Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 64

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 64

அத்தியாயம் – 64

அதிர்ச்சி, தவறான புரிதலால் வாழ்வே தடம்மாறி போய்விட்ட அதிர்ச்சி, எப்படி அவன் உதறிவிட்டு போனானோ அப்படியே அங்கேயே மடங்கி அமர்ந்தவளுக்கு கண்களின் நீரும் வற்றிபோன நிலை. என்ன செய்து அவனை அவளை நம்ப வைப்பாள்.
எதை விளக்கினாலும் நம்பும் நிலையில் அவன் இல்லையே? அவனை பாதுக்காக்க தானே ரியோட்டோவிற்கு செய்து கொடுத்த சத்தியத்தை காக்கதானே அவள் அவளது பதவியை மறைத்து அவனுக்கு அனைத்து வேலைகளும் செய்தாள்.
அவனது சித்தியின் சூழ்ச்சிகளை முறியடித்து அவனை காத்தவள் அவளை காத்துக்கொள்ள தவறி விட்டாளே?
இனி என்ன விளக்கமும் அவனிடம் எடுபடாதே? என்ன செய்வாள்? தவறான நேரத்தில் தவறிய வார்த்தைகள் கேட்டால் அனைத்தும் தவறாக தானே போய்விடும் அதுதானே இப்போது நிகழ்ந்து உள்ளது.
இதை எப்படி சரி செய்வாள்?
இதயம் கனத்துபோனது அவன்தான் தனக்கு எல்லாம் என்று எண்ணியிருந்தாளே? அவனே அவளை தவறாக எண்ணிவிட்டானே? அதும் தன் சகோதரனோடும் தன் நண்பனோடும் இணைத்து தன்னை தவறாக நினைத்துவிட்டானே? அவன் நினைப்பு தவறு என்பதை யார் அவனுக்கு புரிய வைப்பது? எதை ஆதாராமாக காட்டி புரிய வைப்பது? அப்படியே புரிய வைத்தாலும் அதையும் நாடகம் என்றுவிட்டால் தாங்குவாளா அவள்? முற்றிலும் உடைந்து போனாள் மேதா.

கண்களில் கண்ணீர் வழிய நெற்றியில் அடிப்பட்ட இடம் இரத்தம் உறைந்து போய் இருந்தது கழுத்தில் அவன் கை வைத்து அழுத்திய தடம் விரல்கள் பதிந்து போய் இருந்தது. இதழில் அவன் காதலால் கொடுத்ததாக நினைத்தது கோவத்தை காட்ட என்பது அவளது கிழிந்த இரத்தம் கன்றி போன இடத்திலேயே தெரிந்து போனது.
உயிர் பிரிந்திருந்தாலும் மகிழ்ச்சியாய் ஏற்று இருப்பாள் அவனது தவறான பார்வையிலிருந்து தப்பித்து இருக்கலாம். பாழும் உயிர் பிரியமாட்டேன் அவனை காக்க நீ வாழ்ந்து தான் ஆகவேண்டும் என்று உறைக்கிறதே.
அவள் இறந்தாலும் அவனைத்தானே தவறாக புரிந்து கொள்ளும் அவன் குடும்பம்.

வாழவும் முடியாது சாகவும் இயலாத நிலை யாரிடம் சென்று ஆறுதல் தேடுவாள். அவளுடைய கஷ்டமான நேரத்தில் அவன்தானே தந்தையாய் அரவணைத்து அரணாய் நின்றான். இப்போது அவனே அவளை துரோகி பட்டம் கட்டி அகல பாதாளத்தில் தள்ளி விட்டானே? இனி யார் அவளுக்கு ஆறுதல் கூறுவது?
தந்தையின் இழப்பு இன்னும் அதிகமாக தாக்கியது இப்போது. அவர் மட்டும் இருந்திருந்தால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து இருப்பாரோ? அட்லீஸ்ட் அவளுக்கு ஆறுதலாகவாவது இருந்திருப்பார் அல்லவா?
“அப்பா” என்று கதறியபடி அழுதாள் ஆற்றுவார் தேற்றுவார் யாருமின்றி அழுது அழுது மயக்கம் வரும் நிலையாகி விட்டது.

கோவத்தில் கனன்று உள்ளே சென்று நடைபயிற்சி மேற்கொண்டிருந்தவனுக்கு ஏனோ அவளது கலங்கிய கண்கள் தான் தேடுபவளை நினைவூட்டியது அதே போலவே இருந்தது இவளது கலங்கிய கண்கள்.
அவள் ஏன் பணத்துக்காக இப்படி செய்தாள் என்பது மட்டுமே அவனுக்கு அவள்மேல் கோவம் வர காரணம் கோவத்தையெல்லாம் உள்ளே போட்டு அழுத்தியவன் ஏன் ஏதற்காக என்றே தெரியாமல் மீண்டும் அவளை காண வந்தான்.
வந்தவன் கண்டது தலையில் இரத்தமும் உதட்டிலும் இரத்தமும் இருக்க கழுத்தில் தன் கைதடத்தால் ஏற்பட்ட காயமும் என இருந்தவளை தான்
‘ச்சே என்ன காரியம் செஞ்சுட்டேன் நானா இப்படி கேவலமா ஒரு பொண்ணுகிட்ட நடந்துகிட்டேன்’ என்று தன்னலயே கடிந்து கொண்டவன் அவளது அருகில் சென்று பர்ஸ்ஸில் இருந்த பணத்தை எடுத்து நீட்டினான்.
இன்னும் என்ன உயிர் வதைக்கும் வார்த்தை சொல்லிவிட போகிறானோ? என பயந்தவள் அழுது சிவந்து போன முகத்தோடு அவனை நிமிர்ந்து பார்க்க அந்த கண்களில் என்ன கண்டானோ?

“எந்த பொண்ணுகிட்டயும் தன் வீரத்தை அடிச்சு காட்டுறவன் ஆண்மகனே இல்லனு எங்க அம்மா சொல்லி இருக்காங்க நா..நான் கோவத்துல செஞ்சது உனக்கு ரொம்ப காயம் பட்டு இருக்கு ஒழுங்கா ஹாஸ்பிடல் போய்ட்டு மருந்து போட்டுட்டு வா எல்லாரும் என்னைத்தான் தப்பா நினைப்பாங்க” என்று பணத்தை அவளது அருகில் வைக்க அதை எடுக்காமல் வலி நிறைந்த கண்களோடு அவனை பார்த்தவளுக்கு தான் தப்பானவள் இல்லையென கதற வேண்டும் போல தோன்றியது ஆனால் கோடாய் கண்ணீர் மட்டுமே இறங்கியது. எழுந்தவள் துடிக்கும் மனதை அடக்கியபடி கண்ணீரை துடைத்துக்கொண்டு
அவனது பணத்தை எடுத்து அவனது கையை பிடித்து அதில் வைத்தவள்
“தப்பு என்மேல தான் சர். உங்களுக்கு கோவம் வர்ற அளவுக்கு நான்தான் நடந்துகிட்டேன் மன்னிச்சிடுங்க யாரும் உங்களை தப்பா பேசமாட்டாங்க அதுக்கு நான் பொறுப்பு” என்றபடி திரும்பி நடந்தாள்.

இப்போதும் அவள் தன்மேல்தான் தவறு என்று சொன்னதையும் திமிராக சொல்லி செல்கிறாள் தவறாகவே புரிந்து கொண்டான்.
நிஜமாவே இவள் பணத்துக்காக நடிக்க வந்தவள் தானா? அப்படியென்றால் இப்போது தான் பணம் கொடுத்தபோது ஏன் மறுக்க வேண்டும் அதிலும் அவளது அழுகை அது பொய்போல் தோன்றவில்லையே? இவள் ஏன் தன்னிடம் பொய்யாகி போனாள்? என்று தனக்கு தானே நூறாவது முறையாக கேட்டுக்கொண்டான்.
அவனது வீட்டை விட்டு வெளிவரும் முன்னரே அவளது டிரைவருக்கு ஃபோன் செய்தவள் காரை கொண்டு வரும்படி கூறிட அவர் அவள் வெளியே வரும் முன்னரே வந்து நின்றார் தனது புடவை தலைப்பை எடுத்து முகத்தை மூடியபடி காரில் ஏறியவள் ஹாஸ்பிடல் போக சொன்னாள்.
அவரும் செல்ல ஹாஸ்பிடல் வாசலில் இறங்கியவள்.
“நீங்க கேப் புக் பண்ணி வீட்டுக்கு போங்கண்ணா நானே போய்க்கிறேன் அண்ட் வீட்ல யாருக்கும் நான் ஹாஸ்பிடல் வந்தேன்னு சொல்லிடாதீங்க ப்ளீஸ் பெருசாக்கிடுவாங்க” என்றுவிட்டு அவருக்கு தனது பர்ஸ்ஸிலிருந்து கேப் க்கு பணம் எடுத்து கொடுத்தவள் சாவியை வாங்கி கொண்டு உள்ளே சென்றாள்.

அது அவளது தோழன் ஷர்மா அறிமுகம் செய்து வைத்த டாக்டர் என்பதால் அவரிடமே சென்றாள்.
அவளை பார்த்து பதறியவர் என்ன ஆயிற்று என்று விசாரிக்க சேலை தடுக்கி பார்க்கில் விழுந்ததாக கூறினாள் ஆனால் அவர் மருத்துவர் அல்லவோ கழுத்திலிருந்த காயத்தையும் உதட்டின் காயத்தையும் கண்டவர் அவளது நிலையை புரிந்து என்னவென்று உன்னிப்பாக கேட்க அவளால் மறுக்கமுடியாது அவளுக்கும் அவளது காதலனுக்கும் சிறு மிஸ்அண்டர்ஸ்டான்டிங் ஷர்மாவிடம் கூற வேண்டாம் இது பர்சனல், நாளைக்கு தனக்கு ஒரு மீட்டிங் இருப்பதாகவும் அதற்குள் இதெல்லாம் சரியாகவேண்டும் என்று கேட்டாள் அதை கேட்ட மருத்துவர்

“ஒரே நாள்ல குணமாகுறது கஷ்டம்மா நாளைக்கு ஃபுல் டே ரெஸ்ட் எடுத்துட்டு ஆயிண்ட்மெண்ட் கரெக்ட்டா ரெண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை போட்டாதான் நாளை மறுநாள் கொஞ்சம் குறையும்” என்று கூற
நாளை இரவு வரை இங்கேயே தங்கி கொள்ள முடியுமா? இரவு தான் மீட்டிங்? என்று அவள் கேட்க அவளுக்கு அட்மிஷன் போட்டு காயத்திற்கு மருந்திட்டு அவளது தூக்கத்திற்கு டிரிப்ஸ் ஏற்ற சொல்லி மருந்து மாத்திரைகளை கொடுத்து சென்றார் அவர்.
அருந்ததிக்கு ஃபோன் செய்து தனக்கு ஒரு விளம்பரதாரர் உடன் மீட்டிங் இருப்பதாகவும் அதற்காக சென்று கொண்டு இருப்பதாகவும் நாளை காலைதான் வருவேன் என்றும் அப்படியே பங்கஷனுக்கு தேவையான ஏற்பாடுகளை பார்வையிட வேண்டி இருப்பதால் வர தாமதம் ஆகும் என்று கூறி வைத்தவள்.
நர்ஸ் டிரிப்ஸ் போட்டு விட்டு வெளியேறியதும் தான் ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைத்திருந்த அவன் அன்று ஷூட்டிங்காக கட்டிய தாலியை எடுத்து பார்த்தாள்.
அவனது பழைய நினைவுகள் அதிகம் ஆகும்போது அதை யாருக்கும் தெரியாமல் அணிந்திருப்பாள்.
இந்த ஆறுமாத காலத்தில் அவனுடன் அவள் செலவிட்ட தருணங்களை பொக்கிஷங்களாய் மனதில் சேர்த்திருந்தாள்.
அவனோடு சேராதுபோனாலும் அவனுடன் சேர்ந்து பயணித்த நினைவுகள் போதும் என இருந்தவளுக்கு இப்போது இருவருக்கும் மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி விழுந்து விட்டதே எதை செய்து இதை சரி செய்வாள்.

அவனது நியாபகமும் அவன் அவளை பேசியதும் ஒவ்வொன்றாய் மீண்டும் மீண்டும் மனதை ரணமாக்க
அவன் இப்போது ரெக்கார்ட் செய்த சாங்கை ஓடவிட்டபடி கேட்டவள் தன் தாலியை இறுக பற்றியபடி கண்களில் கண்ணீர் வழிய பெட்டில் சாய்ந்து அமர்ந்தாள்.
வலியை கொடுத்தவனும் அவனே இப்போது ஆறுதலை தேடுவதும் அவனிடமே என ஆனது அவளுக்கு.
எப்படியாவது யாருக்கும் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனை தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என எண்ணியவள் அழுதால் தனது முகமே தன்னை காட்டி கொடுத்துவிடும் என்று உணர்ந்தவள் வலியை தன்னுள் புதைத்து வேதனையை விடுத்து உடம்பை சரி செய்வதில் கவனமானாள்.
ஆனால் அவன் பேசிய வார்த்தைகள் காதுக்குள் ரீங்காரம் இட்டு கொண்டு இருந்தது மனதை ஊசி வைத்து குத்தியது போல இருந்தது.
ஆனால் இப்போது தான் திடமாக வேலைகளை முடித்து கொடுத்துவிட்டு ஷர்மாவின் இடத்திற்கே சென்றுவிட வேண்டும் என்று எண்ணியபடி தன் மனதை கல்லாய் மாற்ற முயற்சித்து கொண்டு இருந்தாள்.
அப்படி இப்படி என எதை எதையோ நினைத்தவளுக்கு வலி நிவாரணி கொடுத்திருக்க உறங்கி விட்டாள்.

அங்கோ
தான் கொடுத்த பணத்தை வேண்டாமென தன் கையில் கொடுத்து சென்றவளின் வலி நிறைந்த பார்வை அவனது மனதை ஏதோ செய்ய
அவசரப்பட்டு அவளை பேசிட்டோமோ? என்ற எண்ணம் லேசாக உதிக்க அடுத்த நொடி அவள் பேசியதை தான் தானே கேட்டானே அதனால் அவள் தன் சித்தி ஏற்பாடு செய்த ஆள்தான் என உறுதியாக நினைத்தவன் தன் மூலம் வரும் பணம் வேண்டும் ஆனால் தான் கொடுக்கும் பணம் வேண்டாமென கொடுத்து தன்னை அவமானபடுத்தி சென்றாள் என்று அவள்மேல் கோவத்தை அதிகரித்தவன் வேகமாக நடந்து உள்ளே சென்று அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தான்.

ஆனால் அவனது மனமோ ஏதோ தாங்காத பாரத்தை சுமப்பது போல் இருந்தது.
‘என்ன இது அவ செஞ்ச துரோகத்தை தானே கண்டுபிடிச்சேன் அப்புறம் ஏன் நமக்கு ஏதோ கஷ்டமாவே இருக்கு?” என்று எண்ணியவனுக்கு தேவை இல்லாமல் அவளை முத்தமிட்டது நியாபகம் வந்தது.

‘வெறுப்பவனுக்கு இப்படியா இதழை மெல்லும் அளவுக்கு முத்தமிட தோன்றும்? என்னை வுமனெய்சர்னு தப்பா நினைச்சு இருப்பாளோ? நினைச்சா நினைக்கட்டும் பணத்துக்காக அவ பன்றது மட்டும் என்னவாம்?’ என்று எண்ணியவன்.
முத்தமிடும்போது அவளது கண்கள் காட்டிய அதிர்ச்சியும் அதன்பின் அவளது மூடிய கண்களில் வழிந்த கண்ணீரும் உண்மையாகவே பட்டது.
ஆனால் ஏனோ அதை அவனால் கடந்து போகவே முடியவில்லை.
இருந்தும் அவள்மேல் இருந்த கோவத்தில் அந்த நினைப்பை புறம் தள்ளிவிட்டு நாளைய பார்ட்டி முடிந்ததும் நமக்கு மீட்டிங் முடித்துக்கொண்டு கிளம்பிவிட வேண்டும் என்று எண்ணி இருந்தவனுக்கு
அழைப்பு வந்தது அவனது சகோதரன் ரியோட்டோவிடமிருந்து

அவனிடம் நடந்ததை எப்படி சொல்வது என்று தயங்கியபடி எடுத்தவன் பொதுவாக மட்டும் பேச அவனோ அவனது முகத்தையும் சிவந்துபோய் லேசாக வீங்கி இருந்த அவனது இதழையும் கண்டு அதிர்ந்து

“என்னடா ஆச்சு ஏன் இப்படி இருக்க? நியூட்ரிஷியன் சரியா உன் டையட்ட கவனிக்கலையா? டாக்டர்கிட்ட செக் பண்ணியா? ஏதாவது இன்ஃபெக்ஷனா?” என்று வரிசையாக கேட்க
சமாளிக்க முடியாமல் தினறியவன்.
ஒன்றுமில்லை என்றும் ஆசையாக இருந்ததால் காரம் சாப்பிட்டு விட்டதாகவும் அதனால் சிவந்து போய் இருப்பதாகவும் கூறி சமாளிக்க அவனை நம்பாத பார்வை பார்த்தவன் கவனமாக இருக்கும்படி கூறிவிட்டு வைத்தான்
ஆனால் அவனுக்கு சந்தேகம் தான்
‘அவன் கேட்டதும் டக்கென்று காது சிவக்க அவனது கன்னமும் சிவந்தது அதை வைத்தே அவன் பொய் சொல்கிறான் என்று உணர்ந்தவன் சத்தியமா இவனுக்கும் அவனோட அந்த பி.ஏ க்கும் தான் ஏதோ நடந்து இருக்கு அதைதான் மறைக்கிறான். இவன் கண்டிப்பா அந்த பொண்ண லவ் பன்றான் போல? அதான் பொய் சொல்றான்’ என்று எண்ணியவன் சிரித்துக்கொண்டான்.
அவனுக்கோ அவளது தேஜூவின் நியாபகங்கள்.

ரியோட்டோவிடம் பேசி வைத்தவனுக்கு முகமே சிவந்து விட்டது ‘என்ன இது? நாம கோவமா தானே அவளை கிஸ் பன்னோம் என்னமோ புடிச்சு கிஸ் பன்ன மாதிரி அண்ணா கேட்டதும் நமக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சே?’ என்று எண்ணியபடி தன் தலையை கோதியவனுக்கு மீண்டும் ஃபோன் வர எடுத்து பேசினான்.
அவனது ஜப்பான் மேனேஜர் தான் செய்து இருந்தார்.

அவர் கூறியது டிடெக்டிவ் அவனுக்கு ஃபோன் செய்ததாகவும் ரீச் ஆகவில்லை என்றும் கூறினார்
விஷயம் என்னவென்று கேட்க அவர் சொன்ன செய்தி அவனுக்கு இடியாய் வந்து விழுந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *