Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 36

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 36

அத்தியாயம் – 36

அவளை பாசமாய் பார்த்தவர்..
“ஷி ஈஸ் ஏ குட் டாட்டர்.. எனக்காக எல்லா கஷ்டத்தையும் தனியா அனுபவிக்கிறா? நான் கஷ்டபடக்கூடாதுனு” என்று அவர்கூற தன் தோழியை பெருமை பொங்க பார்த்தான் ஷர்மா..

“அவளுக்கு நான் இல்லனாலும் உறுதுணையான ஆளுங்க வேணும்னு தான் நிதின் அவளோட ப்ரண்ட்ஸ்னு அவள சுத்தி ஒரு பட்டாளமே சுத்த வெச்சுட்டு இருக்கேன்..
அவ லவ் பன்ற பையன மட்டும் கண்டுபுடிச்சு அவன் கையில அவள ஒப்படைச்சுட்டா நிம்மதியா கண்ண மூடிடுவேன்” என்று அவர் நெகிழ்ச்சியோடு கூற..
சிரித்தவன்..

“என்னா ஒரு லவ்வபிள் ஃபேமிலி நீங்க? எனக்கும் வாய்ச்சு இருக்காரே அப்பானு ஒரு லவ் இல்ல சைட் கூட அடிக்க விடலை” என்னு தலையில் அடித்து கொள்ள சரியாக அங்கே அவனது தந்தை வந்து நிற்க அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்த மேதாவிற்கு சிரிப்பு பொங்கி வந்தது..
வந்தவர் அவனது பேச்சை கேட்டு முறைக்க..
திடுக்கிட்டவன்.. எழுந்து

“யப்பா..ப்பா..நா..நான்..அது..அதுவந்து சு..சும்மா” என்று திக்கி திணறி இழுக்க..

“ஹேய் மை டியர் ப்ரண்ட்” என்று ஷர்மாவின் தந்தையை கட்டி பிடித்தவர் அவனுக்கு கண் காட்ட அடுத்த நொடி ஓடிச்சென்று மேதாவின் அருகில் அமர்ந்து கொண்டான் ஷர்மா..
அதில் திசைதிரும்பிய அவரது தோழர்கள் இருவரும் ஏதோ பேச மேதாவின் அருகில் அமர்ந்தவன்.. அவளது தோளில் இடித்து..

“ஏன்டி எருமை எதுக்கு என்னை உன்னோட லவ்வர்னு சொல்லி இருக்க? உன் ஆளு விஷயம் இன்னும் அங்கிள்க்கு சொல்லலையா?” என்று அவளது காதில் இரகசியமாக கேட்க..
ஹெட்ஃபோனை கழட்டியவள்
“நான் என்ன பையித்தியமாடா? உன்ன என் லவ்வர்னு சொல்ல? நீ ஃபோன் பண்ணப்போ பேபி லவ்யூனு சொன்னல அதைகேட்டு தான் அவரு அப்படி நினைச்சுக்கிட்டாரு..
எனக்கே இது லவ்வானு கன்ஃபார்ம் ஆகல இதுல நான் எப்படி உறுதியா சொல்றது.. சொல்லலாம் என்ன அவசரம்..” என்று பேசியவள்..

கலங்கிய கண்களை விழி சிமிட்டி அடக்கினாள் அதை பார்த்தவன்..

“சோ..நாங்க பேசினதுலாம் நீ கேட்டுட்ட அதானே?” என்று ஷர்மா கேட்க..

ஆமாம் என்பதுபோல தலையை ஆட்டினாள்..

“இதுக்கு என்ன சொல்றதுனு எனக்கு தெரியல மேதா பேபி.. ஆனா அவரு சொல்ற மாதிரி நீ தனியா எல்லாத்தையும் ஹான்டில் பண்ண கத்துக்கனும்..அதுக்காக உன்கூட யாரும் இருக்கமாட்டாங்கனு அர்த்தம் இல்ல.. நாங்க எப்பவும் உனக்கு உறுதுணையாக இருப்போம்..அவ்ளோதான்” என்று கூறியவன் அவளது கையை தட்டி கொடுத்தான்..

“முதல்ல உன் லவ்வ கன்ஃபஸ் பண்ணு அவர்கிட்ட..நான் வேணும்னா சொல்லவா அவர்கிட்ட உன் காதலை?” என்று ஷர்மா கேட்க…

“லவ்லயும் கணவன் மனைவி லைஃப்லயும் மீடியேட்டர் வரக்கூடாதுடா அப்படி வந்தா அது லவ்வாவும் இருக்காது..வாழ்க்கையாவும் இருக்காது..டைம் வரும்போது நான் அவர்கிட்ட சொல்லிக்குவேன்..நீ அமைதியா இருந்தா மட்டும் போதும்” என்று மேதா கூற…

“ஷப்பா..எங்க அப்பாக்கு மேல என்னை அறுக்குறாளே? இவளுக்கு சப்போர்ட் பண்ண பார்த்தேன்ல என்னை” என்று அவன் நிறுத்த அவனது முகத்தின்முன் செருப்பை நீட்டினாள் மேதா அதை பார்த்து அவன் திகைக்க அவளுக்கோ சிரிப்பு..அதை அடக்கியபடி

“ம்ம்” அடிச்சுக்க என்பது போல நீட்ட..

“தேவைப்படும்போது நானே கேட்டு வாங்கி அடிச்சுக்குறேன் போடுடி கீழே” என்று அவன் பேச

“அப்போ நீ அடிச்சுக்க மாட்ட?” என்று மேதா கேட்க..

“அடிப்பாவி” என்று அவன் வாயில் கைவைக்க
சிரித்தாள் மேதா..

“நீயெல்லாம் ஒரு ப்ரண்ட்டாடி..உன்னை நல்லவனு நம்பி என்னை உன்கிட்ட விட்டு இருக்காரு பாரு என்னை பெத்தவரு.. கஷடம்டா ஷர்மா உன் நிலைமை..” என்று புலம்பினான் அதை பார்த்து மேலும் சிரித்தவள்..

“ஓவர் ஆக்டிங் உடம்புக்கு ஆகாதுடா.. போ..போய் ப்ரஷ்ஷா ஜுஸ் வாங்கிட்டு வா..இல்ல அங்கிள்கிட்ட போட்டு கொடுத்துடுவேன்” என்று கூற..
தனக்காக அவள் மனதை திசைமாற்ற முயன்றதை எண்ணி கவலை அடைந்தவன் அவளுக்கு தனிமை தேவை என உணர்ந்து

“எல்லாம் என் நேரம்” என்று புலம்பியபடி சென்றான் தன் தோழிக்கு ஜுஸ் வாங்கி வர..
அதுவரை சிரித்தது போல் இருந்தவள் அவன் நகர்ந்ததும் சிரிப்பை தொலைத்தாள்..
தூரத்தில் இருந்து தன் மகளை நோட்டம் விட்டவர் அவளுக்கு இப்போது தான் எது பேசினாலும் கஷ்டப்படுத்தும் என உணர்ந்தவர்.. நண்பனை கூட்டிக்கொண்டு கிளம்ப எத்தனித்தவர் அவளிடம் வந்தார் அவரை பார்த்ததும் முகத்தை சரி செய்தவள் அவரை பார்த்து சிரித்து ஷர்மாவின் தந்தைக்கும் ஹாய் சொன்னாள்..

“சரிடா அஷ்ஷுமா.. நான் கிளம்புறேன்..உன்னோட ஃபோன்க்காக அப்பா வெயிட் பண்ணிட்டு இருப்பேன்டா.. அந்த பையன் யாருனு சீக்கிரம் காட்டு” என்று கூறிவிட்டு நண்பனிடம் திரும்ப..
அவரோ..

“என்னடா இது? அப்பா நீயே அவளுக்கு லவ்வுக்கு சப்போர்ட் பண்ற?” என்று கேட்க.. அதுவரை சிரித்தபடி இருந்த மேதாவின் முகம் அமைதியை சுமந்து கொண்டது..

“ஏன்டா இன்னும் நானே அவளுக்கு நல்லது கெட்டதுனு பார்த்துட்டு இருந்தா அவ எப்போதான் கத்துக்கறது அவளுக்கு எது நல்லது எது கெட்டதுனு? இது அவளோட லைஃப் அவதான் வாழப்போறவ அவளோட முடிவுதான் முக்கியம்டா.. அது கஷ்டமா இருந்தாலும் அவதான் அனுப்பவிக்ககனும் சந்தோஷமா இருந்தாலும் அவதான் அனுபவிக்கனும்..” என்று கூறியவர்
அவளது உணர்வை புரிந்து மேலும் அவளை சோதிக்காமல் கிளம்பினார்..

‘ராஷி..எப்படி என் காதலை உனக்கு புரியவைப்பேன்னு தெரியல.. என் காதல் உனக்கு புரியுமானும் தெரியல..ஆனா என் வாழ்க்கையில உன்னதவிர வேற யாருக்கும் இடமில்ல..’ என்று தனக்குள் பேசியவள் கண்கள் கலங்கி இருந்தது..

‘இப்படி லவ் பன்ற அளவுக்கு அவன் உனக்கு என்ன செஞ்சுட்டான்னு கேட்கிறவங்களுக்கு அவளோட உணர்வு அவனுக்காக மட்டும் தான் இருக்கும் என்பதை அவர்களுக்கு எப்படி சொல்லுவாள்..யார் புரிந்து கொள்வார்..? யாருக்காக வாழுறாளோ அவனுக்கே புரியலையே இன்னும்..

ஏதேதோ யோசித்தவளை அவளது ஃபேவரிட்டான ஜிம்மியை காரணம் காட்டி திசை திருப்பினான் அவளது உயிர்தோழன்..

எந்த வருத்தமாயிருந்தாலும் அவளது ஜிம்மியை பற்றி பேசினாலே அவள் சந்தோஷமாகிவிடுவாள்.. இப்போது இங்கேயே வந்தும் அவளை சென்று காணாமலே இருக்கிறாள்..
ஜிம்மி தன்னிடம் நெருங்கினால் அவன் தன்னை அடையாளம் கண்டு கொள்வானோ என பயந்தே அவளிடம் நெருங்காமல் இருக்கிறாள்..

இதையெல்லாம் எண்ணியவள் அன்று அமைதியாக இருந்த ஆராஷிக்கும் இப்போது பெண் என்றாலே வெறுக்கும் ஆராஷிக்கும் என்ன செய்து சரிசெய்வது என்றே புரியாமல் திளைத்தாள்.. இதே யோசனையில் அவள் உழல திடீரென வயிற்று பகுதி உயிர்போகும் வலியை உணர்த்தியது அவளுக்கு. . சமாளித்தவள் எழுந்து மாத்திரை போட்டு வலியை குறைக்க பார்த்தாள்..

அங்கு அவனும் அவளை பற்றித்தான் யோசித்து கொண்டு இருந்தான்.. ஆனால் அவளை தேடுபவனாய்..

தன் நினைவில் இருப்பது அவளது அந்த அழுது சிவந்த கண்கள் மட்டுமே..
ஆனால் அதையும் தன் தந்தை ஏமாற்றிய வலியில் இருந்து மீளவே முடியவில்லையே அவனால்..

இப்போது இன்னொரு நடிப்பா என்றுதான் அவன் உள்ளம் வெகு தொலைவில் ஓட பார்க்கிறது..
பட்ட வலிகள் அவனை எதிலும் பற்று இல்லாமல் மாற்றுவதை எப்படி தடுப்பது என அறியாமலே அலைகிறான்..

இதில் அவனது ஒரே ஆறுதல் அவளது நினைவாக அவனிடம் இருக்கும் ஜிம்மிதான்..
தறிகெட்டு கிளம்பும் கோப எண்ணங்களை கட்டுபடுத்த அவன் தேர்ந்தெடுக்கும் வழி அவனது ஜிம்மிதான்..

நேராக அவளது அறைக்கு சென்றான்.. அவளோ அவனை பார்த்து உடனே முகத்தை வேறுபுறம் திரும்பி அமர்ந்து கொண்டாள்..

‘இங்க வந்ததுல இருந்து நீ என்னை கண்டுக்கலல.. இப்போ நான் உன்ன கண்டுக்க மாட்டேன் போடா’ என்பது போல் இருந்தது அவளது கோபம்..

முகத்தை திருப்பியவளை பார்த்தவனுக்கு சட்டென சிரிப்புதான் வந்தது..
நேரே சென்று அவளை தூக்க அவனை பார்த்து கீழே இறக்கி விடும்படி நெளிந்து குரைத்தாள்..
“ஜிம்மி..சாரிடா.. உன் அம்மாவ தேடுற பிசில உன்ன கொஞ்சம் மறந்துட்டேன்..மன்னிச்சிடுமா.. என் செல்லம்ல..வாங்க ப்ளீஸ்”என்று அவன் ஜாப்பனீஸில் பேச அவனிடமிருந்து கீழே குதிக்க இருந்தவள் அவனிடமே சரணடைந்தாள் அவளது கோவம் எல்லாம் கொஞ்ச நேரம் தான் அவனிடம்.. அவளது தாயை போலவே..p
ஆனால் அவளது ஜிம்மி இவனிடம் வந்து சேர்ந்த காரணம்..?

வலி குறைந்ததும் உடனடியாக ஜப்பானில் ஆராஷியின் பாடிகார்ட்டாக இருந்த அவளுக்கு தெரிந்தவருக்கு ஃபோன் செய்தாள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *