Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-12

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-12

துஷ்யந்தா-12

       பத்மாவதியை காண உடனே புறப்பட்டு விட்டாலும் ‘இந்த விதுரனுக்கு ஒரு வழி பண்ணணும்’ என்று கருவினாள்.

     மருத்துவ வளாகத்திற்குள் வந்தப்பொழுதே மணி இரண்டு ஐந்து ஆகிவிட்டது.

      அவசரமாக லிப்டில் ஏறி அன்னையிருக்கும் தளத்தை அழுத்தினாள். அது மேலே வந்து  அறைக்குள் வருவதற்குள் இரண்டேகால் ஆனது.

      “ஒரு கால் இல்லாத அம்மாவை பார்க்க இப்படி தான் இரெண்டே காலுக்கு வரலாமா.? சோ சேட்… மீதி முக்கால் மணி நேரம் தான் இருக்கு. பேசிட்டு வா. அப்பறம் நம்ம பைட்ட ஸ்டார்ட் பண்ணலாம்” என்று கண் சிமிட்டி கையிலிருந்த தாலியை கழுத்தில் அணிவித்தான்.

     “இது இல்லாம போனா இந்த விதுரன் பார்க்க விடமாட்டான். கழட்டின கையை உடைச்சிடுவேன்” என்று உருமலாய் மிரட்டினான்.

      முதலில் அன்னையை பார்த்துவிட்டு வர அவன் கூறியதை கேட்காமல் உள் நுழைந்தாள்.

       “மா… மா… எப்படியிருக்க? உன் காலை…. கால் இல்லாம உன்னை பார்க்க கஷ்டமாயிருக்கு. என்னால தானே மா? சாரி மா…” என்று அரற்றினாள்.

    மகளின் கழுத்தில் மாங்கல்யம் தொங்க அதனை கண்டதும்  விழிகள் நீரை வார்த்தது.

      “இது… இது இந்த டெவில் கட்டிட்டான் மா. உன்னை இந்த நிலைக்கு மாற்றி என்னை என்னை… கல்யாணம் பண்ணிட்டான். அரக்கன் மா…” என்று அழுதவளால் பேச முடியவில்லை. தாயை அணைத்து கதறினாள்.

     “அவர்… என் காலை வெட்டலை பிரகதி. என்னோட சுகர் லெவல் கூடி அதனால செப்டிக் ஆகி காலை இழக்க வேண்டிய நிர்பந்தயத்துக்கு ஆளாகிட்டேன்.

     கூடுமானளவு மெடிசனில் பார்த்தும் பிரோஜனம் இல்லை என்று தான் இந்த நிலை. உன்னிடம் பர்மிஷன் வாங்கணும்னு டாக்டர் சொன்னார். நீ பரீட்சை விட்டு வந்தா இந்த மொத்த வருடமும் பாழகும்னு தான் நான் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டேன்.” என்றார்.

    உடல் நிலை தேறினாலும் ஏற்கனவே தட்பவெட்ப நிலை மாற்றத்தினால் உடல் மூச்சிரைக்கவே ஆரம்பித்திருந்தது.

     “அப்ப…அப்ப… காலை வெட்டியது விதுரனோட வேலையில்லையே…?” என்று தெளிவாக மீண்டும் கேட்டாள்.

      “இல்லை டா…. ஆனா அவர் ஏதோ உன்னை பழி வாங்க தான் என்னை பிடிச்சி வச்சதா சொன்னார். என்னடா பண்ணின? யார் யாரை திருமணம் செய்தா உனக்கென்ன?” என்றார்.

     “மா… அன்னிக்கு வந்த தீபிகா…. விடு எது விளக்கினாலும் எதுவும் மாறாது.” என்று சலித்து கொண்டாள்.

   தீபிகா இன்பா கதையை முதலில் இருந்து சொல்ல பிரகதிக்கும் விருப்பமில்லை.

     “டைம் அப்” என்று கதவை திறந்து வந்தவன் கண் காட்ட பத்மாவதியை அங்கிருந்த அறைக்குள் மற்றொரு அறைக்கு அழைத்து சென்று கதவை மூடிவிட, பிரகதியின் கை பிடித்து விதுரன் வெளியே இழுத்து வந்தான்.

     “என் அம்மாவிடம் பேச விடு. நான் அவங்களிடம் எதுவும் பேசலை. ஆஸ்திரேலியாவுல இருந்து வந்ததும் அவங்களிடம் நேர்ல பார்க்கறது இதான் முதல் முறை.” என்று கேட்டாள்.

     “ஆக்சுவலி… நீ காலையில் இங்க வந்திருப்ப… ஊர் கதை, உலக கதை எல்லாம் பேசியிருப்பனு நினைச்சேன். பட் நீ ஊர் சுத்த போனியே தவிர இங்க வரலை. இரண்டு மணிக்கு என்னோட லஞ்ச் டைம்.

   இதுக்கு மேல நோ எக்ஸ்கியூஸ்.” என்றான்.
  
    “இதென்ன ஆபிஸ் மீட்டிங்கா… இல்லை எக்ஸாம் டைம் கணக்கா… நேரம் கொடுக்கற.. எங்கம்மா டா. பட்டுக்கு பதிலா நான் கூடயிருந்து பார்த்துப்பேன்” என்று உரைத்தாள்.

     “ம்… நான் அப்படி தான் திங்க் பண்ணினேன். ஆனா பாரு…. நீ காலையில் ஓவரா ஆட்டிடுட் காட்டிட்ட, என்னோட லக்கி பென்ஸ் காரை வேற உடைச்சிட்ட, அதுக்கான பனிஷ்மெண்ட் கொடுக்காம என்னால உன்னை மன்னிக்க முடியலை.” என்று இறுமாப்பாய் பதில் தந்து கொண்டே ஒரறைக்குள் நுழைந்தான்.

    அங்கே அவன் வருவதற்குள் உணவுகள் வரிசைக்கட்டி காத்திருந்தது. “உட்காரு..” என்று கூற மறுத்து நின்றாள்.

    “லுக் நான் சொன்னதை கேட்கலை. உங்கம்மாவை பார்க்க விடாம இன்னும் நாட்களை அதிகரிக்க செய்வேன். காலையே வெட்டியிருக்கேன் எதையும் செய்வேன்” என்றான்.

    “ரொம்ப பில்டப் பண்ணாதே… அம்மா சொல்லிட்டாங்க. காலை வெட்டியது சுகர் அதிகமானதாலனு. என்னவோ பெரிய அரக்கன் மாதிரி நீ தான் வெட்டியதா கதிகலங்க வச்சிட்ட. ஏன் இப்படி சொன்ன. இங்க வந்ததிலருந்து எப்படி துடிச்சேன் தெரியுமா?” என்று கலங்கியவளாய் பேசினாள்.

   என்ன தான் உயிருக்கு ஆபத்து என்று காலை வெட்டி காப்பாற்றினாலும் அந்த நொடி அவளின் மனவேதனையை விவரிக்க வார்த்தையே இல்லை.

    இதயத்தின் மேல் அழுத்தம் கொண்டு மனமே ஒரு நிலையில் இல்லை.

    இந்த நிமிடம் தாய் கூறும் வரை இந்த சர்க்கரை அதிகமானதால் இருக்க கூடும் என்று கணிக்க கூட முடியவில்லை. அத்தனை திமிராய் பேசி விதுரன் அச்சத்தை விதைத்திருந்தான்.

   அதுவும் தீபிகாவின் தாய் கீதா தீபிகாவின் வயிற்றில் விதுரன் கத்தி வைத்த கதையை கூறியதும் நடுங்கிவிட்டாள். பற்றாத குறைக்கு இன்பாவை ஒரு மாதம் அடைத்து துன்புறுத்தி இருக்கின்றானே… இதையெல்லாம் கேட்டதும் தாயின் காலை வெட்டியதற்கு வேறு காரணம் இருக்குமென யோசிக்கவேயில்லை.

       இங்கு வந்த கணமும் அன்னை மயக்கத்தில் இருந்தமையால் தேவையற்று திருமணம் கட்டிக்கொண்டோமே என்ற எண்ணம் நடப்பை பறைச்சாற்ற, தாலியை கழட்டி உணவு மேஜையில் வைத்தாள்.

    சாப்பிட்டு கொண்டிருந்த விதுரன் சலனமேயின்றி கண்டுக் கொள்ளாமல் உணவை விழுங்கினான்.

     “எனக்கு எங்க அம்மாவை என்னோட அனுப்பிடு. நாங்க கிளம்பறோம்” என்று நின்றவளை கண்டு அவ்வறை அதிர சிரித்தான்.

     “என்னை என்ன நினைச்சிட்டு இருக்க. உன் அம்மாவை கஷ்டப்படுத்தாம காப்பாற்றி வச்சிருக்கேன்னா… 

     அவங்க இருந்தா தானே நீ என் சொல் பேச்சை கேட்ப.. என்னோட ட்ரம் கார்டே அவங்க தான். முதல்ல என்னோட கட்டுப்பாட்டில் வச்சி உன்னை வரவழைத்து இம்சை பண்ண தான் யோசித்தேன்.

     ஆனா ஒரு உண்மை என்னனா… எனக்கு உன்னை பிடிச்சது. பிடிச்சது மீன்ஸ்… கண்ணாடில என்னை பார்க்கிற பீலை எனக்கு தந்த… கல்யாண வீட்ல அந்த வீடியோல, மைக் எடுத்து பேசி தீபிகாவுக்கு இன்பாவுக்கு மேரேஜ் பண்ணி வச்ச பாரு… அதுல சம்திங் என்னை ஒரு நிமிஷம் பார்த்தேன்.

   அந்த பொண்ணு தீபிகாவா கல்யாணத்தை நிறுத்திருக்கலாம். இல்லையா அந்த இன்பா கூட்டிட்டு போயி ஒரு பிள்ளையார் கோவிலில் தாலி கட்டியிருக்கலாம். அப்படி எதுவும் அன்னிக்கு நடந்திருக்காது. ஆனா அத்தனை பேர் இருந்தவங்களுக்கு மத்தியில நீ ஆப்ட்ரால் ஒரு பொண்ணா கல்யாணத்தை முடிச்சி நின்னியே சம்திங் ஐ லைக் தட். அதனால தான் உன்னை வலை வீசி, கட்டம் கட்டி தேடினேன்.

      அப்ப நீ கைக்கு கிடைச்சா வார்னிங் மட்டும் கொடுத்து விட்டிருப்பேன். மேபீ நீ யாரோ நான் யாரோனு கூட போயிருப்போம்.

    ஆனா என்னோட ஆபிஸ் மீட்டிங்ல ஆச்சாரியா பேசியது. அவனால நாலு பேர் பேசியது. என்னோட பிரெஸ்டீஜை டச் பண்ணிடுச்சு.

    ஒன்னு உன்னை நாசம் பண்ணணும். எனக்கு பேஸிக்காவே பெண்களிடம் முறை தவறி பழக பிடிக்காது. அதனால நீ தப்பிச்ச. மற்றவங்களை ஏவி உன்னை சிதைத்து இருக்கலாம்…. ஆனா பெண்களை பழி வாங்க என்றாலே கற்பை வைத்து முடிவெடுக்க நான் ஆங்காரம் பிடிச்சவனில்லை. கற்பு இரண்டு பேருக்கும் ஒன்று. அதை வைத்து உன்னை அசிங்கப்படுத்த நான் விரும்பலை. அதுவுமில்லாம என்னை பேசினவங்களை வாயடைக்க வைக்க முடியாது.

    அதான்… பிடிக்கலைனா கூட எதிரியை பக்கத்துல வச்சிக்கணும்னு தியரியை பாலோவ் பண்ணிட்டேன்.

    ரிசப்ஷனுக்கு வந்தவங்க அன்னிக்கு பேசினவங்க என்ன பேசிக்கிட்டாங்க தெரியுமா. இந்த பொண்ணு விதுரன் இல்லாதப்ப திருமணத்தை நடத்திட்டா. விதுரன் இருந்திருந்தா இப்படி தான் பெட்டி பாம்பா இப்ப நிற்கற மாதிரி அடங்கிருப்பானு பேசிக்கிட்டாங்க.

    இதுக்கு தான் இதோ… நீ கழட்டி வச்சியிருக்கிற மூக்கணாங்கயிறை கட்டினேன்.

    இங்க வந்ததும் உங்கம்மாவுக்கு சுகர் அதனால காலை வெட்டினேனு சொன்னா என்ன பண்ணிருப்ப என் சொல்லை மதிச்சிருக்க மாட்ட. அதனால தான் காலை வெட்டியது நானென சொல்லி அடிபணிய வச்சேன்.

     என்னவோ நல்லவனு  முடிவு கட்டாதே. இது என்னோட பார்ட்னர்ஷிப்ல இருக்கற ஹாஸ்பிடல். சின்னதா ஒரு ஊசி உன்னோட அம்மாவுக்கு செலுத்தினா இந்த உலகத்தை விட்டே போயிடுவாங்க. அதுக்கு தான் என்னோட கட்டுப்பாட்டுல வச்சிருக்கேன்.

   இன்பாவை ஒரு மாதம் அடைச்சி வச்சது எதுக்குனு நினைச்ச. இந்த ரமணா பட ஸ்டைல். என்ன தான் விட்டாலும் அடைச்சி வச்ச ஒரு மாதம் பண்ணின டார்ச்சர் அவன் மனசுல காலத்துக்கும் மறக்காது. அதுவும் இல்லாம தீபிகா கர்ப்பம் ஆனப்பின் இன்பாவே அடுத்தவங்க வாழ்வை கெடுக்க மாட்டான். ஏன்னா அவன் நல்லவன்.

   பட் இந்த விதுரன் கெட்டவன். உன் அம்மாவை எளிதா உன் பக்கத்துல விடப்போறதில்லை.” என்றவன் உணவை முடித்து கை துடைத்து முன் வந்தான்.

      விதுரன் பேச பேச இதற்கு முன்னிருந்த அறைக்கு சென்று பட்டு உதவியோடு தாயை அழைத்து தன் வீட்டுக்கு செல்ல அதே இடத்துக்கு செல்ல அந்த அறை காலியாக இருந்தது.

     “உங்க அம்மாவை தேடறியா… எனக்கென்ன பைத்தியமா. இருக்கற இடத்தை காட்டி கட்டுபாட்டில வைக்க முடியுமா? நீ ஆல்ரெடி தாலியே கழட்டி ஏதோ கீயை வைக்கிற மாதிரி டேபிளில் வைக்கிற. உன்னை அப்படியே வச்சி அடக்க முடியுமா?” என்றான்.

     “டெவில் டா நீ. சே நான் கூட ஒரு நிமிஷம் கொஞ்சம் நல்லவன்னு நினைச்சிட்டேன். நீ சூழ்நிலையை சாமர்த்தியமா உனக்கு தக்க வச்சி என்னோட விளையாடற. இதே மாதிரி எல்லா நேரமும் இருக்காது” என்றாள்.

      “அப்சலுட்டிலி… எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது. நான் இப்ப நல்ல மூட்ல இருக்கேன். அதனால நீ பிழைச்ச. இல்லை….” என்றவன் உதட்டை ஏளனமாக வளைத்து முடித்து அவளை பார்வையால் ரசிக்க ஆரம்பித்தான்.

      ஏதோ பூரான் ஊறிய உணர்வாக பிரகதி அருவருக்கும் அசூசையை அடைந்தாள்.

     “எனிவே… கிணற்று நீர் ஆறு அடிச்சிட்டு போகாதே.” என்று கூறிவிட்டு பெருமூச்சை வெளியிட்டு “நீ சாப்பிடலை… இந்த கட்டடத்தில ஸ்விகி ஜோமேட்டோ… எதுவும் வராது நான் சாப்பிட்டு மீதி வச்சியிருக்கிற உணவை காலி பண்ணு.” என்றான்.

    “வாட்…?” என்று அதிர்ந்தவள் சினமேற நின்றாள்.

     “நான் சாப்பிட்ட அதே தட்டுல சாப்பிட சொல்லற மாதிரி ரியாக்ஷன் கொடுக்கற. கேரியர்ல சாதம் குழம்பு வறுவல்னு ஏகப்பட்டது இருக்கு. அதை தான் வேற தட்டுல வச்சி சாப்பிட சொன்னேன். நீ என்ன நினைச்ச…?” என்றான்.

    அவன் பேச்சில் குறும்புகள் தாண்டவமாடியது. பிரகதியோ போனை எடுத்து யாருக்கோ டயல் சுழற்றி அமர, பதினைந்து நிமிடத்தில் உயர்தர பவனில் இருந்து வெஜிடேபிள் புலாவ் எடுத்து வந்து கொடுத்து பணத்தை பெற்று சென்றான் ஒருவன்.

     விதுரன் பார்க்க அதனை எடுத்து சாப்பிட சென்றாள்.

      மெதுவாக அவளருகே வந்தவன் உணவு பெட்டியை கண்டு, “ஒரு சப்பாத்தி தால், தயிர் சாதம், அப்பளம், கொஞ்சமா புலாவ் அவியல் பொரியல் கொஞ்சுண்டு ஊறுகாய்.. இதுக்கு ஸ்வீட் பீடா…” என்றவன் அவள் உணவில் கை வைக்கும் நேரம் தட்டி விட்டான். அறையெங்கும் சிதறியது.

     “என்ன பண்ணி தொலைக்கிற. ஒரு அரிசி உணவா மாற எத்தனை மாற்றம் பெறுது தெரியுமா. நீ என்னடானா பணத்திமிருல தட்டிவிடற?” என்றாள் பிரகதி.

      “பேசிக்கலி புட் வேஸ்ட் பண்ணற ஆள் நான் இல்லை. நீ தான். இத்தனை டிஷ் இருக்கறப்ப ஆர்டர் பண்ணியது நீ தான். இப்ப சொல்லு நான் புட்டை வேஸ்ட் பண்ணினேனா? நீயானு..?

     என்னை கல்யாணம் பண்ணிட்ட பிறகு நீ என்ன சாப்பிடணும் என்ன டிரஸ் போடணும்னு முடிவு பண்ணறது நானா இருக்கணும். நீ இல்லை…. இந்த போனை சுழற்றினா எல்லாம் பத்து நிமிஷத்துல வீட்டுக்கு வந்துடும் அது எங்களுக்கும் தெரியும். ஆனா அவ்வளோ பெரிய வீட்ல நீ சாப்பிடற இத்துணுண்டு உணவை சமைக்கலையா, இல்லை சமைக்க ஆளில்லையானு யாரும் கேட்க கூடாது.

   கேட்க வச்ச… உங்கம்மாவுக்கு ஒழுங்கா உணவு போகாது.” என்றவன் தட்டை அவள் முன் வைத்து நின்றான்.

    பிரகதி சாப்பாட்டை எடுத்து வைத்து விழுங்கினாள். சாப்பிடவில்லை. அப்படியே ஒவ்வொரு வாயாய் விழுங்கி தண்ணீரை குடித்தாள். உணவை உண்பதற்கும் விழுங்குவதற்கும் வித்தியாசம் தெரியாதவன் அல்ல விதுரன் ஆனால் எதையும் கேட்டிறாதவன்.

      “பை த வே… தினமும் ஒன்று டூ இரண்டு உங்கம்மாவை பார்க்க நீ இங்க வரலாம். அதே மாதிரி என்னோட லஞ்ச் சாப்பிடணும். இப்ப நான் கிளம்பறேன். கதிர் எப்பவும் நீ எங்க போக விருப்பப்பட்டாலும் அழைச்சிட்டு போவான். அது தீபிகா வீடாக இருந்தாலும் சரி. இன்பா வீடானாலும் சரி.” என்றவன் குரல் கடினம் ஏறியிருந்தது.

    பிரகதிக்கு தொண்டை அடைத்தது. இவனுக்கு நான் சென்ற இடம் தெரியவரும். அது பரவாயில்லை… ஆனால் தாயை பார்க்க ஒரு மணி நேரம் தான் அவகாசமா… இந்த கொடுமை எத்தனை நாட்களுக்கோ…? இன்பாவை ஒரு மாதம் இப்படி துன்புறுத்தியதாக கூறினானே என்று எண்ண கலங்கியவளாய் அவ்வறையில் தனித்து நின்றாள்.

    யாரோ ஒரு பெண் வந்து அறையை சுத்தமிட செய்யவும் எழுந்து வெளியேறி காரில் அமர்ந்தாள்.
 
     “எங்க மேம் போக?” என்றதும் “என்னோட வீட்டுக்கு ஐ மீன் எங்க அம்மா வீட்டுக்கு போங்க” என்றாள்.

    கதிர் வழியை கேட்காமல் செல்லவும் தான் படித்த ஆஸ்திரேலியாவிலே வந்தவர்கள். தன் வீடு அறியாமல் இருப்பார்களா? என்று நெஞ்சு அடைத்தது.

   இதற்கெல்லாம் அவனை பழி தீர்க்க உள்ளம் கூக்குரலிட்டது. ஆனால் வந்ததும் அளவுக்குதிகமான அழுத்தம் தர செயலிழந்து தன் வீட்டிற்குள் நடையிட்டாள்.

  தன் வீடு… ஒவ்வொரு இடமும் தாய் தந்தையோடு ஒன்றி சட்டமாய் தன் வாழ்வை யானே முடிவெடுத்து வாழ்ந்தயிடம் என்று பார்வையிட்டாள். பட்டு அன்னையை பார்க்க செல்வதால் வேறொரு பணிப்பெண் வீட்டை பெருக்குவதை கண்டாள்.

    வாட்ச்மேன் வந்து அன்னையின் உடல்நிலையையும் பிரகதியையும் விசாரிக்க மனம் குளிர்ந்தது.

    “உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா மா?” என்று தலையை சொரிந்து கேட்க, “ம்ம்..” என்றாள்.

    “மாப்பிள்ளை அந்த தம்பியா மா. நல்லா உசரமா… பென்ஸ் காருல வந்தவரா?” என்று கேட்டதும் சங்கடத்துடன் ஆமென்றாள்.

    “சந்தோஷம்மா ராசா கணக்கா இருந்தார்.” என்றதும் புன்னகையை பெயருக்கு வெளியிட்டு வீட்டுக்குள் சென்றாள்.

     அப்பா அம்மாவோடு சேர்ந்திருந்த  புகைப்படத்தை எடுத்து கொண்டு சில ஆடைகளை எடுத்து வைத்தாள்.

     தன் திருமணத்திற்கு என்று பணத்தை இருமடங்காக பணியாட்களுக்கு அக்கவுண்டில் போட்டு முடித்தாள். வாட்ச்மேனிடம் அதை தெரிவித்து விடைப்பெற்றாள்.

    “விதுரன் வீட்டுக்கு போங்க” என்று கதிரிடம் கூறினாள்.

     சிறிது நேரம் போக வீட்டுக்கு வந்ததும் கதிர் கார் கதவை திறந்து, “உங்க வீடு வந்தாச்சு மேம்” என்றான்.

   பிரகதி விடுவிடுவென வீட்டில் நுழைந்தாள்.

-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

4 thoughts on “துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-12”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *