Skip to content
Home » அட்டைப்படம்-தலைப்பு

அட்டைப்படம்-தலைப்பு

  இந்த பதிவு short and sweet ah பார்ப்போமா…
 
கதை ரெடி….
எழுதியாச்சு…
எப்படி நீட்டா சப்மிட் பண்ணறிங்க?

  என்னிடம் நிறைய பேர் இன்பாக்ஸில் கேட்டிருக்காங்க. அக்கா… உங்க அட்டைப்படம் தலைப்பு எப்பவும் சூப்பர். எதுல பண்ணறிங்க. எங்க பிக்சர் செலக்ட் பண்ணறிங்க?
 

  முன்ன லேப்டாப்ல எந்த பிக்சரையும் எடுத்து அதுல குறிப்பிட்ட font use பண்ணி போடுவேன்.
  இப்ப டோட்டோ எல்லாம் tamil image editor மட்டும் தான். எனக்கு அதுவே சாட்டிஸ்பேக்ஷன் ஆகுது. இல்லை எனக்கு இன்னமும் வேற வேற இமேஜ் எடிட்டர் வேண்டும்னா play store ல செக் பண்ணுங்க. நிறைய app முன்ன வந்து நிற்கும். தரவரிசையில செலக்ட் பண்ணுங்க.

   Pic selection :  கண்ணுக்கு அழகா கதையோட பொருந்துற காதல் ஜோடியோ, பூக்களோ இயற்கை சம்மந்தப்பட்டதோ தாராளமா வைக்கலாம். ஆனா அதெல்லாம் copy right இல்லாத புகைப்படமானானு செக் பண்ணிக்கோங்க.
   Copy right pic என்றால் free pik la கோல்டு crown இருக்கும். Copyright அல்லதா புகைப்படம் என்றால் ப்ளு crown இருக்கும். ஒவ்வொரு புகைப்படத்திலும் கீழே இந்த புகைப்படம் காபிரைட்டிற்கு உட்பட்டதென்று இருந்தால் தவிர்க்கலாம்.
  
தலைப்பு: கதைக்கு எது பாந்தமா பொருந்துதோ அதை வைக்கணும். நிறைய பேர் அன்பு, உயிர், வரம், அசுரன் ஒரே மாதிரி வச்சா நம்ம தலைப்பு வித்தியாசம் இல்லாம போயிடும்.
  unique title வையுங்க. வசீகரிகப்படும் வார்த்தை அதே நேரம் யாராவது கதை பெயர் என்னனு கேட்டா சட்டுனு சொல்லுற அளவுக்கு வைக்கணும்.
  சிலர் அகராதில வைக்கிற வார்த்தை வச்சி நாலைந்து வார்த்தை வச்சா பெயர் சட்டுனு நினைவில வராது. சோ ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா கொடுங்க.

உணர்வுகள் (படுக்கறை காட்சி மையப்படுத்திய உணர்வு தேவையற்றது. அதுக்கு தனித்தளம் இருக்கு. அங்க போனா அப்படி எழுத பணம் வரும். அதை தவிர்த்து ஐ மீன் கோபம் காதல் நேசம் நட்பு புரிதல் அழகை போன்றதற்கு ஷார்ட் அண்ட் ஸ்வீட் மெத்தட் செட்டாகாது  லென்தியா எழுதினா ஆழமா இருக்கும். அதுக்காக அழுகையை பத்து பக்கம் எழுதினாலும் நல்லாயிருக்காது. சமைக்கும் போது உப்பு காரம் எந்தளவு தேவை என்று அளவு இருக்கோ அதே அளவு உணர்ச்சிகளுக்கு அளவு இருக்கு. முக்கியமா தேவையற்ற படுக்கையறை காட்சி, முத்தக்காட்சி வேண்டியதில்லை. சிலர் பக்கத்துக்கு பக்கம் அப்படி எழுதினா கூட்டம் வரும்னு நினைப்பாங்க. மேபீ அதுபோல கதைக்கு கூட்டம் வரும். ஆனா நல்ல எழுத்தாளர்கள் என்ற மரியாதை சுத்தமா இருக்காது. பணத்துக்கு எழுதினா என்ன மதிப்பு வரும் சொல்லுங்க.

   Document ரெடியா ஆப்லயோ தளத்திலையோ அத்தியாயம் அத்தியாயமா போடுங்க. இல்லை அமேசான்ல போடுங்க. நிறைய பேர் எங்கயும் போடாம இருந்தா கதை திருடி வேற கதையா மாறிடும். உங்க உழைப்பு வீணாகும். அதே போல டெம்பிளேட் எழுதி சாகடிக்காதிங்க. நாம பார்க்கற உலகம் பெரிசு. ஒவ்வொருத்தர் பாருங்க. எத்தனை கதைகள் கண் முன்ன நடமாடுது. நியூஸ் பேப்பர் டிவி நடந்தது என்ன என்று நிறைய பாருங்க. தகவல் திரட்டி உங்க கற்பனையில எழுதுங்க.
  ஒரு பொண்ணு ஒரு ஆணை அடிச்சதுக்கு அடிச்சா உடனே ஈகோவை தூக்கிட்டு கால்யாணம் பண்ணி கொடுமைப்படுத்தாதிங்கயா. திங்க் டிப்ரெண்ட்.

அப்பறம் எப்பவும் இரண்டு மூன்று டாக்குமெண்ட் வையுங்க. இல்லைன்னா மிஸ்ஸாகிட்டா கதை திரும்ப பெற முடியாது.
  புத்தகமாக போட்டா அணிந்துரை முகவுரை கொடுங்க நல்லாயிருக்கும்.
  எப்ப புக் போட்டாலும் உங்க ஏரியாவுல இருக்குற நூலகத்துக்கு ஒன்னு தானமா கொடுங்க. 😉

  சும்மா டைம் பாஸ்ஸுக்கு எழுதறவங்க வேற. எழுத்தின் மூலம் அடையாளம் காணப்படும் சிலர் வேற.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *