நந்தா அவளை பார்க்க.
“அவள் தன்னை மிரட்சியோடு பார்ப்பதை பொறுக்க முடியாமல் ,தான் போட்டிருந்த டி-ஷர்டை கழட்ட” .
வேகமாக கண்ணை மூடிக்கொண்டு என்ன பண்ணிட்டு இருக்கீங்க .
“நான் உங்ககிட்ட கேட்ட உரிமை இது தான் நினச்சீங்களா “என்று அழுகை உடனே கண்ணை மூடிக்கொண்டு கேட்க .
வேகமாக அவள் கண்ணில் இருந்து கையை விலக்கி விட்டு அவளது கையை தன் நெஞ்சில் படர விட்டான் .
“ஒரு சில நொடி அவன் தான் உரிமை என்று கேட்டவுடன் கணவனாக நெருங்க நினைக்கிறானோ?” என்று எண்ணியவள்.
அவனது நெஞ்சில் கை வைத்து தடவுவதை உணர்ந்து அவனது நெஞ்சில் இருக்கும் ரோமங்கள் கையில் உரச ஒரு சில நொடிகளுக்கு பிறகு கண்ணை திறந்தாள்.
அவள் கண் திறக்கும் வரை அமைதியாக இருந்தவன்.
அவளையே பார்த்துக் கொண்டிருக்க .
தன் கையிருக்கும் திசையை பார்த்தவள். அங்கு “தியா என்று பச்சை குத்தி” இருப்பதை பார்த்துவிட்டு .
“இது இது எப்போ என்று திக்கி திணற” .
“நீ முழுசா என் மனசுல வந்துட்ட டி ” போதுமா? .
நீ என்கிட்ட சண்டை போட்டுட்டு பேசாம இருந்த இல்ல .
உன்ன கூட உங்க வீட்ல விட்டுட்டு கிளம்பினேன் இல்ல .அன்னைக்கு குத்துனது போதுமா? .
அப்ப கூட நீங்க என்கிட்ட சொல்லல என்று வேகமாக கேட்க .
“இவ்ளோ நேரம் இந்த சவுண்டு எங்க டி போச்சு “என்ற முறைப்புடன் கேட்டான்.
“ஆமாம் அப்படி தான் வரும்”.
இவ்வளவு நாளா என்கிட்ட நீங்க சொல்லலையே…
“நீ இல்லாத போது தாண்டி எனக்கு முழுசா நீ எனக்குள்ள இருக்க என்ற உணர்வே வந்துச்சு “போதுமா ?.
அதுக்காக ,”நான் இல்லனா தான் உங்களுக்கு என் மேல உணர்வு வருமானு கேட்டு சண்டைக்கு வந்து நிற்காதே “.
“உன் கழுத்துல தாலி கட்டின உடனே எனக்கு உன் மேல லவ் வந்துருச்சுனு நினைக்காத “.
அப்படி உன் மேல எனக்கு ஒரு உணர்வு வந்து இருந்தா. “அது உன் கழுத்துல நான் தாலி கட்டிட்டேன் என்ற ஒரே காரணத்துக்காக பொண்டாட்டியா லைஃப் லாங் உன் கூட தான் வாழ்ந்து ஆகணும் அப்படின்றதுக்காக வந்த உணர்வா மாறிடும் டி”.
ஆனா,”அது அப்படி இல்ல”.
எனக்குள் நீ எப்படி வந்த எல்லாம் எனக்கு சொல்ல தெரியல .
அதற்கெல்லாம் காரணம் என்கிட்டே இல்ல .
உண்மையாவே நீ எப்படி எனக்குள்ள வந்தனுலாம் எனக்கு தெரியாது.
நான் போன் பண்ணா அப்போ நீ போன் எடுக்காம இருந்த அப்போதான் எனக்கு “உன்னை இறுக்கி அணைச்சுக்கணும் போல தோணுச்சு “.
“என் கை வளைவுக்குள்ளே உன்ன வச்சுக்கணும்னு தோணுச்சு ” .
“எனக்கு சொல்ல தெரியலடி” .
“என்னோட ஃபீலிங்ஸ்க்கு கொஞ்சம் மதிப்பு கொடு டி “என்ற உடன் வேகமாக அவனை விட்டு விலகி அவனது கண்ணை பார்த்தாள்.
நீ இன்னும் ” சின்ன புள்ள இல்லனு நினைக்கிறேன் டி” என்றவுடன் வேகமாக அவன் பச்சை குத்தி இருந்த இடத்தில் தனது முதல் முத்திரையை பதித்து இருந்தாள்.
அவனது உடலில் மின்சாரம் பாய்ந்தது போல உணர்ந்தவன் . அவளை விட வேகமாக காற்று புகாத அளவிற்கு அவளை இருக்கி அணைத்தான்.
ஒரு சில நொடி அவனது அணைப்பில் இருந்து விட்டு அவனை விட்டு விலகி அவன் நெஞ்சினிலே குத்து செய்தாள் .
“வலிக்குது டி “என்றான்.
அவனை முறைத்து பார்த்துவிட்டு அந்த பெயரை தடவிக் கொண்டிருக்க.
” இப்ப வாச்சு நம்புவியா ?இல்ல, உனக்கு நான் எப்படி புரிய வைக்கணும் டி” என்றான்.
“போயா வாத்தி” என்று சிரித்தாள்.
அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
எதுக்கு பச்ச குத்தி இருக்கீங்க வலிக்கும் இல்ல. இப்படி செஞ்சா தான் நான் உங்களை நம்புவேன்னு சொன்னேனா என்றாள்.
எனக்கு ஏதோ குத்தனும்னு தோணுச்சு குத்தினேன் அவ்வளவுதான்.
அப்போ அன்னைக்கு வீட்டுக்கு உள்ள வந்துட்டு போக சொன்னதுக்கு எனக்கு வேலை இருக்குன்னு சொன்னீங்க என்றாள்.
வேலையை முடிச்சிட்டு தாண்டி போய் குத்தினேன் .”இந்த வேலையை பார்க்க போல டி” .
“அப்போ இது உங்களுக்கு முக்கியம் இல்ல “என்றாள்.
கையெடுத்து கும்பிட்டவன் “பொண்டாட்டி னா கொஸ்டின் கேட்பாங்க ன்னு சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன்”.
“ஆனா, இப்ப தாண்டி உன்னை நேரில் பார்க்கிறேன்” என்ற உடன் தியா சிரித்து விட்டாள் .
நந்தாவும் சிரித்து விட்டான்.
அதன் பிறகு ,இருவரும் பல கதைகள் பேசிவிட்டு தூங்கிவிட்டார்கள்.
நாட்கள் அழகாக சென்றது. ஒரு வாரத்தில் நிச்சயமும் தனா வீட்டிற்குச் சென்று சிம்பிளாகவே செய்துவிட்டு வந்திருந்தார்கள் .
மூன்று மாதத்தில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு வந்திருக்க .
ஒருநாள் மாலை வேளையில் காலேஜ் முடிந்து வந்திருந்தபோது வீட்டில் இருக்க ஒரு மாதிரி இருக்கு பெரியம்மா நம்ம ரெண்டு பேரும் “கோவிலுக்கு போயிட்டு வரலாமா? “என்று கேட்டாள்.
சரி என்று தேவி தியாவை கோவிலுக்கு அழைத்து சென்றிருந்தார் .
இருவரும் சாமியை தரிசனம் செய்துவிட்டு கோவிலை வளம் வந்துவிட்டு ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தார்கள்.
அப்பொழுது தியாவிற்கு ஃபோன் வந்திருக்க.
பெரியம்மா ஒரு நிமிஷம் என்று விட்டு தன்னுடைய தோழியிடம் போனில் பேசிக்கொண்டு இருந்தாள் காலேஜ் விஷயமாக .
அப்பொழுது கோவிலுக்கு வந்திருந்த தியாவின் அத்தை சரோஜா தேவியை பார்த்துவிட்டு தேவியின் அருகில் சென்று “என்ன டி கோவில்ல உட்கார்ந்து இருக்க.”
“உன் தம்பி பொண்டாட்டி உன்னை வீட்டை விட்டு துரத்தி விட்டுடாளா ?”என்று ஏளனமாக கேட்க.
தேவி குரலை வைத்தே யார் என்று கண்டுபிடித்தவர் திரும்பி சரோஜாவை பார்த்து சிரித்து விட்டு.
” கோவிலுக்கு வந்தா வீட்டை விட்டு துரத்திட்டாங்க அதனால இங்க வந்து உட்கார்ந்து இருக்கணும்னு அர்த்தமா ?”
“சாமி கும்பிட வரக்கூடாதா ?.”
அப்போ “உன்னோட பையன் உன்னை வீட்டை விட்டு துரத்தி விட்டானா? ” அதான் இங்க வந்து இருக்கியா ? என்றவுடன்.. ஏய் என்று புடவையை இடுப்பில் சொருகிக்கொண்டு சரோஜா சண்டைக்கு வர .
“உனக்கு சொன்னா வலிக்குதோ ?”என் தம்பி பொண்டாட்டி அப்படிப்பட்டவ கிடையாது .
அவ அம்மா அவளுக்கு இப்படிப்பட்ட பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுத்தும் வளர்க்கல.
இருந்தாலும் ,”உனக்கு நடு ரோடு தான் டி “.
“ஒரு நாள் என் தம்பி நிக்க வச்ச மாதிரி உன் தம்பி உன்னை நிக்க வைப்பான் பார்த்துட்டே இரு “என்றார் சரோஜா.
தேவி சிரித்த முகமாகவே உன் தம்பி போல எப்பையும் என் தம்பி எந்த ஒரு சூழ்நிலையிலும் அப்படி வர விடமாட்டான் .
போதும் நீ பேசுன வரைக்கும். “நீ பேசறது அமைதியா கேட்டுட்டு இருக்க நான் ஒன்னும் மலர் கிடையாது” .
சரியா என்ற உடன் ..அடிக்க கை ஓங்கி கொண்டு வர.
சரோஜாவின் கையை முறித்த தேவி கல்யாணத்துக்கு முன்னாடி தான் உன் தம்பி என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா சொத்து கிடைக்காதுன்னு ஏதாவது பிளான் பண்ண .
அதுக்கு ஏத்த மாதிரி என்று விட்டு உன் தம்பி என் வாழ்க்கையை விட்டு போயாச்சு.
அது 20 வருஷத்துக்கு முன்னாடி நடந்து முடிந்த கதை .
மலர் வாழ்க்கையில் இனியும் தலையிடலாம் என்று மட்டும் கனவு காணாத .
“அவ மகளே போதும் . உன்ன மொத்தமாக அடக்க”.
நீ அவ அம்மாவுக்கு பண்ண எந்த ஒரு கெடுதலும் அவளுக்கு தெரியாது .
தெரிஞ்சுதுன்னு வச்சுக்கோ அதுக்கப்புறம் இருக்கு உனக்கு என்று விரல் நீட்டி எச்சரித்தாள் .
“அந்த சில்லு வண்டு என்ன என்னடி பண்ணிடு வா “என்று சரோஜா வரிந்து கட்டிக்கொண்டு வர .
“அந்த சில்லு வண்டு தான் உன் காதுக்குள்ள புகுந்து எந்த அளவுக்கு குடைந்தது “என்று உனக்கே தெரியும் .
இன்னும் நீ அவ அம்மாவை படாத பாடு படுத்தினதோ அவ அம்மா கால்ல சூடு வச்சதோ .
நீ பெத்து போட்டு ரெண்டு புள்ளைங்களுக்கும் அவளை ஆயமாவா யூஸ் பண்ணதும் ,
இப்போ உன் தம்பிக்கு அவளை அதுவும் அவளுக்கு விருப்பமே இல்லாம அடாவடியா உன் தம்பிக்கு கட்டி வச்சதுக்கு காரணமே..
உன் தம்பியோட சொத்தை நீயே அடைய நினைச்சா உன்னோட கெட்ட புத்தி இது எத பத்தியும் அவளுக்கு இந்த நிமிஷம் வரைக்கும் தெரியாது.
உன்னோட கெட்ட புத்திக்கு நீ அனுபவிப்ப .
நான் ஏன் டி அனுபவிப்பேன். நான் அனுபவிக்க மாட்டேன் .நான் யாருக்கும் கெடுதல் நினைக்கல.
ஆமா ,உண்மைதான் நீ யாருக்கும் கெடுதல் நினைக்கில தான் .
ஆனா, “அப்படி உனக்கு கெடுதல் நினைச்சவன் .அதுவும் உனக்கு துரோகம் செஞ்சவன் வீட்ல தாண்டி பொண்ணு எடுத்து இருக்க “.
நான் என் தம்பிக்கு அவன் மனசுக்கு புடிச்ச பொண்ண என் தங்கச்சி மலரோட பொண்ண கட்டி இருக்கேன் .
நீ நினைக்கிற மாதிரி இல்ல என்றாள்.
வேகமாக ,சத்தமாக சிரித்த சரோஜா அதையும் நான் பார்க்க தாண்டி போறேன் என்றார் .
வேகமாக போனை வைத்துவிட்டு வந்த தியா தனது பெரியம்மா யாரோட உட்க்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்தவள் ஓடிவந்து நின்றாள் .
அங்கு சரோஜாவை எதிர்பார்க்காத தியா சரோஜா கையை பின்பக்கமாக முறுக்கி .
எங்க பெரியம்மா கிட்ட குரலை உயர்த்தி பேசினா என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.
ஆமாம் ,”உனக்கு என்ன இந்த பக்கம் வேலை ?”
கையை விட்டு டி என்று விட்டு “என் பையனுக்கு பொண்ணு தேடிட்டு இருக்கேன் டி “
இவ கூட சேர்ந்து கூத்தடிச்சிட்டு இருக்க . “இவ கூட சேர்ந்தா நல்ல அனுபவிப்ப ,உங்க அம்மாவோட வாழ்க்கை தான் குட்டி சுவர் ஆகும்” என்று சொல்ல
சிரித்த தியா” எது எங்கம்மா வாழ்க்கையை எங்க பெரியம்மாவும் நானும் அழிக்க பொறோமா?” நல்ல கதையா தான் சொல்ற .
“இவ்வளவு நேரம் எங்க பெரியம்மா பேசுனது எல்லாம் உண்மையா ?”இவ்வளவு நாளா எனக்கு யாரும் இந்த விஷயத்தை சொல்லல .
ஏற்கனவே என் வாழ்க்கையில் நடந்த பல விஷயத்தை கோவிலில் தான் ஏதோ ஒரு சூழ்நிலையில் தெரிஞ்சுகிட்டேன் .
இப்பையும் அதே மாதிரி தான் வந்திருக்கு என் நிலைமை .
“அப்போ எங்க அம்மாவ நீதான் என் அப்பாவுக்கு கட்டி வச்சிருக்க சரியா ?”அதுவும் சொத்துக்கு ஆசைப்பட்டு .
அப்போ பெரியம்மாவை என்று விட்டு அமைதியாகி விட.
இல்லை என்பது போல் தேவி தலையாட்டினார். “உன்னோட பெரியம்மாவை விட்டு வெளியே வந்தது உங்க அப்பனோட சந்தேக புத்தி” என்று சரோஜா சொல்ல.
ஒத்துக்குறேன். “உன் கூட பிறந்தவர் இல்லையா ?கொஞ்சம் உன்னோட புத்தியும் ஒட்டிக்கிட்டு இருக்குன்னு “நினைக்கிறேன் .
சந்தேக புத்தி தான். தப்பு தான் .பச்ச துரோகம் தான் இல்லன்னு சொல்ல மாட்டேன் .
அவர் பண்ணது தப்பு .ஆனா ,அப்படி அவர் நிக்கிற சூழ்நிலைல கூட ..
கூட பொறந்த அக்காவா நீ இருந்திருந்தா அவருக்கு நல்ல புத்தி எடுத்து சொல்லி இருக்கணும் .
இல்ல ,உன்னால சொல்ல முடியலனா கூட ..அமைதியா விட்டு இருந்து இருக்கணும் .
“எங்க அம்மாவ கட்டி வைக்கணும்னு ஆசைப்பட்டு இருக்க.”
அதுவும் சொத்துக்கு ஆசைப்பட்டு .
இன்னொரு விஷயம் உன் வீட்டில் எங்க அம்மாவை வேலைக்காரியா நடந்திருக்க.
“உன் புருஷன் கூட பொறந்திருந்தா எங்க அம்மா உனக்கு வேலைக்காரி ஆயிடுவாங்களா ?”
உன் காசு பணம் யாருக்கு வேணும் .எனக்கும் வேணாம் .எங்க அம்மாவுக்கும் வேணாம் .
நீயே வச்சுக்கோ உங்க சொத்தை. “எங்க அப்பாவே எங்க அம்மாவை மகாராணி மாதிரி பார்த்துப் பாரு”.
இந்த நிமிஷம் வரைக்கும் மகாராணி மாதிரி தான் பார்த்திருக்கிறார் .
எனக்கு அவர் பண்ண விஷயம் பிடிக்கலதான் .அதுக்காக அவரை வெறுத்துட்டேன்னு கிடையாது .
அவர் வாழ்நாள் முழுவதும் அதுக்கான தண்டனை அனுபவிப்பார் .
அதையே தான் உனக்கும் சொல்றேன் .
எங்க பெரியம்மா நடு தெருவுல வந்து நிப்பாங்கன்னு சொன்ன இல்ல..
நீ உன் மகனுக்கு பெண் பார்க்க வந்திருக்கேன்னு சொன்ன இல்ல .
“உனக்கு வர மருமக நல்லவளா இருப்பா ? “ஆனா உன்னை நடுத்தெருவுல நிக்க வைப்பான்னு சொல்ல மாட்டேன் .
உனக்கான நீ பண்ணதுக்கான தப்புக்கு முழுசா அனுபவிப்ப.
உன் பையன் அனுபவிக்க வைப்பான்.
உன்னை கட்டிக்கிட்டு என்னோட மாமா தான் படாத பாடு படுறாரு நல்லாவே தெரியுது .
பெரியம்மா இவங்க கிட்ட எல்லாம் உங்களுக்கு என்ன பேச்சு வாங்க என்று கையை பிடித்து இழுத்துக் கொண்டு நகர்ந்தாள்.
“ஒரு நிமிடம் நின்று சரோஜாவின் கையை வேகமாக முறித்தவள் இன்னொரு முறை என் வீட்டு வாசப்படி பக்கம் கால் எடுத்து வச்சேன்னு வச்சுக்கோ” என் வீடுனு சொன்னது பொறந்து வீடும் தான் ,புகுந்த வீடும் தான் என்ன செய்வேன்னு தெரியாது .
நான் எதுவும் பண்ண மாட்டேன் .என் அப்பாவே போதும் என்று வேறு எதுவும் பேசாமல் வேகமாக கோயிலை விட்டு வெளியில் வந்து விட்டாள்.
அவள் வண்டியில் ஏறி உட்கார்ந்தவுடன் தன்னை மீறி அழுகை வந்து இருக்க .
தேவி அவளை அழைத்துக் கொண்டு சென்று நின்ற இடம் தியாவின் பிறந்த வீடு .
தியா ஒரு சில நொடி தேவியை பார்க்க .அவர் கண்ணை மூடி திறந்தவுடன் வேகமாக வீட்டுக்குள் சென்றாள்.
தேவி பின்னாடியே வண்டியை நிறுத்திக் விட்டு வீட்டுக்குள் வர .
மலர் அப்பொழுதுதான் இரவு சமைப்பதற்கு காய்கறிகள் அறிந்து கொண்டிருக்க .
தியா வேகமாக உள்ளே சென்றவள் மலரின் மடியில் தலை வைத்து படுத்து கொண்டாள் .
இத்தனை நாள் என்கிட்ட சொல்லல என்று கேட்க .
ஒன்றும் புரியாத மலர் .உதயா உடன் வந்து இருப்பாள் என்று பார்க்க .
அங்கு தேவி இருக்க தேவியை பார்த்தாள் .
தேவி ஒன்னும் சொல்லாமல் அமைதியாக இருந்த உடன் கண்ணம்மா என்று தன் மகளின் தலையை கோத.
அருவா மனையை நகர்த்தி வைத்துவிட்டு தன் மகளை பார்க்க.
வேகமாக எழுந்து உட்கார்ந்த “தியா மலரின் புடவையை லேசாக மேலே ஏற்றி பார்க்க”.
“என்னடி பண்ற “என்று கத்தினாள் மலர். கண்ணன் அப்பொழுதுதான் வீட்டிற்குள் வந்திருந்தார்.
மலரின் சூடு வைத்த தழும்பை வருடி விட்டு .. “என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல” என்றாள் அழுகையுடன்.
மலர் தேவியை பார்க்க கண்ணை மூடி திறந்தவுடன் தேவி அக்கா சொல்லி இருக்க மாட்டாங்க எனக்கு தெரியும் என்றவுடன் தியா.
நீ உங்க அத்தையை எங்க பார்த்த என்றார். தியா நடந்த அனைத்தையும் சொல்ல.
“முடிஞ்சதை நினைச்சா வாழ முடியாது” தியா.இப்பயும் சொல்றேன் என்னோட மாமா தப்பு செய்யலன்னு நான் சொல்ல மாட்டேன் .
அவர் செஞ்சது தப்புதான் .நம்பிக்கை துரோகம் தான் .அதுக்காக “நான் விரும்பினவர என்னால பெத்த மகளாக இருந்தாலும் உன்கிட்ட விட்டுக் கொடுக்க முடியாது டி”.
“நீ உன் புருஷனை எப்படி விட்டுக் கொடுக்க மாட்டியோ ?”அது மாதிரி தான் “என்னால என் புருஷனை யார் கிட்டையும் விட்டுக் கொடுக்க முடியாது “.
எனக்கும் நான் அந்த கூண்டில் இருந்து வெளியே வர இந்த கல்யாணம் அப்போ எனக்கு தேவை பட்டுச்சு அவ்வளவுதான் என்றார் .
கண்ணன் எதுவும் பேசாமல் அமைதியாக வீட்டுக்குள் வந்தார் .
தன்னுடைய பையை ஹாலில் வைத்துவிட்டு பின் கட்டிற்கு செல்ல .
ஒரு நிமிஷம் என்றாள் தியா. கண்ணன் நின்றார்.
இப்பவும் நீங்க செஞ்சது சரின்னு சொல்ல மாட்டேன் .
ஆனா,” என் அம்மாவை அந்த கொடுமைக்காரி கிட்ட இருந்து காப்பாத்துனதுக்கு நன்றி “என்று விட்டு போலாம் பெரியம்மா என்று தேவியின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு சென்று விட்டாள் .
போகும் தியாவையே மலர் ,கண்ணன் இருவரும் பார்த்துக் கொண்டு நின்றார்கள் .
இருவருக்கும் வருத்தம் தான் இருந்தாலும் ,இவை அனைத்தையும் கடந்து தான் வந்தாக வேண்டும் என்று எண்ணி தன் மகளையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
சைலன்ட் லீடர்ஸ் ப்ளீஸ் தங்களின் மேலான கருத்துக்களை கதையை படித்துவிட்டு என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களது கருத்துக்களே என்னை கதையை மென்மேலும் எழுத உதவிகரமாக இருக்கும்.
ஓரிரு வார்த்தைகளில் ஆவது உங்களது கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.