆகும் நேத்திக்கே சொல்லிட்டு தானா போனா ...

           சரிம்மா ஆனா ஏன் ஏதும் பிரச்சனையா அந்த பொண்ணுக்கு .....

             அதெல்லாம் ஒன்னும் இல்லயா  வேற வீட்டைல வேலை செய்றா இல்லை அங்கே ஏதோ விஷேசமா அதுனால லேட் ஆகும் சொன்னா....

              ஓகேம்மா அதுக்குன்னு சுமதி வர‌ லேட் ஆகும்ன்னு எல்லாம் வேலையும் இழுத்து போட்டுட்டு செஞ்சுட்டு இருக்காதீங்க சமையல் முடிச்சுட்டிங்க இல்ல மத்ததெல்லாம் சுமதி வந்து செஞ்சுக்கட்டும்.....

               ஆமா இது எல்லாம் ஒரு வேலை,  நீங்கள் தான் எந்த வேலையும் செய்ய விடாம சொல்ல சொல்ல கேட்காம அந்த பிள்ளை வேலைக்கு வச்சுட்டிங்களே அப்பாவும்,பிள்ளையும் .....

               அதுக்கு இத்தனை வயசு அப்புறமும் நீங்க தான் செய்யனும்மா இத்தனை வருஷம் நீங்க தான் செஞ்சிங்க ஆனா இப்போ அப்படி இல்லையே ........

            ஏன் இப்போ மட்டும் நான் எப்படி இருக்கேன் இப்போ விட்டா கூட ஏழு வீட்டு வேலையை ஒரே ஆளா செய்வேனாக்கும் ஆமா....

                செய்வீங்க செய்வீங்க ஏன் செய்ய மாட்டிங்க  இப்போ தானா உங்களுக்கு இளமை ஊஞ்சல் ஆடுது அப்போ அப்படி தான் இருப்பீங்க.....

                   ஆமா பின்ன இப்போ எனக்கு என்ன வயசு ஆகுதுன்னு ரெஸ்ட் எடுக்க சொல்ற அதுவுமில்லாம எனக்கு ஒன்னும் அவ்வளவு வயசு ஆகல ம்ம்ம் கழுத்தை திருப்பி கொள்ள.....

                       நினைப்புதான் கிழவி உட்கார்ந்தா எழுப்பி விட இரண்டு பேரும் வேணும் இவங்க எழு வீட்டு வேலை செய்வாங்கலாம் இல்ல படியில் இறங்கி வந்த தன்யா அவர்களின் உரையாடல் கேட்டு பதில் தர அவள் கேட்டு குரல்  திரும்பியவர்கள் அவளைப் பார்த்து இனிமையான அதிர்ந்தனர்.....

                    எப்பொழுதும் ஸ்கர்ட் , சுடிதார் அல்லது ஜீன்ஸ் டி சர்ட் அணிந்து சின்ன பொண்ணாக நினைத்து இருந்தவர்களுக்கு இன்று புடவையில் பார்த்த பின் தான் அவள் வளர்ந்து விட்டதே தெரிந்தது.....

                      அய்யோ என்ற தங்கம் எவ்வளவு அழகாக இருக்கு இந்த புடவைல , அப்படி கல்யாண பொண்ணு மாதிரி இருக்க என்ற வள்ளி அவள் கண்ணம் வழிந்து நெட்டி முறிக்க ......

                      என்னடா அம்மு புடவை எல்லாம் கட்டி இருக்க...

                  அந்த எருமை அனிதா நாளா குணம் எல்லாம்....

                   அடிக் கழுதை அப்பாவ பேரு சொல்லி கூப்பிடுற ......

                     கூப்பிட தானா பேரு வைக்கறாங்க வள்ளியம்மை.....

               வாய்...வாய்...வாய்...இந்த வாய் இல்லைன்னா உன்ன நாய் தூக்கீட்டு போய்டும் டி .....

                அதுக்கூட நம்ம வேல்யூ தெரியுது பாரு வள்ளி.....

                ஆமா ஆமா ஆனா தூக்கீட்டு போனா அது கூட அந்த முக்குலையே விட்டுட்டு தலை தெறிக்க ஓடிடும் என வள்ளியின் கூற்றில் குணம் வாய் விட்டு சிரிக்க....

                  வள்ளி என பல்லைக் கடித்தவள் ப்பா என சிணுங்கியவாறு அமர .....

                    சரிடா சரிடா அப்பா சிரிக்கலா வாயில் கை வைத்து அமைதியாக அமர...

                     அவரை செல்லமாக முறைத்தவள் போ பா என்று கையைத் தட்டிவிட .....

                     இருவருக்கும் தட்டில் இட்லி  சாம்பார் , சட்னி வைத்து பரிமாறினார் வள்ளி......

              சரி டா சொல்லு என்ன விஷயம் சாப்பிட்டு கொண்டே கேட்க....

                 ஒன்னும் இல்ல பா அனிதாக்கு ஏதோ பரிகாரம்ன்னு விஜி மா அவளைக் கோவிலுக்கு கூட்டிட்டு போறாங்க அதான் அந்த பன்னி சேரி கட்டிட்டு அப்படியே வரலாமா அதான் என்னையும் கம்பேனிக்கு கட்டிட்ட வர சொல்லுச்சு எருமை .....

                    ஓ...ஓகே ஓகே ஆனா ரொம்ப நல்ல இருக்கு , அப்படியே தாமரை பாக்குற மாதிரி இருக்க என்ன மா என வள்ளியைப் பார்த்து கேட்க...

                     ஆமா யா அப்படி தான் இருக்கா நாம தான் சின்ன புள்ளைன்னு நினைச்சுட்டு இருக்கோம் ஆனா பாரு எவ்வளவு வளந்துட்டான்னு இந்த வருஷத்துக்குள்ள மாப்பிள்ளை பாக்கனும் போலையே யா ......

                    எது கிழவி நான் உன்ன கொன்னுருவேன் காலைலேயே கடுப்பேத்தாத சொல்லிட்டேன் கல்யாணம் அது இதுன்னு .......

                    ஏன் அப்படி தான் சொல்லுவேன்...

                      வேணாம் நா....

                       போதும் காலைல இது எதுக்கு இப்படி சண்டை இதெல்லாம் சாயங்காலம் பேசிக்கலாம் போங்க என இருவர் சண்டைக்கு முற்றுப் புள்ளி வைத்தவர் சாப்பிட்டு கையை கழுவி விட்டு தனுவிடம் வந்து அவளை பக்கவாட்டில் அணைத்தவர் சரிடா அம்மு அப்பாக்கு லேட் ஆச்சு நான் கிளம்புறேன் நீங்க பாத்து பத்திரமா போங்க அப்பா போய்ட்டு வரேன் டா அம்மு என நெற்றியில் முத்தமிட்டவர் வள்ளியை பாத்து போயிட்டு வரேன் மா என்றவர் செல்ல.....

                சரியா பாத்து போங்க என்றவர் தனுவை பார்க்க அவளோ சாப்பிட்டு முடித்து தன் தட்டோடு குணம் தட்டையும் சமையல் சிங்கிள் கழுவி வைத்து விட்டு வர அவளை வள்ளி முறைத்து பார்த்தார்......


                     என்ன வள்ளி எதுக்கு இவ்வளவு பாசமா பாக்குற..........

                    தட்ட வச்சுட்டு போன்னு சொல்றேன் தானா கேட்க மாட்ற.....

                       நோ பாட்டி எச்சில் தட்டை எதுக்கு நீ எடுக்குற அதெல்லாம் பண்ண கூடாது என கையையும் , வாயையும் அவர் முந்தானையில் துடைத்து நான் போய்ட்டு வரேன் வள்ளி நீ மறக்காம சீக்கிரம் சாப்பிட்டு மாத்திரை போடு டாடா என ஸ்கூட்டி ஏறி பறந்து விட்டாள்.....

                     அவளை முறைத்தவருக்கு பொருமையாய் இருந்தது அவளை நினைத்து நன்றாக நினைவு தெரிந்த நாள் முதல் அவள் வேலையை அவளே செய்ய ஆரம்பித்தாள் ஏன் வள்ளி , குணம் இருவர் பேச்சையும் இந்த விஷயத்தில் கேட்க மாட்டாள் ........

                      அதும் போல் தான் சமையலும் செய்ய கத்துக் கொண்டது பத்தாவது படுக்கும் போது ஒரு நாள் வள்ளி உடல்நிலை சரியில்லாது போக ஊசி மாத்திரை போட்டவருக்கு வெளி உணவும் ஒத்துக்கொள்ளாமல் போக எப்படியோ முட்டி மோதி அன்று அவரை சாப்பிட வைத்தவள் அவர் சரியான மீண்டும் அவரே வேலைச் செய்ய அதைப் பார்த்தவள் அமைதியாக இருந்தது விட்டு பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்த அடுத்த நாளே சமையல் கத்துத்தர சொல்லி நின்றாள்.....

                   வேண்டாம் என்று மறுத்த வள்ளி இன்னும் சற்று பெரிய பெண் ஆனதும் இந்துக் கொள்ளலாம் என்று என்ன எதையும் கேட்காமல் கத்துக் கொண்டாள் இதி குணமும் ஞாயிறு கிழமை சேர்ந்து கொள்ள அந்த நாளே அவ்வளவு கலகலப்பாக செல்லும்...... 

                  அப்பொழுது சிறிது சிறிதாக அவருக்கு ஓய்வு கொடுத்தவள் பனிரெண்டாம் மற்றும் காலேஜ் நாட்களில் அவளால் வேலை செய்ய முடியாமல் போக அதன்பின் தன் தந்தையிடம் சொல்லி வேலைக்கு ஆள் வைத்து விட்டாள் அதை நினைத்தவர் அப்படி உள்ளே செல்ல சிறிது நேரத்தில் சுமதி வர அவளிடம் பேசிக் கொண்டும் , டிவி பார்த்துக் கொண்டே அந்த நாளைக் கடத்தினார்.....

2 thoughts on “இதயனின் ஹிருதயம் அவள் -4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *