அத்தியாயம்-22
வருணியை தூக்கிவிட்டு “பயப்படாத… உன்னை நான் ஒன்னும் பண்ணப்போறதில்லை. ஏன் பயப்படற?” என்று தொட்டு தூக்க, நகர முற்பட்டாள் வருணி
வருணி பயந்து “மகிழ் அத்தான் எங்க? எங்களை விட்டுடு நாங்க போறோம்” என்று அங்குமிங்கும் ஓடி கதவை திறந்து “மகிழ் அத்தான்… மகிழ் அத்தான்” என்று அலறினாள்.
ரஞ்சித்தோ(வநீஷாவோ) “ஏய்… வரும்மா… மகிழன் உயிரோட இருந்தா தூக்கிட்டு போ. இதே வீட்ல தான் இருக்கான். ஆனா அவனை நான் நேர்ல சந்திச்சு ரொம்ப நாள் ஆச்சு.” என்று கூற அழுதவளை, “ஏன் வருணி அழற நான் உன்னை அடிக்கலை துன்புறுத்தலை.. பிறகு ஏன்? உன்னை பார்த்த பிறகு தான் நான் மாறியதே… உனக்காக நான் என்னலாம் பண்ணிருக்கேன் அது தெரியாம பயப்படற?
நான் ஒரு பொண்ணா அழகா செக்ஸ் ஓர்க்கர் ஜாபை பார்த்து, கை நிறைய சம்பாரிச்சு, சொகுசா வாழ்ந்தேன். யூ நோ.. என்னை தேடி ஹீரோ, அரசியல்வாதி பெரிய பெரிய தொழில் அதிபர் வருவாங்க தெரியுமா?
என்னை கல்யாணம் பண்ண எத்தனை பேர் முன் வந்தாங்க. அவங்களை எல்லாம் விட்டுட்டேன்.
லைப்ல ஏதோ… ஏதோ.. ஒன்னு மிஸ்ஸாகுற பீலிங் வருணி.
யாரிடமும் ஒரு கமிட்மெண்ட் போகவே முடியலை. ஆனா என்னையும் ஒருத்தன் விரும்பினான். அவன் தான் சாஹிர். ரொம்ப அழகாயிருப்பான் அவனோட இருக்கறப்ப சந்தோஷமா இருப்பேன். என்னை கல்யாணம் செய்ய கேட்டப்ப தான் அப்பா, அம்மா, உன்னை பத்தி அவனிடம் பேசினேன்.
எனக்கு அப்பா அம்மா அத்தை மாமா யாரையும் பார்க்க விருப்பமில்லை.
உன்னையும் மகிழனையும் பார்க்க விரும்பினேன். அவனிடம் அதை சொல்லவும் என் கூட உன்னை பார்க்க வந்தான்.
மகிழன் என் சின்ன வயசுல என்னோட நலனை விரும்பறவன். நீ என்னோட… என்னோட… வருணி.
எவ்ளோ ஆசையா உங்களை பார்க்க வந்தேன். நம்ம வாழ்ந்திருந்த வீடு, பராமரிக்க முடியாத வீடா இருந்தது.
உன்னை பார்த்தேன் நீ மகிழன் இரண்டு பேரும் மேரேஜ் செய்ய போறதை தூரயிருந்து பார்க்க தெரிய வந்தது. கொஞ்ச நாள் உங்க பின்னாடி வந்தேன். நீயும் மகிழனும், அவன் வீட்டு வாசல்ல கிஸ் பண்ணும் போது எனக்கு உடம்பெல்லாம் எரிந்தது.
என் வருணியை நான் தான் முத்தமிடணும் மகிழன் இல்லைன்னு,
உள்ளேயிருந்த சாத்தான் இதை தான் சொல்லுச்சு. என்னால அதுக்கு பிறகு எப்பவும் போல இருக்க முடியலை வருணி.
இத்தனை நாள் நான் பொண்ணு அப்படின்னு, என்னை மத்தவங்களிடம் காட்டிக்க மெனக்கெட்டது எல்லாம் வேண்டாத வேலையா போச்சு.
நான் ஆம்பளை. எனக்குள்ள இருக்குற உணர்வுகள் ஆண் என்று அப்பட்டமா சொல்லிடுச்சு. இதுல நீ வேண்டும்னு மனசு அனத்த துவங்கிடுச்சு.
இதுல வெளியே இருந்த சாஹிரும் சும்மாயில்லாம என்னை விட உன்னை ரசித்தான். ஆனாலும் அவனுக்கு தேவை அவனை புரிஞ்சுக்கிட்ட பொண்ணு. உன்னை அவன் ரசிக்கலை கல்யாணம் பண்ணலாம். ஆனா நீ அவன் செய்த தப்புக்கும் தொழிலுக்கும், அவனுக்கு நீ லைஃப் லாங் செட்டாக மாட்டேன்னு சில நாளில் என்னை தேடி வந்தான்
நான் தான் அவனை தவிர்த்தேன்.
என்னை பொண்ணா நினைச்சு வர்ற சாஹிரிடம், நானும் அவனை மாதிரி ‘ஆண்’ என்ற ஃபீலிங் வருதுன்னு சொல்ல முடியலை.
உன்னை பார்த்துட்டு வந்ததுக்கு பிறகு என்னால் ஆணா மாறி உன்னை கல்யாணம் செய்ய முடியாதானு யோசித்தேன்.
இப்ப தான் நிறைய மருத்துவம் முன்னேறிடுச்சே. மும்பையில சர்ச் பண்ணினப்ப இந்த மாதிரி ஆப்ரேஷன் பண்ணுறதுல எக்ஸ்பேர்ட் தான் டாக்டர் கிரண்.
அவனை சந்திச்சு நான் ஆம்பளையா மாறணும், என்ன செய்யணும் எவ்ளோ ஆகும்னு கேட்டேன்.
என் அழகை பார்த்துட்டு நீ பொம்பளையாவே இருக்கலாம். ஏன் மாறணும்னு நிறைய ஆலோசனை தந்தான். ஆனா நான் விடப்பிடியா நீ வேணும்னு முடிவெடுத்து ஆணா மாறணும்னு சொன்னேன்.
டாக்டர் கிரண் பெண்ணாக இருந்து ஆணாக மாற சில ஆப்ரேஷன் இருக்கு. ஒவ்வொன்னா சொய்யணும். அததுக்கு எவ்ளோ செலவாகும்னு டிட்டெய்ல் சொல்லி, ஆப்ரேஷன் செய்தா ஏற்படுற சாதகம் பாதகம் சொன்னார்.” என்றவன் கொஞ்சம் இடைவெளியிட்டு, “அவ்ளோ ஈஸியில்லை வருணி. நிறைய வலியை சந்திக்கணும். உனக்காக சந்திச்சேன்” என்று பாதம் மில்க் ஷேக்கை எடுத்து பருகினான்.
தொண்டையை சற்று நனைத்து விட்டு, ”ஒரு பெண், பெண்ணாக இருந்து ஆணாக மாறுவதற்கு பலவகையான அறுவை சிகிச்சைகள், நடைமுறையில் இருக்கு வருணி.
அதுக்கு ஐந்து விதமான ஆப்ரேஷன் செய்யணும்.
முதல் ஆப்ரேஷன் கர்ப்பப்பை நீக்கம். மார்பை அகற்றுதல்.
பொண்ணுன்னு அடையாளம் கொடுத்து, அம்மாவா கருவை சுமக்குற கர்ப்பப்பை நீக்கம் செய்யறது. மருத்துவர் இதை அகற்ற 72000 ஆயிரத்துலயிருந்து வாங்கினாங்க. கர்ப்பப்பை எடுத்ததும் உடல்நலம் ரொம்ப பாதிச்சிடுச்சு வருணி. எங்கேயும் நடமாட முடியலை. இத்தனை நாள் அது உடம்புல இறுக்கமா ஒரு பிளேஸ் இருந்து, அதை வேரோட எடுத்ததும் உடல் வலுயில்லாம போச்சு. ஆட்டம் கண்டுட்டேன். ஆப்ரேஷனே வேண்டாம்னு கூட தோணுச்சு. ஆனா கண் முன்ன உன் உருவம், அழகான ஆணா நான் மாறி உன்னை மகிழ் முத்தமிடுவது மாதிரி கற்பனை செய்து பார்த்தேன். எங்கிருந்து தான் எனர்ஜி வந்ததோ எல்லா வலியும் தாங்கிக்கிட்டேன்
இரண்டாவது வஜினெக்டோமி, இந்த ஆப்ரேஷன் யோனி கால்வாய் மற்றும் திறப்புகள் அகற்றினாங்க. மருத்துவர்கள் இந்த திசுக்களை ஆண் பிறப்புறுப்புகளாக மறுகட்டமைக்கறாங்க. இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 62000 ஆயிரம் செலவாச்சு. வலி பின்னிடுச்சு வருணி செத்து பிழைச்சேன். பெட் ரெஸ்ட் எடுத்தேன் தான். ஆனா முடியலை… மருந்து மாத்திரை சாப்பிட்டும் அந்த பெயின் தீர்ந்தபாடுயில்லை. டாக்டர் கிரணிடம் எனக்கு விஷ ஊசிப்போட்டு சாகடிக்க கெஞ்சினேன். பட் அவர் பண்ணலை.
கொஞ்ச நாள் போக விட்டு அடுத்தடுத்த ஆப்ரேஷன் பண்ணினேன். டாக்டர் கூட இன்னும் நாட்களை கடத்தி செய்யலாம்னு சொன்னார். நான் தான் எழுந்து நடமாட ஆரம்பிச்சி ஒரளவு மனதை தயார்படுத்தினேன்.
ஃபாலோபிளாஸ்டி ஆப்ரேஷன் செய்தாங்க. இது தான் என்னை ஆம்பளையா மாத்துச்சு. இத்தனை நாள் பொண்ணா இருந்ததை எடுத்தாங்க.
இப்ப ஆணாக மாற்ற தேவையானதை செய்தார். ஆண்குறி மற்றும் சிறுநீர் பாதையின் உருவாக்கத்தை, இந்த செயல்பாட்டில் கீழ் கை திசுக்கள் மற்றும் தொடை திசுக்கள் பயன்படுத்தினார்.
இந்த செயல்முறை இரண்டு நிலைகளைக் கொண்டு செய்தார். இதுக்கு விலை சுமார் 21000 ஆயிரம். ஆனா அந்த தே….யா டாக்டர் கிரண் என்னை வாய் வழியா புணர சொல்லி டார்ச்சர் பண்ணிட்டான் வருணி. பொண்ணா இருந்தப்ப செய்ய தயங்காத காரியம் ஆணா இருந்தப்ப அருவருப்பை தருதுன்னு சொல்லியும், என்னை பிளாக்மெயில் பண்ணி என் வாயில் அவன் ஆண்குறியை புகுத்தி செய்ய வச்சான்.
நான் என்ன பண்ணறது சொல்லு. அவன் விருப்பத்தை செய்து முடிச்சேன்.” என்று கூறவும் நூறு புழுக்கள் தன்னை மொய்க்கும் விதமாக வருணி முகம் ஒவ்வாமையிட்டது. வேகவேகமாய் அங்கிருந்த வாஷ்பேஷனில் வாந்தி எடுத்தாள். கடைசியாக குடித்த நீர் எல்லாம் வயிற்றை பிரட்டி வெளியேறியிருந்தது.
“நான் செய்த நூடுல்ஸ் வாமிட் வரலை தேங்காட். நான் உனக்காக செய்த நூடுல்ஸ்… சின்ன வயசுல அடிக்கடி செய்து கொடுப்பேன்” என்று வருணிக்கு டவலால் துடைத்து விட்டு ஸ்டாபெர்ரி மில்க் ஷேக்கை அவளிடம் கொடுத்தான்.
அதை திறந்து குடித்தவள் மூச்சு வாங்க தரையை பார்த்து அழுதாள்.
அடுத்தடுத்து கொஞ்சம் மாசம் இடைவெளியிட்டு ‘மெட்டோய் டியோபிளாஸ்டி’ செய்தேன்
இது நம்மிடம் இருக்கும் பிறப்புறுப்பு திசுக்களை நீட்டி, அவற்றை வரையறுக்கப்பட்ட ஃபாலஸாக மாற்றுமாம். இதற்கு அறுவை சிகிச்சை சுமார் 89288. இத்தனை நாள் செக்ஸ் ஓர்க்கரா சேர்த்து வச்ச காசை ஆப்ரேஷனுக்காக மட்டும் செலவழிச்சேன்.
சொல்ல மறந்துட்டேன்… நடுவுல மகிழன் போன் பண்ணினான். இந்த வலியோட ஒருதடவை அவனை பார்க்க வந்தேன்.
அப்ப முகம் பொண்ணா தான் இருந்தது. ஆனா உள்ள பார்ட்ஸ் ஆஃப் பாடி ஆம்பளையா மாறியிருந்த காலம். மகிழனோட பேசி சந்திச்சு, என்னை பத்தி வருணியிடம் பேசாதன்னு கண்டிப்பா சொல்லிட்டு வந்தேன் ஆனா நான் ஆம்பளையா மாறியதை அவனிடம் சொல்லலை. அதுக்கு ஏற்றது போல பேண்டேஜ் சுத்தியிருந்தேன்..” என்றதும் அப்ப தான் அடிக்கடி ‘வநீ’ என்று மகிழன் வந்து வநீஷா பேச்சாகவே பேசியது வருணிக்கு நினைவு வந்தது.
“அப்பறம்…. முகம் மேன்லியா இருக்கணுமே. உள்ள பார்ட்ஸ் ஆம்பளையா இருந்தா போதுமா. உன்னை சந்திக்கறப்ப புது ஆணா சந்திக்க ஆசைப்பட்டேன்.
முகம் ஆணாக மாற அறுவைசிகிச்சை எடுத்தேன். தொண்டையில் ஆண் குரலா மாற விரும்பினேன். ஆண்மையாகவும் ஆண் மகனாக வரும் குரலை உணர முடிந்தது.
முக அறுவை சிகிச்சையில் நெற்றி நீளம் கொண்டு வந்தாங்க.
பெண்களுக்கு குறுகிய நெற்றிகள் இருக்கும். புருவங்களுக்கும் கூந்தலுக்கும் இடையே உள்ள தூரத்தை அதிகப்படுத்த நெற்றியை நீட்டினா ஆண்பால் தோற்றத்தைக் கொடுக்குமாம். இதுக்கு விலை 85000. அதோட கன்னத்தில் உள்கதுப்புகள் இருக்கு. அது எலும்பு மற்றும் முக தோலுக்கு இடையில் வைச்சாங்க அது தான் ஆம்பளயென்ற வடிவத்தை உருவாக்குச்சு. இதோட விலை 1,80,000. ரைனோபிளாஸ்டி மூலமா திறப்புகளை வழங்க மூக்கை மறுவடிவமைக்கும் செயல்முறைப் படுத்தினாங்க விலை சுமார் 89,000.
தாடை கான்டூரிங், இந்த நடைமுறையில், மருத்துவர் கீழ் முகம் மற்றும் தொண்டை இடையே ஒரு வரையறையை முகமாக வழங்குவதன் மூலம் என் முகத்தின் அகலத்தை அதிகரிச்சாங்க.
பணமெல்லாம் ஒரு விஷயமில்லாம உனக்காக தண்ணியா செலவழிச்சேன். காட் கிரேஸ் என்னால் நம்ப முடியலை. நான் அவ்ளோ சம்பாதிச்சு சேர்த்து வச்சிருக்கேன். சொல்லப்போனா அதை விட அதிகமாகவே சேர்த்து வச்சதே அப்ப தான் உணர்ந்தேன். அதுவரை நான் எவ்ளோ பணம் சம்பாதிச்சு சேர்த்து வைத்தேன் என்ற கணக்கே பார்க்கலை. ஏன்னா எனக்குன்னு ஒரு குறிக்கோளே இல்லாம இருந்திருக்கேன்.
உன்னை சந்திச்ச பிறகு தான் உன்னை அடையனும் என்ற குறிக்கோள் வெறியா மாறியது.
இங்க பாரு… இப்பவும் நான் பேண்டேஜ் போட்டிருக்கேன். என் ஹெல்த் இன்னமும் ரெக்கவர் ஆகணும்.
இதுக்கு நடுவுல தாடி மீசையெல்லாம், ஊசி மூலமாக உற்பத்தி செய்து என்னை அழகான ஆணா கிரண் மாத்தினார்.
நல்ல மருத்துவர்…. ஆனா நல்ல மனுஷன் இல்லை.” என்று கூற, சட்டை கழட்டி காட்டவும் ஆண் மகன் போன்ற உடலாக மாற்றியது தெரிந்தது. மார்பகத்தை வெட்டி ஆப்ரேஷன் செய்து சீராக மாறியதை கண்டாள் வருணி. ஆனால் வயிற்றிற்கு கீழே பேண்டேஜ் இருந்தது. அடிக்கடி வலியால் துடிக்க தன் உடலை கட்டுக்கோப்பாக மாற்ற உடற்பயிற்சி செய்து வலியில் துடிப்பதை வநீஷா(ரஞ்சித்) சொல்வதை கேட்டு முகம் மூடி அழுதாள்.
“என்ன செய்தாலும் நீ என் அக்கா. அக்காவை எப்படி? நான் உன் தங்கச்சி இல்லையா? ஏன் உனக்கு இந்த விபரீத ஆசை.” என்று கேட்டு விட்டாள்.
உண்மை தானே… ஆசை சரியானதாக இருந்தால் பரவாயில்லையே. தங்கை உறவு அல்லவா வருகின்றது.
“உன் அப்பா வேற, என் அப்பா வேற வருணி. அதோட இந்த உலகம் ஆண் பெண் என்ற இரு பாலினம் மட்டும் தான்.
*வெளிநாட்ல போய் பாரு அம்மாவும் பையனுமே கல்யாணம் பண்ணி வாழறாங்க*. அப்படியிருக்க நீ வேற அப்பாவுக்கு பிறந்தவ. நான் வேற அப்பாவுக்கு பிறந்தவன். நான் இப்ப வநீஷா இல்லை. ரஞ்சித் சாஹிர்” என்றான்.
“பச்.. சாஹிர்… அவன் வேற.. அவன் என்ன ஆனான்னு சொல்ல மறந்துட்டேன். டாக்டர் கிரணை மோப்பம் பிடிச்சு ஒரு நாள் என்னை பார்த்துட்டான்.
நான் ஆணா மாறி சிகிச்சை எடுக்கறேன் என்றதும் பயங்கர ஷாக்.
இத்தனை நாள் நான் முக அழகை அழகுப்படுத்திக்க ட்ரீட்மெண்ட் பார்த்திருக்கேன்னு மடத்தனமான நினைச்சிட்டான். பிகாஸ் இப்ப தான் லிப் பில்டர் மூக்கு, கண்ணு, குழிவிழற கன்னம்னு முகத்தை மாத்தி நான் மகிழனை விரும்பறதா அவன் தப்பா நினைச்சிட்டு இருந்தான். நேர்ல என் தோற்றத்தை அவனால் சகிக்க முடியலை. அப்ப தான் செஸ்ட் ரிமூவ் செய்த நாட்கள்.
டாக்டர் கிரணிடம் சண்டை போட்டு அவன் கழுத்தை நெறிக்க போனான். அப்ப ஏற்பட்ட தள்ளு முள்ளுல சாஹிர் விழுந்து ஸ்பாட் அவுட். டாக்டர் கிரணிடம் நான் அழவும், அவர் ஏதோ மெடிக்கல் கெமிக்கலால் சாஹிர் உடலை உருத்தெரியாம அழிச்சிடலாம். எலும்பு கூட மிஞ்சாது பயப்படாதனு ஆறுதல் செய்தார்.
அப்ப எல்லாம் நல்லா விளக்கெண்ணெய்யா பேசினான் அந்த டாக்டர் பரதேசி.
சாஹிர் இறந்து அவன் இருந்த தடமே அழிச்சதும், எனக்கு ஒரு பெயர் வைக்க நினைச்சேன். ஆணா மாறினப் பிறகு வநீஷா என்ற பெயர் தேவைப்படாது இல்லையா. அதான்… சாஹிர்னு.
அதுக்கு பிறகு மகிழனை சந்திச்சது சாஹிரா தட்டி தூக்கி மகிழன் வநீஷா ஓடிப்போனதா கதை கட்டியது எல்லாம் சாஹிர் என்ற பெயர்ல செய்தேன்.
மகிழனை தூண்டப்பட்ட கோமாவால மயக்கத்துல வச்சியிருக்கேன்.
ஆக்சுவலி இது ஒரு விதத்துல மெல்ல மெல்ல இறப்புக்கு வெல்கம் பண்ணற மெத்தட். உன்னை மடக்க யூஸ் ஆகும் இல்லையா.
அதோட கிரண் வேற வாய் வழில வந்து என்னை …பிட்டு போக சொன்னான் செம கடுப்பு.
மும்பை பறந்தேன் காலி இஞ்செக்ஷன் அந்த கிழவன் உடம்புல போட்டு இயற்கை மரணத்தை கொடுத்து, இனி நீ புடுங்கியது போதும்னு வழியனுப்பி விட்டேன்.
அதுக்கு பிறகு உன்னை பின் தொடர்ந்தப்ப தான் நீ ஊட்டில படிக்க போறது தெரிய வரவும் பேங்க் பேலன்ஸ் பார்த்தேன்.
ஒரு பங்களா வாங்கற அளவுக்கு அப்பவும் பணம் இருந்தது. தாராளமா வாங்கினேன்.
இங்க உன்னை மலையுச்சில சந்திச்சேன். நீ கூட தற்கொலை செய்ய முடிவெடுத்தப்ப நான் காப்பாத்தினேனே.
நீ பெயர் கேட்டதும் ‘சாஹிர்’னு சொல்ல பிடிக்கலை. வநீஷா சாஹிர் மும்பை வாழ்க்கை, செக்ஸ் ஓர்க்கர், இந்த டாக்டர் கிரண்’ எல்லாம் வேண்டாம்னு உன்னிடம் ‘ரஞ்சித்’ என்று அறிமுகமானேன்.
உண்மையை சொல்லு…. இந்த மகிழனை விரும்பாம. நான் வநீஷா என்று தெரியாம இருந்தா, நீ என்னை விரும்பியிருப்ப தானே? நீயும் நானும் கல்யாணம் செய்திருப்போம் தானே?” என்று பேச, வருணி ஓவென்று சப்தத்துடன் கதறி அழுதாள்.
-தொடரும்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Ena life ithu nee unaku pidicha Mari vazhanum ninaikira Mari avaluku irukatha athulaum oru logic venama ava unaku sister
💜💜💜💜💜
Interesting
Good