Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 53

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 53

அத்தியாயம் – 53

குழப்பத்துடனே ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தான் இவ நல்லவளா? கெட்டவளா? சென்னையில இருக்க வேண்டிய சாஹித்யன் இங்கே எப்படி? அது எப்படி இவளுக்கு தெரியும் அவன் தங்கும் இடம்?
இவளுக்கு யார்கூடதான் கான்டாக்ட் இல்ல? இல்ல எல்லாரும் இவள ரொம்ப நல்லவனு நம்பிட்டு இருக்காங்க அதான் இவளுக்கு இவ்வளவு இம்பார்டண்ட் கொடுக்கிறாங்க முதல்ல இவள எப்படியாவது எல்லார் முன்னாடியும் இவளோட முகத்திரையை கிழிச்சு வெளியே துரத்தனும்’
என்று எண்ணியவன்
வேகமாக ரெடியாகி வர நேரமானதால் வேகமாக வந்தவள் வேர்த்து விறுவிறுத்து இருக்க அங்கிருந்த மேட்டில் கால் வைப்பதற்கு பதிலாக தரையில் கால் வைத்துவிட அவளது காலின் ஈரத்தால் வழுக்கி விழப்போக அந்நேரம் வேகமாக வந்தவன் அவள் விழப்போக அவளை தாங்கி பிடித்தான்.
எங்கேயோ முட்டி விழப்போகிறோம் என்று நினைத்து கண்களை மூடியபடி “ஐயோ அப்பா” என்று அலறியபடி விழப்போனவளை தாங்கியது யாரென பார்க்க கண்களை திறந்தாள் மேதா.

அவளது வியர்வை நிறைந்த முகமும் பயத்தில் சிறு பிள்ளை போல அவள் கண்களை மூடிக்கொண்டு இருந்ததும் அவனுக்கு பிடித்து போனது இவள் மேல் தன் மனம் ஏன் உடனே இப்படி சாய்கிறது என்று எண்ணியவன் அவளை விட்டுவிடலாமா? என்று யோசித்து பின் இவளால் தனது ஷூட் லேட்டாகும் என்று உணர்ந்து அவளை பிடித்து நிறுத்தினான்.

அதில் சுயம் வந்து அவனிடமிருந்து விலகியவள்
“சா..சாரி சார் ஐ ஜஸ்ட் ஸ்கிட் சாரி சார்” என்றுவிட்டு
அவனை பார்க்க
“பி கேர்ஃபுல்.. லெட்ஸ் கோ” என்றுவிட்டு அவன் முன்னே செல்ல ஐயோ என்றபடி அவன்பின் ஓடினாள் மேதா.
ஓடியவள் அவனுக்கு பாடிகார்ட் கார் கதவை திறக்க அவளோ ஸ்கூட்டரை எடுக்க சென்றாள்.
அதை திரும்பி பார்த்தவன்
“வொய் யூ டிடின்ட் கம் வித் மை கார்?” என்று கேட்க

“நோ சார் ஐ ஹாவ் சம் வொர்க் சோ வில் கம் வித் மை பைக்” என்று அவள் கூற
ஓகே என்று தலையை ஆட்டியவன் காரில் ஏறினான்.

வியர்க்க விறுவிறுக்க அவன்பின் ஓடியவள் அவன் கார்ட்ஸ் உடன் காரில் ஏற இவள் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு அவன்பின் சென்றாள்.
சைட் மிரர் வழியாக அவளை பார்த்தவனுக்கு அவள்மேல் கோவம்தான் வந்தது ‘அடிக்கும் வெயிலில் இவள் ஏன் இப்படி வருகிறாள் ஸ்கின் டேன் ஆகாதா? இவளாம் என்ன நடிகை ஸ்கின்கேர் பன்னாத நடிகை?’ என்று மனசுக்குள் அவளை திட்டியபடி பார்க்க
அவனது மனசாட்சியோ அவ நடிகையா? உன்னால தான் அவ நடிக்கிறா அதை மறந்துட்டியா?
என்று கேள்வி கேட்க அது அவளுக்கு பனிஷ்மெண்ட் அவதான் சரியான ப்ராட் ஆச்சே என்று பதில் கூறி அதை தட்டி அடக்கியவன் அவளையே தான் பார்த்தபடி வந்தான்.
வெயிலில் வந்தவளுக்கு வியர்த்து வழிய ஹெல்மெட் அணிந்து இருந்ததால் அவளால் அதை துடைக்கவும் முடியவில்லை.

சிக்னலில் வண்டி நிற்க ஹெல்மெட்டை கழட்டி தன் முகத்தை தனது சால்வையை கொண்டு துடைத்தாள்
அப்போது அவளுக்கு வயிற்று வலி துவங்கியது. வயிற்றில் கை வைத்தவளுக்கு
சுருக்கென்ற வலியால் குப்பென வியர்க்க தன்னைதானே சமாளித்து நிலைபடுத்தியவள் வலியை காட்டாமல் முகத்தை அழுத்தி துடைத்தவள் ஹெல்மெட்டை மீண்டும் அணிந்தாள்.
அப்போது தான் அவளுக்கு நியாபகம் வந்தது அன்றைய தினம் அவள் மருந்து எடுக்கவில்லை என்பது.
சரி அவர் சொன்ன இடத்துக்கு போய்ட்டு எடுத்துக்கொள்ளலாம் என்று எண்ணியபடி வண்டியை கிளப்பினாள்.
அதையெல்லாம் மிரர் வழியே பார்த்தவன் என்ன இவளுக்கு என்று தான் யோசித்தான்.
ஆனால் அதை பற்றி மேலும் யோசிக்காமல் விட்டுவிட்டான்
அங்கு ஒரு மார்கெட் மாதிரியான இடம் அதை தாண்டியதும் ஒரு அருவி போன்ற இடத்தில் சென்று கார் நின்றது.
அன்று ஷூட் இல்லை என்பதால் அருந்ததியை மட்டும் அங்கே மேதாவிற்கு உதவியாக விட்டுவிட்டு அனைவரும் சென்னை சென்றிருந்தனர்.
இவளது கையெழுத்து வேண்டும் என்று சாஹித்யன் வந்து இருந்ததால் அவள் கூப்பிட்டதும் கிளம்பி வந்து இருந்தான் அவனும் சிவாவை அழைத்துக்கொண்டு கிளம்பி விட்டான்.
இரவு முழுவதும் எடிட்டிங் வேலையில் இருந்ததால் காலை எட்டு மணிக்கு தான் அருந்ததி உறங்க சென்றாள் செல்லும் முன்பே மேதாவிடம் “மொபைல் சைலண்ட்ல போடுறேன் மேதா எனக்கு நல்லா தூங்கனும் ஏதாவது வேணும்னா லேண்ட்லைனுக்கு ஃபோன் பண்ணு அந்த ஆளுக்கு வேலை செய்யுறேன்னு சாப்பிடாம உடம்ப கெடுத்துக்காதே தெரியாத ஊர் வேற தூரமா போய்டாதே டேக் கேர் மேதா” என்றுவிட்டு அந்த லேண்ட்லைன் நம்பரை அவளுக்கு பேப்பரில் எழுதி கொடுத்துவிட்டு அவளுக்கு ஒரு முத்தமும் கொடுத்துவிட்டு தூங்க போய்விட்டாள் சிரித்தபடி அதை வாங்கி தனது ஹான்பேக்கில் வைப்பதற்காக அதில் எப்போதும் எமர்ஜென்சிக்கு என்று வைத்திருக்கும் சானிட்டரி பேடை வெளியே வைத்தவள் அதற்குள் ஏதோ சத்தம் கேட்டு வெளியே செல்ல சானிட்டரி பேடை மறந்து போனாள்.

அன்றைய தினம் அவனுடைய டேஅவுட் வீடியோ லைவ் ரெக்கார்ட் என்பதால் அவனது மொபைலில் லைவ் கனெக்ஷன் செய்ய அது நெட்வொர்க் விட்டு விட்டு வர இரண்டு முறை லைவ் கட்டாகி போனது.
சாதாரணமாக வொயிட் பேண்ட் சிவப்பு நிற முழுக்கை சட்டை அணிந்து அதை அழகாக மடித்துவிட்டு இருந்தான்.
நெட்வொர்க் கட்டானதால் அவன் மேதாவின் மொபைலை கேட்க அவளது மொபைலை கொடுத்தாள். அப்போதே அவளது முகம் கலைப்பாக தெரிந்தது அவனுக்கு.
அதில் லைவ் கனெக்ட் செய்தவன் அன்றைய தினம் மூன்று மணிவரை லைவ் ரெக்கார்ட் செய்து முடித்தான். அதன்பின் அங்கேயே மேதா உணவை கொடுக்க சாப்பிட்டான் மற்றவர்களையும் சாப்பிட சொன்னான் மேதா சாப்பிட தனது ஹாண்ட்பேக்கில் இருந்த டிபன் பாக்ஸ்ஸை எடுக்க அவளுக்கு மீண்டும் வயிறு வலித்தது ஏதோ ஒரு தவறு நிகழப்போவது போலவும் தோன்ற தன்னை சமாளித்து உணவை உண்டு மாத்திரையை போட்டவள் உள்ளுணர்வு சொன்ன செய்தியில் தனது பார்வையை ஆராஷி மீது பதித்தாள் பார்வையை கழுகு பார்வையாய் மாற்றியபடி பாடிகார்ட்க்கு பாதுகாப்பை தீவிரபடுத்த சொல்லிவிட்டு அவரை வேறு எங்கும் காரைவிட்டு இறங்கவிடகூடாது என்று எச்சரிக்கை செய்தவள்
ஆராஷிக்கு ஜூஸை எடுக்க தனது பேக்கை திறக்க அப்போது அருந்ததி கொடுத்த பேப்பர் கீழே விழுந்து விட்டது அதை கவனிக்காமல் அவனுக்கு ஜூஸை கொடுத்தாள். அதை பருகியவன் அங்கிருந்த சூழ்நிலை அருவியின் சில்லென்ற காற்று அங்கு ஒரு மண்டபம் அதில் மரத்தின் நிழல் அதன் அடியில் பென்ச் என்று அழகாக சில்லென்று இருக்க அந்த பென்ச்சிலேயே உறங்கிபோனான்.
மனது ஒரு மாதிரியாக இருந்தது ஏதோ நடக்கபோகுதோ என்று படபடப்பாக இருந்தது அப்படி இப்படி என்று ஐந்தரை மணி ஆனது இருட்ட துவங்க தூங்கும் அவனை பார்த்தவளுக்கு தன் வலி வேறு ஜாஸ்தி ஆக அவளுக்கு அவளது மாதவிடாய் துவங்கிவிட்டது என்று உடல் உணர்த்த கிளம்ப வேண்டும் உடனே என்று தோன்ற எழுப்பினாள் மேதா.
நீண்ட நாட்கள் கழித்து நன்றாக உறங்கியவன் மேதா எழுப்ப கண்களை திறந்து அவளை பார்த்தான் ஆனால் அவளோ அவனை பார்க்காமல் பொருட்களை எடுத்து வைத்தவள் “கிளம்பலாம் சார் நேரமாகிடுச்சு” என்று கூறியபடி பேக்கை எடுத்து மாட்டினாள்.
ஏதோ ஒரு மாதிரியான அமைதியான அவனது சூழல் சட்டென உடைய எழுந்தவன் சுற்றி பார்க்க இருட்ட துவங்கி இருந்தது அதனால் எழுந்தவன் கிளம்ப பாடிகார்ட் க்கு கண் காட்டியவள் அவரை பத்திரமாக அழைத்து செல்லும்படி சொன்னவள் ஆராஷியிடமும்
“நடுவிலே எங்கேயும் ஸ்டாப் பண்ணாதீங்க சார் காரைவிட்டு கீழே இறங்காதீங்க புது இடம் ஆபத்து” என்று அவனையும் எச்சரித்து அனுப்பினாள் அவளது நடவடிக்கை அன்றைய தினம் அவனுக்கு வித்தியாசமாகவே பட ‘இவளுக்கு என்னதான் ஆச்சு ?’ என்று தான் எண்ண வைத்தது.
உடனடியாக கிளம்ப வேண்டும் என்று எண்ணியபடி ஆராஷி கிளம்பியதும் தனது வண்டியை கிளப்பினாள் அங்கிருந்து கிளம்பி மார்கெட் வரும்வரை சரியாக வந்தது ஆனால் மார்கெட்டை நெருங்கும் முன் அவளது வாகனம் பழுது ஆனது.
அதனால் அவள் அங்கிருந்த இடிந்த கட்டிடம் அருகே நிறுத்தினாள் வாகனத்தை.
வரும்போது அவளை கவனித்தவன் போகும்போது அவளை கவனிக்க தவறினான்.
நேரம் வேறு இருட்டிவிட்டிருந்தது.
அவள் இறங்கி என்ன என்று பார்க்க வண்டியை தள்ளகூட முடியவில்லை அவளால் ஐயோ என்று ஆனது அவளுக்கு வயிறுவலி ஒருபுறம் மறுபுறம் உடையில் இரத்தக்கறை ஆக துவங்கியது.
சுற்றும் முற்றும் பார்த்தவள் அங்கு பாத்ரூம் இருக்கிறதா என பார்க்க இன்னும் கொஞ்சம் அரைகிலோ மீட்டர் தூரம் போனால்தான் மார்கெட்டில் பாத்ரூம் இருப்பதாக மொபைல் காட்டியது.
சரி வண்டியை தள்ளிக்கொண்டு போய் விடலாம் என்று பார்த்தால் வண்டி நகரமாட்டேன் என்று நின்றுவிட்டது. பார்த்தால் செயின் கட் ஆகி அது உராய்ந்ததில் டையரில் செயினின் கூரான பகுதி குத்தி பன்க்ச்சர் ஆகி இருந்தது.

தனது பேக்கை ஆராய அப்போது தான் நியாபகம் வந்தது அவள் பேட்டை வீட்டிலேயே விட்டு வந்தது. அருந்ததிக்கு ஃபோன் செய்யலாம் என்று அந்த பேப்பரை தேட அதையும் காணவில்லை.
தனது மொபைலை எடுத்து அருந்ததிக்கு ஃபோன் செய்ய போக அவளது மொபைல் அடித்துக்கொண்டே இருந்ததே தவிர அவள் எடுக்கவில்லை.
யாரிடமாவது உதவி கேட்கலாம் என்று பார்த்தால் அவளது நிலையை யாரிடம் சொல்வாள் அங்கு யாரும் பெண்கள் வேறு இல்லை ஒரு பழைய வீடுதான் இருந்தது அங்கும் யாரும் இல்லை.
அவளை வருபவர் போவார் எல்லாம் ஒரு மாதிரி பார்த்துக்கொண்டு போயினர்.
அவளது மொபைல் வேறு சார்ஜ் இல்லையென இரண்டு பர்சென்ட் தான் காட்டியது.
பதட்டமும் பயமும் ஒன்றாய் ஆனது அவளுக்கு அதில் வலி அதிகமாக தெரிந்தது.
உடை வேறு இரத்தத்தில் நனைய துவங்கி இருந்தது அவளுக்கு அவமானமாகி போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *