Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 55

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 55

வேண்டும் நீ எந்தன் நிழலாய்

அத்தியாயம் – 55

அவளை அணைத்தபடி காரில் அமர்ந்து இருந்தவன் டிரைவரிடம் நீர் கேட்டான் அவரும் எடுத்து கொடுக்க அதை வாங்கியவன் அவளை தனது தோளில் சாய்த்தபடியே அவளது முகத்தில் தெளித்தான் ஆனாலும் அவளுக்கு மயக்கம் தெளியவில்லை.
அதில் பயந்துபோனவன் நிதினுக்கு ஃபோன் செய்தான்.

மறுமுனையில் பதட்டமாய் இருந்த நிதின் அருந்ததிக்கு ஃபோன் ட்ரை செய்துகொண்டே இருந்தான் கார்ட்ஸ் ஃபோன் செய்து மேதா சேஃப் என்று கூறி இருந்தாலும் அவனுக்கு பதட்டம் ஒருபுறம் இருந்து கொண்டே இருந்தது. அதே நேரம் ஆராஷியிடம் இருந்து ஃபோன் வர எடுத்தவன்

“ஆரா..ஆரா சார் மே மேதா ஈஸ் சேஃப் நவ் ஷெல் ஐ
டாக் ட்டூ ஹர்?” என்று கேட்க.

“நோ சார் ஷி ஈஸ் சேஃப் பட் ஷி ஈஸ் அன்கான்ஷியஸ். ஐயம் ஹெல்ப்லெஸ்” என்று கூற பதட்டமானான் நிதின்

“வாட் ஹாப்பன்ட் ட்டூ ஹர் ஆரா?” என்று கேட்க.

“நத்திங் ட்டூ வொர்ரி நிதின் சார்.
ஐவில் டெக்ஸ்ட் ட்டூ யூ” என்றுவிட்டு காலை கட் செய்தவன் நிதினுக்கு மேதாவின் நிலையை மெஸேஜ்ஸில் கூறினான் அதை படித்ததும் அதிர்ச்சி ஆன நிதின்
உடனே ஆராக்கு ஃபோன் செய்தான்.
“அவளை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறீங்களா? நான் அங்க ஏற்பாடு பன்றேன் உடனே ட்ரீட்மெண்ட் பன்னுவாங்க” என்று நிதின் கூற

“ எனக்கும் செக்யூரிட்டி இல்லை இவள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறது அவளுக்கும் இன்கன்வீனியன்ஸ் நிதின் அண்ட் ஆல்சோ எங்க ரெண்டு பேர் டிரஸ்ஸும் ப்ளட் ஸ்டெயின்ஸ்.
சோ முதல்ல அவளுக்கு பர்ஸ்ட் எய்ட் பண்ணனும் நானும் டிரஸ் சேன்ஞ் பண்ணனும் அப்புறம் வேணா அவங்க சரியாகலைனா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்.
நான் ரொம்ப நேரமா அருந்ததிக்கு ட்ரை பன்றேன் அவங்களுக்கு எடுக்கவே ஆகலை.
எனக்கு இவங்களுக்கு ஹெல்ப் பண்ண ஆள் வேணும்.
என்னால டிரஸ் சேன்ஞ் பண்ணாம ஹோட்டலுக்கும் போக முடியாது சேம் இவங்களையும் இவங்க தங்கி இருக்கிற ஹோட்டலுக்கும் தூக்கிட்டு போக முடியாது அதுக்கு ஏதாவது ஏற்பாடு செய்ங்க எனக்கு கம்யூனிகேஷன் வேற ரொம்ப கிரிட்டிகல்லா இருக்கு” என்று கூற இவனது பேச்சு ஓரளவுக்கு புரிந்த டிரைவர் காரை ஓரமாக நிறுத்தினார்.
அவரை என்னவென பார்த்த ஆரா
“சார் ஃபோன்” என்று அவர் கேட்க
அவரிடம் மொபைலை நீட்டினான் ஆரா.
வாங்கியவர் நிதினிடம் பேச துவங்கினார்.

“நிதின் சார் நான் டிரைவர் பேசுறேன் சார் இவரு பேசுறது எனக்கு சரியா புரியலைனாலும் இவங்க ரெண்டு பேரும் டிரஸ் மாத்திட்டு போகணும்னு தெரியுது அவங்களுக்கு சிரமம் இல்லனா எங்க வீட்டுக்கு வேணா கூட்டிட்டு போகவா சார் என் பொண்ணு இருக்கா அவ மேதா மேடமை பார்த்துப்பா அவளோட டிரஸ் அவங்களுக்கு சரியா இருக்கும்.. இவருக்கு இப்போதைக்கு என்னோட வேட்டி சட்டை வேணா அவருக்கு மாத்திக்க வேணும்னா மாத்திக்குவாரா? இவருக்கும் டிரஸ் மாத்த சரியா இருக்கும் சார்” என்று கூற

“அண்ணா ரொம்ப நன்றினா யார்கிட்ட ஹெல்ப் கேட்கிறதுனு தவிச்சுட்டு இருந்தேன் நீங்களா உதவி பன்றேன்னு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம்னா” என்று நிதின் பேச.

“அவங்களுக்கு ஓகேனா கேட்டு சொல்லுங்க சார் எனக்கு அவர்கிட்ட கேட்க தெரியலை சார் நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்” என்றபடி
மொபைலை ஆராவிடம் கொடுக்க புரியாமல் வாங்கியபடி காதில் வைக்க நிதின் அவர் கூறியதை அவன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க அவர் கூறியதும் சரியாக இருக்க அங்கு சேஃப்பா என்று மட்டும் விசாரிக்க நிதினுக்கு அந்த டிரைவர் நன்கு தெரிந்தவர் அவரது குடும்பமும் தெரிந்த குடும்பம் என்று கூற சரியென அங்கேயே போக சொல்லி அவரிடம் மொபைலை நீட்டினான் அதை வாங்கியவர் நிதின் ஓகே சொல்லவும் அவர் கட் செய்து விட்டு அவனது மொபைலில் அவரது வீட்டு லொகேஷனை போட்டு கொடுத்துவிட்டு மொபைலை அவனிடம் நீட்டிவிட்டு காரை கிளப்பினார்.
அதை வாங்கி அருகில் வைத்தவன் போகும் வழியையும் அவளையும் பார்த்து கொண்டே சென்றான்.

என்னதான் அவர் நிதினுக்கு நம்பிக்கையானவராக இருந்தாலும் அவனுக்கு ஏனோ நம்பிக்கை இல்லை ஆனாலும் இப்போது வேறு வழியும் இல்லை.
பாடிகார்ட்க்கு மெஸேஜ் செய்து தனக்கு ஒரு டிரஸ் எடுத்து கொண்டு வருமாறு சொன்னவன் அவர் போட்டு கொடுத்த லொகேஷனையும் அனுப்பி வைத்தான்.
சிறிது நேரத்திலேயே அவரது வீட்டை அடைந்தவர் அவனை காரின் உள்ளேயே இருக்கும்படி சொல்லிவிட்டு தனது மகளுக்கு ஃபோன் செய்தார் அப்போது தான் மேதாவிற்கு லேசாக மயக்கம் தெளிய ஆரம்பித்து இருந்தது. அவரது வீட்டிலிருந்து ஒரு பெண் வெளியே வர அந்த பெண்ணிடம் அவருக்கு என்ன உதவி வேண்டும் என்று ஆங்கிலத்தில் கேட்டு செய்யும்படி சொன்னவர் எதுவும் சத்தம் போடக்கூடாது அவர்கள் தம்மை நம்பி உதவிக்காக வந்து இருக்கின்றனர் என்று சொல்லியதால் அந்த பெண்ணும் அமைதியாக அவனது ஜன்னல் அருகில் வந்து வின்டோவை தட்ட
அவனும் திறந்தான். அதற்குள் மேதாவின் ஷாலின் ஒரு பக்கத்தை அவனது முகத்தில் சுற்றி கொண்டான்.

“வாட் ஹாப்பன்ட் ட்டூ ஹர் சர்?” என்று கேட்க அவனும் அவளிடம் விவரம் சொல்ல அவனை ஆச்சர்யமாய் பார்த்த பெண் அவளுக்கு உடனே உதவி வேண்டும் என்பதை உணர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தவள் யாரும் இல்லாததை உணர்ந்து
அவனை கீழே இறங்க சொன்னாள்.
அவனும் சுற்றும் முற்றும் பார்த்தபடி அவளை அணைத்தபடியே இறங்க அவனது உடையும் இரத்தத்தில் நனைந்து இருந்தது.
அதை பார்த்த பெண்
“சார் யுவர் டிரஸ் ஆல்சோ” என்று ஏதோ சொல்ல வர
“தட்ஸ் நாட் ஏ பிக் இஷ்யூ பர்ஸ்ட் ஹெல்ப் ஹர்” என்று கூற
“ஓகே கம் திஸ் வே” என்ற படி அந்த பெண் முன்னே செல்ல அவளை தூக்கியபடி அவனும் அவள் பின் சென்றான்.
அதற்குள் அந்த பெண் அவளை குளியலறையில் இறக்கி விடும்படி சொன்னவள் மேதாவின் கன்னத்தை தட்டி
“மேடம் மேடம்” என்று கூற லேசாக மயக்கம் தெளிந்த மேதா முழுதாக தெளியாததால் அவளால் சரியாக பேசக்கூட முடியவில்லை.

“ப்ளீஸ் வெயிட் ஹியர் சர் ஐ வில் பிரிங் டிரஸ் ஃபார் ஹர்” என்றுவிட்டு ஓடிப்போய் அவளுக்கு தேவையான அனைத்து பொருளையும் எடுத்துக்கொண்டு வந்தவள் அவனை வெளியே இருக்கும் படி சொல்ல மேதாவை தனியேவிட அவனுக்கு மனமில்லை ஆனாலும் அவளை அங்கிருந்த சேரில் அமரவைத்து விட்டு வெளியே சென்றான்.
வெளியே வந்தவன் கதவை அடைத்துவிட்டு அங்கேயே நிற்க அதற்குள் கார்ட்ஸ் வந்துவிட அவர்கள் கொண்டு வந்த உடையை டிரைவர் வாங்கி வந்து கொடுத்தார் அவர் காட்டிய ரூமில் அவன் சென்று உடையை உடனடியாக மாற்றி கொண்டு வந்தான். டிரஸ்ஸும் கேப்பும் மாஸ்க்கும் சேர்த்தே கொண்டு வர சொல்லி இருந்ததால் அதையும் அணிந்தே வந்தான்.
அந்த பெண்ணோ
அவளுக்கு லேசாக மயக்கம் தெளியவும் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியபடியே உடையை மாற்ற உதவினாள்.
அவளுக்கு உடைமாற்றி அவளுக்கு தேவையானதை செய்தவள் அவளுக்கு முகம் கழுவிவிட்டு அவளது கழட்டிய உடைகளை ஒரு கவரில் போட்டு வெளியே அழைத்து வர தள்ளாடியபடி வந்த மேதாவை ஓடிவந்து தாங்கினான் ஆராஷி.

“மேதா மேதா” என்று அவளை அழைக்க அவளால் மயக்கத்தில் இருந்து தெளிய முடியவில்லை.
அவன் அவளை தாங்கி கொள்ள அந்த பெண் ஓடிப்போய் தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க அதை வாங்கி அவளுக்கு தெளித்து சிறிது பருகவும் வைத்தான்.
அவளுக்கு அப்போதும் மயக்கம் லேசாக இருக்க அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி அந்த பெண் கூற அதுவே சரியென யோசித்தவன்.
சரியென அவளை அள்ளிக்கொணடு வண்டிக்கு சென்றான்.
போகும் முன் திரும்பி அந்த பெண்ணுக்கு நன்றி கூறிவிட்டு டிரைவரை வண்டி எடுக்க சொன்னவன் நிதினுக்கு ஃபோன் செய்தான்.
உடனே அட்டென்ட் செய்தவன்

“வாட் ஹாப்பன்ட் ஆரா சார் மேதா ஈஸ் ஓகேனா? ஐ வில் கம் தேர் சூன் சார் ப்ளீஸ் டேக் கேர் ஹர்(what happened aara sir? Media is ok na? I will come their soon sir please take care her)” என்று அவன் கூற அவனை தடுத்தவன்.

“வாட் நிதின் சார் ஐ க்நோ ஷி ஈஸ் நாட் வெல் பட் ஷி வில் பி ஓகே வித் இன் மார்னிங் ஓய் யூ கம்? ஐ வில் டேக் கேர் ஹர். ஷி ஈஸ் ஜஸ்ட் ஒன் ஆஃப்தி எம்ப்ளாயிஇன் யுவர் கம்பெனி ஃபார் தட் ரீசன் ஒய் யூ கம் ஹியர் சர்?(what nithin sir I know she is not well but she will be ok Within morning why u come? I will take care her she is just one of the employee in ur company for that reason why u come here sir?)” என்று கூற

‘அய்யோ இவனுக்கு நான் எப்படி என் நிலைமையை புரிய வைப்பேன் அவ வெறும் எம்ப்ளாயி இல்ல இந்த ரெனி ஃபேஷனோட ஓனர்னு மேதா என்னை ஏன் இப்படி இக்கட்டுல மாட்டி விட்டு வேடிக்கை பாக்குற’ என்று தனக்குள் பேசியவன மறுமுனையில் ஒருவன் தன் பெயரை ஏலம் விடுவதை பார்த்து சுயம் வந்தவன்
“ந.. நத்திங் ஆரா சர் ஷி ஈஸ்
மை ரிலேடிவ் ஆல்சோ னா தட்ஸ் ஒய் ஐ ஹாவ் வொர்ரி அபெளட் ஹர்(nothing aara sir, she is my relative also na that’s y i have worry about her)” என்று சமாளிக்க

“டோன்ட் வொர்ரி சர் ஐ வில் ட்ராப் ஹர் இன் அருந்ததி ரூம் ஷி வில் டேக் கேர் ஆஃப் ஹர் ஆர் எல்ஸ் ஐ வில் ஆஸ்க் யுவர் ஹெல்ப்(dont worry sir I will drop her in arundhadhi room she will take care her or else i will ask your help)” என்று கூறியபடி சீட்டில் இருந்து டோரில் சாயப்போன மேதாவின் தலையை உடனே நகர்ந்து பிடித்தான்.
ஏதோ ஒரு வலியில் அவளது முகம் சுருங்கி அவஸ்தை படுகிறது ஆனால் அதை அவளால் உணரக்கூட முடியவில்லை அவளது முகத்தில் வலி தெரிகிறது ஆனால் அது பீரியட்ஸ் வலியாக இருக்கும் போல என்று அமைதியாகி விட்டான் ஆராஷி.
அவளது தலையை தன் தோளின் மேல் இழுத்து சாய்த்துக்கொண்டான்.

மறுமுனையில் இருந்த நிதினுக்கு அருந்ததி மேல் கோவமாக வந்தது அவள் மட்டும் தூங்காமல் விழித்து இருந்தால் இவளுக்கு உதவியாக இருந்து இருக்குமே?
ஆனால் அவள்தான் அவனுக்கு தூங்க போகும் முன் மெஸேஜ் செய்துவிட்டு தூங்கினாளே தான் நேற்று அதிகாலையிலிருந்து இப்போது தான் வேலை முடித்ததாகவும் மேதாவிடம் சொல்லிவிட்டேன் மொபைல் சைலண்ட்ல போடுறேன்னு ஏதாவது அவசரம்னா ரெஸார்ட்டின் ரூம் லேண்ட்லைன் நம்பர் அவளுக்கு கொடுத்து இருப்பதாகவும் அவள் கால் செய்தால் உடனே செல்கிறேன் எனவும் சொல்லி இருந்தாளே மெஸேஜ்ஜில் ஆனால் ஏன் மேதா அந்த லேண்ட்லைன் நம்பருக்கு கால் செய்யவில்லை? என்று யோசித்தபடியே ஃபோனை கட் செய்தான்.
ஃபோன் கட்டாகி விட்டதை உணர்ந்த ஆராஷி டிரைவரிடம் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு போக சொன்னான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *