Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 40

மீண்டும் மலரும் உறவுகள் 40

தியா இப்பொழுது பாவமாக உதயாவையும் , தேவியையும் பார்க்க .

இருவரும் சிரித்து முகமாகவே அவன் அப்ப அப்ப அப்படிதான் தியா விடு என்று தேவி சொல்ல.

இருந்தாலும் என்றாள்.

உனக்கு புதுசு  அதானால இப்படி  தெரியுது அவ்வளவுதான் விடு .

அவன் மனசுக்குள்ள எதையும் வச்சுக்க மாட்டான்.

சரி பெரியம்மா என்று அமைதியாகி விட்டாள்.

தியாவும் அந்த வீட்டில் நன்றாக ஒன்றி விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.

மூன்று நாட்கள் தியா வீட்டிற்க்கு  மறு வீடு விருந்திற்கு சென்று  விட்டு வந்தார்கள் .

பகல் முழுவதும் நந்தா ஏதாவது வேலையாக இருக்க .

தனது லேப்டாப்பையும் எடுத்துக்கொண்டு சென்றிருக்க.

அதில் வேளையாக அமைதியாக ஹாலில் ஒரு மூலையில் உட்கார்ந்து கொள்வான்.

கண்ணனும் பெரிதாக எதுவும் பேசவில்லை .

சாப்பிட அழைப்பதோடு சரி .வேற ஏதாவது வேண்டுமா ?என்று கேட்பதோடு சரி .

நந்தாவும் மலரிடம் ஏதாவது வேண்டும் என்றால் சொல்லிவிட்டு அமைதியாகி விடுவான் .

தியாவிற்கு  தான் ஒரு சில நொடி பயமாக இருந்தது.

“எங்காவது நந்தா சரோ இல்லை, தனது தந்தையோ வார்த்தையை விட்டு விடுவார்களோ” என்று பயந்தாள்.

ஆனால் ,இருவரும் அமைதியாக அவர்களது வேலையை பார்த்துக் கொண்டு  நகர்ந்து  விட .

தியா இந்த திருமணத்தில் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டாள் .

தன் தாய் ,தந்தை ,தேவி பெரியம்மா வாழ்க்கையில் பெரிதாக ஏதோ ஒன்று நடந்திருக்கிறது .

அதுவும் அதற்கும் தனது அத்தை சரோஜா விற்கும்  நிறையவே சம்பந்தம் இருக்கிறது என்பதை உணர்ந்தாள் .

இருந்தாலும் ,தன் தந்தை செய்தது தவறுதான். அவரை என்னால் ஆயிசுக்கும் மன்னிக்க முடியாது .

ஆனால் ,அது என்ன விஷயம் என்பதை அவர்களாக இப்போது சொல்லவும் மாட்டார்கள்.

தானாக புரிந்து கொள்ளும் நேரம் வரும்வரை காத்திருக்கலாம்.

நாமாக இப்போது எதையும் கிண்டி கிளறி இப்போது இருக்கும் சந்தோஷத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அமைதியாகி விட்டாள் .

மூன்று  நாட்கள் தியா வீட்டில் இருந்து விட்டு அவர்கள் கொடுத்த வரிசையையும் நந்தா கண்ணை காட்ட அமைதியாக  வாங்கிக் கொண்டாள் .

கண்ணனுக்கும் மலருக்கும் ஒரு வகையில் சந்தோஷமாகத்தான் இருந்தது.

தங்கள் மகள் இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அடம் பிடித்திருந்தாலும் ,நந்தாவின்  வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கிறாள் .

அது வரை சந்தோஷம். இனி தன் மகளை நந்தா நன்றாக பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் அவர்களுக்குள் இருக்க செய்தது.

நாட்கள் உருண்டோடி மாதங்களாகி இருந்தது. தியாவிற்கு அடுத்த வருடம் காலேஜ் திறந்து இருந்தது.

உதயா அவனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி இருந்தான்.

நல்ல கம்பெனிக்கு வேலையில் சேர்ந்து இருந்தான்.
இருந்தாலும் ,வெளியே எங்கேயாவது வேலைக்கு செல்ல வேண்டாமா ?டா என்று நந்தா கேட்டதற்கு .

நான் உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன் என்று எப்பவோ சொல்லிட்டேன் மாமா என்று சிரிப்புடனே சொல்லிவிட .

அதன் பிறகு யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லை .

நந்தா உனக்கு ஸ்கூட்டி வாங்கி தரட்டா காலேஜ் போயிட்டு வர  என்று தியாவிடம் கேட்க.

இல்ல  நான் பஸ்ல போயிட்டு வந்திருக்கிறேன் .

அதெல்லாம் டைமுக்கு வரும்னு சொல்ல முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே .

உதயா நான் எதுக்கு மாமா இருக்கேன். எனக்கு ஆபீஸ் சீக்கிரமாவே முடிஞ்சிடும்.

காலையிலும் தியா காலேஜ் டைமுக்கு தான் அதனால உங்க காலேஜ் தாண்டி தானே என்னோட ஆபீஸும் இருக்குது.

நானே காலைல டிராப் பண்ணிட்டு ஈவினிங்  பிக்கப் பண்ணிக்கிறேன் .

டேய் எல்லா நாளும் ,ஒரு நாள் போல இருக்காதுடா.

பாத்துக்கலாம் மாமா என்றான்.

தேவியுமே சரி என்றவுடன் தியாவும் உதயாவுடன் சென்று வர சம்மதித்து விட .

அதன் பிறகு  நந்தா எதுவும் பேசவில்லை. அப்புறம் இன்னொரு விஷயம் என்று தியாவை பார்க்க.

“உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சுன்னு நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் “.

இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் .

“அதுவும் நீங்கதான் என் புருஷன் என்று நான் சொல்ல கூடாது அவ்ளோ தானே” என்று சொல்ல .

தேவியே சிரித்து விட்டார். ஆமாம் என்று நந்தா முறைப்புடன் சொல்ல.

சரி நான் சொல்ல மாட்டேன் .

காலேஜ் ஓப்பன் ஆகி இருக்க .கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள் .

இந்த வருடமும் பிரஷர் பார்ட்டி வைத்திருக்க.

நந்தா சார் என்று பழைய ஸ்டூடண்ட்ஸ் கத்த.

தியாவின் தோழி இன்னைக்கு என்ன பாட்டு பாடுவார் என்று தெரியலையே என்று சொன்னாள் .

தியா அமைதியாக இல்லாமல்” அவர் மனசுல இருக்குற பொண்ண நெனச்சு ஏதாச்சு பாட்டு பாடுவாரு “என்று சொல்ல .

“நீ ஏண்டி அதையே சொல்லிட்டு சுத்திட்டு இருக்க .அவருக்கு இன்னும் கல்யாணமே ஆகலை நீ வேற “என்றாள்.

அப்படியா மறந்து விட்டேன் என்று சிரிப்புடனே சொல்லி விட்டு அமைதியாகி விட்டாள் .

தியாவிற்கு சிரிப்பு தாங்கவில்லை . “குத்துக்கல்லாட்டம் அவருடைய பொண்டாட்டி உன் பக்கத்துல நின்னுட்டு இருக்கேன்”.

“இன்னும் அந்த மனுஷனுக்கு கல்யாணமே ஆகலைன்னு சொல்லிட்டு இருக்க” .

எங்களுக்கு கல்யாணம் ஆகி மூணு  மாசம் ஆகிடுச்சு என்று மனதிற்குள் எண்ணினாள்.

என்ன பாட்டு தான் பாடுவார் என்று நாமும் பார்க்கலாம் என்று நினைத்தாள்.

நந்தாவிற்கு இந்த மூன்று மாதத்தில் தியாவின் மீது காதல் வந்துவிட்டதா ?என்று கேட்டாள் .

அதற்கெல்லாம் பதில் தெரியாது என்றுதான் சொல்வான் .ஆனால் அவள் தன்னுடைய மனைவி .

தன்னில் பாதி தன் வீட்டில் ஒருத்தி என்ற அளவிற்கு அவளுக்கான இடம் இருக்கிறது அவன்  மனதில்.

நார்மலாக பேச செய்வான். மற்றபடி இருவருக்குள்ளும் பெரிதாக எந்த ஒற்றுதலும் இருக்காது .

அது வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரியும். சிரித்த முகத்துடன் மைக்கின் முன்பு வந்து நின்று விட்டு எப்படி கேட்டாலும் தன்னையே ஒரு பாட்டு தான் தேர்வு செய்ய சொல்வார்கள் என்று என்று எண்ணியவன் .

ஒரு நிமிடம் கண்ணை மூடி நின்று தன் மனதில் தோன்றிய பாட்டை பாட ஆரம்பித்தான்.

“அவன் கண்ணை மூடியவுடன் என்ன பக்தி பாட்டா பாடா போறாரு கண்ணை மூடிட்டு நிக்கிறாரு “என்று கவுண்டர் கொடுத்தாள்.

அவளுடைய தோழி  தான் அமைதியா இரு டி சார் என்ன பாட்டு பாடலாம் என்று யோசிப்பாரு.

நீ வேற என்று சொன்னாள் .

“அது சரி உங்க சார் அப்படி என்ன பாட்டு பாடுறாருனு நானும் பார்க்கிறேன்” .

“ஏன்,உனக்கு சார் இல்லையா ?”என்று கேட்க

சிரித்த முகமாக நம்ப சார் தான். நான் அவர் என்ன பாட்டு பாட போறார் என்று ஆவலாக  வெயிட் பண்றேன் என்று விட்டு நந்தாவையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

முதல் முதலாக முதல் முதலாக…
பரவசமாக பரவசமாக…
வா வா வா அன்பே…
ஓஹோ… தனித்தனியாக தன்னந்தனியாக…
இலவசமாக இவன்வசமாக…
வா வா வா அன்பே…

உன்னாலே உன்னாலே…
விண்ணாளச்சென்றேனே…
உன் முன்னே உன் முன்னே…
மெய் காண நின்றேனே…

ஒரு சொட்டு கடலும்  நீ…
ஒரு பொட்டு வானம் நீ…
ஒரு புள்ளி புயலும் நீ…
பிரமித்தேன்… ஹோ…

ஒளி வீசும் இரவும் நீ…
உயிர் கேட்கும் அமுதம் நீ…
இமை மூடும் விழியும் நீ…
யாசித்தேன்…

முதல் முதலாக முதல் முதலாக…
பரவசமாக பரவசமாக…
வா வா வா அன்பே…
ஓஹோ… தனித்தனியாக தன்னந்தனியாக…
இலவசமாக இவன்வசமாக…
வா வா வா அன்பே…

முதல் முதலாக முதல் முதலாக…
பரவசமாக பரவசமாக…
வா வா வா அன்பே…
ஓஹோ… தனித்தனியாக தன்னந்தனியாக…
இலவசமாக இவன்வசமாக…
வா வா வா அன்பே…

ஒரு பார்வை நீளத்தை…
ஒரு வார்த்தை நாணத்தை…
தாங்காமல் விழுந்தேனே…
தூங்காமல் வாழ்வேனே…

நதிமீது சருகை போல்…
உன் பாதை வருகின்றேன்…
கரை தேற்றி விடுவாயோ…
கதி மோட்சம் தருவாயோ…

மொத்தமாய் மொத்தமாய்…
நான் மாறிப்போனேனே…
சுத்தமாய் சுத்தமாய்…
தூள் தூளாய் ஆனேனே…

முதல் முதலாக முதல் முதலாக…
பரவசமாக பரவசமாக…
வா வா வா அன்பே…
ஓஹோ… தனித்தனியாக தன்னந்தனியாக…
இலவசமாக இவன்வசமாக…
வா வா வா அன்பே…

உன்னாலே உன்னாலே…
விண்ணாளச்சென்றேனே…
உன் முன்னே உன் முன்னே…
மெய் காண நின்றேனே…

நீ என்பது மழையாக…
நான் என்பது வெயிலாக…
மழையோடு வெயில் சேரும்…
அந்த வானிலை சுகமாகும்…

சரி என்று தெரியாமல்…
தவறென்று புரியாமல்…
எதில் வந்து சேர்ந்தேன் நான்…
எதிர்பார்க்கவில்லை நான்…

என் வசம் என் வசம்…
இரண்டடுக்கு ஆகாயம்…
இரண்டிலும் போகுதே…
என் காதல் கார்மேகம்…

உன்னாலே உன்னாலே…
விண்ணாளச்சென்றேனே…
உன் முன்னே உன் முன்னே…
மெய் காண நின்றேனே…

ஒரு சொட்டு கடலும் நீ…
ஒரு பொட்டு வானம் நீ…
ஒரு புள்ளி புயலும் நீ…
பிரமித்தேன்…

ஒளி வீசும் இரவும் நீ…
உயிர் கேட்கும் அமுதம் நீ…
இமை மூடும் விழியும் நீ…
யாசித்தேன்…

என்று நந்தா பாடி முடிய.

சுற்றியுள்ள அனைவரும் கைத்தட்டி இருந்தார்கள் .

தியா நந்தாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் .

என்னடி அன்னைக்கு போன வருஷம் கவுண்டர் கொடுத்த இப்ப வாய் அடைத்து போய் இருக்க.

“அவரோட பாட்டு கேட்டு மெய் மறந்து நிக்கிற” என்று சொல்ல.

“தியா அவருடைய பாட்டு மட்டும் கேட்டா அவரைப் பார்த்தே மெய் மறந்து தான் நிக்கிறேன்” என்று லேசாக முனகினாள் .

 ” என்னடி சொல்ற” என்று கேட்க.

ஒன்னும் இல்ல .

ஆமாம், இன்னைக்கு சார் யாருக்காக பாடிருக்காரு என்று கேட்க .

யாருக்கு தெரியும். எந்த பொண்ணுக்கு கொடுத்து வச்சிருக்கோ என்று லேசாக புலம்பு செய்தாள் தியாவின் தோழி தனா.

என்னடி நான் இதையே சொல்லி இருந்தா என்ன என்ன பேச்சு பேசி இருப்ப என்று கேட்க .

சும்மா லைட்டா .சார் இந்த பாட்டு பாட ஆரம்பிச்ச உடனே ஒரு மாதிரி பீல் ஆயிடுச்சு .

லைட்டா அவர் மேல கிரஷன்னு வச்சுக்கோயேன் என்று சிரிக்க.

முதலில் முறைத்தவள் பின்பு சிரித்துவிட்டாள் அது சரி என்றாள் .

அதன் பிறகு அவன் பாட்டு தான் இறுதியாக முடிந்திருந்ததால், அனைவருக்கும் சாப்பாடு ரெடி பண்ணி இருக்க சாப்பிட சென்று விட்டார்கள்.

ஒரு சில நொடி நின்று நந்தாவையே திரும்பி பார்த்தவள். இது காலேஜ் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு அமைதியாக சென்றுவிட்டாள் .

அன்றைய பொழுது அப்படியே கழிய.உதயாவிற்காக காத்துக் கொண்டு இருந்தாள்.

உதயா வந்தவுடன் அவனுடன் வீட்டிற்கு செல்ல.

என்ன தியா சிரித்த முகமாக இருக்கிற. முகத்தில் 100 வாட்ஸ் பல்பு வேற எரியுது என்று கேட்க.

ஒன்னும் இல்ல அண்ணா என்றாள்.

எதோ ,இருக்கு என்ன விஷயம் என்று கேட்க .

ஒன்னும் இல்ல  சும்மா என்று அவனது தோளில் சாய்ந்தாள் .

“என்னமோ ஒன்னு இருக்கு “என்று விட்டு அமைதியாக வீட்டிற்கு வண்டியை விட்டான் .

தியா வீட்டிற்குள் வரும் பொழுதே  நந்தா பாடிய பாட்டை பாடிக்கொண்டே ஷாலை கையால்  தூக்கிப் போட்டுக் கொண்டு  வீட்டிற்குள் வர .

ஹாலில் உட்கார்ந்திருந்த” தேவி தான் என்னடி வரும் போதே இவ்வளவு குதூகலமா வர “என்று கேட்க .

அவர் கேட்பதை கூட காதல் வாங்காமல் அவளது ரூமுக்குள் சென்றுவிட்டாள் .

உதயாவை பார்த்து என்ன டா என்று செய்கையில் கையால் கேட்க .

உதட்டை பிதிக்கிய  உதயா எனக்கும் தெரியல அவ வரும்போது இருந்தே இப்படிதான் இருக்கா.

“ஏதோ சம்பவம் இருக்கு. எனக்கும் தெரியாது உன் தம்பி வந்தா தான் தெரியும்” என்று ஹாலில் உட்கார்ந்தான்.

அடுத்த கால் மணி நேரத்தில் நந்தாவுமே சீக்கிரமாக வீட்டிற்கு வந்திருக்க .

என்ன டா இன்னைக்கு சீக்கிரம் வந்திட்ட.

இப்போ தான காலேஜ்  ஸ்டார்டிங்  அக்கா. பெரிதாக வேலை இல்லை என்று விட்டு கண்ணை வீட்டை சுற்றி சுழல விட்டான் .

தியா இல்லை என்றவுடன் தன் ரூம் கதவை பார்த்தான் .

அதை பார்த்துக் கொண்டிருந்த தேவிக்கும் ,உதயாவிற்கும் சிரிப்புதான் .

இருந்தாலும் ,அமைதியாக நந்தாவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

எதுவும் பேசாத நந்தா அமைதியாக தனது அறைக்கு சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *