இயற்கையில்லா பொய்கை
இயற்கையில்லா பொய்கை
அன்று
சுற்றி பச்சை விருட்சங்களும்
அடித்தளம் சமதளமற்ற மணற்பரப்பையும்
மேலே சமதள நீர்பரப்பையும்
நீரிலே வண்ண அல்லிகளும்
அல்லிகளினூடே நாரைகளும் நீர் காகங்களும்
நீரூற்றில் ஒட்டி உறவாட விரும்பாத இலைகளும்
மின்னும் செங்கதிரொளியினால் சிதறுண்டு ஓடும் சிறு மீன்களும்
தடாகத்தில் நீந்தி ஆட்டம் போடும் சிறுவர்களும்
கள்ளூர பார்வை பரிமாறும் காதலர்களும்
குட்டையில் நெளியும் ஆகாய பிரதிபிம்பத்தை களைத்தும்
இருளின் நிலவன் இருவன் என்றும்
ஊடல் கொண்ட நாம்
அறியவில்லை இவையனைத்தும் மாயமாகுமென்று.....
ஆம்...
இயற்கை நீரூற்று இன்று
நெகிழிகளின் உறைவிடமாக
காகித குப்பைகளின் இருப்பிடமாக
கழிவுகளின் கழிவறையாக
உபயோகமற்று வறண்ட நிலையில்
மனிதன் உருவாக்கினான்
இயற்கையில்லா பொய்கையை
தன் செல்வ செழிப்பில்
தன் வசிப்பிடத்தின்
ஒரு பகுதியாய்
ஆழிபோல் ஆர்ப்பரிக்கும்
செவ்வக பளிங்கு பொய்கையை....!
✍️அனுஷாடேவிட்
Leave a reply
- 143 Forums
- 2,487 Topics
- 2,970 Posts
- 1 Online
- 2,061 Members
