Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 45

மீண்டும் மலரும் உறவுகள் 45

நந்தா இரண்டு மூன்று முறை அழைக்க அவள் போன் எடுக்கவில்லை.

மணி இரவு பத்தை தொட்டிருக்க .

ஒரு சில நொடி யோசித்தவன். அவள் போன் எடுக்கவில்லை என்ற உடன் மலர் போனுக்கு அழைத்திருந்தான்.

மலர் நேரத்தை பார்த்துவிட்டு நந்தா போனை எடுத்து என்ன தம்பி என்று கேட்க.

இல்ல பேசிட்டு இருக்கும்போதே தியா போன் கட் ஆயிடுச்சு சுவிட்ச் ஆஃப் ஆயிடுச்சு போல அதான் என்று இழுக்க .

ஏதோ இருவருக்கும் ஊடல் போல என்று எண்ணியவர் .

இரு தம்பி என்று விட்டு தியாவிடம் போன் கொடுத்துவிட்டு சிரித்த முகமாக வர .

கண்ணனும் சிரித்து கொண்டார்.

“இப்ப உங்களுக்கு என்ன வேணும்?”

“இந்த நேரத்தில் எதுக்கு அம்மா போனுக்கு கூப்பிட்டு இருக்கீங்க “

“உனக்கு என்னடி வேணும் ?”ஒழுங்கா உங்க அம்மா போனை கட் பண்ணிட்டு உன் போன்ல வீடியோ கால் வர.

இல்லன்னு வச்சுக்கோ என்ன செய்வேனு  எனக்கே தெரியாது என்றான்.

” நான் உன் மனசுல இந்த நிமிஷம் வரைக்கும் பொண்டாட்டியா மட்டும் தானே இருக்கேன் “என்றாள் .

“பொண்டாட்டியா இருக்கிறதுல ஒன்னும் தப்பில்லையே டி “என்றான்.

ஆமா தப்பில்ல தான் .”வேற எந்த உணர்வும் உங்களுக்கு என் மேல தோன்றவில்லை தான”.

” பொண்டாட்டி கிட்ட என்னென்ன உணர்வு தோணுமோ அந்தந்த உணர்வு இருக்கு டி போதுமா?” என்றான்.

” நான் உங்ககிட்ட கேவலமா ஒன்னும் கேட்கல” என்று தனது அம்மாவின் ஃபோனையும் வைத்து விட்டாள் .

நந்தாவிற்கு இதற்கு மேல் இரண்டு போனுக்குமே அழைக்க தோன்றவில்லை .

பத்து நிமிடம் பார்த்தான்.அவள் அழைக்கவில்லை என்றவுடன் எதுவும் பேசாமல் தன்னுடைய போனை சுவிட்ச் ஆப் செய்து அமைதியாக படுத்து விட்டான்.

ஆனால் தூக்கம் தான் வருவேனா என்று இருந்தது.

  மறுநாள் காலை காலேஜ் கிளம்பும் பொழுது அவள் பேசிய வார்த்தையே தன் மனதில் ரிங்காரமிட்டு கொண்டிருக்க .

அவளின் நினைவாகவே காலேஜ் கிளம்பி சென்றான்.

காலேஜில் அவளை பார்த்தவன் அமைதியாக கடந்து விட.

இங்கு தியா தான் புலம்பிக் கொண்டாள்.

மாலை  காலேஜ் முடிந்து உதயாவிற்காக தியா காத்துக் கொண்டு இருக்க.

அவளுக்கு போன் வந்தது .போனை எடுத்து பார்க்க நந்தாவாக இருக்க.

ஒரு சில நொடி யோசித்தாள். போன் கட் ஆகியிருந்தது.

அடுத்த நொடி மெசேஜ் வந்திருந்தது .”மரியாதையா போனை எடு டி *என்று .

எதுவும் பேசாமல் போனை எடுக்க .

“இன்னைக்கு நான் தான் உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்”. உன் அண்ணன்  வரமாட்டான் என்றான்.

” ஏன், உங்களுக்கு வேலை இல்லையா ?”

“ஒழுங்கா சொன்ன பேச்சைக் கேட்டு பஸ்ஸ்டாண்டுக்கு முன்னாடி கொஞ்ச தூரம் தள்ளி நில்லு வரேன்” என்று விட்டு வைத்து விட்டான்.

இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்று புலம்பிக்கொண்டே அவன் சொன்ன இடத்தில் போய் நிற்க.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவன் வந்தவுடன் அவனது வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

நந்தா கண்ணாடி வழியாக தியாவை பார்த்துக் கொண்டே வர .

தியா அவனை பார்த்தும், பார்க்காமல் திரும்பினாள்.தான்  பார்ப்பது தெரிந்தும் அவள் பார்க்கவில்லை என்றவுடன் கோபம் கொண்டவன்.

வண்டியை வேகமாக நிறுத்த அவன் மீது மோதி நின்றாள்.

அவனை முறைத்து பார்த்துக்கொண்டே ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டுங்க என்றாள்.

எனக்கு வண்டி எல்லாம் ஓட்ட தெரியும் மேடம்.நீங்க வண்டி ஓட்ட கத்து தர வேண்டிய அவசியம் இல்லை.

ஒழுங்கா என் பக்கத்துல நகர்ந்து உட்காரு.” இடையில எதுக்கு டி ஒரு ஆள் உட்காருற அளவுக்கு கேப் “என்றான்.

அவனை பார்த்து முறைத்து விட்டு இஷ்டம் இருந்தா கூப்பிட்டு போங்க. இல்லனா நான் பஸ்ல போயிக்குவேன்.

அண்ணா எனக்கு போன் பண்ணி சொல்லி இருந்தா பஸ்லையே போய் இருப்பேன் என்றாள்.

“வர வர கொழுப்பு கூடி போச்சு டி உனக்கு “என்று முணு முணுத்து விட்டு அமைதியா வண்டியில ஏறு டி என்றான்.

தியா நந்தாவை முறைத்துவிட்டு வண்டியில் ஏறி உட்கார .

வேறு எதுவும் பேசாமல் இருவரும் முணுமுணுத்து கொண்டே முறைத்துக் கொண்டே வீட்டிற்கு வந்து இறங்கினார்கள் .

வீட்டிற்கு வந்தவுடன் “வீட்டுக்குள்ள வாங்க “என்று தியா கூப்பிட.

“இல்லடி எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு” என்றான்.

அவனை முறைத்து பார்த்தாள்.

உண்மையாவே முக்கியமான வேலை இருக்கு தியா.

போன் பண்ணா மேடம் ஒழுங்கா பேசாம கட் பண்றீங்க .

அதனால,நேர்ல பார்த்து பேசினா பரவாயில்லன்னு தோணுச்சு அதனாலதான் உன்னை கொண்டு வந்து விட வந்தேன் என்றான்.

“உங்க வேலையை விட்டுட்டு வந்து என்னை வீட்ல விட வர சொல்லி நான் கேட்கலையே” .

“ஏன் டி  இப்ப நீ வர சொல்லி தான் நான் வந்தேனா?”

இப்போ என்ன? ” உங்களால வீட்டுக்குள்ள வர முடியாது அப்படித்தானே” என்று விட்டு வேகமாக செருப்பை கழட்டி விட்டு வீட்டுக்குள் சென்று விட்டாள்.

அவளை பார்த்து சிரித்துவிட்டு அவள் பின்னாடியே பைக்கை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் வந்தான் .

தியா வந்தவுடன் எப்பொழுதும் உதயா அவளை விட வந்தால், வீட்டுக்குள் வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்வது வழக்கம் .

அது தேவி பழகிவிட்ட பழக்கம் .

அப்படியே வெளியே வாசலில் விட்டு விட்டு வந்தால் அது நல்ல பழக்கம் இல்லை .

வீட்டுக்குள் சென்று தண்ணீர் மட்டுமாவது குடித்துவிட்டு தான் வரவேண்டும் என்று சொல்லி இருந்ததால், தினமும் அப்படியே செய்வான் .

அவன் வருவான் என்பதாலேயே நந்தாவை உதயா என்று எண்ணி உதயாவிற்காக மலர் தண்ணீர் எடுத்துக் கொண்டு வர.

நந்தாவை  பார்த்து விட்டு” வாங்க தம்பி “என்றார்.

ஒரு சில நொடி  யோசித்து விட்டு உட்கார்ந்தான்.

மலர் தண்ணீர் கொடுக்க வாங்கி குடித்துவிட்டு சரிக்கா நேரமாகுது நான் கிளம்புறேன் என்றான் .

வேறு எதுவும் பேசாத மலர் சரி என்று சொல்ல .

தியாவின் ரூம் கதவையே நந்தா  பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு மலர் பின் கட்டிற்கு சென்றார் .

அவர் சென்றவுடன் வேகமாக சென்று தியாவின் ரூம் கதவைத் தட்ட.

தன்னுடைய அம்மா தான் என்று எண்ணிய தியா “உனக்கு என்ன மா பிரச்சனை” என்று கேட்டுக் கொண்டு கதவை திறக்க .

அங்கு நந்தாவை அவள் எதிர்பார்க்கவில்லை 

அவன் வேலை இருக்கிறது என்று சொன்னவுடன் அவன் தன்னை வெளியவே  விட்டுவிட்டு சென்று இருப்பான் என்று எண்ணினாள்.

அவனை முறைத்து விட்டு கதவை திறந்துவிட்டு மெதுவாக உள்ளே மட்டும் போய் நின்று கொண்டாள் .

ரூமுக்குள் வந்த நந்தா வெளியே எட்டிப் பார்த்துவிட்டு மலர் இல்லை என்றவுடன் கதவை சாற்றினான்.

“அவள் கையை பிடித்து இப்போ உனக்கு என்ன தாண்டி பிரச்சனை “என்றான்.

“இப்ப தான வேலை இருக்குன்னு சொன்னீங்க” .

இருக்கு தான் டி  நான் இல்லனு எப்போ சொன்னேன் .

உன்னை விடறதுக்காக தான் டி இவ்ளோ தூரம் வந்தேன். கால் மணி நேரத்துல வர வேண்டிய உங்க வீட்டுக்கு அரை மணி நேரம் மெதுவா வண்டி ஓட்டிட்டு வந்திருக்கேன்.

நான உங்களை வர சொன்னேன்.

அண்ணன் தானே டெய்லி  வருவாரு அவரால் வர முடியவில்லை என்றால் ,நான் பஸ்ல வந்திருக்க போறேன் என்றாள்.

  “உன்ன  வச்சுக்கிட்டு உண்மையா முடியல டி” என்று விட்டு அவளது அருகில் வந்து அவள் கலைந்து இருந்த முடி கற்களை அவளின் காதோரம் ஒதுக்கி விட்டு .

அவளது கண்ணை உற்று நோக்கி  உண்மையாவே வேலை இருக்கு டி .

உன்கிட்ட பேசணும்னு நேர்ல பேச முடியாது என்பதால் தான் உன் அண்ணன் கிட்ட போன் பண்ணி உன் கூப்பிட  வர வேணாம்னு சொல்லிட்டு உன்னை  வீட்டுல விட நான் வந்தேன்.

“புரிஞ்சிக்குவனு நினைக்கிறேன் . உண்மையாவே வேலை இருக்கு “என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் கதவை திறந்து விட்டு வெளியில் வந்தான்.

மலர் டீ கொடுக்க ஒரு சில நொடி யோசித்து விட்டு டீ குடித்தான்.

மலர் நந்தாவை வரவேற்று விட்டு பின் கட்டிற்கு சென்றவர். தன் கணவனுக்கு அழைத்து “உன் மக ஏதோ பெரிய வேலை பார்த்துட்டு இருக்கா போல “மாமா.

நந்தா தம்பி வந்திருக்காங்க என்றவுடன் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்த கண்ணன் ஒரு சில தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு வந்திருக்க .

அதில் தட்டில் சிலது எடுத்து வைத்திருக்க .

சம்பிரதாயத்திற்கு ஒன்றை மட்டும் எடுத்து வாயில் போட்டவன் சரிக்கா எனக்கு வேலை இருக்கு என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் கிளம்பி விட்டான் .

அவன் கிளம்பிய பிறகு  தியா ஹாலில் நின்று கொண்டிருக்க கண்ணன் தான் பேச செய்தார்.

“எல்லாரும் எந்த நேரமும் வெட்டியா சுத்திட்டு இருக்க மாட்டாங்க”.

வேலைக்கு நடுவுல நமக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்காங்கனா அவங்க நமக்கு எவ்ளோ இம்பார்ட்டன்ஸ் கொடுத்து இருக்காங்கன்னு நம்மளே புரிஞ்சுக்கணும்.

“கல்யாணம் மட்டும் பண்ணிட்டா போதாது ,எல்லாத்துலயும் விவரம் இருக்கணும்”.

“நல்லது கெட்டது பழகிக்கணும்”.

“ஒரு குடும்பத்தை எடுத்து நடத்தணும்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் ,அதுக்கு ஏத்த மாதிரி வாழ பழகணும்”.

இன்னும் சின்ன புள்ளை இல்லை.எந்த எந்த  விஷயத்தில் எப்படி நடந்துக்கணுமோ அப்படி நடந்துக்கணும்.

  அப்படி தான் வளர்த்திருக்கோம் என்று நினைக்கிறேன் என்றவர்
தன் மகளை பார்த்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் பின் கட்டிற்கு முகம் கை கால் கழுவச் சென்றுவிட.

தியாவிற்க்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது வேறு எதுவும் பேச தோன்றவில்லை.

ரூமுக்கு சென்று கதவை சாற்றிக் கொண்டாள். இரவு வரை அவள் யோசிக்கட்டும் என்று விட்ட மலர் .

8:00 மணி போல் அவளை சாப்பிட அழைக்க ரூமுக்கு செல்ல .

தனது அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு சாரி மா என்றாள்.

உங்க அப்பா சொன்னது தான் தியா  நீ ஒன்னும் சின்ன பொண்ணு இல்லைன்னு உனக்கும் புரியும் என்று நினைக்கிறேன் .

இதற்கு மேல் நான் சொல்றதுக்கு எதுவும் இல்லை

” இது உங்க வாழ்க்கை அதுல நல்லதோ கெட்டதோ நீங்க தான் பாத்துக்கணும்”

அதுக்கு மேல பேசுறதுக்கு இங்க யாருக்குமே உரிமை இல்லை .

“பெத்தவங்களாக இருந்தாலும் புருஷன் பொண்டாட்டி விஷயத்துல மூணாவது மனுஷங்க தான் “.

இதுக்கு மேல எதுவும் எடுத்து சொல்ல முடியாது.

உன் கோபத்தை அவர்  கிட்ட காட்டாதன்னு சொல்ல மாட்டோம்.

“இடத்துக்கு ஏத்த மாதிரி ,சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி தான் நடந்துக்க பழகணும் “என்று விட்டு மலர் கையோடு சாப்பிட அழைத்து சென்று ஊட்டியும் விட .

தன் தந்தையை ஒரு சில நொடி பார்த்தவள் .

“எனக்கு மெச்சூரிட்டி இருக்கு ,எங்க எப்படி நடந்துக்கணும் தெரியும்” என்று சொல்லிவிட்டு வேறு எதுவும் பேசாமல் சாப்பிட்டுவிட்டு ரூமுக்குள் வந்து அடைந்து கொண்டாள்.

9:00 மணி போல் நந்தா போன் செய்ய முதல் ரிங் கிலே போன் எடுத்து இருந்தாள் .

“என்னடி போன கையிலே வச்சுட்டு சுத்துறியா ?”இல்ல.

“நீங்க போன் பண்ணுவீங்கன்னு தான்” என்றாள் .மெதுவாக குரலை தாழ்த்தி .

“ஏன் நீ பண்ணா எடுக்க மாட்டேனா ?இல்ல மேடமாள  பண்ண முடியாதோ ?”என்று சிரித்துக் கொண்டே  கேட்டான்.

வேலை  விஷயமா போயிருந்தன்னு சொன்னீங்க இல்ல .அதனால தான் நான் கூப்பிடல.

ஒன்னு புரிஞ்சுக்கோ தியா “எவ்வளவு வேலையா இருந்தாலும் போன் எடுக்க மாட்டேன்னு கிடையாது “சரியா ?

வேலையா இருந்தா வேலையா இருக்கேன்னு  நான் போன் எடுத்து சொன்னா தான தெரியும்.

நான் வேலையா போயிருந்தாலும் கூட ஒன்னுக்கு ரெண்டு முறை அழைத்தால் எடுக்க தான் செய்வேன். சரியா .

ஒரு முறை கூப்பிட்டிருந்தாலும் எடுத்து என்ன விஷயம் கேட்டு இருப்பேன் .

“நீ பேசுவதை  பொருத்து தான் அது முக்கியமான விஷயமா சாதாரணமான விஷயமானு எனக்கும் தெரிய வரும்”.

அதுக்கப்புறம் தான் எனக்கு வேலை இருக்கு நான் அப்புறமா கூப்பிடுறேன் என்று சொல்லிட்டு வைப்பேன்.

பேசணும்னு தோணும் போது போன் பண்ணு அவ்வளவுதான் சொல்ல முடியும் .

“யோசிச்சு யோசிச்சு பேசினா அதுல எங்க டி இருக்க உறவு” என்றான்.

அவனிடம் திரும்ப வாதாட விரும்பாமல் ,சரி என்றாள்.

“சாப்டியா?”

சாப்பிட்டேன் என்றாள் .

“பொய் சொல்றியா ?உண்மைய சொல்லுடி “என்றான்.

“வேணும்னா உங்க மாமியாருக்கு என்று விட்டு உங்க அக்காவுக்கு போன் பண்ணி கேளுங்க”.

“அவங்க தான் ஊட்டு விட்டாங்க “என்றாள்.

“சிரித்துக் கொண்டே சரி டி “என்றான்.

“நீங்க சாப்டீங்களா?”

உண்மையா என்றாள்.

“பொய் சொல்லாம உண்மையா சாப்பிட்டேன் டி “.

ஏன்? நீ உங்க அண்ணன் கிட்ட பேசல போல .

மூஞ்சை தூக்கி வச்சுட்டு சுத்துறான் . அக்கா கிட்ட கம்ப்ளைன்ட் வேற பண்ணிட்டு இருக்கான் என்றான்.

அச்சோ …என்று தலையில் கை வைத்தாள் .

அடுத்த நிமிடம் அவன் வீடியோ காலில் வந்து இருக்கு .

ப்ளீஸ் ப்ளீஸ் அண்ணா கிட்ட கொஞ்சம் போன் குடுங்க என்றாள் .

அவளிடம் பேசி கொண்டே வெளியே போன் எடுத்துட்டு வர .

அம்மாவும் மகனும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

நந்தா உதயாவிடம் போனை நீட்ட முதலில் தியாவை பார்த்து முறைத்தான்.

” உனக்கு அவ்ளோ ஆயிடுச்சில்ல.. உன் புருஷன் வந்து கூட்டிட்டு போன உடனே நான் உனக்கு வேண்டாம் இல்லை “என்றான்.

அவன் அப்படி கேட்டவுடன் நந்தா தனது மச்சானை பார்த்து முறைத்து விட்டு சிரித்து விட்டான் .

தியா காதில் கை வைத்து சாரி சாரி சாரி  அண்ணா.

அவரை பார்த்ததால உங்களை மறக்கவில்லை என்றாள்.

“அது வேற “என்று இழுத்தாள்.

“உன் புருஷனோட சண்டைனா உன் புருஷன் கிட்ட சட்டை போடு” .

நான் என்ன பண்ணேன் என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு உதயா கேட்க .

இங்கு நந்தா” பக் “என்று சிரித்து விட்டான்.

“இப்படி பாவமா முகத்தை வச்சிட்டு பேசுனா உன் தங்கச்சி உன்ன நம்பிடுவாளா ?”

“ரெண்டு பேரும் கூட்டு களவாணி தான் டா “எனக்கே வா என்று விட்டு கிச்சனுக்கு சென்றான்.

உதயா தனது மாமாவை முறைத்துவிட்டு ,தியாவை முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *