முதல் காதல்
முதல் காதல்
என் வாழ்வின் வசந்தத்தின் வாசமே ...!
நீயே என் சுவாசமே...
என் முதல் காதலே ...
என்னை முற்றிலும் மாற்றிய காதலே ...
எத்தனை யுகம் அழகழகாக கடந்து சென்றாலும்
என் உயிர் முழுவதும் நிறைந்தவனே...
என் சுவாச காதலே...
உன்னை மறக்க முடியுமா....
உன் முதல் பார்வையிலேயே
என் கண்களுக்குள் ஊடுருவி
என் உயிரில் கலந்து
என்னை அழகாக்கியதை மறக்க முடியுமா....
மனம் கவர்ந்த மாயவனோடு
கைக்கோர்த்து நிலவுமங்கையின் ஒளியில்
காதல் சுற்றுலா சென்ற நாட்களை மறக்க முடியுமா....
என் கரம் பிடித்து 'உயிருள்ள வரை இனி உன்னை பிரியேன்'
என்று மொழிந்ததை மறக்க முடியுமா....
கவிதை எழுதிய கைகள் கூட
வெட்கத்தில் சிவக்கின்றன
உன்னை பற்றி எழுதும் போது...
உன் முதல் கடிதம்
இன்னும் பத்திரமாய் என் டைரியில்...
உன் முதல் முத்தம் நம் காதலின் முத்திரையாக என் நெற்றியில்...
உன் புன்னகையில் என் மனதை
சிறைகொடுத்து தவிக்கிறேன்
பேச மொழியின்றி...
என் காதலின் ஆயுள் காலம்
என் இதயம் துடிப்பதில்
இருக்கிறதடா...
கற்பனைகளில் காவியம் வடித்த நாம்
நிஜத்தில் காவியம் படைக்க கைப்பற்றி காதல் தேசம் செல்வோம் வா...
✍️அனுஷா டேவிட்
- 130 Forums
- 2,094 Topics
- 2,338 Posts
- 8 Online
- 1,408 Members