24
ஒரு கம்ப்யூடர் இருந்தது. ரம்யா சொன்னது போல நல்ல தெளிந்த அறிவு உள்ளவன் போலும். விவசாயம் சார்ந்த புத்தகங்கள் எதற்கு.? கணினி ஆசிரியர் தானே. புத்தகங்களை நெடுநேரம் புரட்டி பார்த்து கொண்டே இருந்தாள். எவ்வளவு நேரம் போயிற்றோ. தெரியவில்லை. வேறு சத்தமே காணோமே என்று திரும்பி பார்த்தாள். ரம்யா கீழே இறங்கி போய் விட்டிருந்தாள் போலும். எப்போது போனாள்.? அவசரமாய் அவளும் திரும்பி விட மனதாய் நகர்ந்தவள் கண்களில் இடது பக்கவாட்டு சுவரில் மாட்டபட்டிருந்த போட்டோ பட்டது. தெரிந்த முகமாக இருக்கிறதே என்று அருகில் வந்து பார்த்தவள் ஒரு நிமிடம் திகைத்து தான் போனாள்.
இவனா..! இவன் இங்கே எப்படி? அதுவும் இப்படியான தோற்றத்தில்? மேலே சட்டை இல்லாமல் இடுப்பில் பான்ட் அதன் மேல் பெல்ட் மட்டும் போட்டு. இரு கரங்களையும் நெஞ்சின் குறுக்கே மடித்து கண்களில் கூர்மையான பார்வையுடன் மெலிதாக உயரமாக உழைத்து உரமேறிய ஆஜானுபாகுவான உடல்வாகுடன் நிலைப்படியில் இடது தோளால் சாய்ந்தவாக்கில்..!
எத்தனை நேரம் பார்த்து கொண்டு அப்படியே நின்றாளோ!
“நிழலையே எவ்வளவு நேரம் பார்ப்பாய்? அவ்வளவு ஆசை இருந்தால் கொஞ்சம் திரும்பி பார். நிஜத்தையே பார்க்கலாம்..”
பின்னால் இருந்து ஒரு ஆழ்ந்த குரல் கேட்டது. தூக்கி வாரி போட்டு துள்ளி திரும்பினால் போட்டோவில் இருப்பதை போன்றே அதே போஸில் நிலைப்படியில் சாய்ந்து நெஞ்சின் குறுக்கே இரு கரங்களையும் கட்டி கொண்டு கண்களில் தீர்க்கம் மற்றும் கூர்மையுடன், இடது புருவத்தை உயர்த்தி அவளுடைய பதிலுக்காக காத்திருப்பவன் போல் நின்றான் அவன்.
“நீ….நீங்கள்..?”
“நான்….நான் தான்”
கண்களில் உலகையே வென்ற குறும்புடன் நின்றிருந்தவன் வர்மா சார் என்று ரம்யாவால் சொல்லப்பட்ட அருள்மொழிவர்மன்.
முற்றிலுமாக தோற்று போனவனாக வீடு வந்த சேர்ந்த அருள் உலகையே வெறுத்து, தாடி வளர்த்து, அன்ன ஆகாரம் இல்லாமல், தூக்கம் இல்லாமல், தன்னை சுற்றி நடப்பது எதையுமே உணராதவனாக, பெற்றோரின் கண்ணீருக்கும் மனவருத்ததுக்கும் காரணமானவனாக கிட்டத்தட்ட ஒரு நடைபிணமாக உலாவினான்.
நிவியின் வீட்டில் போய் பஞ்சாயத்து வைப்போம் என்ற போதும் கண்டிப்பாக மறுத்து விட்டான். விவாகரத்திற்கு நோட்டிஸ் வந்த போதும் சொத்தை விற்றாவது கடைசி வரை வழக்காடுவோம் என்று வீட்டார்கள் சொன்ன போதும் அதற்கு அவன் உடன்பட மறுத்து விட்டான். எதிர்ப்பே காட்டாமல் மெளனமாக விலகி வந்தான். ஆனாலும் அவளை மறக்க முடியாமல் அவதிபட்டான். யாராலும் ஆறுதல் சொல்ல முடியாத அளவில் இருந்தான்.
எங்கேனும் வேலைக்கு அவனை அனுப்பவும் பெற்றவர்களுக்கு கலக்கம். தங்கள் கண் பார்வையில் இல்லாவிட்டால் அவன் உயிருக்கு ஏதேனும் ஹானி செய்து கொண்டால் என்ன செய்வது என்று அஞ்சினார்கள். எப்போதும் விடுமுறையில் வீட்டில் இருக்க நேர்ந்தால் கூட அப்போதெல்லாம் பண்ணயத்தில் ட்ராக்டர் ஓட்டுவது சந்தைக்கு விளைந்த பொருட்களை கொண்டு செல்வது என்று எப்போதும் பெற்றோருக்கு உதவியாக இருப்பவன். வீட்டிலே அடைந்து கிடக்கும் அவனை பார்க்க பார்க்க பெற்றவர்களுக்கு துயரம் நெஞ்சை அடைத்தது.
அப்போது தான் ஒருநாள் பொன்னி வந்தாள். வந்தவளை வா என்று கூட அழைக்கவில்லை மாணிக்கம். சரோஜா தான உரிய விதமாக அவளை வரவேற்றது.
“நான் சொல்லுவதை கேளு மாணிக்கம்.”
“நீங்கள் சொல்வதை கேட்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.”
“அப்படி சொல்லாதே தம்பி, உன் தகப்பனின் கடைசி ஆசை அது”
“என் தகப்பனுக்கு நான் செய்ய வேண்டிய பெற்ற கடமையையே செய்யவில்லை. அப்படி இருக்கும் போது அவருடைய கடைசி ஆசை பற்றி எனக்கு என்ன வந்தது?”
“அதற்கு பாவி நான் தான் காரணம்.”
பொன்னி மாணிக்கவாசகத்தின் தந்தையின் ரெண்டாவது மனைவி. மாணிக்கவாசகத்தின் தந்தை வெங்கடேசன் மனைவி, மாணிக்கவாசகத்தின் பதினைந்தாவது வயதில் காலமானாள். ஐந்து வருடம் கழித்து அவருடைய இருபதாவது வயதில் அவரை விட இரண்டே இரண்டு வயது பெரியவளான பொன்னியை அவருடைய தந்தை மறுமணம் செய்து வந்த போது அவளுடன் அவளுடைய தம்பி நீலகண்டனும் உடன் வந்தான்.
நீலகண்டனும் மாணிக்கவாசகமும் ஒரே வயதினர்கள். மாணிக்கவாசகம் எது கேட்டாலும்
கிடைக்காது. நீலகண்டன் கேட்காமலேயே எல்லாம் கிடைக்கும். பொன்னி சின்னவயது மாற்றாந்தாயின் அத்தனை குண விஷேஷங்களையும் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் மாணிக்கம் பட்ட அவஸ்தையை கண்டு அவருடைய தாய்மாமன் அவரை தன்னோடு அழைத்து கொண்டு வந்து விட்டார். தன்னுடைய ஒரே மகளான சரோஜாவையும் அவருக்கே கல்யாணம் செய்து வைத்து விட்டு பொறுப்புகளையும் ஒப்படைத்தார்.
வெங்கடேசன் தன்னுடைய மகனை பார்க்க விரும்பினாலும் பொன்னி அவரை அனுப்ப மறுத்தாள். காலபோக்கில் மாணிக்கத்திற்குமே தந்தையிடம் பிடிப்பு விட்டு போயிற்று.
பொன்னிக்கு பிள்ளைகள் பிறக்கவில்லை. அவளுடைய தம்பி நீலகண்டனுக்கு திருமணம் செய்து வைத்தாள். முத்தரசன் பிறந்தான். நீலகண்டனின் மனைவியும் அல்பாயுசில் போய் சேர்ந்தாள். அப்பனும் மகனும் பொன்னியின் வீட்டிற்கே வந்து விட்டார்கள்.
மகனை பிரிந்த துக்கம் ஒருபுறம், பொன்னிக்கு வேறு பிள்ளைகள் பிறக்காமல் போனதால் ஒரே வாரிசான மாணிக்கத்தை நினைத்து அவ்வப்போது மறுகுவார் வெங்கடேசன்.
இறுதியில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அவர் இறுதி படுக்கையில் இருக்கும் போது அவர் உயிர் போக மிகவும் கஷ்டப்பட்டது. மாணிக்கம் மாணிக்கம் என்று அவர் பெயரையே உரு போட்டு கொண்டிருந்தார். பெரியவர்கள் மாணிக்கத்தை அழைக்க சொல்லி வற்புறுத்தினார்கள். எங்கே அவரை அழைத்தால் கடைசி நேரத்தில் சொத்துக்களை அவர் பெயருக்கு கை அடித்து கொடுத்து விடுவாரோ என்று மாணிக்கத்தை அழைக்க மறுத்து விட்டாள் பொன்னி. மாணிக்கம் நினைவாகவே வெங்கடேசன் இறந்தும் கூட கொள்ளி வைக்க அவருக்கு ஆள் சொல்லி விடவில்லை பொன்னி. நீலகண்டனின் மகன் முத்தரசனே அவருக்கு கொள்ளி வைத்தான்.
nice
💜💜💜💜💜
Nice👍