ஆதவியும் அவள் விரும்பாத அவனும் ஒரே கேஸ் பைலை தேர்வு செய்து இருக்க அது ஆதவிக்கு எரிச்சலை மூட்டியது. இரண்டு நாட்களில் என்னென்னவோ நடந்திருக்க எதையும் நிதானமாக யோசிக்கும் நிலையில் அவள் இருக்கவில்லை. ஒரு முடிவு பார்த்திட வேண்டியதுதான் என்று என நினைத்தவள் அந்த மீட்டிங் முடிந்ததும் நேராக எம்டி அறைக்கு சென்றாள். அங்கே தீபக்கும் அவனுடன் அவள் விரும்பாத அவனும் அமர்ந்திருக்க அவனை கண்டுகொள்ளாது தீபக்கிடம் பேச ஆரம்பித்தாள். “குட் மார்னிங் சார்.. ஐ அம் ஆதவி ஃபிரம் தமிழ்நாடு. கடந்த ரெண்டு வருஷமா சென்னையில xxx நியூஸ் சேனல் ரிப்போர்ட்டரா ஒர்க் பண்ணிட்டு இருந்தேன் நௌ ஐ அம் ஜாய்னிங் கியர் ” அவள் தன்னை புதிதாக அறிமுகப்படுத்திக் கொள்வதை வித்தியாசமாக பார்த்த அந்த புதியவன் அவளைப் போலவே பேச ஆரம்பித்தான். இந்த அமைதியும் நிதானமும் அவர்கள் எதிர்பாராதது.அவள் எதிர்த்து சண்டையிடுவாள் என எதிர்பார்த்திருக்க அவளோ அறிமுகப்படுத்தி கொண்டிருக்கிறாள்.”சவுண்ட்ஸ் குட். ஆதவி ஒரு விஷயம் புரிஞ்சுக்கோங்க.. இதுவரைக்கும் எந்த ஸ்டாப்பும் இந்த மாதிரி என்னோட ரூமுக்கு வந்து தன்னைத்தானே இன்ட்ரொடியூஸ் பண்ணிக்கிட்டு இருந்தது கிடையாது. உங்களைப்பத்தி எல்லாம் தெரிஞ்ச அப்புறம் தான் வேலைக்கு எடுத்திருக்கிறோம். சோ எதுக்கு இங்க வந்திருக்கீங்க அப்படிங்கறத ட்ரைக்டா சொல்லலாம்” என்றிட அவன் கூறியதை கேட்ட ஆதவிக்கும் முகம் கன்றிப்போனது. தான் கோபமாக பேசினாலும் தீபக் அமைதியாக பேசுவான் என எதிர்பார்த்தவளை தீபக் அல்லாது புதியவன் பேசவும் ஏமாற்றம் கொண்டாள் பாவையவள். “ஓஓஓ சாரி சார்.. என்றவள் முகம் பெரும் அதிரூப்தியை கிட்ட திரும்பி செல்லலாம் என நினைத்து அறைவாசல் வரைக்கும் சென்றவள் அதான் அவமானப்பட்டபின் வந்ததை கேட்டுட்டு போனால் தான் என்ன? என அவள் மனம் எடுத்துக் கூற மீண்டும் திரும்பி வந்து தீபக்கிடம் பார்வையை செலுத்தி விரலை அங்கு அமர்ந்திருந்தவனை காட்டி “இவர் கூட என்னால கேஸ் பார்த்துக்க முடியாது “என கூறினாள். ” ஹாஹா.. தீபு இதென்னடா காமெடி இவ கூடலாம் நான் தான் வொர்க் பண்ண முடியாது.. நானே சும்மா தான் இருக்கேன்… இவளுக்கு என்ன வந்துச்சாம்” எனக்கத்தினான் உத்தவ்(புதியவன்) “ஹலோ மிஸ்டர்.. மைன்ட் யுவர் டங்க்” என்றிட “இல்லனா என்னடி பண்ணுவ” என அவனும் சண்டைக்கு நின்றான். அவனை அதட்டியவன் ” லிசன் ஆதரி உங்களால அவர் கூட ஒர்க் பண்ண முடியாதுன்னா நீங்க வேற குரூப்க்கு மாறிக்கோங்க நீங்க இப்போ இருக்கிற டீம்க்கு வேற ஒருத்தங்க போட்டுக்குறேன்” என்று கூறினான் தீபக். இருவரின் முகமும் அதிருப்தியை காட்ட உத்தவோ துரோகி என தீபக்கை பார்த்து முணுமுணுத்தான். ஆதவி முகமோ மீண்டும் ஏமாற்றத்தில் சுருங்கியது . அவளது முகத்தை பார்த்து தீபக்கினுள் ஒரு முறுவல் எழும்பிட அதை தன் உள்ளே அடக்கியவன் “ஆதவி இன்னைக்கு ஈவினிங் 4 வரைக்கும் உங்களுக்கு டைம் தரேன் அதுக்குள்ள யோசிச்சு அவங்க டீம்ல இருக்கீங்களா இல்லையானு முடிவு பண்ணி சொல்லுங்க” என்று கூறிட ஆதவியோ ” சரி எனக்கு அந்த கேஸ் வேணும் ஆனா அந்த கேஸ்ல இவன் இருக்க கூடாது” என்று கூறிட உத்தவோ ” ஹலோ மரியாதை.. மரியாதை” எனக்கககத்தினான்மீண்டும் அவனை அடக்கியவன் அதவியிடம் “அப்படி உங்க விருப்பத்துக்கு எல்லாம் இங்க எந்த முடிவு மாத்திட்டு இருக்க முடியாது அதுவே விருப்பம் இருந்தா இந்த டீம்ல இருங்க விருப்பம் இல்லனா வேற டீம்க்கு நீங்க மாறிக்கோங்க உங்களுக்காக யாரையும் நாங்க மாத்த மாட்டோம்” என்று கூற வந்ததுல இருந்து தான் பேசிய ஒவ்வொன்றிற்கும் அவன் திருப்பி பேச அது ஆதவிக்கு பெருத்த அவமானமாக அமைந்தது. வரூந்திய முகத்துடன் வெளியே வந்தவள் எண்ணங்கள் கடந்த காலத்து நிகழ்வுகளை நினைத்துப் பார்க்க கண்களிலோ கண்ணீர் வழிந்தது. எதுவும் செய்ய இயலா நிலையில் தான் இருப்பதை நினைத்து தன்னைத் தானே நொந்து கொண்டாள் ஆதவி. கூடவே இனி எந்தக் காரணம் கொண்டும் தீபக்கிடம் சென்று நிற்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். &&&&&&&&& ஆதவி அறையை விட்டு வெளியே சென்றதும் தீபக் உடன் இருந்தவனிடம் “எதுக்கு இப்படி பண்ற அவ முகமே மாறிப் போயிருச்சு” என்று கூறிட “அவளுக்கு மட்டும் தான் கோபம் வருத்தம் எல்லாம் இருக்கா நம்ம யாருக்கும் இல்லையா? அவளுக்கு கோபிகா மட்டும் தான் ஃபிரண்டா இருந்தாளா என்ன? நம்ம எல்லாருக்கும் கோபி தங்கச்சி மாதிரி தான இருந்தா சோ அவ கஷ்டப்பட்டது நமக்கு தானே வலிக்குது.. ஏதோ நம்ம எல்லாரும் தப்பு பண்ண மாதிரி ஒதுக்குறா.. அவளுக்கு இதுவும் வேணும். தான் தான் அப்படிங்கிற அகங்காரம் இந்த ரெண்டு வருஷத்துல ரொம்பவே வளர்ந்து இருக்கு.. நம்ம பார்த்து நம்ம கிட்ட பழகுன ஆதவி இவ கிடையாது..இவ வேற எதோ ராட்சசி” என உத்தவ் ஆத்திரம் ஒரு பக்கம் மன வருத்தம் ஒருபக்கமாக தீபக்கிடம் கூறிக் கொண்டிருந்தான். அதைக் கேட்டுக் கொண்டிருந்த தீபக்கிற்கு தன் முன்னே புன்னகை முகத்தோடு களம் கபடம் இல்லாத கலகலப்போடு அனைவரையும் சிரிக்க வைக்கும் உரையாடல்களோடு சுற்றி உலா வந்திருந்த ஆதவியே தெரிந்தாள். அவனுடன் உத்தவும்அதையே நினைத்துக் கொண்டிருக்க அவன் முகத்தில் அவனையும் மீறிய ஒரு சிறு வந்ததும் அவளை நினைத்தாலே அவன் உள்ளம் உவகை கொள்ளும்.. அத்தனை பேரின்பத்தைக் காட்டி அவனை குளிர்வித்து இருந்தவள் அவள்.. அவன் காதலி ஆதவி.அவளின் நினைவிலே அவன் மூழ்க தீபக் அவனை அழைத்துப்பார்த்து எந்த பதிலும் வராமல் போக மீண்டும் அவனை பெயர் சொல்லி அழைத்துப் பார்த்த தீபக் அவன் நிஜ உலகிற்கு வராமல் இருக்க தன் கையில் இருந்த பேனாவை எடுத்து அவனை நோக்கி எறிந்தான். “ஏண்டா ?” என்று அப்பாவியாக அவன் கேட்க “என்ன அவ கூட ரொமான்ஸ் பண்ண போயிட்டியா சிங்கிள் சாபம் சும்மா விடாதுடா உங்களை” என்று மிதுன் கூற “அட போடா நீ வேற நானே சிங்கிளா தான் வந்து போய் இருக்கேன் இவ எப்போ சரியாகி இவ மனசுல இருக்க குழப்பலாம் தீர்ந்து அவ கேள்விகளுக்கு விடை கிடைச்சு அதுக்கு அப்புறம் இவ கூட காதல் பண்ணலாம் பார்த்தா அப்பவும் உங்கள மாதிரி ஏதாவது சில்வண்டு வந்து சில்லறை கேட்டு நிப்பீங்கடா எனக்கு தெரியும்… கடைசி வரைக்கும் நான் லவ் பண்றதுக்கு எதிரிகளே நீங்க தாண்டா என்று கூறிட அவனைப் பார்த்து நக்கலாய் சிரித்து வைத்தனர் தீபக்கும் மிதுனும். இவளோட குழப்பங்கள் எல்லாம் தீர்ந்து எப்போ எல்லாரும் பழைய மாதிரி பேசி சிரிக்க போறோம்னு தெரியல என தீபக் கூறிட உத்தவ் உள்ளம் அவன் காதலை நினைத்து ஏங்க ஆரம்பித்தது.
nice