Skip to content
Share:
Notifications
Clear all

அத்தினியின் ஆசை

1 Posts
1 Users
0 Reactions
356 Views
அனுஷா டேவிட்
(@fellik)
Estimable Member
Joined: 1 year ago
Posts: 77
Topic starter  

அத்தினியின் ஆசை

 

புத்தம் புதிய பூமியில்

பூத்து குலுங்கிடும் விருட்சத்தின் நடுவே

வேழம் ஒன்று கம்பீரமாக

வத்தகையை ருசிப்பதை கண்ட

அத்தினி ஆசை கொண்டு அருகே செல்ல

களிரோ நாட்டம் இன்றி கடந்தது பூவனம் நோக்கி

தும்பியோ துயர் கொண்டு தன்னை நோக்க

வழுவை வலுவாய் இருந்தும்

ஆனை தான் அழகில்லையோ என்றெண்ணி

ஓங்கலது ஒப்பனை செய்து

அம்பகம் முழுவதும் ஆசையை நயனித்து

பொங்கடி பொற்பாதமதில் வண்ணப் பூச்சுகள் பூசி

கும்பிக்காக காதலுடன் காத்திருந்தது அது வரும் வழியே...

யார் அதற்கு சொல்வார்...?

காதல் ஒப்பனையற்ற நேயத்தின் நேசப்பரிமாற்றமென்று....!

 

✍️அனுஷாடேவிட்


   
ReplyQuote