துஷ்யந்தா-48
விக்னேஷ் கூறுவதை கேட்டு விதுரன் போனில் சிரித்து கொண்டிருந்தான்.
இரண்டு வாரமாய் சசி சௌமியாவின் செய்கைகளை உடனுக்குடன் விதுரனுக்கு அனுப்பவும், என்ன தான் சசியை தனித்து வளர விட எண்ணினாலும் அவனுக்கு துணைக்கு நம்பிக்கையாய் விக்னேஷை அனுப்பியிருந்தான்.
“சார் சிரிக்காறிங்க இங்க நின்று பார்த்தா இவங்க பண்ணற காமெடி புரியும்.
சசி சார் என்னன்னா சௌமியா மேம் பார்த்து பயந்துட்டு, அவங்க வர்றதுக்கு முன்னவே டைப் பண்ணி வந்தப்பிறகு ஆடியோல ஓடவிட்டு பேசி அனுப்பிடறார். இவங்க என்னனா உள்ள வருவதற்கு முன்ன பிள்ளையாரை கும்பிட்டு பிளையிங் கிஸ் பண்ணறாங்க. சிலுவை போடறாங்க… யா அல்லானு சொல்லாத குறை தான்.
சசி சாரை பார்த்து தயங்கி முகம் பார்க்க கூட பயந்து டீச்சருக்கு முன்ன பம்மிட்டு இருக்கற ஸ்டூடண்ட் மாதிரி பிகேவ் பண்ணறாங்க சார். மொத்தத்துல எனக்கு நல்ல எண்டர்டெயிண்மெண்ட் தான்.
நீங்க பிரகதி மேம் டெவில்ஸ் கபிள்.. எப்பவும் சண்டை வாக்குவாதம் அடிதடி ஆக்ஷன் சூப்பர் ஹிட் காதல்னா.. இவங்க மியூட் கப்பிள் சார் காவிய புதனா இருக்காங்க.” என்றான் விக்னேஷ்.
“என்ன விக்னேஷ் சன்டிவி விளம்பரம் பார்த்து அப்படியே ஆபிஸ் வந்துட்டிங்களா…
நீங்க அங்க நோட் பண்ணறதை சசி என்ன சொல்லறான் தெரியுமா? எதுக்கு டா சாட்டிலைட் கேமிரா மாதிரி விக்னேஷை அனுப்பியிருக்கனு மெஸேஜ் பண்ணறார்.” என்று விதுரன் சிரித்தான்.
பளீரிட்ட புன்னகையில் பிரகதி அவளை மறந்து விதுரனை இமைக்காமல் பார்த்து இருந்தாள்.
“ஓகே விக்னேஷ் அநேகமா நான் கொளுத்தி போட்ட புகை எப்ப வேண்டுமென்றாலும் பத்திக்கும். அப்ப கூடயிருந்து வழிநடத்துங்க” என்று வைத்தான்.
“என்ன டெவில் குயின் என்னையே பார்த்துட்டு இருக்க.” என்று கேட்டவன் டையை கழட்ட, நமக்குள்ள ஏதோ கண்ணாடி திரை இருக்கா விதுரான. நீ என்னிடம் கோபிக்கலை. ஆனா தண்டனை தர்றியோனு பீலாகுது.
என்னை அணைத்து உன் இதயத்துல படுக்க வைக்கிற, உன் கை வளைவில் பாதுகாத்து என்னை.. என்னை.. அன்பா பார்த்துக்கற. பட் என்னை தண்டிக்கிற. என்னோட தண்டனை அப்போ முடியலையா.” என்று கேட்டாள்.
விதுரன் மகளை தூக்கி கொண்டு மொட்டை மாடிக்கு பயணமானான்.
அங்கிருந்த பொம்மை காரில் மகளை அமர்த்தி ஓட்ட பழக கூறினான்.
தத்தி தத்தி நடக்க ஆரம்பித்தாலும், தரையில் நடக்க விடாமல் தவிர்த்து தூக்கியே பழகியவர்கள் பிறந்த நாளுக்கு பின்னர் நன்றாக நடக்க ஆரம்பித்து விட்டாளென்றதும் தற்போது குட்டியாக இருந்த பிங்க் வண்ண பொம்மை காரில் அவளை அமர வைத்தனர்.
விதுரன் பேசாமல் மௌனமாய் இருப்பதிலேயே பிரகதி அவன் மனதை புரிந்து கொண்டாள்.
எட்வின் அனிலிகாவை மன்னித்து வழியனுப்பியவனுக்கு தன்னை மன்னிக்க இயலவில்லையா இல்லை எது தடுக்கின்றது என்று அவளால் யூகிக்க முடியவில்லை.
“என்ன தான் கோபம்?” என்று அவனை அணைத்து கேட்டவளை விலகி நிறுத்தி ‘டெவில் கிங்’ வோர்ட்ஸ் இஸ் மிஸ்ஸிங் டியர்.
நான் திமிர் பிடிச்சவன், அடங்காதவனா தெரிந்தப்ப இதே பிரகதிக்கு என்னிடம் பேச தயக்கம் இல்லை. இப்ப மட்டும் தயக்கம் தெரிதுனா நான் என்ன மாறிட்டனா?
இல்லை… நான் அதே விதுரன் திமிர்பிடிச்சவனா, அடங்காதவனா தான் சுத்தறேன். ஆனா நீ மாறிட்ட.
என்னை விரும்பியதும் வெட்கம் தயக்கம் பயம் எதுவுமில்லாம என் முன்ன சேலையை சுத்திட்டு வந்து நின்றியே அந்த பிரகதி தான் வேண்டும். இந்த பிரகதி மாறிட்டா.
எனக்கு இந்த பிரகதி பிடிக்கலை.
என் திமிருக்கு எதிர் திமிர் காட்டற, நான் அராஜகம் பண்ணினா என்னை அராஜகம் பண்ணிட்டு இருக்கற பிரகதி, டெவில்கிங்குக்கு ஏற்ற டெவில் குயின் வேண்டும் எனக்கு. இப்ப சொல்லு… நான் லவ் பண்ணின பிரகதி இப்ப இருக்காளா?
ஐ லவ் யூ விதுரானு சொன்னா.. மீடூ பிரகதினு என்னால எப்படி சொல்ல முடியும்.
இதே ஐ லவ் யூ டா டெவில் கிங்னு சொல்லி நீ” என்று முடிக்கும் முன் மொட்டை மாடி நிலா ஒளிந்துக் கொள்ளும் அளவிற்கு பிரகதி செய்கை மாறியிருந்தது.
அவனை தள்ளி விட்டு உதட்டில் முத்தமிட்டவள் கடித்தும் வைத்தாள். தன்வீ அருகே வர இறங்கி அவள் சென்ற பக்கம் பார்த்து நிம்மதியோடு விதுரன் பக்கம் திரும்பினாள்.
கொஞ்சமும் வலியை காட்டிக் கொள்ளாமல் மெடலை வாங்கியவன் போல சிரித்து கொண்டு இரத்தத்தை நாவல் துடைத்து உதட்டை ஈரப்படுத்தி மெத்தையில் தலையணையை வைத்து ராஜ தோரணையில் அமர்ந்தான்.
“லவ் யூ டெவில்குயின். பாப்பா மட்டும் இப்ப தூங்கிட்டு இருந்தா என்னோட பதில் வினையை பார்த்திருப்ப. மிஸ்ஸாகிடுச்சு.
தன்வீயை கூட்டிட்டு கீழே போ. பனி அதிகமாகுது. தன்வீக்கு செட்டாகாது.” என்றதும் பிரகதி அவளை தூக்கி கொண்டவள், “ஹலோ துஷ்யந்தா என்னை தூக்கிட்டு போ.” என்றாள்.
“கொஞ்சம் அதிகமாகிடுச்சு..” என்று விதுரன் தலையாட்டி கூற, “என்ன..?” என்று பிரகதி முட்டை கண்களால் கேட்டு முடிக்க, “ம்ம்.. கொழுப்பு டி செல்லம்” என்றான்.
பிரகதி தன்வீயை அணைத்திருக்க இவனோ அவளை அள்ளி தூக்க மகளையும் மனைவியையும் தூக்கி கொண்டு படிக்கட்டு இறங்கினான்.
பிரகதி மனதில் ஏறிக் கொண்டிருந்தான் அந்த எமகாதகன்.
சற்று நேரம் தன்வீயை உறங்க வைக்க, பிரகதியோடு ஓர் காதல் யுத்தத்தை நிகழ்த்தியே உறங்க ஆரம்பித்தான்.
அடுத்தடுத்த நாட்களில் இன்பாவின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைப்பெற தயாராகி இருந்தது.
சௌமியா வந்து விடுப்பு கேட்டு மெயிலில் அனுப்பினாள். சசியோ “வாழ்த்துகள் தாராளமா லீவு எடுத்துக்கோங்க” என்று அனுப்பி விட்டான்.
அஞ்சலி வீட்டு ஆட்களும், இன்பாவின் அலுவலக நட்புகளும், கல்லூரி நட்பைகளும் என்று வரவேற்றான்.
இம்முறை பிரகதியை அழைக்கலாமா வேண்டாமா என்று குழம்பியவனாக பயத்தோடு போனில் அழைக்க, “ட்ரை பண்ணறேன் இன்பா.” என்று முடித்து கொண்டாள்.
விதுரனை மதிக்காத இடமென்றால் அங்கு செல்ல இந்த சகுந்தலையான பிரகதிக்கு பிடிக்குமா?
சௌமியாவோ விதுரனையும் அழைக்கவில்லை, சசிதரனையும் அழைக்கவில்லை.
விழா என்னவோ இன்பாவின் வசதிக்கு ஏற்ப ஒரு மினி ஹாலில் ஏற்பாடு செய்திருந்தான். ‘மஞ்சரி’ என பெயரிட்டு மகிழ்ந்தனர்.
சாப்பிட்டு வந்த கூட்டம் எல்லாம் அவர்கள் மகிழ்ச்சியை அழிப்பதற்காகவே சௌமியாவின் திருமணத்தை முன் வைத்து பேசவும் விஜயலட்சுமி வேதனை வயப்பட்டார்.
பையனுக்கு திருமணம் முடித்து பெண்ணை அம்போவென வீட்டில் வைத்திருந்ததாக குற்றங்கள் வந்து சேர்ந்தது. காரணம் அறிந்த சிலரோ உச்சுக் கொட்டி பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்த மகிழ்விலும், எனக்கு சௌமியாவின் திருமணம் நடைப்பெறாததற்கு காரணம் அறிந்தவர்கள் என்ற பெருமையும் திரிந்தனர்.
பேச்சை வளர்ப்பதற்கென்றே சிலர் இரண்டாம் திருமணம் கேட்டு வந்தார்கள்.
சசியை போன்ற வாழ்வு தான். ஆனாலும் இன்பாவுக்கு தங்கையை கொடுக்க மனமில்லை.
முன்பு சாதாரணமாக மனிதரை பார்த்து முடிவெடுத்தவன் தற்போது யார் சௌமியாவை மணக்க கேட்டாலும் சசிதரனை தராசு தட்டில் ஏற்றி வந்த வரனோடு ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்தது. பெரும்பாலும் சசிதரனே முதலிடம் வகிக்க இன்பாவே சில நேரத்தில் குழம்பினான்.
விழா முடிந்து வீட்டுக்கு வந்த பின் வீட்டுக்கு இரண்டு பரிசு பொருட்கள் வந்து சேர்ந்ததை அறிந்தனர்.
ஒன்றை இன்பாவும் மற்றொன்றை அஞ்சலியும் பிரிக்க ஆரம்பித்தார்கள்.
அஞ்சலியோ இது பிரகதி அனுப்பியது ‘VIDHURAnpraGATHI’
(விதுர..ன்பிர..கதி) எழுதியிருக்கு” என்று பிரித்தாள்.
இம்முறையும் தங்க வளையலோடு ஆடையும் கூடவே ஒரு டெடிபியர் பொம்மையும் இருந்தது.
“அது யாருங்க அனுப்பியது?” என்று கேட்டதும் இன்பா தங்க கொலுசை கையில் வைத்து கொண்டு அஞ்சலி அழைப்பில் உணர்வு பெற்று “சசிதரன்னு நினைக்கிறேன்.” என்றதும் சௌமியா அவள் பாட்டிற்கு மஞ்சரியோடு விளையாடி மகிழ்ந்தாள்.
“அதுக்கென்ன பேயறைந்த மாதிரி இருக்கிங்க” என்று அஞ்சலி கேட்டதும், இன்றைய தன் மனவோட்டத்தை அஞ்சலியிடம் கூறினான்.
யாரை பார்த்தாலும் சசிதரனுக்கு இணையாக சௌமியாவை வைத்து எண்ணி பார்க்க இயலவில்லை என்று வருந்தினான்.
அஞ்சலிக்கோ “இது தானா. போய் தூங்குங்க.” என்று அதட்டினாள். இன்பா அப்பவும் தூங்காமல் மகளையே வைத்து யோசித்தான்.
“என்ன தூங்கலையா?” என்று அஞ்சலி கேட்டாள்.
“இல்லை அஞ்சலி சௌமியாவுக்கு வந்த நல்ல லைப்பை நாம தடுக்கிறோமோ?
அந்த விதுரன் மாதிரி சசிதரன் இல்லை. பயங்கர சாப்ட். ஆனா இந்த திக்குவாய் தான், அப்பறம் அந்த யுகன் குழந்தை இரண்டும் தான் என்னை யோசிக்க விட மாட்டேங்குது.” என்று பேசினான்.
விஜயலட்சுமியோ சும்மா இல்லாமல் “அவளுக்கும் குழந்தை இல்லை. அவனுக்கு இருக்கே. அது பரவாயில்லையே. திக்கு வாய்னா ஏதாவது மெடிக்கல் பார்த்திருக்க மாட்டாங்க.” என்றதும்
“உங்களுக்கு எதுக்குங்க இந்த யோசனை.” என்று அஞ்சலி கூறவும் இன்பாவோ அதானே எனக்கென்ன என்று விட்டேற்றியாக பேசினான். ஆனால் உள்ளுக்குள் குடைந்தது.
எது சற்று கூடுதலாக சத்தம் கொண்டு பேசினாலும் ஹாலில் கேட்டு தொலைக்கும். சௌமியாவுக்கோ இந்த யோசனை கேட்டது அவளுக்கும் இந்த எண்ணம் உதித்தது.
அவளாக அடுத்த நாள் வந்து ஸ்பீக்கிங் தெரப்பி பற்றி சசியிடம் பேசினாள். ‘இதெல்லாம் யோசிக்காமல் இல்லை. எனக்கு செட்டாகலை.’ என்று திணறியவன் அதன் பின் அவளிடம் முகம் கொடுத்தும் பேசவில்லை.
மாலை செல்லும் நேரம் “ஸ்பீக்கிங் தெரப்பி பற்றி எல்லாம் பேசறிங்க” என்றான் ஆப் மூலமாக.
“அது வந்து சார்… அண்ணா நேற்று இதை பற்றி பேசினான். எனக்குமே இதெல்லாம் நீங்க பார்த்திருக்க செய்யலையானு… உங்களுக்கு ஏன்.. அந்த தெரபி எடுத்துக்கலையா?” என்று நிறுத்தினாள்.
“விதுரன் சொன்னான். நானா தான் போகலை” என்றான் சசி போன் ஆப் மூலம்.
சௌமியாவோ “உங்க தம்பி விதுரன் உபயோகமானதா சொன்னா அதை எல்லாம் கேட்கறதில்லையா?” என்று கேட்டு விட்டாள்.
இம்முறை போனில் டைப் பண்ணாமல் அவளை கண்களில் நேர்கொண்டு பார்த்து “அ..அவன்.. உன்..னை. கூட தான் கல்..யானாம் பண்ண சொ..சொல்லறான் கேட்க..றதில்லையே. அது மாதிரி தான்” என்றான் திக்கி திணறி. அதனை கூறியவன் நொடியும் நிற்காமல் ஓடிவிட்டான் எனலாம்.
சௌமியோ இதற்கென்ன விடை தர என்பதாய் மெதுவாக நடந்தாள்.
வீட்டுக்கு வந்து சேரும் நேரம் விஜயலட்சுமியோ “வேலைக்கு போய் சொந்த கால்ல நிற்கறேனு திரிஞ்ச. இப்ப பாரு எங்க வரன் தேடினாலும் அந்த புரோக்கரிடம் மாப்பிள்ளை வீட்ல என்ன சொல்லறாங்க தெரியுமா? நீயும் அந்த சசியும் விரும்பறிங்களாம்.” என்று விஜயலட்சுமி ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார்.
“அவயென்ன பண்ணுவா. தரகர் பேசறதுக்கு வரனை அவாய்ட் பண்ணறதுக்கும் வாய்க்கு வந்ததை சொல்வாங்க அத்தை. அவயென்ன ஆசையாவா வேலைக்கு போறா. வேலைக்கு சேர்ந்தப்ப போட்ட கையெழுத்து தலையெழுத்தா சுத்துது.” என்று அஞ்சலி ஆதரவாய் கூறினாள்.
இன்பாவோ ஷூவை கழட்டியவாறு, இதெல்லாம் அவன் வேலைமா” என்று இன்பா எரிச்சலாய் கூறினான்.
“அய்யோ அண்ணா… சும்மா அவரையே திட்டாதே. அவரெல்லாம் பிரச்சனைனா பத்தடிக்கு ஓடிடுவாரு. அவரா பிரச்சனையை இழுத்து வைக்க மாட்டார்.” என்று சௌமியா முன் வந்து சசி மேல் தவறிருங்காதுயென மறுத்தாள்.
“நான் அந்த சசியை சொல்லலை. விதுரனை சொன்னேன். அவன் அங்கயிருந்தே கோல் போடறான். உனக்கு அவனை பற்றி தெரியாது. என்னைய டார்கட் பண்ணிட்டான். இனி பாரு என்னவோ சசி-சௌமி விரும்பற மாதிரி கதையை திரிப்பான்.” என்று புலம்பினான்.
சௌமியோ இதற்கென்ன பேச்சை வளர்க்க என்பதாய் கடந்தாள்.
-விதுரகதி தொடரும்
-பிரவீணா தங்கராஜ்
Super😍
Avan panra velai tha inba