அத்தியாயம்-4
நீஷாவின் உடம்பில் தன்னுடல் மட்டும் ஆடையாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு குளித்து முடித்து வந்தவளிடம், மஞ்சத்தில் சாஹிர் வசியம் செய்திருக்க, அவளிடம் எப்பொழுதும், எல்லோரும் கேட்கும் அந்த கேள்வியை வீசினான்.
“என்னை கல்யாணம் பண்ணிக்க என்ன தடுக்குது.” என்று.
நீஷாவின் உடல் விரைக்க ஆரம்பித்தது.
“பதில் சொல்லு. என்னை உனக்கு ஆறு வருஷம் தெரியுமா?” என்று கேட்க, “நான் இங்க வந்ததிலருந்தே உன்னை கவனிச்சிருக்கேன் சாஹிர். ஆறு வருஷம் இல்லை, ஒன்பது வருஷமா உன்னை தெரியும்.” என்று கூறினாள்.
சாஹிருக்கு இது அதிர்ச்சியே. “ஒன்பது வருஷமா?” என்றவன் அவள் வெண்டக்காய் விரலுக்கு சொடக்கிட்டு, “நீ எப்படி இங்க வந்த? நீ வந்த கதையை ஒரு தடவை கூட சொல்ல மாட்டேங்கற. அப்படியென்ன ரகசியம்?” என்று கேட்டான்.
நீஷாவின் மனதில் என்ன நினைத்தாளோ? மொட்டுப் போல வாயை திறந்தாள்.
எனக்கு பதினைந்து வயசு இருக்கறப்ப எங்கப்பா ஊட்டிக்கு படிக்க அழைச்சிட்டு போனார். அப்ப என் கிரகம் இங்க வந்து சிக்கிட்டேன்.
அதென்னவோ பதினைந்து வயதில் எதிர்ப்பாலினத்து மேல ஒரு ஆர்வம். அதனால ஆண்கள் தீண்டும் போது பயந்தும் போகலை.
தடுமாறும் பருவம்னு சொல்வாங்களே. அந்த நேரம் தடுமாற, இங்க வழி கிடைக்கவும் தடுமாறினேன்.
இதுல ஒரு வேடிக்கை என்னன்னா நான் அழலை, பிடிவாதம் பிடிக்கலை, ஆண்கள் சொன்னதை அச்சுப்பிசகாம செய்தேன். அதான் எனக்கு டிமாண்ட்.
இதுவொரு வாழ்க்கையா? அய்யோன்னு முடங்காம இதுவும் வாழ்க்கை தானோனு வாழ ஆரம்பிச்சிட்டேன்.
இப்ப இந்த பீல்டுல நான் கடைந்தெடுத்த லேடி தெரியுமா?!” என்று கூறவும் “இந்த லேடிக்கு ஏத்த கேடி நான் இல்லையா?” என்று தாடைப் பிடித்து வம்படியாய் கேட்டான்.
“நீ கேடி தான். எனக்கு ஏத்த கேடியான்னா… தெரியலை. ஆனா இத்தனை வருஷத்துல என்னோட படுத்தவனில் எனக்கானவன் எவனுமில்லை.” என்று கூறினாள்.
“எவனும் இருக்க வேண்டாம். நான் இருக்கேனா இல்லையா அதை சொல்லு” என்று கேட்டான். ‘நொச்’சென்ற முத்தம் பதிலாக தந்தாள். அதில் நீவொருவன் எனக்கான லிஸ்டில் இருக்கலாமென்ற மறைமுக பதில் இருந்தது.
“அப்பா படிக்க ஊட்டிக்கு போறப்ப தொலைந்து, இங்க வந்துட்டதா சொல்லறியே. விவரம் தெரிந்து நல்லா வளர்ந்துட்ட. உன்னை தடைபோட இங்க யாருமில்லை. நீ இந்த பீல்டுல பேமஸ் என்பதால நிறைய சலுகை இருக்கு. உனக்கு உதவிக்கு பெரிய மனுஷங்க கூட உதவுவாங்க. அப்படியிருக்க நீ உன் குடும்பத்தை தேடலையா?” என்று ஐயத்தை கேட்டான் சாஹிர்.
“நான் அழுக்காயிட்டேனே. அதோட அப்பா அம்மாவை நான் பார்க்க விரும்பலை. ஆனா… என் தங்கை வருணி… வருணியை மகிழை பார்க்கணும்னு ஆசையிருக்கு.” என்று கண்ணில் மின்னல் வெட்ட பேசினாள்.
“அப்ப போய் பார்க்க வேண்டியது தானே?” என்றான் சாஹிர்.
நீஷாவிடம் பலத்த மௌனம்.
இவளிடம் வேறு ஏதேனும் பேச வேண்டும் என்று “உன் தங்கச்சிக்கு என்ன வயசு?” என்று கேட்டான்.
“ஆஹ்.. என்னை விட ஒரு வயசு சின்னவ.” என்றவளிடம், “அப்படின்னா இந்நேரம் கல்யாணம், முடிச்சு குழந்தை குட்டின்னு இருப்பா.” என்று பொத்தம் பொதுவாய் இந்த இருபதை தாண்டிய பெண்களின் நிலையை வைத்து கூறினான்.
வருணிக்கு இருபத்தி நான்கு வயது என்றதால், வநீஷாவோ தங்கை மணமாகி வாழ்கின்றாளோ? என்ற ஆவல் உண்டானது.
“அவளை பார்த்தா அடையாளம் தெரியுமா? இன்னமும் என்னோட வருணியா இருப்பாளா?” என்று ஆசையாக கேட்டாள் சாஹிரிடம்.
“கல்யாணமாகி குழந்தை குட்டின்னு இருந்தா இந்த இடமெல்லாம் பெருத்திடும். ஆள் அடையாளமெல்லாம் தெரியாது. ஆளே மாறியிருப்பாளுங்க.” என்று பெண்ணவளின் பாகங்களை தீண்டி பதிலளித்தான்.
அவன் கைகள் தீண்டி சில்மிஷத்தை தூண்ட, அவனது கையை தட்டி விட்டாள்.
சாஹிரோ “உன்னையே எடுத்துக்கோ. நான் நினைவு வச்சி பார்த்தப்ப ஒடிஸலா ஈரக்குச்சியா இருந்த. முகமெல்லாம் ஸ்கூல் படிக்கிற பொண்ணு முகமா இருந்தது. இப்ப..பபப.. ப்ப்பாஆ நல்ல சந்தனக்கட்டை மாதிரி வளைவு நெளிவு,” என்று பேசி பேசியே கைகளை ஆடைகளற்ற மேனியில் சுதந்திரமாகவே படரவிட்டான்.
அவன் தீண்டல் எல்லாம் மதிக்காது “நான் வருணியை பார்க்கணும்” என்று கனவில் பேசுவது போல் உதிர்த்தாள்.
“நாளைக்கே கூட கிளம்பலாம். இந்தியாவுக்குள்ள தானே இருக்கு அந்த தமிழ்நாடு. தமிழ்நாட்டுல இருக்குற ஊரு தானே? ஆமா எந்த ஊரு?’ என்று விசாரித்தான்.
“நாளைக்கு சென்னைக்கு டிக்கெட் போடு சாஹிர். வருணியை மகிழ பார்க்கணும். மற்றதை ரயிலில் சொல்லறேன்” என்று பேரானந்தத்தில் உரைத்தாள்.
“டன் இப்பவே பெட்டி எடுத்து வைக்கிறேன்.” என்றவன் அவள் தேகத்தில் சர்க்கரை பாகை மொய்க்க வந்த ஈயாய் படர்ந்தான். அவன் காரியமும் நடந்தேற வேண்டுமே.!
மஞ்சத்தில் உலறியது மட்டுமின்றி இரண்டு நாளில் சொன்னது போல டிக்கெட் எல்லாம் போட்டு ரயிலில் பயணத்தை தொடர்ந்தார்கள்.
ஏதோ புதிதாக தேன்நிலவு ஜோடிகள் ஒன்றாக திரிவது போல தான் கையை விடாமல் பேசி சிரித்து வந்தார்கள்.
அடிக்கடி ரயிலில் எதிரேயிருந்த பெண்ணை, நீஷா வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.
“என்ன அந்த பொண்ணையே பார்க்குற? நானும் அவளை பார்க்கறேன் நீயும் பார்த்தா நல்லாவா இருக்கு” என்று கேலி செய்தான்.
”பச் சாஹிர் வருணிக்கு இதே போல முக அமைப்பு. இந்த பொண்ணு மாதிரி வளர்ந்திருப்பாளா?” என்று கேட்டாள்.
“எதிர்ல இருக்கற பொண்ணு தளதளன்னு இருக்கு. ஆனா உன் வருணி இதை விட அழகாயிருப்பா. ஏன்னா உன் தங்கச்சி பாரு” என்று ஐஸ்கிரீம் வார்த்தைகளை அள்ளி வீசினான்.
“நீ என்னிடம் பிளார்ட் வார்த்தையை யூஸ் பண்ணுற. ஆனா உன் வருணின்னு சொல்லுறப்ப சந்தோஷமாயிருக்கு.” என்றவளின் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது.
நீஷாவின் கண்களுக்கு கண்ணீர் துளிகள் எல்லாம் புதுசு. அவள் பதினைந்து வயதில் மொத்தமாய் அழுது களைத்து உப்பு சுவைக்கொண்ட கண்ணீர் துளியை நிறுத்திவிட்டாள்.
இப்பொழுது ஒன்பது வருடம் தாண்டி கண்ணீர் சுவை.
சாஹிர் அவளை அரவணைத்து கொள்ள, “சாஹிர் டிரெயின்” என்று கூற, “அதனால் என்ன உன் இடுப்புல கைப்போட டி.டி.ஆரிடம் பர்மிஷன் கேட்கணுமா என்ன?” என்றான்.
வநீஷாவுக்கு மற்ற மனிதர்கள் பார்ப்பார்களென்ற எண்ணம் கவலை என்றுமில்லை. அதனால் அவளுமே சாஹிர் கையை பிணைத்திருந்தாள்.
என்ன அங்கிருந்த இளைஞர்கள் நீஷாவை கண்டு சூடேறியிருந்தனர்.
நாற்பது வயதும், இருபது வயது கொண்டவர்கள், ஏன் எந்த வயதினர் என்றாலும் நீஷா அழகிற்கு அவளை இமை கொட்டாமல் காணலாம்.
இதில் அங்கிருந்த இரண்டு பெண்கள் சாஹிரை ஏறிட்டு முனங்கி திரிந்தாலும் அவனையும் அடிக்கடி அடிக்கண்ணால் ரசித்தனர்.
உலகம் இப்படி தான் ஒழுக்கமற்றவர்கள் என்று திரிந்தாலும் அவர்களையே பார்க்கும் அவர்களையே பேச வைக்கும்.
நல்லவர்களை விட கெட்டவர்களை வளர்த்து விடத்தான் துடிப்பார்கள்.
இங்கு சாஹிர் நீஷா பயணத்தில் ‘அந்த கம்பார்ட்மெண்டில் ஒரு ஹாட்டான ஜோடிகள்’ என்று பரவியது.
சொல்லப்போனால் பயணம் அலுப்பின்றி கடந்திட, அதுவே சுவாரசியமாய் அமைந்தது.
சென்னை வந்து இறங்கி தங்கள் ஊருக்கு செல்ல, காரை வாடகைக்கு எடுத்தார்கள்.
சாஹிர் பணத்தை தண்ணியாய் செலவழித்தான்.
அவனை பொறுத்தவரை நீஷா ஜாக்பார்ட். மணந்து விட்டால் இதெல்லாம் மனைவிக்கு செலவழிப்பது தானே?!
அவள் வாழ்ந்த ஊர் சற்று மாறியிருந்தது. அட்ரஸை குகூள் மேம்பில் போட்டு இருப்பிடம் வந்து சேர, அதிர்ச்சியடைந்தாள்.
கேட்பாரின்றி வீடு, இடிந்து விழுந்திடும் நிலையில் கிடந்தது.
இதில் முட்புதர்கள், செடி கொடிகள் வீட்டை சுற்றி வளர்ந்து கிடந்தது.
வநீஷாவுக்கு பெருத்த ஏமாற்றம்.
இங்கு தான் தன் தாய் தந்தையர் மற்றும் ஆசை தங்கை வாழ்வார்கள் என்று எண்ணி தூரத்தில் பார்க்க நினைத்தவளுக்கு வீடே பாழடைந்த வீடாக காட்சி தர கவலையுற்றாள்.
காரிலிருந்து இறங்கி தானாக கால்கள் வீட்டுக்குள் அடியேடுத்தது.
“ஏய்.. நீஷா பூச்சி பாம்பு ஏதாவது இருக்க போகுது. முள்ளு குத்தும்” என்று சாஹிர் தடுக்க, “பெரிய பெரிய பாம்பே பார்த்து வாழ்ந்தவ சாஹிர்” என்று விரக்தியாக வீட்டில் அடியெடுத்தாள்.
வீடு பூட்டியிருந்தது சாஹிரின் வலிமையால் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தார்கள்.
“நீ பதினைந்து வயசு வரை இங்க தான் வாழ்ந்தியா?” என்று பேச்சு கொடுத்து சாஹிர் கூடவே வந்தான்.
“இங்க தான் டிவி வச்சிருந்தோம். இங்க சோபா இருக்கும். ரிமோட்டுக்கு நானும் வருணியும் அடிச்சிப்போம். அவ என் மேல விழுந்து ரிமோட்டை பிடுங்குவா. அம்மா வந்து நறுக்குன்னு இரண்டு பேர் தலையில கொட்டி டிவியை ஆப் பண்ணிட்டு படிக்க சொல்வாங்க” என்று பேசும் போதே குரல் மாறுபட்டது.
“இங்க தான் குடும்ப போட்டோ மாட்டியிருக்கும். இங்க ஒரு பூஜாடி இருந்தது. நானும் வருணியும் ஓடிப்பிடிச்சி விளையாடினப்ப உடைச்சிட்டோம்.
அம்மா அன்னைக்கு என்னை அடிச்சாங்க.” என்று பெருமூச்சை வெளியிட்டாள்.
கிச்சனில் எட்டிபார்த்து விட்டு “நான் அப்பவே கிச்சன் பக்கம் வரப்பிடிக்காத ஆளு. ஆனாலும் அம்மா பாத்திரம் கழுவுன்னு கூட வச்சிப்பாங்க. எனக்கு கிச்சன்ல வேலை செய்யவே பிடிக்காது” என்று அறைக்குள் சென்றாள்.
ஒரு இடத்தில் அப்படியே நின்று “இங்க ஒரு சிங்கிள் பெட் இருக்கும். நானும் வருணியும் ஒன்னா தான் தூங்குவோம். இடிச்சிட்டு இடம் பத்தாம ஒரே போர்வை வேற. எனக்கு பத்தலை உனக்கு பத்தலைனு சண்டை போடுவா. அவளிடமே போர்வையை கொடுத்துட்டு கண்ணை மூடி தூங்குவேன்.
எப்படியும் வருணி போர்வையை போர்த்தினாலும் நடுராத்திரி கீழே கிடக்கும். முழங்கால் வரை பாவாடை ஏறிகிடக்கும். நான் தான் திரும்ப எடுத்து போர்த்தி விடுவேன்.” என்றதும் சாஹிர் சிறு முறுவலை உதிர்த்தான்.
அப்பா அம்மா அறைக்கு அவள் செல்லவில்லை. நேராக மாடிக்குக்கு சென்றாள்.
“சாஹிர்… சாஹிர்… இங்க ஒரு பெரிய கட்டில் இருந்தது. அதுல ஒளிந்து விளையாடுவோம். அப்ப… மணிமொழி.. இறந்துட்டா.” என்றவள் குரல் மொத்தமாய் ஸ்ருதி குறைந்தது.
”முதல் விழாவா வருணி வயசுக்கு வந்த நிகழ்ச்சி நடந்தது.” என்றதும் ஆர்வமாய் சாஹிர் கேட்க, ”கடைசியா இந்த வீட்ல மணிமொழி இறந்த காரியம் செய்தது. அதுக்கு பிறகு இங்க என் நினைவுகளின் பந்தம் அறுந்துடுச்சு.” என்றாள். உடனை ரசனைகளை மாற்றிக் கொண்டான்.
அவளின் சோகத்தையும் மாற்றும் விதமாக, “அப்ப உன் தங்கை ஸ்பெஷல் பீஸ்ல” என்றதும் நீஷா முறைத்தாள்.
“சாரி… உன் தங்கை உனக்கு ஸ்பெஷல்லா?” என்று கண்ணியமாக மாற்றினான்.
“அம்மா-அப்பாவுக்கு அத்தை மாமாவுக்கு மகிழனுக்கு மணிமொழிக்கு எல்லாருக்கும் அவளை பிடிக்கும். ஏன்… நீ அவளை பார்த்தாலும் என்னை விட அவளை பிடிச்சிருக்குன்னு சொல்ல வாய்ப்பிருக்கு.” என்றதும் சாஹிர் வினோதமாய் நீஷாவை பார்க்க, அவளது விழியில் தெரிந்த பளபளப்பு உடல்மொழி செய்கைகள் வித்தியாசமாய் இருந்தது.
இதுவரை சாஹிர் அப்படி பார்த்ததில்லை. நீஷா முகம் எப்பொழுதும் நக்கலாய், சலிப்பாய், சந்தோஷமாய், வாழ்வின் மணித்துளியை வெகு சாதாரணமாய் காணும்.
இந்த பளபளப்பு விழிகள் இதுவரை கண்டதில்லை.
“உனக்கு உன் தங்கையை ரொம்ப பிடிக்குமா? இல்லை அவ மேல கோபமா?” என்று விளையாட்டாய் கேட்டான்.
“எனக்கு எந்தளவு என் தங்கை மேல பாசம் உண்டோ, அதே அளவு அவ மேல கோபமும் இருக்கு” என்றாள்.
உண்மையை உரைத்திடும் நியாயமான குரலில் கூறினாள்.
“ஏய்… நீ பேசறதை பார்த்தா அவளை அன்பா தேடி வந்தது மாதிரி தெரியலை. அவ எதிர்ல வந்தா கொன்னுடுவ போலயே” என்றதற்கு நொடியும் தாமதிக்காமல் “தெரியலை… அவமேல பாசமும் உண்டு. அதே அளவு கோபமும் உண்டு. அவளை பார்த்தா கட்டிப்பிடிப்பேனா? இல்லை அப்பா அம்மாவோட இவமட்டும் இருக்காளேன்னு அவ சங்கை பிடிப்பேனா? என்ன செய்வேன்னு எனக்கே தெரியலை.” என்றவள் இவ்விடத்தை விட்டு ஓடும் முடிவோடு வெளியேறினாள்.
சாஹிருக்கு திக்கென்றானது. ஆனாலும் பின் தொடர்ந்தான்.
வெளியே செடி கொடி புதர் இருக்க, அங்கே அவளும் மகிழனும் நட்டு வைத்த மருதாணி செடியை தேடினாள்.
காலங்கள் மாறி முள்மரங்கள் வளர்ந்திருக்க, சில தேவையற்ற செடிகளும் புதராய் இருந்தது.
“என்ன தேடற?” என்றான் சாஹிர்.
“மருதாணி செடி… மகிழும் நானும் சேர்ந்து நட்டு வச்சது” என்றவள் அந்த செடி மரமாக இல்லாது போக “செடி செத்து போயிடுச்சு போல” என்று வாடினாள்.
சாஹிரோ உடனடியாக மருதாணி செடியை தேடினான்.
பெரும்பாலும் மும்பையில் பெண்கள் அலங்காரத்துக்கு முக்கியத்துவம் சார்ந்த தொழில் என்பதால், சாஹிருக்கு மருதாணி செடியும் அறிந்தவனே.
நீஷா அவள் நட்டு வைத்த இடத்தில் மட்டும் பார்க்க, சாஹிரோ, “இதோ இருக்கு” என்று சுட்டிக்காட்டினான்.
“நாங்க இங்க தான் நட்டோம்” என்று நீஷா கூற, “அட ஒன்பது வருஷத்துல வளர்ந்து செடில, பூ பூத்து, காய் காய்ச்சி, விதை விழுந்து முளைச்சு, காற்று வீசவும் வேற இடத்துல வளர்ந்திருக்கு. உனக்கு என்ன? செடியிருக்கு. பறிச்சு தரவா?” என்றதும் தலையாட்டினாள்.
முட்செடிகளை தாண்டி கீறுமோயென பயமின்றி பறித்தான் சாஹிர்.
“மகிழ்… நாம நட்ட இடத்துல செடியில்லைடா. ஆனா வேறயிடத்துல வளர்ந்திருக்கு. நீயும் என்னை மறந்து போயிருப்ப” என்ற எண்ணம் உருவாக “சாஹிர் எங்கத்தை வீட்டுக்கு போய் பார்க்கலாம்.” என்று அவசரம் காட்டினாள்.
சாஹிர் கைகள் முள்ளில் கீறிட ரத்தம் வந்தது. “ஸ்ஆ..” என்றவனின் வலியை பொருட்படுத்தாமல் பறித்தவரை போதுமென்று அவனை கிளப்பினாள்.
-தொடரும்.
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
magizh ah pidikathu thana sonna ipo ena ippadi solra
💜💜💜
Nice epi👍
Interesting