Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 34

மீண்டும் மலரும் உறவுகள் 34

தியா போன் போட்டவுடன் தனது மாமாவை பாவமாக பார்த்துவிட்டு போனை அட்டென்ட் செய்ய.

சொல்லுங்க அண்ணா என்று கேட்டாள்.

தூங்கவில்லையா என்று கேட்க .

“தூங்கிட்டு இருந்தா எப்படி நான் போன் பண்ணுவேன்” .

இல்ல இந்த நேரத்துல என்று இழுத்தான்.

“எந்த நேரமாக இருந்தால் என்ன ?”என்று விட்டு அண்ணா உங்க வீட்ல என்ன சொன்னாங்க .

நான் அம்மாவிடம் பேசி விட்டேன் .அம்மா ஒத்துக் கொண்டார்கள் .

மாமாவிடம் பேசி விட்டார். அவர் என்ன அண்ணா சொன்னாரு என்று கேட்டாள் .

தன் மாமாவையே பார்த்துவிட்டு “எவரு தியா” என்று கேட்டான் .

அண்ணா விளையாடாதீங்க .சார் என்ன சொன்னாரு என்று கேட்க .

அம்மாவுக்காக ஒத்துக்கிட்டாரு. நம்ம ஏற்கனவே சொன்னதுதானே.

மனசு வந்து ஒத்துக்குவாங்கனு எல்லாம் இங்க நம்ம நினைக்க கூடாது என்று சொல்ல .

சரி என்று ஒரு சில நொடி அமைதியாக இருந்தாள் .

தியா உங்க வீட்ல பேசினியா என்று உதயா கேட்க.

ஹம் என்று மெதுவாக சத்தம் வந்தது .

“தியா உன் கிட்ட தான் கேட்கிறேன் என்ன சொன்னாங்க . ஒத்துக்கலையா ?”என்ற உடன் .

“வேகமாக எழுந்து வந்த நந்தா  உதயாவின் போனை ஸ்பீக்கரில் போட” .

தனது மாமாவை முறைத்துக் கொண்டு பார்த்தான்.

இல்ல அண்ணா ஒத்துக்கிட்டாங்க அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல .

முதலில் ஒத்துக்கொள்ள வில்லை தான் .அதுக்கப்புறம் பேசி சம்மதிக்க வச்சிட்டேன் .

எப்படிமா என்று கேட்க .

அண்ணா டைம் ஆகுது. அது இல்லாமல் இது போன்ல பேசுற விஷயமும் கிடையாது.

நேர்ல பேசலாம் நேர்ல பார்க்கும்போது சொல்றேன்  என்று விட்டு வைத்து விட .

“கேடி இவ்ளோ நேரம் பேசும் போது போன்ல பேசுறோம் டைம் ஆகுதுனு தெரியலையோ” என்றான்.

சரி விடு மாமா அவங்க வீட்ல ஒத்துக்கிட்டாங்களாம்  அதுவே போதும் என்றவுடன்.

தனது மச்சானை முறைத்தவன் .”ஒத்துக்கல ஒத்துக்க வச்சிருக்கீங்க. பிளாக்மெயில் பண்ணிக்கிட்டு இருக்கீங்க”.

இது எங்க போய் முடியும்னு தெரியாது என்று தனது மச்சானின் கையில் போனை திணித்துவிட்டு அவனையும் முறைத்து விட்டு நந்தா சென்று படுத்துக்கொண்டான் .

உதயாவும் அனைத்தும் நன்றாக முடிந்தாலே போதும் என்று எண்ணிவிட்டு அமைதியாக படித்து விட்டான் .

மறுநாள் நந்தா தனது அக்காவிடம் அமைதியாக பேச செல்ல.

தேவியும் கல்யாணத்தைப் பற்றி மேற்கொண்டு வேறு எதுவும் பேசி சண்டை வளர்க்காமல் அமைதியாக அவருடைய வேலைகளை பார்த்தார் .

இங்கு தியா சமையல் அறையில் வந்து சாப்பாடு கேட்க .

அவளை முறைத்து விட்டு அவளது கையில் டிபன் பாக்ஸ் மலர் கொடுத்தார்.

ஹாலில் இருக்கும் தனது தந்தையை அமைதியாக பார்த்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பி விட .

“நீ நெனச்சத நடத்தி காமிக்கணும்னு நினைக்கிற இல்ல” என்று கண்ணன் கேட்க .

அதுல ஒன்னும் தப்பில்லையே .”எனக்கு தேவையானதை நான் தானே கேட்க முடியும்” .

அடுத்தவங்களா வந்து கேப்பாங்க. நல்ல விஷயத்தை கேட்கிறேன் .அதுல ஒன்னும் தப்பு இல்ல .

எனக்கு இது நல்லதா பட்டது நான் கேட்கிறேன் .

எனக்கு தேவை நான் கேட்க செய்கிறேன் என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் தனது அம்மா ,அப்பா இருவரையும் அமைதியாக பார்த்துவிட்டு காலேஜுக்கு கிளம்பி விட்டாள்.

போகும் தியாவை பெற்றவர்கள் இருவரும் அமைதியாக பார்த்தார்கள் .

இவள் ஏன் இப்படி தங்களை சோதிக்கிறாள் என்று தான் இருவருக்கும் எண்ண தோன்றியது .

தங்கள் மேல் கோபமோ ?வெறுப்போ இருந்தால் தங்களிடம் காட்ட வேண்டியது தானே” என்று  எண்ணினார்கள் .

கண்ணனும் வேலைக்கு நேரமாகுவதால் கிளம்பி விட்டார் .

காலேஜ் முடிந்து தியா மாலைப் பொழுது பஸ் வரும் டைமுக்கு இன்னும் நேரம் இருப்பதால் காலேஜில் ஒரு இடத்தில் உட்கார்ந்து இருக்க.

நந்தா அவளின் அருகில் போய் நின்றான். அவனை பார்த்தும் பார்க்காதது போல் கீழே குனிந்து கொண்டு மண்ணில் விளையாண்டு கொண்டிருக்க.

இன்னும் எவ்வளவு நேரம் பார்த்தும் பாக்காத மாதிரியே உட்கார்ந்து இருக்கலாம் என்ற முடிவு என்று நந்தா கேட்க.

அதன் பிறகு இப்போது தான் பார்ப்பது போல் நந்தாவை  பார்த்த தியா  வாங்க சார் .

சொல்லுங்க சார். நான் பாக்கல என்று சொல்ல.

“ரொம்ப தான் நடிப்பு” என்று வாயைக் கோனித்து காண்பித்தான்.

லேசான முருவலுடன்  அவனை பார்த்தவள். “உங்ககிட்ட நடிச்சு நான் என்ன சார் பண்ண போறேன் “என்றாள் .

நான்  வந்ததை நீ பார்க்கல என்றான்.

“சரி அத விடு  உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க ?”

*உங்களை  தான் .அதான் ஏற்கனவே சொல்லிட்டனே” என்று சொல்லி சிரிக்க.

அவளை அடிக்க கை ஓங்கி கொண்டு வந்தவன் கீழே போட்டு விட்டான் .

காலேஜில் இருக்கிறோம் என்பதை நினைவில் வைத்து.

தியா சுற்றி பார்த்து பார்த்துவிட்டு சிரித்துக் கொண்டே .ஏன் சார் உரிமையாக அடிக்க வந்து விட்டு கையை கீழே இறக்கி விட்டீர்கள் என்று கேட்க .

“எது உரிமையாக வா ?”என்று விட்டு நாக்கை மடித்து கோபம் கொண்டவன் .

நான் அன்னைக்கே சொன்னேன் .திரும்பவும் எதுக்காக இப்ப இந்த வேலை பார்த்துட்டு இருக்க.

அதுவும் இந்த சூழ்நிலையில் என்ன நெனச்சிட்டு இருக்க உன் மனசுல .

“உங்கள தான் திரும்பத் திரும்ப நான் சொல்லணும்னு ஆசைப்படுறீங்களா ?”

விளையாடாத ஏற்கனவே சொல்லியிருந்தேன்.

உனக்கும் எனக்கும் ரொம்ப வயசு வித்தியாசம் இருக்குனு.

இதே டயலாக் இன்னும் எத்தனை நாளைக்கு சொல்லிட்டு இருப்பீங்க .

இன்னைக்கு இல்ல நாளும்  என்னைக்காவது  ஒரு நாள்.

போதும் நிறுத்துறீங்களா? நான் உறுதியா இருக்கேன் . என்னோட முடிவுல.

உங்களால முடிச்சா இந்த கல்யாணத்தை நிறுத்திக்கோங்க.

நான் வேணான்னு சொல்லல .எங்க வீட்ல பேச வேண்டியது என்னோட கடமை .

எங்க வீட்ல பேசி சம்மதிக்க வச்சிட்டேன் .இதுக்கப்புறம் உங்களுக்கு வேணும்னா நீங்க நிறுத்திக்கோங்க .

என்கிட்ட வந்து பேசுற வேலை வேணாம் என்று பேக்கை மாற்றிக்கொள்ள .

“திமிரு. எங்க வீட்ல பேச முடியாது என்ற திமிர்ல தானே பேசுற “.

அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது என்று விட்டு இரண்டு அடி எடுத்து வைத்தவள்.

நின்று அவனை திரும்பி பார்த்துவிட்டு என்ன ஏத்துக்க பழகிக்குங்க அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்.

“லைஃப் லாங் போராடிட்டு இருப்பேன் நினைக்காதீங்க” என்று விட்டு ஒரு சில நொடி அவனது கண்ணை உற்றுப் பார்த்தாள் .

அவன் தன்னை பார்க்கிறான் என்று உறுதி செய்து கொண்டு கண்ணடித்துவிட்டு வேகமாக சென்று விட்டாள்.

அவளை இரண்டடி எடுத்து வைத்து துரத்த வந்தவன் நாக்கை மடித்து ஏய் என்று விரல் நீட்டி எச்சரித்தான்.

பறக்கும் முத்தம் ஒன்றை கொடுத்துவிட்டு வேகமாக ஓடிவிட்டாள் .

போகும் தியாவை பார்த்த நந்தாவிற்கு உடல் கொதிக்க தான் செய்தது .

சின்னப்புள்ளனு நினைச்சா என்னென்ன வேலை எல்லாம் செய்து என்று எண்ணி  கொண்டான்.

இவன் தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு செல்ல .

அவள் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தாள் .சுற்றி முற்றி தனது மச்சான் எங்காவது நிக்கிறானா ?என்று பார்த்துவிட்டு தனது வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

அவன் கிளம்பிய அடுத்த நொடி பஸ் ஸ்டாண்ட் பேக் சைடுல இருந்து உதயா தனது பேகை மாற்றிக் கொண்டு தியாவின் அருகில் வந்தான் .

அண்ணா நீங்களா? உங்கள தான் தேடினாரா சார்.

என்கிட்ட கேட்க எனக்கு என்ன  தெரியும் .

சரி தியா உங்க வீட்ல   என்ன சொன்னாங்க .

இவ்ளோ அவசரமா என்று கேட்க .
ஆமாம் பின்ன இல்லையா.

நான் நேத்தே கேட்டதுக்கு  நேர்ல தான் நிறைய விஷயம் சொல்ல முடியும்னு சொன்ன.அதான் என்றான்.

சரி அண்ணா என்று விட்டு நேரத்தை பார்த்தவள் .போனை எடுத்து தனது அம்மாவிற்கு ஃபோன் செய்து தான் பஸ் விட்டு விட்டதாகவும் .

பஸ் சீக்கிரமாக வந்துவிட்டதால் பஸ் விட்டு விட்டேன் .

ஆகையால் ,அடுத்த பஸ்ஸுக்கு வருகிறேன் .அதற்கு இன்னும் 1 மணி நேரம் இருக்கிறது என்று தன் தாய்க்கு போன் செய்து சொல்லிவிட்டு .

உதயாவுடன் காலேஜ் அருகில் உள்ள பார்க்கிற்கு நடந்து சென்றாள்.

எங்க அண்ணா உங்க பைக் என்று கேட்க.

என் பிரண்டு கிட்ட இருக்கு என் பிரண்டு உங்க ஸ்டாப்பிங் கிட்ட எடுத்துட்டு வர சொல்லி இருக்கேன் என்றான் .

சரி என்று விட்டு சொல்லு தியா என்றான்.

அவனை பார்த்து சிரித்து விட்டு அம்மாவுக்கு ஏற்கனவே என் மேல லைட்டா டவுட்டு இருந்துச்சு.

நான் யாரையோ விரும்புறேன் என்ற மாதிரி .

அது சரி.

நான் நேத்து நந்தா சாரை தான் விரும்புகிறேன் என்று சொல்லிட்டேன் என்றவுடன் .

உங்கள் வீட்டில் என்று விட்டு உதயா அமைதியாகி விட .

உதயாவை பார்த்து சிரித்து விட்டு உடனே எப்படி ண்ணா ஒத்துப்பாங்க .

நார்மலா இருந்தாலே ஒத்துக்கிறது கஷ்டம் தான். இந்த சிட்டுவேஷனுக்கு உடனே ஒத்துப்பாங்களா?

“அப்பா தான் ஃபர்ஸ்ட் குதிச்சாரு? “என்ன நெனச்சிட்டு இருக்க உன்னை படிக்க காலேஜ் அனுப்பினா காதல் கன்றாவினு வந்து நிக்கிறியான்னு கேட்டாரு .

அவரை ஒரு முறை திரும்பி பார்த்தேன் .நான் பண்ணதும் நீ பண்றதும் ஒன்னுண்ணு சொல்லிட்டு இருக்காத தியா .

நான் பண்ணது சரியா? தப்பா இங்க வாதாட விரும்பல .

ஆனா எனக்கு என் பொண்ணோட வாழ்க்கை முக்கியம். அப்படின்னு சொன்னாரு.

அதே மாதிரி தான் எனக்கு என் வாழ்க்கை முக்கியம் போன திரும்ப கிடைக்காது .

“உங்களுக்கு எப்படி உங்க வாழ்க்கை முக்கியம்னு நீங்க உங்க காதலுக்காக உங்க குடும்பத்தை தூக்கி எறிஞ்சிங்களோ” அந்த நிலைமையை எனக்கு கொண்டு வந்து விட மாட்டீங்கன்னு நினைக்கிறேன் .

எனக்கு என் காதல் வேணாம்னு  தூக்கி எறிய முடியாது.

அதும் இந்த ஒரு விஷயத்துக்காக நான் தூக்கி எறிய முடியாது.

தியாவை அடிபட்ட பார்வை பார்த்த கண்ணன்.

இப்போ நீ என்ன தான் சொல்ல வர என்று கேட்க.

“உறுதியா ஒரே வார்த்தை தான் சொல்றேன். எனக்கு அவரை கல்யாணம் பண்ணி வச்சிடுங்க” .

அது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம்.

“இவ்வளவு வாதாடுறையே நந்தா உன்னை  விரும்புகிறானா “என்று கேட்க .

தன் தந்தையின் கண்ணை உற்று நோக்கியவள் .

இல்ல. ஆனா ,என்னை பிடிக்கும். இந்த பிடிக்கும் அப்படி என்றதுக்கு அர்த்தம் எனக்கு சொல்ல தெரியல.

ஆனா, எனக்கு அவர்தான் வேணும் .இதுக்கு நந்தா ஒத்துக்க மாட்டான்.

அதை நீங்க எப்படி சொல்றீங்க என்றவுடன் .தனக்குள் ஏற்பட்ட தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு கண்ணன் எனக்கு தெரியும். அவன் ஒத்துக்க மாட்டான் .

அவர் ஒத்துக்கொள்ள வில்லை என்றாலும் ஒத்துக்க வைக்க வேண்டியது அவங்க அக்காவோட பொறுப்பு.

அத பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம் .ரெண்டு பேருமே ஒத்துக்க மாட்டாங்க என்று வாய் எடுத்தவர்.

ஒரு சில நொடி தனது மகளை பார்த்துவிட்டு ஒருவேளை என்று எண்ணியவர் .

அவங்க அக்கா ஒத்துக்கிட்டாலும் ,நந்தா ஒத்துக்க மாட்டான் என்றார்.

எனக்கு அது தேவையே இல்லாதது .ஒத்துக்கிட்டா என்ன பண்ணுவீங்க .

என்ன கட்டிக் கொடுத்திடனும் .அவ்வளவுதான். கட்டிக் கொடுக்க மாட்டேன் அப்படின்னு எல்லாம் இங்க பேச்சு  வரவே கூடாது .

“தியா நீ என்ன பண்ணிட்டு இருக்க உனக்கு புரியுதா?”

“நீங்க பண்ண துரோகத்துக்கு பிராச்சித்தம் பண்ண வேண்டாம்” .

“தண்டனை அனுபவிக்க வேணாம் “என்று விட்டு தனது ரூம் பக்கம் சென்றாள்.

மலர் தன் கையில் இருக்கும் சொம்பை கீழே போட்டு இருந்தார்.

தன் தாயை திரும்பிப் பார்த்தவள் .அவரை அமைதியாக பார்க்க.

மலர் தன் மகளை உற்றுப் பார்த்தவர். தன் கணவனையும் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் சமையல் அறைக்கு சென்று விட.

கண்ணன் தான் தன் மகளை அடிபட்ட பார்வை பார்த்துக் கொண்டு நின்றார். வேறு எதுவும்  பேசவில்லை .

இதைக் கேட்டுக் கொண்டிருந்த உதயாவுக்குமே ஒரு சில நொடி உடல் தூக்கி வாரி தான் போட்டது .

அவன் தனது மாமாவின் காதல் என்று கூட சொல்லிவிட முடியாது.

ஏதோ ஒரு வகையில் அவர் விரும்பியது அவருக்கு கிடைக்க வேண்டும் என்று எண்ணி இவ்வாறு பேச .

அதுவும் தியாவின் காதல் இந்த ஒரு விஷயத்தால் கைகூடாமல் சென்று விடக்கூடாது.

அது அவளுக்கும் வலி தரும் என்று எண்ணி மட்டுமே அவன் தியாவிடம் பேச செய்தான்.

ஆனால் தியா கூறிய தண்டனை. குற்ற உணர்ச்சி இதெல்லாம் அவன் யோசிக்க கூட இல்லை.

என்பது தான்  உண்மை.

அவன் தியாவையே பார்க்க. “அவர் செஞ்ச துரோகத்துக்கான தண்டனையை அவர் லைப் லாங்  அனுபவிக்க வேணாம்” என்று சொல்ல .

தியாவை அடிக்க கையை ஓங்கி விட்டான் உதயா .

சுற்றி பார்த்துவிட்டு கையை கீழே இறக்கிவிட்டு தியா ப்ளீஸ் உண்மையாவே சொல்றேன் .

தண்டனையா நினைச்சு நான் உன்கிட்ட இத பத்தி பேசல என்றான்.

எனக்கு தெரியுமே அண்ணா.

அப்புறம் ஏன் இப்படி நடந்துகிற.

வேற நான் எப்படி நடந்துக்கணும்னு நீங்க நினைக்கிறீங்க என்று கேட்டாள் .

உதயா வேற எதுவும் பேசவில்லை.

சரி அண்ணா உங்க வீட்ல எப்படி ஒத்துக்கிட்டாங்க ஆன்ட்டி என்று கேட்க .

அம்மா கிட்ட நான் பேசிட்டு இருக்கும்போதே. அம்மா என்கிட்ட நான் பேசினதுக்கு பதில் சொல்றதுகுள்ள  மாமா வந்துட்டாரு.

மாமா வந்தவுடனே அம்மாவே கல்யாணத்த பத்தி மாமா கிட்ட பேசினாங்க.

நீ தான் பொண்ணு என்றதையும் நான் சொல்லிட்டேன்.

அது மட்டும் இல்லாம அம்மா என்றவன் .இதை சொல்லலாமா ?வேண்டாமா ?என்று யோசித்தவன் அமைதியாக இருக்க .

சொல்லுங்க அண்ணா என்ன சொன்னாங்க என்று கேட்க .

“இன்னும் ஒன் வீக்ல நிச்சயமாம். ஒன் மன்த்ல மேரேஜ் வைக்கிற மாதிரி சொன்னாங்க *என்றவுடன் தியா அதிர்ச்சியாகி உதயாவை பார்க்க .

அம்மா அப்படி சொன்னாங்க மாமா கிட்ட .

ஆனா இது எந்த அளவுக்கு சாத்தியம் அப்படின்னு எனக்கு தெரியல .

நான் அம்மாகிட்ட இன்னைக்கு போய் பேசினால் தான் தெரியும் .

உங்க வீட்ல என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க தான் வந்தேன் .

நான் வீட்டுக்கு போய் அம்மா கிட்ட  பேசிட்டு சொல்றேன்.

இனி நேர்ல மீட் பண்ணி பேசிக்க வேணாம்.

நான் நாளைக்கு சொல்றேன்  போன்ல பேசலாம் .

டெய்லி நம்ம பாத்துக்குறது நல்லதுக்கு இல்லை.

எப்படியும் மாமாவுக்கு நான் உன்ன மீட் பண்ணி இருப்பேன் என்று தெரியும் என்று சொல்ல.

தியாவின் முகத்தில் சிரிப்பு  தோன்றி மறைந்தது.

சரி அண்ணா. எனக்கு டைம் ஆகுது என்று விட்டு உதயா உடனே பஸ் ஸ்டாண்டுக்கு வந்தாள்.

என்ன அண்ணா உங்க பிரண்டு கூட போகலையா?

அதான் ஏற்கனவே சொன்னேனே .உங்க ஸ்டாப்புல நிக்க சொல்லி இருக்கேன் என்று அவளுடனே பயணம் செய்தான்.

அவள் இறங்கியவுடன் அமைதியாக இறங்கியவன் .தனது நண்பனுடன் வீட்டிற்கு கிளம்பி விட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *