Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -27

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -27

துஷ்யந்தா-27

பிரகதி இருக்குமிடம் அறிந்தாலும் அவனால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. காதல் கூறியவனிடம் உதவி கேட்டு சென்றது இடித்தது.

முன்பு போக கூடாதென இருந்த திடமான மனதை மேலும் திடபடுத்திக் கொண்டான்.

என்ன தான் இவன் திடமாக தோன்றினாலும் ஆதித்யாவால் அப்படியிருக்க முடியவில்லை. அவனுக்கான வாழ்வை வாழவில்லையென பரிதவித்தார்.

வேறு பெண்ணை மணந்துக் கொள்ள கூறினாலும் “நான் எக்ஸ்பெக்ட் பண்ணற லெவல் இல்லை தாத்ரு.” என்பான்.

ஆதித்யாவோ காலம் கடந்துட்டு இருக்கு விதுரா. நானும் உன்னை அம்போனு விட்டுட்டு போக போறேன். என்னோட கடைசி வாழ்நாளோனு மனசு சொல்லுது. பிரகதியும் இனி வரமாட்டா.. நீயும் இப்படியே இருக்க. பிடிச்சோ பிடிக்காமலோ அந்த தீபிகா சந்தோஷமா தான் வாழறா. நீ தான் எந்த கேட்டகிரினு தெரியலை.

எனக்கு பிரகதியை பார்க்கணும்னு ஆசையா இருக்கு. வீட்டை வித்துட்டு எங்க போனாளோ…” என்று நெஞ்சை தாங்கி நடந்தார்.

   “தாத்ரு… என்ன பண்ணுது. ஏன் சுணங்கறிங்க?” என்றான்.

“பிரகதி… விதுரா… நீ… உன்.. வாழ்க்கை..” என்று வார்த்தை வெளிவராமல் இதயம் சுருக்கென்று தைத்தது.

“அய்யோ தாத்ரு… பிரகதி லண்டனில் இருக்கா. எட்வின் உதவியால. எதுவும் யோசிக்காதிங்க. நான் என் வாழ்க்கையை நிம்மதியா தான் வாழறேன்.” என்று பதில் கூற, “தர்மா…, விக்னேஷ்…” என்று கத்தினான்.

மணி பதினொன்று ஆனதும் விக்னேஷ் தான் சென்றிடுவானே. முன்பு பிரகதி இருக்க விதுரன் தர்மாவை வீட்டுக்குள் விடமாட்டான்.

மீண்டும் தனிக்காட்டு ராஜாவாக மாறிய நேரம் தர்மா தான் துணையாக ஓடிவந்தது.

விரைவாக சுதனுக்கு அர்த்த ராத்திரியில் போன் செய்து வர கூற அதற்குள் டியூட் டாக்டரால் ஆதித்யாவிற்கு சிகிச்சை துவங்கினார்கள்.

அடுத்த நாள் விதுரன் சுதனிடம் தாத்ரு பற்றி விசாரிக்க “அது வந்து டா… ரிப்போர்ட் எல்லாம் வந்தாச்சு… ஆதித்யா ஐயாவுக்கு வந்த முதல் அட்டக் தான். ஆனாலும்…” என்று இழுத்தான்.

“என்ன சொல்லணுமோ சொல்லு… இழுக்காதே.” என்றான் விதுரன்.

“தாத்தா… கடைசி நாட்களை எண்ணிட்டு இருக்கார். மனசை திடப்படுத்திக்கோ” என்று சுதன் கூறிவிட்டு நகர்ந்தான்.

விக்னேஷ் வந்து “சார் ஐயாவுக்கு என்னாச்சு?” என்று பதறினான்.

விதுரன் பதில் கூறாமல் தலையை தாங்கி அழுத்த கோதி முடித்தான்.

” டிஸ்சார்ஜ் எப்ப டா.? இல்லை… இங்கிருந்தே எமதர்மன் வந்துடுவாரா?” என்று கேட்டான் குரலில் அத்தனை வலி. இப்படி கேட்க அவனால் மட்டுமே முடிந்தது.

“ஏன்டா இப்படி பேசற… டூ ஆர் த்ரி மந்த்ஸ் தெறினா உயிர் பிழைப்பார். ஆனா பழைய நிலைக்கு வரணும்.” என்று ‘க்கு’ வைத்து முடித்தார் டாக்டர் சுதன்.

விதுரனோ இரண்டு வாரம் கடந்து ஆதித்யாவை தன் வீட்டிற்கு சிகிச்சை முடித்து அழைத்து வந்தான்.

“என்ன தாத்ரு.. பயமுறுத்த ட்ரை பண்ணறிங்களா? இல்லை… உங்க கூட பாட்டி வந்து டூயட் ஆடணும்னு என்னை தனியா விட்டுட்டு போக பிளானா?” என்று கிண்டலும் நக்கலாய் கேட்டான்.

“அடப்போடா…. உங்க பாட்டி முன்ன போய் சேர்ந்துட்டா. இந்நேரம் வேற ஜனனம் வேற பிறவினு போயிருப்பா. மனுஷ ஜென்மம் ஒன்று தான் விதுரா… அந்த பிறவி மற்ற பிறவியோட ஸ்பெஷல். நம்ம துணையை காதலிச்சு வாழ்வோம். உன் பாட்டி பிரகதியை விட திமிர்பிடிச்சவ தெரியுமா.

ஒரு முறை கல்யாணத்துக்கு முன்ன குட்டச்சினு சொல்லிட்டேன். கோவத்துல எல்லார் எதிரிலும் எனக்கு இவரை பிடிக்கலைனு போடு போட்டா தெரியுமா? அப்ப அவளுக்கு வயசு பதினாலு. எனக்கு பதினொன்பது.

கல்யாணம் பேசறப்ப எனக்கு இந்த குட்டச்சி தான் வேண்டும்னு நான் பிடிவாதம் பிடிக்க, எனக்கு இவரை பிடிக்கலைனு உங்க பாட்டி தாழங்கனி பிடிவாதம் பிடிக்க, கல்யாணம் செய்த கொஞ்ச நாள்ல என்னோட பேசமாட்டா, பழகமாட்டா, ஏன் ஒரு சொம்பு தண்ணிய கூட மரியாதைக்கு எடுத்து தர மாட்டா. சிறுக்கி அவளுக்கு பதினாறு வயசுல ஆனப்ப, என்னோட மீசைக்கு பயந்து பம்மினா.. அப்பறம் நான் பேச, அவ பேச பயம் போய் இரண்டு பிள்ளையா பெத்து போட்டா.
என்ன சசி பிறந்தப்ப உடம்பு சுகவீனப்படலை. பொசுக்குனு போயிட்டா.

நான் சசிக்கு பையன் பிறந்தப் பிறகும் கூட உசிரோட நடமாடறேன். எனக்கு காலம் முடியப்போகுது விதுரா.

எனக்கு ஒரே ஆசை.” என்று நிறுத்தினார்.

“சொல்லு தாத்ரு சொடக்கு போட்டு முடிக்கும் முன்ன செய்து காட்டறேன்.” என்றான்.

“உன்னால முடியுமா டா.?” என்று ஜம்பமாய் கேட்டார்.

“தாத்ரு… நான் அதே விதுரன் தான். என்னனு சொல்லு. செய்து முடிக்கறேன்.” என்று வீராப்பாய் உரைத்தான்.

“பிரகதியை பார்க்கணும் டா” என்றார் ஆதித்யா.

விதுரன் ஸ்ருதி குறைந்து போனான். மீண்டும் ஈரெட்டு நடந்து யோசிக்க செய்தான்.

“பார்த்தியா.. ஈகோ உடைச்சிட்டு போக மாட்ட. எனக்கு தெரியும் டா” என்றார்.

“போக கூடாதுனு இல்லை தாத்ரு. போகணுமானு யோசிக்கறேன்.” என்றவன் பதில் தந்தான்.

“உன் இஷ்டம் அவளை கடைசியா பார்க்க ஆசைப்படறேன். தவிர உன்னை சேர்த்து வைக்க எல்லாம் இல்லைப்பா. அதுக்கு பிறகு உன்னிஷ்டம்” என்றவர் ஓய்வெடுக்க சென்றார்.

விதுரன் யோசிக்க ஆரம்பித்து ஒரு மாதம் கடந்தது.

ஆதித்யா எதிர்பார்த்து பூத்து ஏமாந்தவராய் மாறினார்.

விதுரன் உடனடியாக அழைத்து வந்து நிறுத்துவானென எண்ணியவருக்கு பெருத்த ஏமாற்றம் அளித்தது.

பிறகு வாய்விட்டே “எனக்கு பிரகதியை பார்க்கணும். போன் பண்ணியாவது கொடு” என்றார்.

“தாத்ரு.. அவ வேண்டாம்” என்றான்.

“கடைசி ஆசை டா.” என்றார் அவர்.

போனை எடுத்து தற்போது பிரகதி உபயோகிக்கும் எண்ணிற்கு சுழற்றினான்.

“ஹலோ… பிரகதி இயர்” என்றாள். அதே தேன் குரல். தன்னிடம் முதல் முதலாக பேசிய அதே வார்த்தை அச்சு பிசாகது மீண்டும் காலச்சக்கரம் சுழல்வதாக தோன்றியது அவனுக்கு.

பெருமூச்சை ஊதி தள்ளிவிட்டு, “நீ இங்க வரணும். நாளைக்கு மார்னிங் ஏறி ஈவினிங் இங்க லேண்ட் ஆகற மாதிரி வர்ற பாரு” என்றான் விதுரன்.

“யாரு டா நீ.? எனக்கு ஆர்டர் போட.?” என்று எகிறி குதித்தாள்.

“ம்ம்… உன் புருஷன்.” என்றான் விதுரன்.
ஒரு நிமிடம் பிரகதிக்கு சேம் டயலாக்… இது.. அப்போ…” என்று நம்பரை கவனித்தாள். ட்ரூ காலரில் விதுரன் என்று காட்டியது.

எச்சிலை விழுங்கி தைரியமாக “வான்னா… ஏன் வரணும்.? உனக்கும் எனக்கும் ஒன்னுமில்லைனு கோர்ட் மூலமா டிவோர்ஸ் வாங்கியாச்சு. புதுசா… மறுபடியும் இருந்து ஆரம்பிக்கிற. புருஷன்னு?” என்று வெடித்தாள்.

“ஏய்… உன்னோட கொஞ்சி குலாவி பெட்ல கட்டி புரண்டு முத்தம் கொடுக்க கூப்பிடலை. தாத்ரு உடல்நிலை சரியில்லை. சொந்த பேரன் நான் குத்து கல்லாட்டும் இருக்கேன். அவருக்கு உன்னை பார்க்கணுமாம். போதுமா…. ரொம்ப சீன் போடாம தலைகாட்டிட்டு போடி.” என்றான்.

“என்ன வாய் நீளுது. இங்க பாரு… என்னை சீண்டின தலையில வந்து கண்ணாடியை தூக்கி போட்டுடுவேன். மறந்துட்டியா… உன்னை கத்தியால குத்தி ஹெல்லுக்கு ஷார்ட் ரூட் போட்டு கொடுத்தவ நான். நூலிழையில் தப்பிச்சு வந்தவன் நீ. மறுபடியும் என்னிடம் வாலாட்டாதே.” என்றாள்.

“அச்சச்சோ… பயந்துட்டேன். போடி… நாளைக்கு வர்ற… இல்லை… அந்த எட்வினுக்கு கை உடையும்.” என்றான்.

ஆதித்யா வந்து போனை பிடுங்கி, “நீயிருக்கியே… போடா அந்தப்பக்கம்.” என்று விதுரனை திட்டிவிட்டு “எம்மாடி ராசத்தி… உடம்பு முடியலை டா. உன்னை கடைசியா பார்க்க ஆசைப்படறேன். இவனிடம் சொன்னேன். உன்னை எப்படியாவது கூட்டிட்டு வந்து கண்ணுல காட்டுவான்னு பார்த்தா மறுபடியும் எடக்கு மடக்காவே பேசறான்.
அவனை விடு மா. உன் அம்மா நிலையில் இப்ப நான் இருக்கேன். கடைசி படிக்கட்டுல… வந்து பார்க்க வருவனு நம்பறேன். இந்த கிழவனை ஏமாற்றிடாதே…

அவனிடம் சொல்லிட்டேன். முடிஞ்சதை பேசக்கூடாதுனு. நீ தலை மட்டும் காட்டிட்டு போமா.” என்றார்.

தாத்தா… அது வந்து.. நான் இங்க… எனக்கு… முயற்சி பண்ணறேன் தாத்தா.” என்று கூறி சிறிது நேரம் பேசியே வைத்தாள்.

இரண்டு மணி நேரம் போகவா? வேண்டாமா? என்று யோசித்தாள்.

எட்வின் பார்த்துக் கொண்டிருந்தவன் என்னவென கேட்க ஆங்கிலத்தில் பதில் கூறவும், “போயிட்டு வா. அந்த தாத்தா… உன்னை கனிவா பார்த்துக்கிட்டார் தானே. கடைசி ஆசை என்று விதுரனோட சேர சொல்லலையே. உன்னை பார்க்க தானே கூப்பிட்டார்.

நீ இருப்பதை தெரிந்திருக்கார், நம்பர் தெரியுதுனா, முன்னயே வரலை.” என்று எட்வின் கூறவும் பிரகதி ஆழ்ந்து யோசனையிலேயே கடந்தாள்.

இரவு பத்து மணியளவில் விதுரனிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதனை கண்டதும் இடியட் எப்படி அனுப்பிருக்கான். “பெரிய மன்மதன், அழகன்னு நினைப்பு மயங்க, உனக்கு அவ்ளோ சீன் இல்லை” என்று அனுப்பினாள்.

“பொய் நான் கொடுத்த முத்தத்துல பயந்து ஓடிட்ட.” என்று அனுப்பினான்.

இதென்ன இந்த நேரத்தில் இவனின் குறுஞ்செய்தி இப்படி வந்து தொலைக்கின்றது என்று மனதிலேயே திட்டினாள்.

போனை தூரயெறிந்து போட்டாள். பிறகு இன்பாவிற்கு அழைத்து உண்மை நிலவரம் கேட்டாள். அவனுமே “ஆதித்யா சார் முடியாம தான் இருக்கார் பிரகதி. நீயேன் டிவோர்ஸ் வாங்கிட்டு போயிட்ட. எ வோண்டர்புல் லைப் நீ கெடுத்துக்கிட்ட” என்றான்.

“டேய்… அவன் உன்னைய அடிச்சி உன் காதலை பிரிச்சவன் டா. மறந்துப்போச்சா..” என்றாள்.

“அப்ப தப்பா தோனுச்சு பிரகதி. பட் தீபிகா ரியல் பேஸ் பார்த்ததும் அவளோட பெரிய பெரிய கனவுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் பிரகதி. என்னோட இரண்டு தங்கை அம்மானு இருக்கற குடும்பம் சிதைந்திருக்கும். அவ்ளோ பெரிய பணக்காரங்களான சசியோட அம்மாவுக்கே அங்க மரியாதை தரலை. எங்க அம்மா எந்த மூலைக்கு… சரி பழையதே எதுக்கு… சொல்ல மறந்துட்டேன். அஞ்சலி கன்சீவா இருக்கா. நீ இந்தியா வந்து ஆதித்யா சாரை பார்த்துட்டு போறதா இருந்த என் வீட்டுக்கும் ஒரெட்டு வந்துட்டு போ. வளைகாப்பு வைச்சிருக்கேன். அடுத்த வாரம்… திங்கள் கிழமை. வந்துடு. அட்ரஸ் வாட்ஸப்ல அனுப்பறேன். இந்த நம்பர் தானே..? சேவ் பண்ணவா? இல்லை விதுரன் சாருக்கு பயந்து மாத்திடுவியா?” என்று கேட்டான்.

“டேய் பிரகதி பயந்துட்டு மாற்றலை. அவன் ஒரு மார்க்கமா மெஸேஜ் டார்ச்சரா பண்ணினான். பிளாக்ல போடுறதுற்கு பதிலா அந்த நம்பரையே ஆப் பண்ணிட்டேன். சரி லேட் நைட் டிஸ்டர்ப் பண்ணிட்டேன். குட் நைட்” என்று வைத்தாள். அவனுமே நல்இரவு கூறி விடைப்பெற்றான்.

எட்வினிடம் இன்பாவின் மனைவிக்கு வளைகாப்பு சொன்னான் டா. ஆதித்யா தாத்தாவும் விதுரனோட எல்லாம் சேர்த்து வைக்க மாட்டாராம். கேட்டுட்டேன். அதனால போக போறேன். விதுரனிடம் பிராப்பரா டிவோர்ஸ் வாங்கியாச்சு. அவனால என்ன பண்ண முடியும். போயிட்டு வந்துடறேன். அப்பறம் நீ மற்ற ஏற்பாட்டை கவனி.” என்று சென்று விட்டாள்.

எட்வினுக்கு சற்று நம்பிக்கை ஆட்டம் கண்டது. இருந்தும் வேலைகளை ஆரம்பிக்க திட்டமிட்டான்.

ஏர்ப்போர்ட்டில் இருந்து பிரகதி வந்ததும் கதிர் அழைக்க வந்திருந்தான்.

-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

வாசிக்கும் அன்பர்களுக்கு கனிவான நன்றிகள்.

3 thoughts on “துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -27”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *