அத்தியாயம்-8
சாஹிருக்கு கோபம் தலைக்கேறியது, நீஷாவை மீண்டும் காணாமல் அவன் வாழ்க்கை நரகத்தில் சுழன்றது. அவன் இந்தளவு காதலில் விழுவானென்று அவனே அறியாதது.
டாக்டர்.கிரணை காண அந்த பெரிய மருத்துவமனையில் வந்து நின்றான்.
டாக்டரை பார்க்க அனுமதி வாங்க வேண்டுமென்று உரைத்து உள்ள விட மறுத்தனர். “அவன் என் லவ்வருக்கு ட்ரீட்மெண்ட் மயிரு பார்க்கறேன்னு தினமும் கூடவே வச்சியிருக்கான்.
என்ன ட்ரீட்மெண்ட் பார்க்கறான். அவளை கண்ணுல காட்ட சொல்லு. டேய் கிரண் ட்ரீட்மெண்ட் பார்க்கறதா சொல்லி அவளை தினமும் உன் ஆசைக்கு இணங்க வச்சிட்டு சுத்தற. உன் வயசுயென்ன அவ வயசென்ன நாதாரி….. ” என்று இன்னும் என்னயென்னவோ அசிங்க அசிங்கமாகத் திட்ட ஆரம்பித்தான்.
அங்கிருந்த இரண்டு மூன்று செக்கியூரிட்டி வெளியே பிடித்து தள்ள, அவன் அசராமல் அவர்களை மீறி திமிறி ரிஷப்ஷன் பெண்ணிடம் கத்தினான்.
கிரண் மருத்துவமனைக்குள் வந்ததை கவனித்ததால் மருத்துவமனையிலிருந்து வெளியே வர கத்தினான்.
கிரண் கண்டுக்கவில்லை. நேராக தான் மற்றொரு மனிதருக்கு செய்ய வேண்டிய ஆப்ரேஷனுக்கு தயாராகி, நர்ஸை ஏவி, ஆப்ரேஷன் தியேட்டருக்கு கிளவுஸை அணிந்து அதற்கான வேலையில் ஆயத்தமானார்.
சாஹிர் எல்லாம் தூசியாக மதித்தார்.
ஆப்ரேஷன் நான்கு மணி நேரம் நடைப்பெற, அதுவரை மருத்துவமனை வளாகத்தை பூனைக்குட்டியாக சுற்றியே வந்தான்.
கிரண் அவருக்கான அறைக்கு செல்லவும் வாசலில் எட்டி எட்டி பார்த்தான். கிரண் புறப்படும் நேரம் “உன்னை சொல்லக்கூடாது டா. அவளை சொல்லணும். பெரிய மயிராட்டும் திரியறா. அவளை தேடி, பத்து ஆம்பளைங்க தினமும் பின்னாடி சுத்தறதால வந்த அகம்பாவம். எல்லாம் இந்த வெள்ள தோல் இருக்கற வரை தான். இளமை இருக்குற வரை தான்.
என்னைக்காவது என்னை மாதிரி ஒருத்தனை மிஸ் பண்ணிட்டோம்னு அந்த தே…யா நினைப்பா. அப்ப நான் கூட இருக்க மாட்டேன்.
ஏய் நீஷா… உன் மகிழை போட்டு தள்ளிட்டு, உன் தங்கையை காதலிச்சு தாலிக் கட்டறேன்டி பார்க்கறியா…” என்று அந்த பெரிய ஆஸ்பிடல் முன் அவன் மொழியில் கத்தவில்லை. தமிழில் நீஷாவுக்கு எங்கிருந்தாலும் கேட்கட்டுமென்று கத்தினான்.
ஆப்ரேஷன் முடிந்து மற்ற பார்மல் முடித்து கிரண் வெளியே வந்து காரை திறக்கும் நேரம், சாஹிர் கிரண் கழுத்தை நெறுக்கினான்.
“கிழட்டு நாயே… எங்கடா நீஷா?” என்று கழுத்தை நெறுக்க, ஒரு பக்கம் டிரைவரை கட்டிப்போட்டு வைத்திருந்தான்.
கிரணோ மிரண்டு விட்டு, மூச்சுவிட சிரமப்பட்டார். ‘சொல்லறேன் சொல்லறேன்’ என்று செய்கையில் கூறிட தளர்த்தினான்.
கொஞ்சம் இருமல் நிற்கவும் நிதானமடைந்தார்.
“இங்க பாரு அவயிங்க இல்லை. பேஷண்டா வந்தா… பேஷண்டா போயிட்டா. எல்லா பேஷண்டிடம் ஆப்ரேஷனுக்கு பணம் செலுத்துவாங்க. நீஷா அழகுக்கு முன்ன பணம் தேவையா? அவளும் இஷ்டப்பட்டா நான் அவளை உபயோகப்படுத்தினேன்.
வயசானவனா இருந்தாலும் அவளுக்கு கசக்கலை என்றதற்கு பிறகு நான் ஏன்யா கையை கட்டி வேடிக்கை பார்க்கணும். இங்க யாரும் உன் நீஷாவை கட்டிலில் கட்டிப்போட்டா வச்சியிருக்கோம்?
அவளா வந்தா பாரு. அவ வீட்டுக்கு அவ வராம போவாளா? என்றைக்காவது வருவா. இப்ப ஊர்ல இல்லைன்னு நினைக்கிறேன்.” என்றார் தாடை தேய்த்து.
சாஹிருக்கு புரியாமல் இல்லை. தொலைந்தவளை தேடலாம். மறைந்திருப்பவளை பார்க்க முடியுமா?
தன்னை வெறுத்து மறைந்துக் கொண்டாளா? இல்லை வருணிகாவை விட அழகு கூடுதலாக வரவேண்டுமென்று இவனிடம் சிகிச்சை எடுக்கின்றாளா முட்டாள் பெண்.
சாஹிர் அதன் பின் கிரணை விட்டுவிட்டான்.
ஆனால் அதற்கு பின்னாலான நாட்களில் டாக்டர்.கிரணின் கால் தடத்தையே பின் தொடர்ந்தவனாக இருந்தான்.
வநீஷா எங்கு தான் சென்றிருப்பாள்.
கிரணின் கெஸ்ட் அவுஸிலும் இல்லை. மகிழனை தேடி சென்று இருப்பாளா?
இங்கு தான் இப்படி என்றால் அங்கு மகிழன் வருணியிடம் ‘நான் உன்கிட்ட தனியா பேசணும்’ என்று அழைத்து வந்தான்.
இப்பொழுது எல்லாம் மகிழன் கொடுத்த முத்தம் வருணியிடம் நன்றாக வேலை செய்தது.
அச்சப்படாமல் ஆசை ஆசையாக அவனை காண வந்தாள்.
அவனோ ஃபாலூடா இரண்டை ஆர்டர் செய்துவிட்டு, தயக்கமாய் வீற்றிருந்தான்.
“என்னாச்சு மகிழ் அத்தான். முகமே வெளிறியிருக்கு” என்று நெற்றியை தொட்டு பார்த்தாள்.
பெரும்பாலும் ஜுரம் வந்தால் மகிழன் முகம் இப்படி களையிழந்து சோர்ந்து கிடக்கும்.
அதனால் ஜுரமா என்று எண்ண, “எனக்கொன்றும் இல்லை” என்று கையை எடுத்தான்.
வருணி தீண்டினால் வரமென கருதுபவன் இன்று விலகினான்.
“கல்யாணத்துக்கு இரண்டு மாசம் இருக்குமா?” என்று கேட்டான்.
“ஆமா அத்தான். நேத்து ஒரு நகை வாங்க போனோம். ஐந்து சவரன்ல ஆரம் வாங்கினேன். அத்தையும் வந்தாங்க, உங்களிடம் சொன்னாங்களா?” என்று கேட்டாள்.
“சொன்னாங்க.” என்றவன் மௌனமானான்.
“ஏன் அத்தான் அத்தையிடம் போய் வநீஷா, மணிமொழி இரண்டு பேரும் கூடயிருந்தா இன்னும் நல்லாயிருக்கும்னு பேசினிங்களாம்.” என்றதும் மகிழன் குனிந்து கண்ணாடி குடுவையை பார்த்தவன் நிமிர்ந்தான்.
”மணிமொழி இறந்து சாமிக்கிட்ட போயிட்டா. அட்லீஸ்ட் தொலைந்து போன வநீ நம்மளை தேடி வந்தா நல்லாயிருக்கும்னு சொன்னிங்களாம். அத்தைக்கு அழுகையா வந்து ‘கல்யாணம் நல்ல விழா, இந்த நேரம் செத்தவங்களை பத்தி பேசாதடா.’ திட்டினாங்களாம்.” என்று எச்சி விழுங்கி கேட்டாள்.
“எங்கம்மாவை பொறுத்தவரை வநீஷாவும் செத்துப் போயிருப்பாளாம். நீ சொல்லு வரு. வநீ செத்துப்போயிருப்பாளா? அவ நேர்ல என்னைக்காவது வரமாட்டாளா?” என்று ஆர்வமாய் கேட்டான்.
வருணி உடனடியாக பதில் தரவில்லை.
“சொல்லு… வரு” என்று கையில் அழுத்தம் தர, “எனக்கு என்ன சொல்லறதுன்னு தெரியலை மகிழ் அத்தான்.
அக்கா பேச்சை அப்பா வீட்ல எடுத்ததில்லை. அம்மா என்னைக்காவது பேசி அழுவாங்க. ஆனா அக்கா நினைவுயில்லாம என்னால ஒரு நாள் கூட கடந்ததில்லை.
அவளை தினமும் நினைப்பேன். எங்கயாவது ஒரு மூலையில் சந்தோஷமா இருக்கணும்னு வேண்டிப்பேன்.
வீட்டுக்கு அவ திரும்பி வருவாளான்னு நினைச்சதில்லை.
ஏன்னா வரணும்னா அவ முன்னவே வந்திருக்கணும்.
அவ விவரமானவ. வீட்டு அட்ரஸ், இடம் ஊரு எல்லாம் தெரியும்.
அவ யாரோட கட்டுப்பாட்டுல இருக்கணும். இல்லைனா மணிமொழி மாதிரி இறந்திருக்கணும்.” என்று தேம்ப ஆரம்பித்தாள்.
“ஏ… வரு அழாத, இங்க பாரு அவ வந்தா என்ன செய்வேன்னு கேட்டேன். ஏன் அழற” என்று தேற்றினான்.
“அவ வரமாட்டா மகிழ் அத்தான்.” என்று குதர்க்கமாக உரைத்தாள்.
“ஏன் வரவேமாட்டாளா?” என்று கேட்க, “அது… உனக்கு புரியாது மகிழ் அத்தான். அவ வீட்ல இருக்கறப்ப அம்மா அப்பா அடிச்சா கூட கல்லு மாதிரி இருப்பா. அவ முடிவு செய்தா அழக்கூட மாட்டா. அப்படியிருக்க… ஏதோவொரு காரணத்துகாக இங்க வருவதை தவிர்க்க நினைச்சிருக்கா. அவ இங்க வரவேண்டாம். அவளுக்கு எது பிடிக்குமோ அப்படி வாழட்டும்.” என்று தன் அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவால் கண்ணீரை துடைக்க, கைக்குட்டையால் மகிழன் துடைத்து விட்டான்.
“சரியான அழுகுனி. நான் வநீ வந்தா அவளை கல்யாணம் கட்டிப்பேன். இந்த வரு அழுமூஞ்சி வருணி.” என்று மூக்கை பிடித்து ஆட்டினான்.
அதன் பின் மகிழ் வருணியை சமாதானம் செய்து வீட்டுக்கு சென்று விட்டான்.
அங்கு விட்டுவிட்டு நேராக மீண்டும் அதே ஃபலூடா கடைக்கு வந்தான்.
அங்கே ஃபலூடாவை மெதுவாக கலக்கினாள் வநீஷா.
“வநீ” என்று அவள் முன் மகிழன் இருக்கையில் அமர்ந்தான்.
“திரும்பி வரமாட்டன்னு நினைச்சேன் மகிழ்.” என்று நீஷா பேசவும், “வரக்கூடாதுன்னு நினைச்சேன். ஆனா உன் கோலம் வரவழைச்சிடுச்சு” என்றவன்.
அவளை ஒவ்வொரு இன்ச் பை இன்சாக அளவிட்டான்.
“ரொம்பவும் மாறியிருக்க, அழகா இருக்க, எல்லாம் ஓகே தான். வருணி முன்ன உன்னை நீ வெளிப்படுத்தியிருக்கலாம்.” என்றான் மகிழன்.
வநீஷாவோ “காலம் வரட்டும். உன் கைப்பிடிச்சி அவ முன்ன நிற்பேன். அவ ஷாக் ஆவா” என்று சிரித்தாள்.
மகிழன் இதுவரை பெண்களை காணாதது போல வநீஷாவை நோக்கினான்.
அன்றிரவு முழுவதும் மகிழன் வநீஷாவை விட்டு இம்மியளவும் பிரியாமல் துணைக்கு இருந்தான்.
நிறைய பேசினார்கள்.
பால்யத்தில் மகிழை ‘டா’ போட்டு அழைத்து பேசி அவனை உதாசினம் செய்ததிலிருந்து, அவளது இளமை காலங்களில் முதல் முறை கன்னித்தன்மை தொலைத்தது வரை அனைத்தும் விவரித்தாள்.
ஒரே அறையில் மெத்தையில் படுத்து அவள் கூற, அதே அறையிலிருந்த பால்கனி பக்கம் போடப்பட்டிருந்த சாய்வு சேரில் அமர்ந்து கண்ணீரை வெளிப்படுத்தி கதை கேட்டான்.
அவளது கதையில் சாஹிரை கூட மறைக்கவில்லை.
சாஹிருடன் வந்ததை தான் போட்டோக்காரன் மகிழிடம் தெரிவித்தான்.
உங்களுக்கு தெரிந்தவங்காளம். கல்யாணம் பண்ணும் போது நீங்க தான் போட்டோ எடுக்கணும்னு சொன்னார். அதுக்கு பிறகு கால் பண்ணினா எடுக்கலை” என்று கூறியிருக்க, ‘யார்?’ ‘என்ன?’ என்ற விவரம் கேட்டதற்கு போட்டோ ஸ்டூடியோவில் இருந்த சிசிடிவி கேமரா பதிவால் காட்டவும், வநீஷா சாஹிர் என்ற பெயரிலும் வநீஷாவை கண்டதில் சந்தோஷமும் கொண்டு, அவர்களை தொடர்பு கொள்ள முடியுமா? என்று மகிழன் ஆர்வமாய் கேட்டான்.
வநீஷா போட்டோக்காரனிடம் கிளம்பும் போது ‘உங்க போன் நம்பர் தாங்க’ என்று கேட்டுவிட, விடமாட்டான் போல என்று நம்பரை கூற, மிஸ்டு கால் பதிவு செய்திருந்தான். அந்த நம்பரை மகிழனிடம் தரவும், அடுத்த நொடியே மகிழன் நீஷாவுக்கு கால் செய்து பேசினான்.
அதன் தொடர்ச்சி இதோ இந்த சந்திப்பு.
வீட்டில் அழைத்து செல்ல தான் அவன் அம்மாவிடமும், வருணியிடம் தெரிவிக்க நினைத்தான் மகிழன். அவன் அம்மாவோ நீஷாவை பற்றி பேசியதற்கு உதாசினமாக பேசிவிட்டார். இன்று வருணியோ அழுது வடிந்தாள்.
இந்த வநீஷாவோ யாரின் சந்திப்புக்கும் முடியவே முடியாது என்று மறுத்துவிட்டாள்.
மும்பையில் செ..ஸ் ஓர்க்கராக வேலை செய்பவளை அறிமுகப்படுத்தி அவர்கள் முகசுழிப்பை பெற தயாராகவில்லை என்று ஆணித்தரமாக உரைத்தாள்.
மகிழனுக்கே வநீஷாவை விலை மாதுவாக பார்க்க தயக்கம். அவளை அப்படி பார்ப்பதை ஜீரணிக்க முடியாமல் இருக்க, வீட்டில் கூறவும் தடுமாறினான். அதை மீறி அன்னையிடம் பேசியதற்கு அவர்கள் பிடிக்கொடுக்கவில்லை.
இவர்களே இப்படியென்றால் வநீ தந்தை மகேஸ்வரன் மாமா எல்லாம் எப்படியோ?!
வருணிகாவிடம் சற்று முன் கூறிப் பார்த்தான். ஆனால் வநீஷா அவள் முன் வந்தால்… என்று கேட்டான்.
வருணியும் ஏதோ நெஞ்சடைக்க பேசவும், கூறவில்லை.
இன்னொரு காரணம் வநீஷா.
வநீஷா கூறி எதுவும் மீறி பழக்கமில்லை மகிழுக்கு.
“சாஹிர் கல்யாணம் பண்ணறதா சொல்லிருக்கானே? அவனுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாமே.” என்று கூற, வநீஷாவோ சாஹிர் பார்வை வருணி மீது விழுகின்றதென்று, கூற முடியாது “அவனுக்கு வேற பொண்ணு மேல ஆசை பிறந்துடுச்சு. என்னை எல்லாம் மறந்துடுவான்.
சொல்லப்போனா என்னை கொன்றுட்டு அவன் விரும்பற பொண்ணை மணந்தாலும் ஆச்சரியமில்லை.
இதுக்கு நான் தலைமறைவாக இருந்துட்டா, என் போனுக்கு போட்டு போட்டு பார்த்து எடுக்கலை என்றதும் வேற பொண்ணை தேடலாம்.
தினமும் ஒருத்தியோட வாழற அளவுக்கு சாஹிருக்கு மச்சம் இருக்கு. தொழிலில் அதற்கான வசதியும் இருக்கு. அவன் எல்லாம் ஒருத்தியோட நிறுத்த மாட்டான்.” என்று தவறாய் கணித்தாள்.
இங்கு சாஹிர் நிஜமாகவே கொலைவெறியுடன் வநீஷாவை தேடி அலைந்தான்.
அவளோடு வாழ… அவள்… அவன் மணம் விரும்பும் பெண்ணவள்.
-தொடரும்.
💜💜💜💜
VANEE ETHUKU IPO INGA VANTHU IVANA PATHU PESITU IRUKA APO NEENGA MRG PANIKA PORINGALA
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Interesting🤔
Interesting