Skip to content

Writer BhuvanaCHandresekaran amma review for நன்விழி

1 Posts
1 Users
0 Reactions
356 Views
Daffodills
(@daffodills)
Posts: 118
Member Author Access
Topic starter
 

#uniquereadingchallenge
#விமர்சனம்புவனாசந்திரசேகரன்
Batch 2-
04- நன்விழி- பிரவீணா தங்கராஜ்
சிறிய கதைதான். சீக்கிரம் முடித்து விடலாம் என்பதால் இதனை முதலில் எடுத்தேன்.

நன்விழி என்கிற துணிச்சலான பெண்ணின் கதை. மறைந்த இராணுவ வீரனின் மனைவி. ஒரு குற்றவாளி கும்பலிடம் பிணையக் கைதியாகச் சிக்கிக் கொள்கிறாள். நிறைமாத கர்ப்பிணி. கொலை செய்யத் தயங்காத கொடியவர் கூட்டம். அவளைப் புரிந்து கொள்ளாமல் அவளைப் பற்றித் தவறாகப் பேசுகின்ற மனிதர்களின் மத்தியில், தனது நண்பன் நித்திஷுடன் மாட்டிக் கொண்டிருக்கும் நன்விழி தப்பிக்கிறாளா, இல்லையா என்பதைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

காதல், ரொமான்ஸ், குடும்ப சண்டைகள், ஆன்ட்டி ஹீரோ, ஆன்ட்டி ஹீரோயின் இல்லாமல் வித்தியாசமான கதைக்களத்தில் கதையை அமைத்து விறுவிறுப்பாகத் தந்திருக்கும் பிரவீணாவிற்கு எனது பாராட்டுகள்.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, சிறிய கதை என்றால் என்ன, என்னால் நல்ல கருத்துகளைக் கதைக்குள் பொதிந்து வைத்துத் தரமுடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஆசிரியர்.

பரபரப்பான திரைப்படம் பார்த்த உணர்வு. வாழ்த்துகள் பிரவீணா.

தவறாமல் அனைவரும் படித்துப் பாருங்கள்.

புவனா சந்திரசேகரன்.

Facebook pageபுவனா அம்மா நன்விழி கதைக்கு அளித்த விமர்சனம்

 
Posted : April 24, 2024 7:13 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved