துஷ்யந்தா-22
இரண்டு நாள் விதுரன் பேச வந்தால் காதில் காட்டன் எடுத்து வைத்து கொண்டாள்.
சாப்பிட சொன்னால் எனக்கு வேண்டாம் என்று ஹாலே அதிர கத்தி முடித்தாள்.
“சர் தான் போடி. கொழுப்பாவது குறையட்டும்.” என்று கத்தி சென்று விடுவான். ஆதித்யா பேசினாலும் கேட்பதில்லை. அவருக்கு மனவருத்தம் இருந்தாலும் என்ன செய்ய முடியும்.
இரண்டு நாளில் அன்னை வந்து சேர்ந்ததும் பட்டுவிடம் “எங்க போனிங்க?” என்றாள்.
அன்னையால் கூற முடியாதே… பட்டுவோ திருதிருவென விழித்து “அது ஏதோ ஹாஸ்பிடல்லு மா. என்னை உட்கார வச்சிட்டு அம்மாவுக்கு ஏதோ டெஸ்ட் எடுத்தாங்க.” என்றாள்.
விதுரனிடம் கேட்டதற்கு “உன்னிடம் சொல்லணும்னு அவசியமில்லை. திமிர் பிடிச்சவ நீ.. அன்னிக்கு பெரிய இவளாட்டும் நீயா வந்துட்ட. ஏதாவது பேச வந்தா காது கொடுத்து கேட்டியா? சொல்லு டி கேட்டியா? இல்லைல… இப்ப மட்டும் என்ன விளெக்கெண்ணெய்க்கு கேள்விக் கேட்கற.
ஆமா டெஸ்ட் எடுக்க தான் சுதன் வேற டாக்டரை பார்க்க வரச்சொன்னான். நர்ஸை அப்படியே வர சொல்லி பங்ஷன்ல இருந்து அப்படியே அனுப்பி வச்சேன்.
என்னை கேள்வி கேட்கற வேலை வச்சிக்காதே.” என்று கத்திவிட்டு சென்றான்.
பிரகதியால் எதையும் புரிந்து கொள்ளவில்லை. இவனை புரிந்து கொள்ள தனி மூளை வேண்டும்.
தாயை கவனித்து கொள்ள முழு நேரமும் ஒதுக்கினாள்.
அன்று சுதனிடம் தாயை பற்றி கேட்டு குரல் வருமா? என்று தெளிவுப்படுத்திக் கொள்ள தனியாக கேட்டு நின்றாள்.
சுதனோ “சொல்ல முடியாது பிரகதி. விதுரனிடம் கூட சொல்லிட்டேன். லட்சம் கோடி செலவான கூட பரவாயில்லை குரல் வர வைடானு ஆர்டர் பண்ணறான்.
நாம என்ன கடவுளா…
இப்படி தான் ஒரு குழந்தை வீட்ல கூல்டிரிங்ஸ் பாட்டிலில் ஆசிட் வச்சிருக்க அது கூல்டிரிங்க்ஸ் நினைச்சி குடிச்சிட்டான்.
போராடி எத்தனை ஆப்ரேஷன் தெரியுமா? பத்து பதிமூன்று ஆப்ரேஷன் பண்ணி ட்யூப் மூலமா சாப்பாடு கொடுத்து ரிஸ்க் எடுத்து உயிரை மீட்டது.
இவங்க ஒரு சிப் என்றதால குரல் போச்சு. ஆனா வயிற்று செரிமான பகுதிக்கு போனாலும் அந்தளவு பாதிக்கலை. குரல் ஒன்று தான். இப்ப அவங்க உயிரோட இருப்பதே காட் கிரேஸ். வயசாச்சுல இனி ஆப்ரேஷன் எல்லாம் அவங்களுக்கு சாத்தியமில்லை பிரகதி.
விதுரனிடம் எவ்ளோ சொல்லியும் எத்தனை டாக்டரை பார்த்துட்டான். அவனால தான் இப்படினு அவனோட நிம்மதியே போச்சு. லட்சம் கோடில உயிர் பிழைக்கிறது இல்லை… காட் கிரேஸ் ஒன்லி… வேண்டிக்கோங்க.” என்றதன் பேச்சில் பிரகதி நினைவு முழுவதும் அன்னையே ஆக்கிரமித்து இருந்தது.
வேலைக்கு போக தனது கணிணியில் ஜாப்பை தேட அந்த பக்கம் வந்த விதுரன் கூர்ந்து நோக்கினான்.
“என்ன அசிங்கப்படுத்த போறியா.?” என்றான். அவன் கேள்வி புரிய, அமைதியாக அப்ளிக்கேஷனுக்கு பூர்த்தி செய்தாள். மெயில் அனுப்ப தயாரானாள்.
இம்முறை விதுரன் லேப்டாபை மூடி வைத்து, “ஜாப் போகணும்னா என்னோட ஓர்க் பண்ணு. அதான் தாத்தா கொடுத்த ஷேர் நாற்பது சதம் இருக்கே. இன்னமும் என்ன?” என்றான்.
“என் மேல கை வச்சா தான் அதை தருவேனு சொன்ன. அப்படிபட்ட பணம் சொத்து எதுவும் வேண்டாம்.” என்றாள்.
“மேல எல்லாம் கை வைக்கலை. அந்த ஷேரை எடுத்துக்கோ. ஆனா விரைவில்… நீயா சம்மதிப்ப” என்றான்.
இருவரும் முதுகுக்காட்டி படுத்துறங்கினார்.
அடுத்த நாள் காலை எழுந்ததும் தயாரானவளிடம் “இந்த சுடிதார் ஜீன் போடக்கூடாது. சாரி… சேரி.. ஒன்லி.” என்றான். அவளின் முறைப்பை கண்டு எள்ளியபடி.
ஷாலை தூரயெறிந்து கப்போர்டை திறக்க, நான் இங்க இருக்கேன். கோவத்துல கழட்டிடாதே.” என்று நமுட்டு புன்னகை உதிர்க்க டிரெஸ்ஸிங் டேபிளில் இருந்த பாடி ஸ்பிரேவை எடுத்து அவனை நோக்கி வீசிவிட்டு பாத்ரூம் சென்றாள்.
விதுரன் ஆதித்யாவிடம் பிரகதி அலுவலகம் வருவதை சொல்ல ஆனந்தம் கொண்டார்.
இதற்கு முன் அவள் முழு மனைவியான தான் ஷேரை எடுக்கணும்னு சொன்னேன் தாத்தா.” என்றதன் பேச்சால் பேரன் விதுரன் பேத்தியோடு இல்லற வாழ்வில் கைகோர்த்துவிட்டனர் என்று அம்முதியவர் முடிவு கட்டினார்.
தாயிடம் கூறி விட்டு பட்டுவிடம் சொல்லி விதுரன் காரிலேயே ஏறினாள்.
முதல் முறையாக செல்ப் டிரைவிங் செய்ய மற்ற ஆட்களை தேடினான்.
முன்னும் பின்னும் இரண்டு கார் வரவும் கையை கட்டி கால் மேல் காலை போட்டு அமர்ந்து கொண்டாள்.
“குயின் மாதிரி இருக்க” என்றான் பிரகதி திரும்ப “டெவில் குயின்.” என்று நகைக்க, பிரகதி ஜன்னல் புறம் பார்வையை செலுத்தினாள்.
“என்ன தெரியும் உனக்கு? அதுவும் படிச்சது ஒன்னு இங்க என்னோட என்ன வேலைனு தெரியாம வர்ற.? என்ன பக்கத்துல இருந்து ரசிக்கணும்னு ஆசை வந்துடுச்சோ…?” என்றான் விதுரன்.
“உன் இம்சையே வீட்லயே சகிக்க முடியலை. இதுல வேலை செய்யற இடத்துலயுமா? உன் கண்ணுல படாம ஏதாவது பண்ணிட்டு நிம்மதியா இருந்தா கூட போதும்.
என் அம்மாவுக்காக தான் ஜாப் பற்றியே சிந்திச்சது.
உன்னால தான் வேற எங்கயும் வேலை பார்க்க முடியலை.
நீ ஒன்னும் எங்க அம்மாவுக்கு லட்சத்துல செலவு பண்ண வேண்டாம். நான் கொஞ்சம் பார்த்துக்கறேன்.” என்றாள்.
விதுரனோ சிரித்துக் கொண்டே “யானை பசிக்கு சோளபொறி” என்றான்.
“என் பணம் குறைவு தான். ஆனா எங்க வீட்டை சொத்து பேங்க் பேலன்ஸ் எல்லாமே எடுத்துக்கோ” என்றாள் ஜன்னலை வெறித்து கொண்டு.
“யானைபசி என்றது என்னோட மோகம். சோளப்பொறி நீ உடுத்துற சேலை… கியூட்டியா இருக்க” என்று காரை நிறுத்தி சோம்பல் முறிப்பதாக பாவனை செய்தான்.
“இறங்கு என்னோட பெர்சனல் செக்ரட்டரி… என்ன ஜாப் பிடிச்சிருக்கா?
இந்த பாஸ் செக்ரட்டரி லவ் கான்சப்ட் செம்மையா இருக்கும். பிகாஸ் நாள் முழுக்க கூடவே இருக்கற மூஞ்சியை பிடிக்க ஆரம்பிச்சிடும் என்பது தியரி.
யார் கண்டா… வீட்டை விட ஆபிஸ் பிடிக்கலாம். கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகுதானு பார்க்கலாம்.” என்றவன் விறுவிறுவென செல்ல அதேயிடத்தில் நின்றாள்.
ஒன்று அவன் பேசியதால்…. மற்றொன்று அவனின் அலுவலகத்தினால்… பிரமிப்பு தேவையற்ற ஒன்று. இத்தனை திமிரோடு வாழ்பவனுக்கு அளவில்லா பணமும் பிரமாண்ட அலுவலகமும் இருக்க தானே செய்யும்.
எண்ணத்தில் இவை உதித்ததும் நடந்தாள். அனைவரும் தன்னையே பார்ப்பதாக தோன்ற, விதுரன் முன்பு கூறியது போல வலது இடதென பார்க்காமல் முன் நோக்கி மட்டும் பார்வை பதித்து நடந்தாள்.
அவள் நின்று நிதானமாக யோசித்த நேரத்தில் விதுரன் லிப்டில் சென்று அலுவலக அறையில் வந்து அவளின் நடையுடையை இரசிக்க ஆரம்பித்திருந்தான்.
எங்க போகணும்னு தெரியாமல் விழித்தவளை தர்மா வந்து ரைட்ல லிப்ட்ல ஏறினா பதினைந்தாவது மாடி மேம்.” என்றான்.
“திடுதிப்புனு வந்து பேசாதே உயிர் போயிடுச்சு.” என்று திட்ட தர்மா அமைதியாக “எனிவே தேங்க்ஸ்” என்று சென்றாள்.
“என்ன பண்ணணும்..? சாரி நீ என்ன பண்ணற என்ன கம்பெனி நடத்தறனு ஒன்னும் தெரியாது. ஆனா விரோதிய நிறைய சேர்த்து வச்சிருக்கனு தெரியுது.” என்றாள் பிரகதி.
“பரவாயில்லை… நமக்கு திருமணமாகி ஆறு மாதம் ஆகியிருக்குமா… இது கூட தெரிந்து வச்சுக்காமா இருக்க. எனக்கு பிடிச்சிருக்கு.” என்றான் விதுரன்.
“இவன் ஒருத்தன் எது பேசினாலும் பிடிச்சிருக்குனு.” என்று முனங்கினாள்.
“சத்தியமா… உன்னை கட்டாயப்படுத்தி தான் மேரேஜ் பண்ணினேன். பட் பிராங்கா சொல்லணும்னா… உன்னை எனக்கு பிடிச்சிருக்கு.” என்று சுழற்நாற்காலியில் கம்பீரமாய் அமர்ந்து கூறினான்.
“எனக்கு வேலை இருக்கா.. இல்லையா.. உன்னோட புருஷன் பொண்டாட்டி சண்டை போட இங்க வரலை.” என்று கைகட்டி நின்றாள்.
மேலிருந்து கீழ்வரை அலசியவன் விக்னேஷை அழைத்து விளக்கமளிக்க கூறிவிட்டு சென்றான்.
“இங்க எட்டு மாடி ஐடி பீல்டா ரெண்டு(rent)க்கு இருக்காங்க. நாலு மாடி நம்ம ஸ்டாப் ஓர்க் பண்ணறாங்க. அதுயெல்லாம் அதர் கன்ட்ரிஸோட சாருக்கு ஷேர் இருக்கு.
மற்ற இரண்டும் நம்ம மொபல் லேப்டாப் எக்குப்மெண்ட்ஸ் பிராடெக்ட் நியூவா சந்தைக்கு தயார்ப்படுத்த டிசைன் மாடல் ரெடி பண்ணறவங்க.” என்று விளக்கமளிக்க, பிரகதி தலையை பிடித்து “ஒன்னும் விளங்கலை. அவனோட பராக்கிரமத்தை கேட்கலை. டெய்லி நான் என்ன ஜாபை பண்ணணும்னு கேட்டேன்.” என்றாள்.
“சாரோட டெய்லி ரொட்டின் ஒர்க் சார்ட் உங்களுக்கு மெயில் வந்திடும் மேம். நீங்க அதை நினைவுப்படுத்தணும். அவ்ளோ தான் மேம் சொன்னார்.” என்றதும் கடுப்பானாள்.
மதியம் போல இந்த கம்பெனிக்கு போன் பண்ணணும். இவங்களுக்கு டீல் சைன் பண்ணணும். இந்த கொட்டேஷனுக்கு மெயில் பண்ணணும் என்று இப்படியே மதியம் வரை சென்றது.
கேரியரில் சாதம் கொண்டு வந்து முடிக்க அதை சாப்பிட கூட பயந்தாள்.
அதை அறிந்தவன் போல, “கவலைப்படாதே… லேப் டெஸ்ட் பண்ணிட்டு தான் புட் இங்க வர்றோம். அன்னைக்கு யாரோ தெரிஞ்சவங்க பண்ணின வேலை. அவனை தான் அன்னிக்கு கழுத்தை நெறிச்சேன். உனக்கு கோபம் வந்து கிளம்பிட்ட. நான் என்ன பண்ண.” என்றான்.
விதுரன் இப்படி கூறியதும் பிரகதி நிமிர, “அவனை என்ன பண்ணின?” என்றாள் நெஞ்சுக்கூடு அதிகமாக படபடத்தது. அவன் சொல்லும் பதிலுக்காக.
“என்ன பண்ணுவாங்க..?” என்றான்.
“நான் அவனை பார்க்கணும்? ஏன் இப்படி பழி வெறி பிடிச்சி யாரோயோ கொல்ல யாரோயோ இன்னலுக்கு ஆளாக்கிறிங்கனு கேட்கணும்” என்றாள் பிரகதி.
“இப்ப கேட்க முடியாது. செத்து போயிட்டான். சாப்பிடு” என்று உணவை விழுங்க பிரகதிக்கு உணவு இறங்கவில்லை.
“நம்ம சைட் தான் உயிரோட இருக்கோமே பிறகு ஏன் அவனை கொன்ற? இப்ப அவனை விட நீ தானே கொலைக்காரனா தெரியற. உன் மேல சின்னதா நல்லபிப்ராயம் வர்றப்ப அப்படியில்லை நான் மகா ராட்சஷன் என்று அவதாரம் எடுக்கிற.” என்று விம்மினாள்.
“சின்னதா நல்லபிப்ராயம் வருதா?” என்றான் அவளின் விழியை கலக்கவிட்டு. பிரகதி இமை பாரமாக இருப்பது போல உணர்ந்தவள் எழுந்து கொள்ளும் நிலையில் இருந்தாள்.
“நான் சொன்னேன்ல என்னோட உன் வாழ்க்கை கலக்க ரொம்ப நாள் ஆகாதுனு.” என்றதும் எழுந்து விட்டாள்.
“நான் போறேன். எனக்கு மனசு சரியில்லை. அம்மாவை பர்க்கணும்.” என்று நடக்க “சாப்பிட்டு போ” என்றான்.
“எப்படி சாப்பிட?” என்றாள் எரிச்சலுடன்.
“சாப்பிடணும். இப்பவே போகணும்னா சாப்பிட்டா தான் விடுவேன். இல்லைனா மாலை ஆறு மணி வரை இங்க நீ இருந்து தான் ஆகணும். சாய்ஸ் இஸ் யுவர்ஸ்.” என்றான்.
வேகமாக அள்ளி விழுங்கினாள். முன்பும் இதே போல உண்ட நினைவு வர அவள் புறம் நீரை நீட்டியிருந்தான் விதுரன்.
தண்ணிரை குடித்து மாத்திரை போல விழுங்கி, வெளியேற, பத்தாவது தளத்தில் இன்பா பணிசெய்யும் டேக்கை கழுத்தில் அணிந்தவனாக சிரித்து கொண்டு உணவை கையில் எடுத்து கொண்டு செல்வதை கண்டாள்.
“இன்பா… இன்பா..” என்று கையசைக்க, அவனும் பார்த்துவிட்டு அவளை நோக்கி வந்தான்.
-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
interesting
Superb