Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 58

மீண்டும் மலரும் உறவுகள் 58

நந்தா ரூமுக்குள் சென்று சிரித்துவிட்டு அவளை கட்டி அணைக்க.

திமிறி கொண்டே இருந்தாள்.

” கொஞ்ச நேரம் அமைதியா இருடி”.

மானத்த வாங்கிட்டு என்றான் .நான வாங்கினேன் .நீ தான் மாமா அவ்வளவு வேகமாக வெளியே போன.

நானா உன்னை வெளியே போக சொன்னேன் என்றாள்.

அது சரி கேடி என்று அவளது காதை பிடித்து திருகியவன்  . அவளது நெற்றியில் முத்தமிட்டான் .

பிறகு “அவளை விட்டு தள்ளி நின்று அவளது தாடையை தன் கைகளில் ஏந்தி கொண்டு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்” .

“அவள் கண்ணை மூடி நின்றாள்” .

“அடுத்த நொடி அவளது கண்ணில் இதழ் பதித்துவிட்டு அவள் காதோரம் ஏதோ கிசு கிசுத்து விட்டு அவள் காது மடலை கடித்தான்”.

தியா வேகமாக கண்ணை திறந்தவள் . யோவ் வாத்தி வலிக்குது டா என்று கத்தினாள்

“கத்தாத டி என்று அவளது மூக்கை கடித்து விட்டு மூக்கை பிடித்து ஆட்டிக் கொண்டு மூக்கு மேல உனக்கு கோவம் வருது டி” என்றான்.

ஆமாம்,” உங்களுக்கு வரல பாரு”.

இந்த  “வாய் கொழுப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல டி “முதலில் இதை குறைக்கணும் என்று அவளை விஷமமாக பார்த்து சிரித்துக் கொண்டே .

“வேகமாக அவளை கட்டி அணைத்து கட்டிலில் தள்ளி இருந்தான்” .

அடுத்த நொடி அவளையே பார்த்துக் கொண்டிருக்க. தி”யா கண்ணடித்து சிரிக்க தன்னையும் மீறி அவள் மேல் படர்ந்து இருந்தான் “.

“கேடி உனக்கு இந்த கூச்சம் நாச்சம் இதெல்லாம் கொஞ்சம் கூட இல்லையா டி”  என்று விட்டு தன் வேலையில் இறங்கி இருந்தான் .

“உன்கிட்ட எனக்கு என்ன டா  மாமா கூச்சம் என்று சொல்லி அவனது தாடையில் கடித்து இருந்தாள்”

அங்கு அழகான தாம்பத்தியம் அரங்கேறியது.

இறுதியில் அவளை விட்டு விலகியவன். ” இப்போ சந்தோஷமா இருக்கியா டி என்று அவளது தோளில் சாய்ந்து கொண்டு கேட்டான்”.

“ஏன்,  சாருக்கு சந்தோஷம் இல்லோயோ “என்றாள்.

“கேடி என்று அவளது நெற்றியோடு நெற்றி முட்டி விட்டு நெற்றியில் முத்தமிட்டான்”.

“தியாவுமே அவனது நெஞ்சில் படுத்துக்கொண்டு அவனது நெஞ்சில் இருக்கும் ரோமங்களை பற்களால் கடித்து இழுத்து  விளையாடி கொண்டிருந்தாள்”.

சும்மா படு டி என்றான். அடுத்த பத்து நிமிடத்தில் அவளிடம் பேசிக்கொண்டே இத்தனை நாள் தொலைத்திருந்த தூக்கத்தை மொத்தமாகவும் , இன்று அவளுடன் கூடிய கூடலில்  ஏற்பட்ட சந்தோஷத்திலும் தூங்கி இருந்தான் .

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் “அவன் நெற்றியில் தானாக முன்வந்து தனது முதல் முத்திரையை பதிக்க” .

அவள் பதித்து அடுத்த நொடி .
கண்ணை திறந்தவன்.

” முதல் முறையா நீயே கொடுத்திருக்க டி “என்றான்.

” நீ இன்னும்  தூங்கலையா ?மாமா  “என்றாள் .

கேடி பேச்சை மாத்தாதே..”உனக்கு இப்பதான் கொடுக்கணும்னு தோணுது இல்ல”,ஆனா அதையும் தாண்டி என்று விட்டு எதுவும் பேசாமல் அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான் .

அவளுமே சந்தோஷத்தில் தூங்கி இருந்தாள்.

இருவருமே காலை 10 மணி போல் எழுந்து வெளியில் வர .

உதயா வேலைக்கு சென்று இருந்தான் .தனா காலேஜ் சென்று இருந்தாள்.

தேவி மட்டும் வீட்டில் ஹாலில் இருக்க.

அக்கா நீ வேலைக்கு போகலையா ? என்றான்.

இல்ல டா போகலை.

சரி நீ எதும் சாப்பிடுறியா? அவ இன்னும்   எழுந்திருக்கலையா என்று கேட்கொண்டே சமையல் அறைக்கு செல்ல.

தன் அக்காவின் பின்னாடியே வந்து அக்காவின் தோளில் கையை போட்டவன் .

“உனக்கு என் மேல கோவம் இருக்கும் இல்லையா ” என்றான்.

“இருக்கு டா உன் பொண்டாட்டி வீட்டை விட்டு போனதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது “.

ஆனா ,”நான் அன்னைக்கு கேட்ட வார்த்தை அதிகம் தான் ஒத்துக்குறேன் “.

ஆனா, “அதுக்காக நீ என்கிட்ட ஒரு வாரம் பேசாமல் இருக்க வேண்டாம் என்றவுடன் அவன் எதுவும் பேசாமல் தேவியை கட்டிக்கொள்ள “.

ஒன்னும் இல்லடா என்று அவன் தோளில்  தட்டிக் கொடுத்து.

சரி   அவளும் வரட்டும் சாப்பிடலாம் என்று சொல்லும் பொழுதே..

அவளும் குளித்துவிட்டு ஈர தலையுடன் வர இருவருக்கும் பரிமாறினார் .

சரிடா எங்கையாச்சும் போயிட்டு வர மாதிரி இருந்தா  போயிட்டு வாங்க என்று போகிற போக்கில் சொல்ல.

எனக்கு கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு .

டயர்டா இருக்கு பெரியம்மா உடம்பு லாம் அடிச்சு போட்ட மாதிரி என்றாள்.

நந்தா அவளை பார்த்துவிட்டு புலம்ப.

“தேவி தியாவை பார்த்து சிரித்துவிட்டு தூங்கு டி “என்ன பண்ண போற .

எனக்கு வேலை இருக்கு நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் .

சாயங்காலமா உதயாவும் ,தனாவும் வந்த பிறகு  கோயிலுக்கு போயிட்டு வரலாம் என்றார் .

சரி என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் படுக்க சென்று விட்டாள்.

நந்தாவை பார்த்து  டேய் காலேஜுக்கு நீ லீவ் சொல்லிட்டியா என்று தேவி கேட்க .

அடித்து பிடித்து தனது ரூமுக்கு சென்று தன்னுடைய போனை எடுத்துக் கொண்டு வந்து பார்க்க .

அது நிறைய மிஸ்டு கால் காண்பிக்க .

தன் தலையை தட்டிக் கொண்டான் .

தேவி தன் தம்பியை பார்த்து சிரித்தவர் .ஒன்னும் இல்லடா லீவ் வேணும்னா போட்டுக்கோ இரண்டு மூணு நாளைக்கு என்றார் .

அந்த அளவுக்கு எல்லாம் ஒன்னும் இல்லக்கா பாத்துக்குறேன் என்றான்.

சரி என்று விட்டு அவர் ரூமுக்கு சென்று விட.

ஒரு சில நொடி அங்கையே நின்று இருந்தவன் .அதன் பிறகு தன்னுடைய ரூமுக்கு சென்றான்.

“தியா உண்மையாவே அசதியில்  படுத்திருக்க. அவளை பின்பக்கம் இருந்து கட்டியணைத்துக் கொண்டு ரொம்ப அசதியோ” என்றான்.

” பின்ன? இல்லையா . உனக்கு இருக்காது.நீ வெயிட் பாடி பத்தி என்று சிரித்தாள்.

அவள் காதை பிடித்து திருக .
வலிக்குது டா என்று சிணுங்கினாள்.

எனக்கு உண்மையாவே டயர்டா இருக்கு மாமா என்று அவனது மடியில் படுத்துக் கொண்டாள் .

அவனுமே அவளது தலையை கோதிவிட்டு கொண்டிருக்க தூங்கியும் இருந்தாள்.

மாலை பொழுது தனா காலேஜில் இருந்தும், உதயா வேலையில் இருந்தும் வந்திருக்கு.

ஐந்து பேரும் ஒன்றாக கோவிலுக்கு சென்று வந்தார்கள்.

மாலை வீட்டிற்கு வந்த பிறகு “என்னடி நைட் செம்ம ஒர்க் போல காலேஜுக்கு சொல்லாம கொள்ளாம லீவ் போட்டு இருக்க “என்றாள் சிரித்து கொண்டே தனா கேட்டாள்.

அவளை முறைத்த தியா. மேடம் பக்கத்திலே உட்கார்ந்திருந்து கூட கண்டு காணாமல் போனீங்க இப்பா தான வந்து பேசுறீங்க என்று வாயை கோர்த்து காண்பித்தாள் .

ஆமா ,இவங்க என்கிட்ட ரொம்ப பேசிக்கிட்டு இருக்காங்க, நான் தான் உன்கிட்ட பேசாம போனேன் போ டி என்றாள்.

உதயா உன்ன தாண்டா தூக்கி போட்டு மிதிக்கணும் என்றார் தேவி .

நீ தானே இவளை கொண்டு போய் அங்க விட்டு வந்த என்றவுடன்..

” ஆத்தா என்ன வச்சு செய்யாத.. உன் மருமக வச்சு செஞ்ச வரைக்கும் போதும் அடுத்து நீ ஆரம்பிக்காத”என்று கையெடுத்து கும்பிட்டான்.

அப்போ நந்தா தான் இன்னும் ஒன் மந்த் ல எக்ஸாம் வருது எப்படி படிச்சு இருக்கீங்க என்றான்.

இப்போது உதயா  நந்தாவை முறைத்து பார்த்து கொண்டே எந்த நேரமும் தியா சொல்ற மாறி வாத்தியாரவே இருக்க வேண்டியது என்றான்.

  தனது மச்சானை முறைத்து பார்த்த நந்தா.

பின்ன எக்ஸாம் வருது படிச்சிட்டீங்களானு கேக்குறது தப்பா டா என்றான்.

“அதுக்கு வீட்லையும் கிளாஸ் எடுக்க போறியா  ?”என்றவுடன்  தனாவுக்கு தன்னையும் மீறி   சிரிப்பு வந்துவிட்டது .

அவளைப் பார்த்து உதயா முறைக்க. தனா சிரித்து விட்டாள் .

அவர் எங்களுக்கு கிளாஸ் எடுக்கல .ஆனா வேற ஸ்டாப் எடுக்கிறாங்க என்றாள்.

வீட்லையும் விட்டா கிளாஸ் எடுப்பாரு என்று சிரித்தான்.

ஒன் மன்த்ல எக்ஸாம் வரப்போகுது .இது அவங்களுக்கு லாஸ்ட் இயர் இல்லையா ?அதனால தான் கேட்டேன்.

உனக்கு என்ன தான்டா பிரச்சனை.

எனக்கு என்ன மாமா பிரச்சனை என்று உதயா சிரிக்க .

அதன் பிறகு ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு அவர்கள் ரூம் நோக்கி சென்று விட்டார்கள்.

தியாவிற்கு  பகலில் தூங்கி இருந்ததால்,இப்போது   தூக்கம் வரவில்லை .

ஆகையால் உங்களுக்கு தூக்கம் வருதா ? என்று நந்தாவை பார்த்து கேட்டாள்.

” அவளைப் பார்த்து சிரித்துவிட்டு வர வர உன் போக்கு ஒன்னும் சரியில்ல “.

படிக்கிற வேலையை பாரு என்றான் சிரித்துக் கொண்டே .

வாத்தி படிக்கிற நேரம் இது இல்ல  என்றாள்.

கேடி என்று அவளது காதை திருகியவன் எனக்கு வேலை இருக்கு டி வேலை செய்ய விடு என்றான்.

” நானும் வேலை செய்ய தான் சொல்லி  கேட்கிறேன்” என்றாள்.

அவனும் சிரித்துக் கொண்டே என்னால முடியல அப்புறம் ஹார்ட் வொர்க் பார்க்க வேண்டியதா தான் வரும் அப்புறம் என்ன குத்தம் சொல்ல கூடாது டி.

அமைதியா படு. தூக்கம் வரலைன்னா படி என்றான்.

போயா வாத்தி என்று விட்டு சிரித்து கொண்டே  வெளியில் வந்தாள்.

தனா ஹாலில் உட்கார்ந்திருப்பதை பார்த்துவிட்டு அவளது  தோளில் கை வைக்க.

தன் கண்ணீரை துடைத்து விட்டு என்ன டி  என்றாள்.

உனக்கு என்ன பிரச்சனை என்றாள் .

ஒன்னும் இல்லடி என்று விட்டு அமைதியாகி விட்டாள்.

ஒரு சில நொடி அமைதியாக இருந்த தியா உதயா ரூமுக்கு செல்ல.

உதயா தன்னுடைய போனில் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தான்.

அவன் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்த தியா  டைம் என்ன என்று கேட்டாள்.

“அதைக் கேட்கவா இப்போ இங்க வரை வந்த” என்றான்.

சரி டா அண்ணா. உனக்கும் உன் பொண்டாட்டிக்கு என்ன பிரச்சனை .

ஏன்,” அதை அவ கிட்ட கேட்டு இருக்க வேண்டியது தான” என்றான்.

ஏற்கனவே ,நான் காண்டா இருக்கேன் .நீ ரெண்டு கடுப்பை கிளப்பாதே என்ன விஷயம் என்று சொல்லு என்றாள் .

இன்னிக்கு நடந்த விஷயமா ,இல்ல நான் இல்லாதபோது நடந்த விஷயமா? என்றாள்.

அவ தம்பி இந்த வருஷம்  12 வது படிக்கிறான் இல்லையா . டியூஷன் சேர்த்து இருந்தேன் என்று அமைதியாக இருந்தான்.

சரி அதுக்கு என்ன ?

அது இவளுக்கு பிடிக்கலையாம்.

அவங்க அப்பா சேர்த்து விடுவாராம். இல்லன்னா எதையோ பண்ணிட்டு போறாங்களாம்.

என்னையும் சேர்த்து கேக்குற .சரி அதுக்கு நீ என்ன சொன்ன.

நான் என்ன உன் புருஷன் மாதிரி கிளாஸ் எடுத்துட்டா இருக்கேன் என்று கத்தினான்.

நீ என் புருஷன் மாதிரி கிளாஸ் எடுக்கல.

சரி நடந்த விஷயத்தை ஒன்னு விடாம  சொல்லி முடிச்சனா நான் அதை அவ கிட்ட கேட்க எனக்கும் சரியா இருக்கும் என்று சொல்ல.

தன்னை மீறி உதயா சிரித்து விட்டான் .

சிரித்துவிட்டு தியாவை பார்த்து அவளை தன் அருகில் உட்கார வைத்துவிட்டு .

அவனுக்கு நீ எதுக்கு பீஸ் கட்டணும்னு கேக்குற.

நான் அவனுக்கு பீஸ் கட்டாம வேற யார் கட்டுவாங்க

அவ அப்பா  இடத்தில் இருந்து எல்லாம் செய்றேனு சொல்லிருக்கேன்.

அவங்க வீட்ல காசு பணம் இருக்கட்டும்.நான்  இல்லைன்னு சொல்லல.

அவங்க அம்மா கட்டட்டும் இல்ல ,எது வேணாலும் பண்ணட்டும் நான் அதை பத்தியும் பேசல.

நான் கட்ட கூடாதுன்னு இவ ஏன் அதா சொல்ற .”எனக்கு அந்த உரிமை இல்லையா”.

அப்போ என்கிட்ட அவ எந்த உரிமையில தான் பழகிட்டு இருக்கா எனக்கு புரியல “என்றான்.

இதை நீ என்கிட்ட கேட்க கூடாது அண்ணா அவ கிட்ட தானே பேசி இருக்கணும் .

அத கேட்டதுக்கு தான் போய் வெளியே  உட்கார்ந்து இருக்கா.

சரி நீ அவள சமாதானமும் பண்ணாம ,அவகிட்ட மேற்கொண்டு இத பத்தியும் பேசாம .

இங்க உட்கார்ந்து போன்ல பேசிட்டு இருக்க . அதும் இந்த நேரத்துல யார் கிட்ட பேசிட்டு இருக்கு என்று கேட்டாள்.

அவ தம்பி கிட்ட தான் தியா அவனுக்கு மேக்ஸ் ல டவுட் டாம் அதான்.

“மேக்ஸ்ல டவுட் நீ போன் மூலமா கிளியர் பண்றியா ?” என்றாள்.

உதயா சிரித்துவிட்டு உன்னை வைத்துக்கொண்டு சத்தியமாக முடியல

எப்படித்தான் மாமா மேய்க்கிறார் என்று தெரியவில்லை. ரொம்ப கஷ்டம் தான் என்றான்.

நான்  மேத்ஸ் டியூஷன் தான் தியா  சேர்த்து விட்டு இருக்கேன் .அவன் அதுல தான் ரொம்ப லோவா இருக்கான் .

ஓ . என்றாள்.

சரி இப்ப இதுக்கு என்ன தான் முடிவு.

  இதுக்கு முடிவ நான் பாத்துக்குறேன்.

நீ ஏன் இந்த நேரத்துல  வெளியே வந்து இருக்க.

அங்க உங்க மாமா லேப்டாப் கட்டிகிட்டு இருக்காரு அதான் என்றாள்.

ஓ “உன்ன கட்டிக்க வேண்டிய நேரத்துல லேப்டாப்பை கட்டிகிட்டு இருக்காருனு கோவத்துல வெளிய வந்துட்டியா” என்று சிரித்தான்.

தியா சிரித்துவிட்டு அவன் தலையில் கொட்டி விட்டு .அவளை சமாதானப்படுத்துற வழியை பாரு .

பெரியம்மா  எழுதிருந்துச்சு வந்தாங்க என்றால், உனக்கு தான் ஆப்பு என்றாள்.

ஆமாம் அது என்னவோ உண்மை தான்  என்று அவளோடு வெளியே வந்து தனா  உள்ள வா தூங்கலாம் என்றான்.

எதுவும் பேசாமல் தானா உள்ளே சென்று விட்டாள்.

அவள் உள்ளே வந்தவுடன் இப்போ நான் அவனுக்கு  பீஸ் கட்டக் கூடாத டி என்றான்.

அவனை நான்  டியூஷன் சேர்த்து விட்டது  தப்பா இல்ல ,என்னதான் சொல்ல வர என்றான்.

அவனை பார்த்து முறைத்தவள் .அப்பா இருக்காரு அவரு பீஸ் கட்டிக்குவாரு உங்களை யாரு கட்ட சொன்னது என்று கேட்டாள்.

அவளை அடிக்க கை ஓங்கிக் கொண்டு வந்து கீழே போட்டான் .அதிர்ச்சியாகி நின்றாள் தனா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *