Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 42

மீண்டும் மலரும் உறவுகள் 42

நாட்கள் அழகாக சென்று இருந்தது .

தியா தினமும் கல்லூரி சென்று வர அவளை உதயாவே கல்லூரியில் விட்டுவிட்டு அழைத்துக் கொண்டு வருவான்.

அவனுக்கு நேரமில்லை.அவன் வர நேரமாகும் என்றால், அவ்வப்போது பஸ்ஸில் சென்று விடுவாள் .

தேவி தான் வருவதா ?என்று கேட்பதற்கு கூட ஒன்னும் இல்ல பெரியம்மா பஸ்ல வந்து பழகி இருக்கேன் என்று சொல்லி விடுவாள்.

மலரிடம் அவ்வப்போது போனில் பேச செய்வாள்.

மலரும் இங்கு வந்து சென்று தியாவை பார்த்துவிட்டு செல்லவில்லை .

தியாவும் அங்கு சென்று இதுவரை பார்க்கவில்லை.

மறுவீடு சென்று வந்ததோடு சரி .அவ்வப்போது ,மலரிடம் மட்டும் பேசுவாள்.

ஆனால் ,கண்ணனிடம் அவள் இதுவரை பேசவில்லை .

கண்ணன் போன் செய்தாலும், போனை எடுக்க மாட்டாள்.

கண்ணனுக்கு வருத்தமாக இருந்தாலும், தன் மகள் திருமணத்திற்கு முன்பே சொன்னது போல் இது தனக்கு தண்டனை தான் என்று எண்ணி கொள்வார்.

தன் மகளாக எப்பொழுது தன்னிடம்  பேசுவாள் என்று அமைதியாக காத்துக் கொண்டு இருந்தார்.

தியா நந்தாவின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருந்தது.

பெரிதாக எந்த மாற்றமும் கிடையாது. அவர்களுக்குள் அவ்வப்போது சண்டையிட்டுக் கொள்வார்கள் .

சிரித்து பேசிக்கொள்வார்கள். ஒரு சில நேரங்களில் படிப்பை பற்றி பேசி அறுக்க செய்வான்.

அப்போது மட்டும் அவளுக்கு அவன் வாத்தியாக மாறிவிடுவான்.

மற்ற நேரங்களில் சார் என்று அழைப்பாள்.  அதைத் தாண்டி வேறு வார்த்தை அவள் சொல்ல மாட்டாள் .

நந்தாவிற்க்குமே அவளின் வாத்தி என்ற அழைப்பு வழக்கமாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும் .

முதலில் முறைத்தவன் பிறகு சிரித்துக் கொள்வான் .

அவளுடைய வாத்தி என்று அழைப்பில் அந்த வாத்தி என்று அழைப்பு அவ்வபோது ஹாலில் இருக்கும் பொழுது தேவி ,உதயா இருக்கும்பொழுது வந்து செல்லும் .

இருவரும் கண்டுக்காமல் விட்டுவிடுவார்கள் .நாட்கள் வேகமாக செல்ல .

தியா அன்று காலேஜ் முடிந்து வந்து வீட்டில் எதையோ செய்து கொண்டிருக்க .

“நந்தா மேடம் படிக்கிற வேலையே இல்லையா ?”எந்த நேரம் பார்த்தாலும் அவன் கூட சேர்ந்து சண்டை போட்டு கிட்டும் பேசிக்கிட்டும் இருக்கிறது .

இல்லனா அக்கா கூட ஏதாச்சு பண்ணிட்டு இருக்கிறது .இதே வேலையா சுத்திட்டு இருக்க .

“எக்ஸாம் வரும்போது தான் இருக்கு உனக்கு “என்று சொன்னான் .

அவனுக்கு பழுப்பு காண்பித்து விட்டு தேவியும்,  உதயாவும் இருக்கும் தைரியத்தில் தேவியின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

பெரியம்மா எந்த நேரமும் வீட்லையும் வாத்தியாரவே  சுத்த வேண்டியது .கொஞ்சமாச்சும் நார்மல் மோட்ல இருக்க சொல்லுங்க.

” எந்த நேரமும் வாத்தியாரவே இருந்த வீட்டிலையும் சம்பளம் கொடுக்க மாட்டாங்க” உங்க தம்பிக்கு என்று சிரித்தாள்.

தேவியுமே அவன் வர வர தியாவிடம் அவ்வப்போது வாத்தியாராக நடந்து கொண்டதை உணர்ந்து அவ சொல்ற மாதிரி அப்பப்ப அப்படித்தான்டா நடந்துக்குற என்றார்.

அவ ஒன்னும்  சின்ன புள்ள இல்லல. படிக்க சொல்லுங்க .

“படிக்கிற நேரத்துல படிக்க மாட்டாளா ? அதுக்குன்னு எந்த நேரமுமாம்” என்றார்.

“ஏன்டா அவ ரூம்ல படிக்கிறாளா ?இல்லையா ?” என்றார் .

ஆமாம் .ரொம்பதான் படிக்கிறா என்று வேகமாக சொல்லி விட்டு தியாவை பார்த்து சிரித்து விட்டான்.

தியா அவனை முறைத்துவிட்டு அவனது தலையில் கொட்டி விட்டு அவனைப் பார்த்து பழுப்பு காண்பித்து விட்டு ஓடிவிட்டாள்.

அவளை பின்னாடியே துரத்திக் கொண்டு அவளை அடிக்க ஓடினான் நந்தா.

“இருவரும் ஓடிப் பிடித்து விளையாட*  .

அந்நேரம்  மலர் தயங்கி தயங்கி வீட்டிற்குள் வர .

முதலில் மலரை பார்த்த நந்தா தான் வேகமாக மலரை வரவேற்று விட்டு பின்னால் திரும்பிப் பார்க்க.

அவர் வெளியே தான் நின்னுகிட்டு இருக்காரு தம்பி என்றார்.

கூப்பிடுங்க என்றவன்.தானாகவே வெளியே சென்று வாங்க என்று கண்ணனை அழைக்க.

கண்ணனுக்கு தான் குற்ற உணர்ச்சியாக இருந்தது .

இருந்தாலும் ,தன் மகளை பார்க்க வேண்டும் என்ற நோக்கில் எதுவும் பேசாமல் வீட்டிற்குள் வர .

தியா ஒரு ஓரமாக நின்று கொண்டு இருந்தாள்.

உள்ளே வந்த “நந்தா  தியாவின் கையில் அழுத்தம் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்தவங்கள வாங்கன்னு கூப்பிடு “என்றான்.

பிறகு ஒன்றும் இல்லை என்று விட்டு கூப்பிடு என்று  சொல்ல .வாங்க என்று இருவரையும் வரவேற்றாள்.

இருவருக்கும் இங்கு பெருமை பிடிபடவில்லை .

தன் மகள் அவள் வீட்டிற்கு தாங்கள் வந்திருக்கும் போது தங்களை வாங்க என்று கூப்பிடுவதை எண்ணி .

பிறகு தேவி, உதயா இருவரும் இருவரையும் வாங்க என்று அழைக்க .

என்ன மலர் இந்த நேரத்துல பகல்ல வந்திருக்கலாம்ல என்று கேட்க.

இல்ல கா என்று இழுத்தவுடன் .

“எந்த நேரத்துல அவங்க பொண்ண பாக்க அவங்க பொண்ணு வீட்டுக்கு வந்தா என்னக்கா”.

அதனால் என்ன என்று  சொல்லி கொண்டு சமையலறையில் இருந்து இரண்டு டீக்கப்புடன் வந்து இருவருக்கும் நந்தா கொடுக்க.

ஒரு சில நொடி யோசித்த கண்ணன் அமைதியாக எடுத்துக் கொண்டார் .

இருவரும் டீ குடித்து முடித்தவுடன் ஆடி மாசம் பொறுக்குதில்ல அதான் தியாவை வீட்டுக்கு அழைச்சிட்டு போலாம்முன்னு என்று சொல்ல.

“அது கல்யாணமா புதுசுல தான இப்போ தான் நாலு அஞ்சு மாசம் ஆயிடுச்சு இல்ல மலரு “என்று தேவி கேட்க.

அக்கா நம்ப பக்கம் வழக்கம் ஒரு வருஷம் சொல்லுவாங்க இல்ல.

தியாவை பார்த்த நந்தா அமைதியாக இருக்க.

ஆமாம் மலரு இருந்தாலும்,என்றார்.
அவ இங்கேயே  இருக்கட்டுமே என்றார் தேவி.

எங்களுக்கும் ஆசையா இருக்கும்ல க்கா பிள்ளையை  கூட்டிட்டு போய் எங்க வீட்ல வச்சுக்கணும்னு.

அது மட்டும் இல்லாம “அவர் கிட்ட அவ பேசுறதே இல்ல”. அவருக்கும் கொஞ்ச நாள் தன் மக பக்கத்துல  இருக்கா என்ற சந்தோஷம் இருக்கும் என்க.

“நந்தா முறைப்புடனே தியாவை பார்க்க” .

“அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலையை கீழே குனிந்து கொண்டாள்” .

அவளது அருகில் வந்து “நீ உங்க  அப்பா கிட்ட பேசவே இல்லையா ?” என்று கேட்க .

அவனை பார்த்துவிட்டு அமைதியாகி விட்டாள்.

அவளது அமைதியே அவள் பேசவில்லை என்பதை உணர்த்த.

“ஏன் தியா இப்படி பண்ற” என்றான்.

“தெரியல” என்றாள்.

“நீ இன்னும் சின்ன புள்ள இல்ல “என்றான்.

அவள் வேறு எதுவும் பேசவில்லை.

சரி மலரு கூப்பிட்டு போங்க. அதுக்கு எதுக்கு இந்த நேரத்துல வந்து இருக்கீங்க பகல்ல வந்து இருக்கலாம் இல்ல..

இல்லனா ஒரு வார்த்தை போன் பண்ணி இருந்தா லீவ் போட்டு இருப்போம் இல்ல.

இல்லக்கா எல்லாரும் இருக்கும்போது வந்தா நல்லா இருக்கும் அதான்.

அதும்  எதுக்கு இதுக்கு லீவு போட்டுட்டு அதான் அக்கா.

சரி மலர் காலையில்  கொண்டு வந்து விடுவான் நந்தா என்று சொல்ல.

“இல்ல அக்கா நாளைக்கு ஆடி பொறக்குது” .

ஆமா எனக்கு ஞாபகம் இருக்கு.

  இல்லக்கா “இன்னைக்கு இப்பவே கூப்பிட்டு போலாம்னுட்டு “தான்.

“இந்த நேரத்திலா” என்று நந்தா வேகமாக கேட்க.

ஆமாம் தம்பி ஆடி மாசம் தியா நம்ம வீட்டுல தான் இருக்கணும்.

ஆடி பதினெட்டு முடிஞ்சு கூட கூப்பிட்டுக்கலாம் .இல்ல ஆடி முழுசும் அங்க  இருந்தாலும் சரிதான் என்று சொல்ல.

நந்தாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது .

தன் அக்கா எதுவும் பேசாமல் தானாக என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக நின்று கொண்டான் .

தேவியுமே அப்படி ஒன்றை உணரவில்லை என்று தான் சொல்ல வேண்டும் .

இரண்டு நாட்களுக்கு முன்பாக மலர் இதைப் பற்றி பேசி இருந்தால் பரவாயில்லை .

இப்போது திடு திப்பென்று நேரில் வந்து அதுவும் மாதம் முடிவில் வந்து மலர் கேட்க .

அதுவும் தன்னுடைய அப்பாவிடம் தியா பேசவில்லை என்றவுடன் தியா வை அனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவருக்கு தோன்றியது .

தன் தம்பியை பாவமாக பார்த்தவர் . எதுவும் பேசாமல் சரி நீங்க பேசிட்டு இருங்க மலர் என்று விட்டு சமையல் கட்டுக்கு செல்ல.

நந்தா அமைதியாக அவனுடைய ரூமுக்கு சென்று விட்டான்.

தியா வருவாள் என்று அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க.

தான் வந்து பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகியும் தியா வராமல் இருக்க .

“இவள வச்சிகிட்டு” என்று கதவையே  பார்த்து முனகி கொண்டு இருந்தான் .

உதயா தான் தியா ஹாலில் இருப்பதை பார்த்துவிட்டு”தியா உன்னோட ரூமுக்கு போயேன் “என்றான்.

“எதுக்கு அண்ணா” என்று கேட்டாள்.

“மாமா ரூமுக்கு போய் ரொம்ப நேரம் இருக்குமே “அதான் என்றான்.

அவர் அடிக்கடி கூட தான் போவாரு அதுக்கு என்ன என்று கேட்டாள்.

அவளை முறைப்புடன் பார்த்தவன் நீ உள்ள வருவனு நினைச்சு தான் போயிருக்காரு என்று சொல்ல .

உதயாவை பார்த்தவள் .உதயா விளையாட்டிற்கு செல்லவில்லை என்பதை உணர்ந்து விட்டு .

தன் அப்பாவும் ,அம்மாவும் இருப்பதை உணர்ந்து அமைதியாக ரூமுக்குள் செல்ல.

“அவள் உள்ளே சென்ற அடுத்த நொடி வேகமாக அவளை இறுக்கி அணைத்து இருந்தான் நந்தா”.

கல்யாணம் ஆனதிலிருந்து இத்தனை மாதத்தில் இன்று தான் நந்தா அவளை கட்டி அணைத்து இருக்கிறான் .

“அவளுக்கு உடல் சிலிர்த்து அடங்கியது”.

ஒன்றும் புரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கை கால்கள் கூட நடுங்க ஆரம்பித்தது .

அவளை தன் பக்கம் திருப்பியவன் அவளது கண்ணை உற்றுப் பார்த்து “ஏன்? டி உனக்கு கொஞ்சம் கூட என்னை விட்டு போறோங்குற வருத்தம் இல்லையா?”

நான் ரூம் குள்ள வந்து ரொம்ப நேரமா உனக்காக நிற்கிறேன் .அப்பக்கூட உன் அண்ணன் சொல்லி தான் வர .

“உனக்கா வரணும்னு தோணல” .

இவன் தொல்லை ஒழியட்டும். அப்படியே போயிடலாம்னு நினைச்சியா என்று கேட்க.

“தன்னை மீறி அவளுக்கு கண்கள் கலங்கி இருந்தது” .

“அப்போ நான் இல்லாம நீங்க பீல் பண்ணுவீங்களா? “உங்களுக்கு என் மீது  மேல என்றாள்.

ஏதோ கேட்க வந்து” தானாக காதலை கேட்டு பெறக் கூடாது. அது பிச்சையாகிவிடும்” என்று எதையெதையோ யோசித்து .

அவள் எதுவும் பேசாமல் தன் மீது இருக்கும் அவனது கையை எடுத்து விட்டவள்.

எதுவும் சொல்லாமல் வெளியில் சென்று விட.

இங்கு நந்தாவிற்கு தான் சப் என்று ஆனது .

அவள் ஏதாவது வாதாடுவாள் என்று எண்ணியவன்.

அவள் அமைதியாக சென்றவுடன் தான் பேசிய வார்த்தை அதிகமா ?என்று ஒரு சில நொடி யோசித்தான்..

“தனக்கு இருக்கும் உணர்வு அவளுக்கு இல்லையா ?”என்று எண்ணியவன் எதுவும் பேசாமல் வெளியில் வந்தான் .

தன் மாமாவின் முகத்தைப் பார்த்த உதயாவிற்க்கு ஒரு மாதிரியாகி விட்டது .

இருந்தாலும் ,தன் மாமாவுக்கும் கொஞ்சம் நேரம் தேவை .

இந்த நேரம் தியாவை புரிந்து கொள்ள அவருக்கும் ,அவரை புரிந்துகொள்ள தியாவுக்கும்  தேவையான நேரமாக இருக்கும் என்று எண்ணினான் .

ஆகையால் ,அமைதியாகவே இருக்க செய்தான்.

தேவி சமைத்து முடித்துவிட்டு அனைவரையும் சாப்பிட அழைக்க .

சாப்பிட்டு முடித்துவிட்டு இருவரும் தியாவை அழைத்துக் கொண்டு செல்வதாக இருந்தார்கள்.

தியா தனக்கு தேவையான உடைகளை எடுத்து வைத்தாள் .

உள்ளே வந்த நந்தா அவளுக்கு இன்னும் இரண்டு மூன்று துணி எடுத்து வைக்க .

இது எதுக்கு அங்கே கொஞ்சம் துணி இருக்கும் ,இது மட்டும் போதும் என்று சொல்ல.

“இருக்கட்டும் அது கூட இதுவும் எடுத்து வச்சுக்க முடியாதா ? மேடமுக்கு “என்று விட்டு வெளியே சென்று விட.

இந்த கோபத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்று மனதில் எண்ணி விட்டு அவன் எடுத்து வைத்த இரண்டு மூன்று சுடிதாரையும் ஒரு புடவையையும் எடுத்து வைத்துக் கொண்டாள் .

எதுவும் பேசாமல் வெளியில் வர.

நந்தாவின் பக்கம் தான் அவளது கண் போனது. தியா மூவரிடமும் சொல்லிக் கொண்டு தன் தாய் தந்தையுடன் அவளது பிறந்த வீட்டை நோக்கி திருமணத்திற்கு பின்பு மறு வீடு சென்று வந்த பின்பு இன்று தான் செல்கிறாள்.

கண்ணனும் ,மலரும் தங்கள் மகள் தங்களுடன் எப்படியும் 20 நாட்களாவது இருப்பாள் என்ற நம்பிக்கையில் சந்தோஷத்துடன் தன் ஆசை மகள் கண்ணம்மாவை அழைத்துக் கொண்டு அவர்கள் வீடு நோக்கி சென்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *