வீட்டிற்கு வந்ததிலிருந்து தியா ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்க .
உதயா தான் என்னம்மா ஆச்சு என்று கேட்க .
ஒன்னும் இல்ல டா என்று விட்டு அமைதியாக விட.
ஏதோ ஒன்று இருக்கிறது அவர்களாக சொல்வார்கள் என்று எண்ணி உதயாவும் அமைதியாகி விட்டான்.
அவனுக்கு கொஞ்சம் வெளியில் வேலை இருக்க சென்று இருந்தான் .
நந்தா காலேஜில் இருந்து வந்தவன் ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை தியாவை திரும்பி பார்த்தான் .
அவள் சாதாரணமாக இல்லை என்பதை உணர்ந்தவன் தன் அக்காவை பார்க்க .
தன் அக்காவும் எதுவும் சொல்லாமல் இருக்க .
எதுவும் பேசாமல் தன்னுடைய வேளையில் கவனத்தை செலுத்தினான்.
இரவு நாள் வரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு அவர்கள் ரூமுக்கு சென்றிருந்தார்கள்.
ரூமுக்கு சென்ற பிறகு தியா அமைதியாகவே படுத்து இருக்க .
“படிக்கிற வேலை இல்லையா டி “என்றான்.
“எந்த நேரமும் வாத்தியார சுத்தமா கொஞ்சம் மனுஷனா நடந்துக்கோங்க “என்றாள்.
நந்தா அவளது கையை தன் கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டு அவளை பார்க்க.
” வேகமாக அவன் நெஞ்சில் சாய்ந்தவள் நான் ஒன்னு கேட்பேன் உண்மையை சொல்லுவீங்களா ? “என்றாள்.
அவள் கண்ணை உற்றுப் பார்த்தவன் “என்ன விஷயம் “என்றான்.
மாலை கோவிலில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடிக்க
ஆமாம். இதெல்லாம் உண்மைதான் .
ஆனால் ,”இதெல்லாம் நான் உணர்வதற்கு கொஞ்சம் காலம் ஆச்சு” .
“அப்ப நானும் என் சின்ன பையன் தான் டி “என்றான்.
நான் அதை பத்தி கேட்கலை என்று விட்டு அமைதியாகி விட்டாள்.
“உங்க அப்பா மலர் அக்காவை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி மலர் அக்கா எங்க வீடு அதாவது இந்த வீடு தேடி வந்திருந்தாங்க “
இந்த வீட்ல தான் நாங்க இருந்தோம் .ஆனா இப்ப நிறைய ஆல்ட்ரேஷன் பண்ணி இருக்கு .
“மலர் அக்காவுக்கு அக்கா மேல எந்த வகையான சந்தேகமும் இல்லை”
உங்க அப்பா கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடியே மலரக்கா பத்தி எல்லா விஷயமும் அக்காவுக்கு தெரியும் .
மலர் அக்கா உங்க அப்பாவை கல்யாணம் பண்ணிக்க விரும்பல.
அவங்க உங்க அப்பா மேல ஆசைப்பட்டது உண்மைதான் .இருந்தாலும் ,உங்க புருஷனை என்று சொன்னாங்க .
அப்ப அக்கா தான் “இப்போ அவர் எனக்கு புருஷன் கிடையாது மலரு”.
“நீ கல்யாணம் பண்ணிக்கிறதும் பண்ணிக்காம இருக்கிறதும் உன்னோட விருப்பம் “.
ஆனால் , “நாங்க வேணாம்னு எங்களுக்கு தூக்கி போட்டு போன உறவு எங்களுக்கு வேணாம் “.
“சாதாரணமா தூக்கி போட்டு இருந்தா அது பெருசா தெரிஞ்சு இருக்காது” .
சந்தேகம் அது மனுஷன் உடம்புக்குள்ள புகுந்துருச்சுன்னா அது எந்த அளவுக்கு மனுஷனை பாதிக்கும் என்பதை நான் வாழ்க்கையில் பட்டே தெரிஞ்சிக்கிட்டேன் .
எனக்கு இனியும் அந்த வாழ்க்கை வேணாம் .
அக்கா உதயாவுக்காக என்று மலர் கேட்க .
“என் புள்ளையை தனி ஆள நின்னு ,ஒத்தையா நின்னு வளர்கிற அளவுக்கு என் மனதிலும் ,உடம்பிலும் தெம்பு இருக்கு “.
“இதே வயசுல தான் நந்தாவையும் எங்க அப்பா அம்மா விட்டுட்டு போனாங்க “
அப்போ ஒண்ணுமே தெரியாது .அப்படி இருக்கும் போதே நந்தாவை வளர்த்து ஆளாக்கி இருக்கேன்.
“இப்போ நான் அடிபட்டு அடிப்பட்டு பக்குவ பட்டவ என்னால உதயாவை வளர்க்க முடியாத என்ன ?” நான் பாத்துக்குவேன்.
“நீ உன்னோட லைஃப பாரு”. நான் ஒரே ஒரு விஷயம் தான் சொல்லுவேன் .
“எனக்காக நீ உனக்கான வாழ்க்கையை இழந்துடாத “உனக்கு கிடைக்கப் போறது நல்ல வாழ்க்கை தான் .
“எனக்கு தப்பா அமைந்துவிட்டது என்பதற்காக உனக்கும் தப்பா அமைஞ்சுராது “
“உன் அண்ணிகிட்ட இருந்து நீ வெளியே வரதுக்கும் சரி அதுதான் உனக்கு நல்ல வழி”.
இதுக்கு மேல உன்னோட வாழ்க்கை .நீ தான் முடிவு பண்ணனும் .
உன்னோட மாமா உன்னை பத்தி சொல்லி இருக்காரு .
உங்க அண்ணி உன்ன ரொம்ப கொடுமை படுத்துறதாவும், அடிக்கிறதாவும் .
ஆனால், அதில் இருந்து வெளியே வர வேண்டியது உன்னோட கையில தான் இருக்கு .
“இனியும் நீ அந்த சாக்கடையிலேயே வாழணுமா ?இல்ல அதிலிருந்து வெளியே வரணுமான்னு முடிவு பண்ண வேண்டியது நீதான் “.
“நீ அவரை கல்யாணம் பண்ணிக்கிறதால எனக்கு எந்த ஒரு வருத்தமும் கிடையாது” .
அதே மாதிரி உன் வாழ்க்கையில் எந்த ஒரு மூலையிலும் நான் வந்து நிற்க மாட்டேன்.
உங்க கண்ணுல என்னால முடிஞ்ச அளவுக்கு பட மாட்டேன் .
இத நான் உனக்கு வாக்காவே தரேன் .
உன்னோட வாழ்க்கையை பார்த்துட்டு நீ போ.
உனக்கும் ,எனக்கும் கூட இனி எந்த உறவும் இல்லை என்று கையெடுத்து கும்பிட.
ஒரு சில நொடி நின்ற மலர் சாஷ்டாங்கமாக தேவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு உதயாவை தூக்கி கொஞ்சி விட்டு .
இது அவரோட ரத்தம் தான் என்று எனக்கு தெரியும் .அவர் இல்லைன்னு எவ்வளவு வேணாலும் சொல்லலாம் .
உங்கள பத்தி எனக்கு தெரியும் .”நெருப்புன்னு சொன்னா வாய் சுற்றாது “.
“நீங்க நெருப்புக்கா “என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் சென்று விட .
மலர் என்று அழைத்த தேவி .
“எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் என்ன நிலைமையில் நிக்கிறேனோ அதேபோல யாரையும் நிக்க வச்சிடாத “.
“சின்ன சின்ன விஷயத்திலும் யோசிச்சு யோசிச்சு வாழ்ந்தால் ,அது வாழ்க்கையே கிடையாது “.
“உன்னுடைய நேசம் எந்த அளவுக்கு உண்மையோ ,இனி வாழ போற வாழ்க்கையும் அந்த அளவுக்கு உண்மையா இருக்கணும்” .
“உன் வாழ்க்கையை நீ பத்திரமா வச்சுக்கோ பாதுகாத்துக்கோ என்று தோளில் தட்டிக் கொடுக்க” மலர் தேவியை கட்டிக்கொண்டு நான் என்னோட மாமாவை பத்திரமா பாத்துக்குவேன்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் அவரை இழந்திட மாட்டேன்.
வார்த்தையும் விட்டுவிட மாட்டேன் என்று மலர் சென்று விட்டார்.
அதை இப்பொழுது நந்தா தியாவிடம் சொல்லி முடித்திருக்க .
நந்தாவை கட்டிக்கொண்டு அழ செய்தாள் .
“உங்களுக்கு அம்மா மேல கோவமே இல்லையா?” என்று கேட்க .
“அக்காவே கோப படல டி “நான் கோபப்பட்டு என்ன பண்ண.
அந்த நிமிஷம் அக்கா பேசும்போது எனக்கு கோவம் இருந்துச்சு.
ஏன் மலர் அக்காவை வெளியே போக சொல்லி துரத்தி கூட விட்டேன் .
ஆனால் ,அப்போ எனக்கு எதுவும் புரியல .
“அந்த வயசு எனக்கு என் அக்கா இந்த நிலைமைக்கு வர இவங்களும் ஒரு காரணம் அப்படின்னு மட்டும் தான் தோணுச்சு “
போக போக மெச்சூரிட்டி வர வர அவங்க மேல மட்டும் நம்ம முழுசா தப்பு சொல்லிட முடியாதுன்னு உணர்ந்தேன்.
அதனால அமைதியாகி விட்டேன் என்றான்.
என்னோட அப்பா என்று விட்டு அமைதியாக விட .
அவர பத்தி பேச எனக்கு எதுவுமே இல்லையே .
நான் யோசிக்கல .அக்காவும் சரி ,நானும் சரி இந்த நிமிஷம் வரைக்கும் அவர பத்தி யோசிக்கல.
நான் அவரை இத்தனை வருஷம் கழிச்சு பார்த்தது உங்க பிறந்தநாள் அன்னைக்கு கோயில்ல தான் .
அக்காவும் கூட நீ ஏஜ் அட்டென்ட் பண்ணப்ப உன்னை வீட்டுல விட வந்த அப்போ பார்த்தது தான் .
அதனால நான் அக்கா கிட்டையும் கோபப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று விட்டு இத பத்தி இனிமே யோசிக்காத டி என்றான்.
அவளும் அதன் பிறகு இதைப் பற்றி பேசவில்லை.
நாட்கள் அழகாக சென்றிருந்தது. இருவரது வாழ்க்கையும் மோதலும் காதலுமாக சென்றது .
கணவன் மனைவியாக வாழ்ந்தார்களா? என்று கேட்டால் மனதளவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .
அவ்வபோது அவனை வாத்தி என்று ரூமுக்குள் அழைத்து திட்டவும் செய்வாள் அடிக்கவும் செய்வாள்.
வெளியில் வாங்க போங்க என்பதோடு நிறுத்து கொள்வாள் .
எப்போதாவது சார் வாத்தி என்ற அழைப்பு ஹாலில் இருக்கும் போதே வந்துவிடும் .
உதயா திருமணத்திற்கு தேவையான அனைத்தும் ஒவ்வொன்றாக நடந்தேறியது .
நாட்கள் வேகமாக செல்ல. துணி எடுக்க சென்றார்கள் .
தனா உங்களுக்கு எந்த புடவை புடிச்சிருக்கோ நீங்களே எடுத்துட்டு வந்துருங்க நான் வரல என்று சொல்லிவிட.
அவளை மேற்கொண்டு யாரும் வற்புறுத்தவில்லை .
புடவையும் இன்னும் ஒரு சில துணிகளும் எடுத்துக் கொண்டு வந்திருந்தார்கள்.
அவர்களாகவே பிளவுஸும் தைத்து வைத்திருந்தார்கள். நாட்கள் மாதங்களாக சென்று இருந்தது .
உதயா தனா இருவருக்கும் திருமண நாளும் வந்திருந்தது.
தனாவின் சித்தி என்னதான் ஆயிரம் தடங்கல்கள் செய்தாலும் அனைத்தையும் கண்டும் காணாமல் தனா அமைதியாக இருந்தாள்.
தேவி, உதயா ,நந்தா தியாவும் கூட கண்டும் காணாமல் இருந்து விட்டார்கள் .
கண்ணனை இந்த கல்யாணத்தில் யாரும் பெரிதாக எதுவும் யோசிக்கவில்லை .
திருமணத்திற்கு நந்தாவும் ,தியாவும் குடும்பத்தோடு வந்து பத்திரிக்கை வைத்துவிட்டு என்னுடைய அண்ணனோட கல்யாணத்துக்கு வந்திருங்க என்று தியா சொல்லி இருக்க .
கண்ணனுக்கு உள்ளுக்குள்ளே வலிக்க செய்தாலும் ,இது தனக்கான தண்டனை என்று அவராகவே ஏற்றுக்கொள்ள பழகிக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
தியாவும் நந்தாவும் உதயாவிற்கு பெற்றவராக இருந்து அனைத்து சடங்குகளையும் செய்ய.
தனாவின் சித்தி முனுமுனுத்தாலும் இறுதியாக நந்தாவே வந்து தனா இந்த வீட்டை உங்க பேர்ல எழுதி கொடுத்திடுவா .
இல்ல உங்க பசங்க பேர்ல எழுதி கொடுத்திடுவா .
அவ கல்யாணத்துல அவளுக்கு சித்தியாவோ இல்ல ,அம்மாவோ வந்து எல்லாத்தையும் நல்லபடியா கல்யாணத்தை நடத்தி கொடுத்திட்டு போங்க என்று மிரட்டி இருக்க .
அந்த வீட்டை தன் பெயரிலோ இல்லை தன் பிள்ளைகளின் பெயரிலோ இருந்தாள் சரி என்று எண்ணிய தனாவின் சித்தி சிரித்த முகமாகவே ஊரின் முன்னாடி வந்து தனாவை தாரை வார்த்து கொடுத்தார்.
உதயா அனைத்து சடங்குகளும் ஆரம்பம் ஆகும் போதே திரும்பி பார்த்தவன் .
மாமா தப்பா எடுத்துக்காத அம்மாவை என்று விட்டு அமைதியாகி விட .
தனது மச்சானை பார்த்த நந்தா சிரித்த முகமாகவே தனது அக்காவை அருகில் நிற்க வைக்க .
தேவியே அனைத்து சடங்கையும் முன்னிறுத்தி திருமணத்தை நடத்தி முடித்தார்.
உதயா தனா இருவரது திருமணமும் நல்ல முறையில் நடந்தேறியது .
இருவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல.
“நாத்தனாராக தியா ஆலம் எடுத்தாள்”.
“உதயா தனது பாக்கெட்டில் கையை விட்டு நூறு ரூபாய் எடுத்து போட”.
தனா உதயாவை பார்த்து முறைக்க.
“100 ரூபாயா இருந்தாலும் என் அண்ணனோட சொந்த உழைப்பு டி “என்று சொல்லி சிரித்து விட்டு.
அந்த பணத்தை நந்தாவின் கையில் திணித்துவிட்டு ,ஆரத்தியை வெளியே கொட்டி விட்டு இருவரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்று விளக்கேற்ற வைத்தாள் .
அடுத்து பாலும் பழமும் கொடுக்க. தனா பட்டு புடவை அணிந்து கொண்டு இருக்க அசவுரியமாக இருக்க நெளிந்து கொண்டே இருந்தாள் .
அவளது அருகில் வந்த தியா அந்த ரூம்ல போயிட்டு டிரஸ் மாத்திக்கோ .
உனக்கு தேவையான டிரெஸ் எல்லாம் இருக்கு .
“உங்க வீட்டிலிருந்து எதும் எடுத்துட்டு வரல தனா” என்றாள்.
அவளும் எதுவும் பேசாமல் அவள் கை காண்பித்த ரூமுக்கு சென்று அங்கு இருந்த புடவையில் சாதாரண புடவை ஒன்றை கட்டிக் கொண்டுவர .
“அங்க சுடிதார் இருந்துச்சே டி போட்டு இருந்திருக்கலாம் இல்ல “என்று கேட்க.
இன்னிக்கு ஒரு நாள் மட்டும் கட்டிக்கிறேன் புடவையை. ஒன்னும் பிரச்சனை இல்ல என்றாள்
சரி என்று விட்டு அமைதியாகி விட்டாள் .
அப்பொழுது” நந்தா தான் சிரித்த முகமாக அண்ணின்னு கூப்பிடனும்” .
“வார்த்தைக்கு வார்த்தை வாடி போடின்னு பேசிட்டு இருக்க” என்றான் .
தியா தனது காதல் கணவனை தன் அன்புள்ள வாத்தியை முறைத்துக் கொண்டு நின்றாள்.
தனா எதே.. என்று அதிர்ச்சியாகி நந்தாவை பார்த்தாள்.