Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 50

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 50

அத்தியாயம் – 50

இதற்கு முன்னும் ப்ரைட்

மேக்கப் போட்டு இருந்தாலும் அது ஜோடி இல்லாமல் எடுத்ததால் அதை சுலபமாக நடித்து விட்டாள் ஆனால் இன்று தாலி கட்டும் காட்சிவரை நடிக்க வேண்டும் அதும் இவனோடு என்று ஒருவித படபடப்பான மனநிலையோடே தயாரானாள் மேதா.
அதிலும் இன்றைய காஸ்ட்யூம் அண்ட் ஜுவல்ஸ் அருந்ததி செலெக்ஷன் அதையெல்லாம் அணிந்த பின் அவளுக்கு அவளே புதியதாக தெரிந்தாள் அவ்வளவு நகைகள் உடையும் ரொம்ப ஆடம்பரம் இல்லாமல் நகைகளை எடுத்து காட்டுவது போலவும் ஆராஷியோடு உடைக்கு மேட்ச் ஆவது போலவும் செலெக்ட் செய்து வடிவமைக்க சொல்லி இருந்தாள் இது அவளது ஆறு மாத யோசனையில் உடல் உழைப்பில் உருவான ஆட் ஷூட் அதனால்தான் அவள் இவ்வளவு கஷ்டப்பட்டு செலவு செய்து எடுத்துக்கொண்டு இருக்கிறாள்.
அதையெல்லாம் எண்ணி தான் அவள் தயாராகி வந்தாள்

தன்னை அவனும் ஆவென பார்க்க அவளுக்கு வெட்கமாகி போனது.
அதிலும் இன்றைய சீன்களை அருந்ததி ஏற்கனவே சொல்லிவிட்டிருக்க அவளுக்கு அதை வேறு எப்படி சமாளிக்க போகிறோம் என்று பதட்டமும் கூடவே இருந்தது.
அவள் வந்ததும் அவனை நிமிர்ந்து பார்க்க அவளது பார்வை அவனையும் ஏதோ செய்தது அதில் கட்டுண்டவன்
“கார்ஜியஸ்” என்றான் தன்னையறியாமலே. அதில் அவள் அதிர்ந்து பார்க்க லேசாக கண்ணடித்தவன் தனது அக்மார்க் புன்னகையை உதிர்த்து

“ஷெல் வி ஸ்டார்ட்” என்றபடி அவளது அருகில் வந்தான்.

அவளுக்கு அதிர்ச்சி இருந்தாலும் சமாளித்து அவன் கேட்டதற்கு சரியென தலையை ஆட்டியவள் அவனும் வேட்டி சட்டையில் அழகாக இருக்க அதை எண்ணியபடி நடந்தாள்.
கோவிலின் தேர் போன்ற அமைப்பில் அழகிய வர்ணங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்த அந்த மண்டபத்தின் செட்டுக்குள் நுழைந்தனர் இருவரும்.
அங்கே திருமண முறைப்படி ஐயர் மந்திரம் வாசிக்க அமர்ந்து இருக்க நிஜமான திருமணம் போல இருக்க வேண்டும் என நிஜமாகவே ஒரு ஐயரை வரவழைத்து இருந்தாள் அருந்ததி.
ஆராஷியின் தாய் தந்தையர் போல இருவரும் மேதாவின் தந்தைபோல ஒருவரும் சொந்த பந்தங்கள் போல சிலரும் குழுமி இருக்க நண்பர்கள் போல சிலரும் அங்கே இருக்க அதை பார்த்தவனுக்கு கேள்வி வந்தாலும் நேற்றைய தினமே அவன் வீடியோவில் பார்த்து இருந்ததால் அமைதியாக சீன் என்னவென்று கேட்டபடி நின்றான்.

அங்கிருந்து மைக்கில் அருந்ததி பேச சீனை அவள் சொல்ல மேதா அதை ஆராஷிக்கு சொன்னாள் தாலி கட்டும் சீன் என்பதால் அவள் சற்று பதற்றமாகவே இருந்தாள்.
அதை பார்த்து புன்னகைத்தவன் அவள் சொன்னதையெல்லாம் மனதில் உள்வாங்கி கொண்டு இருந்தான்
ஐயர் மணையில் “வலதுகால் எடுத்து வைங்கோ” என்று கூற

“வாட்ஸ் திஸ் நியூ லேங்குவேஜ்?” என்று அவன் கேட்க மேதா அதைப்பற்றி விவரிக்க “ஓஓ ஓகே” என்றபடி தன் காதில் மைக்ரோ டிரான்ஸ்லேட்டரை மாட்டினான்.

“லெட்ஸ் டேக் கேமரா ஆக்ஷன்” என்று அருந்ததி கூறியபடி அழகாக ஐந்து கேமராக்களில் எல்லா பக்கமும் கேப்ச்சர் பண்ண ஆரம்பித்தாள்.
ஐயர் சொன்னபடி இருவரும் அமர ஐயர் மந்திரம் ஓதியபடி மாலை மாற்ற செய்து தாலியை எடுத்து கொடுக்க
அதை வாங்கியபடி அவளை பார்த்தவனுக்கு ஏனோ அவள் தன்னை பார்க்க வேண்டும் என்றே தோன்றியது.
அதே நேரம் அதுவரை தலையை குனிந்து அமர்ந்து இருந்தவள் அவனுக்கு அடுத்து புரியவில்லையோ என்று மேதா அவனை நிமிர்ந்து பார்க்க அந்த நேரம் அவளது கழுத்தில் தாலியை கட்டினான் நடிப்பு போல யாருக்குமே தோன்றவில்லை அவ்வளவு அழகாக இருந்தது அந்த தருணம்.
அதை அழகாக பதிவு செய்தது அத்தனை கேமராக்களும்.
தாலிகட்டி முடிந்ததும் அவனை குங்குமம் வைக்க சொல்லி ஐயர் ஆக்ஷன் காட்டி சொல்ல அதை வாங்கி அவர் சொன்னதுபோலவே செய்தான் அவளையும் அறியாமல் அவளுக்கு ஏனோ கண்கள் கலங்கியது.
அதன்பின் மெட்டி அணிய சொல்ல அவளது பொன் பாதத்தை பிடித்து அவன் மெட்டி அணிவித்தான்.
அதன்பின் இருவரின் விரல்களை இணைத்து மூன்றுமுறை வலம்வர சொல்ல அதையும் செய்யும்போது இருவரும் அழகாக செய்ய உண்மையான திருமணம் என்றே தோன்றியது அனைவருக்கும்.

மேதாவையும் அவளது நகைகளையும் கீழிருந்து மேல் வரை அழகாக கவர் செய்தாள் அருந்ததி.
அதேபோல் ஆராஷியையும் கவர் செய்து இருந்தாள்.
“ஓகே கட்..ஷாட் ஓகே..குட் ஜாப் கைய்ஸ். 5மினிட்ஸ் ரெஸ்ட் நெக்ஸ்ட் ஃபோஸ்ட் வெட்டிங் ஃபோட்டோஷூட் கெட் ரெடி” என்று கூற அப்போது தான் சுயம் வந்தனர் இருவரும்.
தலையை குனிந்தவள் கட் சொன்னதும் அங்கிருந்து விலகி சென்றாள்
அதன்பின் ஐந்து நிமிடம் கழித்து இருவரை மட்டும் நிறக்வைத்து ஃபோட்டோஷூட் எடுக்க அவளை தொட்டு தொட்டு சீன் எடுக்கவேண்டி இருந்ததால் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு கொஞ்சம் அதிகமாகவே அவளை தொட்டு தொட்டு நடித்தான் ஆராஷி.
அதில் அவளுக்கு ஒருமாதிரியாக இருக்க அவளோ நெளிந்தபடியே இருந்தாள்.
அவனுக்கோ அதைகண்டு சிரிப்புதான் வந்தது.
இருந்தாலும் அவளது அழகை கண்டு அவ்வளவு ரசித்தான் இதுவரை எத்தனையோ அழகான மாடல்ஸ் நடிகைகளை பார்த்துள்ளான் ஆனால் இவளது அழகு அந்த கண்கள் அவனை அவளையே மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தது.
ஒரு சீனை அருந்ததி சொல்ல அதை கேட்டு அவளுக்கு திக்கென்று இருக்க அவனுக்கோ சிரிப்பாக இருந்தது.
உதட்டை மடித்தபடி தனது புன்னகையை மறைத்து “ஓகே ஐயம் ரெடி” என்று சொன்னான்.
அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை அதனால் அமைதியாக இருக்க அவளது தோளை பற்றி அவன்புறம் திருப்பினான் அதுதான் பொஷிஷன் என்று அருந்ததி சொல்ல அவளும் திரும்பி நின்றாள்.
அவளை இடுப்பை பிடித்து அணைத்தபடி அவன் பார்க்க வேண்டும் அவனது தோள்வழியாக அவளது கண்கள் மற்றும் பின்புறம் ஜடையில் இருந்த நகைகள் கவர் செய்யப்பட வேண்டும்
இதுதான் சீன்.
திரும்பி நின்றவள் அருந்ததி “ரெடி ஆக்ஷன்” சொல்ல

அவளோ அவனை நெருங்கியபடி நிற்கவே ஒருமாதிரியாக உணர்ந்தாள்
“கட்” என்ற அருந்ததி
“மேதா கோ குளோஸ அண்ட் ஹக் ஹிம்” என்று சொல்ல அவளோ தியங்கியபடி தனது கைகளை அவனது தோளைசுற்றி படாமல் படரவிட இவள் தன் அருகில் வரப்போவது இல்லை ன உணர்ந்தவன்
அவளது கைகள் இரண்டையும் சேர்த்து பிடித்து தன்னை நோக்கி இழுக்க அவளோ அதிர்ந்து அவன்மீது மோதி நின்றாள். அவள் தன்மீது மோத அவனுக்குமே அது ஒருமாதிரி ஃபீல் கொடுத்தது அதே மனநிலையில் அவளது கைகளை அவனது பின்னால் வைத்தவன் இப்போது அவளது இடுப்பை பிடிக்க கை வைக்க அவளோ கைகளை உயர்த்தி இருந்ததால் புடவை விலகி அவளது இடுப்பு வெளியே தெறிய அதை கவனிக்காமல் அவன் கைவைக்க அவளுக்கோ தூக்கி வாரி போட்டது இதயம் வேகமாக துடித்தது கேமரா ரோலில் இருக்க அதை உணர்ந்தவன் கையை எடுக்காமல் அவளது இடுப்பை சுற்றி இரண்டு கையையும் வளைத்து கையை சற்று மேலே உயர்த்த அங்கே அவளது முதுகில் அவனது கை பட்டது. அவனுக்கே ஏதோபோல் ஆகிவிட அங்கேயே கையை வைத்து விட்டான். அவனுக்கும் படபடப்பாகத்தான் இருந்தது.

“கட்” சொன்ன அருந்ததி மேதா கையை எடுக்க போக “டோன்ட் மூவ் போத்.. கை இடுப்பை சுத்தி வரணும் முதுகில வெச்சா ஜடையோட ஜுவல்ஸ் மறைக்குது சோ ஒன்மோர்” என்றாள்.
‘அடியே ஏன்டி என்னை கொல்ற? ஆண்டவா இந்த சீன்லயா நான் டேக் வாங்கனும்’ என்று மனதில் எண்ணியபடி அமைதியாக நின்றாள்.
ஏற்றிய கையை இறக்கி இடுப்புக்கே கொண்டு வந்தான் ஆராஷி அவளுக்கு கூச்சம் வந்து நெளிய
“டோண்ட் மேக் அநெதர் டேக் மேதா ஐ ஃகாண்ட்” என்று கூறியபடி அவளது இடுப்பை பிடித்து அவளை இன்னும் அணைத்தபடி கொண்டு வந்தான்.
அவளுக்கும் அடுத்த டேக் போக மனமில்லை அதனால் அமைதியாக அவனது தோளில் தன் கண்கள் மட்டும் தெரியும்படி முகத்தை பதித்தாள். அவனும் அவளது கழுத்து வளைவில் முகம் பதித்தான்.
அவ்வளவு உயரமானவன் தோளில் சாய அவளால் கீழே மணை போட்டும் எட்ட முடியவில்லை இருந்தும் சமாளித்து எக்கி சாய்ந்தாள்.
அதில் அவனுக்கு சிரிப்பு வர அவளுக்காக முதன்முறையாக தாழ்ந்தான் அவனையும் அறியாமல்.

தன் கால்களை சற்றே வளைத்து அவளுக்காக இறங்கி நின்றான்.

அந்த தருணத்தையும் அழகாக கவர் செய்த அருந்ததி
“ஓகே கட்..டேக் ஓகே… நெக்ஸ்ட் ஈவ்னிங் ரிஷப்ஷன் ஷூட்” என்றுவிட்டு சென்றாள்.
கட் சொன்னதும் டக்கென்று அவள் இடுப்பிலிருந்து கையை விலக்க பார்க்க அவனது கையில் ஏதோ தட்டுப்பட்டது அப்போது தான் அவளை குனிந்து பார்த்தான்.
அவளும் அவன்மேல் இருந்து கையை விலக்கி கொண்டு இருந்தாள். அவன் கை அங்கே பட அவளுக்கு இன்னும் படபடப்பு ஆகியது
“சம்திங் ஐ டச்டு” என்று அவன் விலிகி பார்க்க முயல அவள் ஒட்டியாணத்தோடு சுற்றியபடி இருந்த உடையை சட்டென இழுத்து இடுப்பை மறைத்தாள் ஆனால் அதற்குள் அவன் பார்த்துவிட்டான் அவளது அழகிய மச்சத்தை.
இடுப்பை மறைத்தவள் அங்கிருந்து ஓடிவிட்டாள் கேரவனை நோக்கி.

அவனுக்கோ ஒரு மாதிரியான உணர்வாய் இருந்தது. மேக்கப் ஆர்டிஸ்ட் ஜூஸை நீட்ட வாங்கியவன் நேரே கேரவனுக்குள் சென்று ஏறியபடி
“ஐ நீட் சம் ரெஸ்ட் சோ ப்ளீஸ் டோன்ட் டிஸ்டர்ப் மீ சம்டைம்” என்றுவிட்டு கதவை அடைத்துக்கொண்டு சென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன் தன் கையை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.

அந்த மச்சத்தை கடைசி நொடியில் பார்த்த தருணம் அவனுக்கு சிலிர்ப்பாக இருந்தது.
அவளது நெருக்கமும் அவனுக்கு புது உணர்வை கொடுத்தது.
இதுவரை எந்த நடிகையிடமும் உணராத உணர்வு அது.

‘இவ என்ன ஆளை இப்படி கவுக்குறா? ஒருவேளை அண்ணா சொன்னமாதிரி நான் அவள லவ் பன்றேனோ?’ என்று எண்ணியவன்
‘ச்சே அவதான் ஏற்கனவே பணத்துக்காக நடிக்கிறாளே அப்போ அதுக்கு ஏத்தமாதிரி தானே நடிப்பா நாமதான் தப்பா புரிஞ்சுக்குறோம் போல இவள மாதிரி ஆளுகிட்ட உஷாரா இருக்கனும்’ என்று தனக்குதானே பேசியவன் ஜூஸை அருந்தியபடி படுத்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *