Skip to content
Share:
Notifications
Clear all

ஒரு நட்சத்திரத்தின் சுயசரிதை

1 Posts
1 Users
0 Reactions
482 Views
(@santirathevan_kadhali)
Active Member
Joined: 1 year ago
Posts: 8
Topic starter  

வானில் நானும் தான் மின்னினேன்

நிலவுக்கு ஈடாக என் ஒளியில்லை

அம்மாவாசை கொண்ட நிலவை கொண்டாடினர்

என்றும் ஒளியுடன் திகழம் எனக்கோ

மனிதர்கள் மத்தியில் மதிப்பு குறைவுதான்

தூரத்தில் இருப்பதால் நான் கண்களுக்குப் புலப்படவில்லை 

புவிக்கு அருகில் இருப்பதால் நிலவு தெரிந்தது

புவியில் வாழும் மனிதர்களைக் கண்டேன்

என்னை கேலி செய்தவர்களைக் கண்டு சிரித்தேன்

உண்மை மறைந்து பொய்கள் நிலைக்கும் உலகில்

நன்மைக்கு காலம் இல்லை என்றுணர்ந்தேன்

உண்மைக்கும் என் நிலை தானோ?

 

 

 


   
ReplyQuote