தேவதையாக வந்தவளே
தேவதை 1
மாலினி தன் இரண்டு வயது குழந்தையுடன் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாள்.
அவள் படபடப்புடன் பேருந்து வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருக்க.
அவள் முகத்தை வருடினாள் அந்த தேவதை. ஆம் அவளுக்கு மாலினி வைத்த பெயர் தேவதை தான். அவள் வாழ்க்கையை சிறப்பிக்க வந்த தேவதை. அவள் வாழ்க்கையை புதுப்பிக்க வந்த தேவதை. அவள் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் தேவதை. அவளுடைய அத்தனை வருட கஷ்டங்கள் வேதனைகள் துக்கங்கள் என்று இன்னும் எத்தனை பெயர்கள் அதற்கு இருக்கிறதோ அது அத்தனையும் போக்க வந்த தேவதை.
“அம்மா”, என்று அழைத்தவள். தன் வயிற்றை தொட்டு காட்டினாள்..
“பாப்பாவுக்கு பசிக்குதா?? “, என்று அதை நொடியில் புரிந்து கொண்டவள் தன் ஹேண்ட் பேக்கில் இருந்து பிஸ்கட்டை எடுத்து ஷாலினியிடம் நீட்டினாள்.. சிரித்த முகமாக அதை கையில் பெற்றுக் கொண்டவள் அவளுக்கு முதல் வாயை சாப்பிட கொடுத்துவிட்டு தனக்கு மறு வாய் தன் தாய்க்கு என்று ஊட்ட ஆரம்பித்தாள்.. அவள் அன்பில் எப்பொழுதும் போல நனைந்த மாலினி அவள் கன்னத்தோடு தன் கன்னத்தை வைத்துக் கொண்டாள். இந்த அன்பு இது மட்டுமே தன் வாழ்க்கைக்கு போதும் என்று எண்ணம் தோன்றியது. இதுதான் அவளை உயிர்ப்புடன் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. பேருந்து வந்ததும் அவசரமாக மகளின் கையில் இருந்து பிஸ்கட்டை பறித்தவள். ஹேண்ட்பேக்கில் வைத்துக் கொண்டு மிகச் சாக்கிரதையாக தன் மகளை அள்ளி அணைத்தபடி பேருந்து நெரிசலில் ஏறினாள்.
அவ்வளவு நேரம் அதை பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் தன் வாகனத்தை உயிர்ப்பித்து அந்த பேருந்தின் பின்னோடு சென்றான். அவர்கள் இறங்கி நடக்க ஆரம்பித்ததும். அவன் இடைவெளி விட்டு தன் வாகனத்தை மெதுவாக செலுத்திக் கொண்டிருந்தான். அவனுடைய பார்வை சாலையை விட அவர்கள் இருவரையும் தான் அதிகமாக பார்த்தது எனலாம்.
இது கடந்த ஐந்து மாதமாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிகழ்வு. ஆனால் இதுவரையில் மாலினி அதை கவனிக்கவில்லை. அவளிடம் குழந்தை இருந்தால் அவள் எதையும் கவனிக்க மாட்டாள். குழந்தையை விட்டு பிரிய அவளுக்கு மனம் வரவில்லை. ஆனால் வேலை பார்த்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம். தன்னுடைய படிப்பு வேலை அனைத்தையும் துறந்தவள். அந்த குழந்தையை பார்த்துக் கொள்வதற்காகவே குழந்தை காப்பகத்தை உருவாக்கினால் எனலாம் ..
அதற்காக அவள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. பேங்கில் லோன் போட்டு உடனே கிடைக்கவில்லை. ஃஷுரிட்டி கேட்டார்கள். ஃஷுரிட்டி ஏதாவது இருந்தால் எதுற்கு பேங்குக்கு வருகிறோம் என்று நொந்து கொண்டவள். தனக்குத் தெரிந்தவர்களை எல்லாம் உதவிக்கு நாடினாள்.. அவளுடைய தந்தை கூட அவளை முழுவதுமாக தலை முழுகி விட்டார். தாய் பாசம் இருந்தும் தன்னை ஏற்க முடியாத நிலை. தான் அவர்களுக்கு தொல்லையாக இருக்கக் கூடாது என்று அந்த ஊரைவிட்டு கிளம்பியவள். பெருநகரத்திற்கு குடி பெயர்ந்தாள்.. படித்த படிப்பு கை கொடுத்தது அந்த வகையில் அவள் தந்தை அவளுக்கு உதவியாகத்தான் இருந்தார். நல்ல வேலை நல்ல சம்பளம். ஆனால் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும். வேறு வழியில்லாமல் கையில் இருக்கும் இருப்பை நிறுத்திக் கொண்டு லோனுக்கு அப்ளை செய்தாள். மூன்று மாதங்கள் நடையாய் நடந்து நிறைய பேரின் உதவி கேட்டு பேங்கர்களுக்கும் கமிஷனை கொடுத்து தான் அவளுக்கு லோன் கிடைத்திருந்தது.
அதற்குள்ளாகவே கையில் இருந்த இருப்புகள் எல்லாம் காலியாகி இருந்தது. நிறைய அலசி ஆராய்ந்து டிரஸ்டுகளை தொடர்பு கொண்டவள். அவர்களிடமும் உதவி கேட்டாள்.. அதில் சிலர் அவளை வக்கிரமாக பார்க்க. இது வேலைக்கு ஆகாது என்று ஒதுங்கியவள். சிரமத்துடன் தான் அந்த குழந்தை காப்பகத்தை சென்னையில் உள்ள முக்கியமான தொழில் நடக்கும் இடத்தில் தொடங்கினாள்.. அங்கேயே வீடு வாடகைக்கும் தேடினாள். ஆனால் அது சில ஆயிரங்களை கேட்டது. தனக்கு அது கட்டுபடியாகாது கொஞ்ச நாள் கழித்து பார்த்துக் கொள்ளலாம் என்றவள் அந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் தான் வீடை வாடகைக்கு பிடித்திருந்தாள்..
தினமும் பேருந்து பிரயாணம்.ஆனால் தன்மகள் தன்னுடன் இருக்கிறாள் அது மட்டுமே போதுமானதாக இருந்தது அந்த தாய்க்கு.. தனக்கு கீழே இரண்டு ஆட்களை வைத்துக்கொண்டு இப்பொழுது நடத்திக் கொண்டிருக்கிறாள். ஆனால் ஆரம்ப கட்டத்தில். சுத்தப்படுத்துவதற்கு என்று ஒருவரை மட்டுமே அவளால் நியமிக்க முடிந்தது. குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அவளுடையதாக இருந்தது. ஆனால் அவளுக்கு சலிக்கவில்லை. ஒரு குழந்தையை இழந்தவளின் சூழலுக்கு ஓராயிரம் குழந்தைகள் இந்த ரீதியில் அனைத்து குழந்தைகளையும் தன் குழந்தைகளாக பாவித்து பார்த்தாள்.
ஆனாலும் அதில் தன்மகள் அவளுக்கு தனித்தன்மை தான். அவளுடைய தேவதை. தேவதைகளுக்கு பெயர் இருக்காது. ஆனால் அவளுக்கு இருந்தது ஷாலினி. ஆம் அவள் வைத்த பெயர் தான் அது.
ஷாலினி இந்த பெயர் உடையவர்கள் மற்றவர்களுக்கு உதவும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். தன்னுடன் இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கற்பனை திறன் அதிகமாக காணப்படும். உண்மையாக இருப்பார்கள் என்று ஏட்டுக்களில் படித்த ஞாபகம் அவளுக்கு இருக்க. தனக்கு சந்தோஷத்தை வாரி கொடுத்துக் கொண்டிருக்கும் தன் மகளுக்கு ஷாலினி என்ற பெயரை வைத்திருந்தால் அவள்.
அந்த தேவதையை பார்க்கும் போதே உள்ளம் உடல் என்று அனைத்தும் பூரித்து விடும் அவளுக்கு. தாய்க்கு நிகரான அன்பை மகளும் கொடுக்க. அவளுடைய சந்தோஷத்திற்கு அங்கு பஞ்சம் இல்லாமல் போனது.
இதுவே அடுத்த நாளும் தொடர்ந்தது. பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த தாயும் மகளும். சரியாக அவள் கன்னத்தை வருடினாள். “என்ன என் ஷாலு குட்டிக்கு பசி எடுக்குதா? “, என்று வாஞ்சையாக கேட்க. அவள் ஆமாம் என்று தலையாட்டினாள். இன்னும் அவளுக்கு பேச்சு சரியாக வரவில்லை. ஒரு சில வார்த்தைகள் பாவனைகள் அது மட்டும் தான். மருத்துவரை பார்த்து விட்டாள்.. அவளுக்கு எந்த குறையும் இல்லை சில குழந்தைகள் மெதுவாகத்தான் பேசுவார்கள் என்று சொல்லிவிட அவளுக்கு அப்போதுதான் நிம்மதியே ஆனது.
மகளுக்கு வாடிக்கையாக அந்த நேரத்தில் பசி எடுக்கும் என்பதை உணர்ந்தவள் கையில் எப்பொழுதும் ஏதாவது ஒரு உணவை வைத்திருப்பாள். சமயம் இருக்கும் நேரங்களில் பழச்சாறை தான் பிழிந்து ஒரு பாட்டிலில் எடுத்து வருவாள். நேரம் இல்லாத நேரத்தில் மட்டுமே பிஸ்கட்டை கொடுப்பாள்..இன்று நிறைய நேரம் இருந்தது போல ஸ்டீல் பாட்டிலில் இருந்த ஜூஸை அவளுக்கு ஸ்ட்ரா போட்டுக் கொடுத்தாள் அவளும் அதை வாகாக பெற்றுக் கொண்டு பருக ஆரம்பித்தாள். .
எல்லாவற்றையுமே அவள் ஹேண்ட் பேக்கில் இருந்து எடுத்ததை வாகனத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவனின் இதழ்கள் விரிந்தது.
சப்பு கொட்டி குடித்த மகள் பாதியில் அதை நிறுத்திவிட்டு, தாயின் உதட்டிற்கு கொண்டு சென்றாள்.
“அம்மா சாப்பிட்டுட்டேன் நீங்க சாப்பிடுங்க “, அவள் கூறிய எதையும் அந்த குழந்தை ஏற்க தயாராக இல்லை. தலையை இடவும் வளமும்ஆட்டி மறுப்பு தெரிவித்து.அந்த ஸ்ட்ராவை எடுத்து தன் தாயின் உதட்டில் வைத்தது.
“ரொம்ப அடம் பிடிக்கிறீங்க ஷாலு குட்டி”, என்று சிறு கோபத்துடன் அவள் ஸ்ட்ராவில் குடிக்காமல் பாட்டிலை தன் தொண்டையில் சிறிதாக ஊத்திக் கொண்டவள். “அம்மா குடிச்சுட்டேன் இப்ப நீங்க குடிங்க”, என்று மகளின் புறமே மீண்டும் திருப்பினாள் அது பார்வையை சுருக்கி தன் தாயை பார்த்துவிட்டு இன்னும் கொஞ்சம் குடிங்க என்ற ரீதியில் மீண்டும் செய்ய இவள் இப்பொழுது அதே போல இடமும் வளமும் தலையை ஆட்டி விட்டு இன்னும் கொஞ்சம் குடித்தாள்.
“போதும் அம்மா டிபன் சாப்பிட்டேன்”, என்று கூறியபடி மகளிடம் நீட்ட அவள் சிரித்து விட்டு ஸ்ட்ராவில் குடிக்க ஆரம்பித்தாள் .
இதை பார்த்தவன் இதழ்கள் நன்றாகவே விரிந்தது. ஆரம்பத்தில் கோபமாக பார்க்க ஆரம்பித்தவன். அவர்கள் பிணைப்பில் அவர்கள் அன்பில் நிறைந்து இப்பொழுதெல்லாம் ஆர்வமாக பார்க்க ஆரம்பித்து விட்டான். உண்மையில் ரசிக்க ஆரம்பித்து விட்டான் என்று கூறலாம். அவர்களைக் கலைக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. ரசிக்கும் எண்ணம் மட்டுமே அவனிடம்.
மாலினியின் மீது இருந்த கோபம் வன்மம் எல்லாம் இந்த ஐந்து மாதங்களில் கரைந்து காணாமல் போயிருந்தது. குழந்தையுடன் சேர்த்து இப்பொழுதெல்லாம் அவன் மனம் அவளையும் சேர்த்து ரசிக்க ஆரம்பித்து விட்டது. இது அவனே எதிர்பார்க்காதது.
தாய் எனும் சொல்லிற்கே அவ்வளவு சக்தி இருக்கிறதோ என்னவோ. தாய்மையை பார்த்து ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. அவளுடைய தாய்மை கடந்த இந்த மாதங்களில் அவனையும் ஈர்த்துவிட்டது..
அவளை முதன் முதலில் சந்திக்கும் போது இருந்த ஆத்திரம். இப்பொழுது இருந்ததா என்று கேட்டால் அவனுக்கு விடை தெரியாது. அவள் ஒன்றும் அப்படி ஒரு பேரழகி இல்லை. அவளை விட பேரழகிகளை எல்லாம் அவன் திகட்ட திகட்ட பார்த்திருக்கிறான். அடக்கமான மிதமான அழகுதான். ஆனால் குழந்தை பேரழகி தான் தேவதையாக இருந்தாள்.. குழந்தையை பார்க்க ஆரம்பித்தவன். அதன் பிறகு தான் அவளை பார்க்க விளைந்தான்.
பேருந்து வந்ததும் இருவரும் பேருந்தில் ஏறி விட அவனுடைய ரசனை தடைபட்டது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இதை செய்து கொண்டிருக்க போகிறாய்?? அவன் மனமே அவனிடம் கேள்வி கேட்டது. அவன் இங்கு வரும்போது எடுத்துக்கொண்டு வந்த முடிவு வேறு.ஆனால் இப்பொழுது எடுத்திருக்கும் முடிவு வேறு. அது அவனே எதிர்பார்க்காத முடிவு தான். ஆனால் அதை செய்ய அவனுக்கு நேரம் தேவைப்பட்டது. பொறுமை என்ற ஒன்றை ஏட்டில் எழுதினால் கூட படிக்கப் பொறுமை இல்லாதவன். இப்பொழுது பொறுமையாக காத்துக் கொண்டிருந்தான் அந்த இரண்டு பெண்களுக்காக. அதில் ஒருத்தி அவளுக்கு மட்டுமல்ல அவனுக்கும் தேவதை தான். மற்றொருத்தி என்ன என்று அவன் இப்பொழுதுதான் தன் மனதிற்குள் கேள்வி கேட்டு அலசி ஆராய்ந்து விடையை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறான்.
ஆழ்ந்த பெருமூச்சு எடுத்து விட்டவன். வாகனத்தின் ஸ்டியரிங்கை பிடித்து திரும்பிய படியே அந்தப் பேருந்தை தொடர்ந்தான். அவர்கள் இறங்கி செல்லும் வரை அவர்களை மெதுவாக பின் தொடர்ந்தான். இருவருக்கும் இடையே பெரிய இடைவெளியே இருந்தது.
மிகச் சரியாக அந்நேரத்தில் அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது. டிஸ்பிலேயில் ஒளிர்ந்த பெயரை பார்த்ததுமே கண்களை மூடித் திறந்தான்.
வெகுவாக தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு.
“சொல்லுங்க மாம்”, என்று சலிப்பாக கேட்டான்..
“என்னடா ரொம்ப சலிச்சுக்கிற? “, எதிர் முனையிலும் குரல் வித்தியாசமாக ஒலித்தது.
Romba arumaiyana arambam 👍👌 Malini yaar andha kuzhandhaikum avalukum enna uravu pinnadi Vara aalu yaaru parpom ellathaium therinjikka aarvama erukom keep going 🥰👍
நன்றி சகோதரி தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை பரிமாறுங்கள்
Nice starting sis 😀😀😀
❤️🙏 நன்றி தோழி ♥️♥️
தேவதை👸👸👸,….அழகான பெயர் தோழி….பெண் பிள்ளைகள் வீட்டில் இருந்தாலே தேவதைகள் வீட்டில் இருப்பது போல….கதையின் ஆரம்பம் அருமையாக உள்ளது….சூப்பர் sis…😊👌👍 ஆனா follow பண்றது யாருன்னு தெரியல…🤷♀️
உண்மை சகி
Malini ah yum shalini ah yum.follow panra avanuku indha anju masathula ava mela irundha vanmam kooda ivanga rendu per oda bonding ah parthu poiduthu polayae
Very nice 👌🏻 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Interesting
Normal ah angel name kettu erukkom… But tamil la devathai nu yarum name vechathu illa… Its nice… Story also nice going…. Keep rocking…
I think I guessed the story let’s see.waiting for next episode
இனிய ஆரம்பம்