Skip to content
Notifications
Clear all

MARK-2024 வெற்றியாளர்

5 Posts
5 Users
4 Reactions
423 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 556
Member Admin
Topic starter
 

 வணக்கம், 

    இனிய உழைப்பாளர் தின வாழ்த்துகள் பிரெண்ட்ஸ்

         praveenathangarajnovels.com தளத்தில் முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024 போட்டியின் வெற்றிப் பெற்றவர்களின் கதை பெயரை அறிவிக்க வந்துள்ளேன். 

   போட்டியில் கலந்து கொண்ட கதைகள் 25. Feb-10 தேதிக்கு பின் போட்டிக்கு பெயர் கொடுக்க சிலர் வந்தார்கள்‌. கிட்டதட்ட 17 பேரை தவிர்த்து விட்டேன். நேரத்திற்கு பின் கொடுத்தவர்களை ஏற்றுக் கொள்ள சிறுயோசனை, எனக்கு 25 கதைகளை வைத்து முதலில் முயற்சிப்போம் என்ற எண்ணமும் காரணம். 

25 கதைகளில் 16 கதைகள் முடிவுற்றது.

   இதில் நாங்கள் நட்பிற்காக எழுதுகின்றோம் போட்டியில் எங்கள் கதைகளை எடுத்துக்கொள்ள வேண்டாமென்று கூறி, போட்டிக்கு எழுதுபவருக்கு வழிவிட்டு, சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர்களும் உண்டு. 

   முடிவுற்ற எழுத்தாளரின் கதை மற்றும் பெயர் பட்டியல் 👇.

 இதிலேயே சிறப்பு விருந்தினரை அடைப்புக்குறியில் சுட்டிக் காட்டியுள்ளேன்.

                 Numbers   &    Story Names   - Writer's Name 

                Mark-1          அரளிப்பூ - Subha Natarajan 

                Mark-2          என் தேடலில் தொலைந்தவன்(ள்) நீ - Moses 

                Mark-3          சுடரி இருளில் ஏங்காதே - Shalini Thangapandian  

                Mark-4          கானல் பொய்கை - Nithya Mariappan (Guest Writer)

                Mark-5          துளி தீயும் நீயா? - Jeyalakshmi Karthik (Guest Writer)

                Mark-6          எனை நீங்காதிரு - Narmadha Subramaniyam (Guest Writer)

                Mark-7          தீரா காதலே - Anusha David 

                Mark-8         நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே? -Miruthulla Aswin 

                Mark-9         விருப்பமில்லா மணமேடை விரும்பியவளோடு - Kani Suresh 

                Mark-10        அழகிற்கு ஏதடி வர்ணங்கள் - FaJeeha Mumthaj 

                Mark-11        என் உயிரின் ஜனனம் நீயடி - Pavithra Krishnan 

                Mark-12        முகப்பு இல்லா பனுவல் - Arulmozhi Manavalan 

                Mark-13        ஒரு தென்றல் புயலானால்... - Gayathri 

                Mark-14        அன்பில் துவங்கி அன்பால் இணைவோம்! - Sowndarya Umayaal 

                Mark-15        நாணயம் - Sujatha Nadarajan (Guest Writer)

                Mark-16        நினைவில் ஒரு வானவில் - Silviya Manoharan  

                Mark-17        காதலின் காலடிச் சுவடுகள் - Padma Sri 

                Mark-18        கொஞ்சிட...  கொஞ்சிட... - Devi Srinivasan 

                Mark-19        கண்ணுக்குள் கடல் - Praveena Thangaraj (Guest Writer)

                Mark-20        அக்னி சாட்சி - author அவங்க சொல்ல விருப்பப்படலை 

                Mark-21         காதலை கண்ட நொடி - Jayalakshmi. S

                Mark-22         மாண்புறு மங்கையே - Chitra Haridas 

                Mark-23         தந்தை மண் - Nandhini Sugumaran (Guest Writer)

                Mark-24         என் வசம் நீ உன் சுவாசம் நான் - Barani Usha 

                Mark-25.        கரை சேராத அலைகள் - Sasikala Ethiraj 

  போட்டியில் கலந்து கொண்டு முடிக்க இயலாமல் சில காரணத்தால் ongoing novels மாற்றிக்கொண்டவர்கள் சிலர்அதில் போட்டியாளரும் guest writers உண்டு. 

    இதில் சிறப்பு விருந்தினரின் கதைகள் போட்டிக்கு செல்லப்போவது இல்லை. அவர்கள் என்னுடையது புதுதளம் என்பதாலும் மற்றும் போட்டியின் தீம் பிடித்ததாலும் எழுத வந்தவர்கள்.

அதை தவிர்த்து போட்டிக்கு வந்த கதைகளில்

*கதைக்கரு*

*எழுத்துநடை* 

*நடுவரின் வாசிப்பு தீர்ப்பு*

*வியூஸ்* 

*வோட்டிங்* என்ற விதத்தில் தேர்ந்தெடுத்து உள்ளோம். 

முதலில் கெஸ்ட் ரைட்டரை கௌவுரவிக்கும் பொருட்டு அவர்கள் கதை பெயரை வரிசையிட்டு நன்றி உரைக்கின்றேன்.

   கதை தீம் நன்றாக உள்ளது, நல்ல வாய்ப்பாக கருதி, நட்பிற்காக என்னோடு இணைந்து கொண்டதற்கும் ஒரு மனம் வேண்டும். Guest writer's தாங்கள் என் தளத்தில் கதை பதிவிட்டு எழுதி முடித்தமைக்கு மட்டற்ற மகிழ்ச்சி. உங்கள் அன்பும் ஆதரவிற்கும் நன்றிகள் பல❤️🤝

   உங்களை வெறும் பாராட்டோடு நன்றி செலுத்தி அனுப்ப மனமில்லை. அதனால் கதை எழுதி முடித்த guest writers-க்கு வெற்றி பெறுபவர்களுக்கான பரிசு கோப்பையை போல உங்களின் படைப்புக்கும் பரிசு வழங்கியுள்ளேன்.‌ 

Guest writer's 

Mark-4 ✳️ கானல் பொய்கை - நித்யா மாரியப்பன்(பெயர் மறைத்து எழுதிய எழுத்தாளர்)

Mark-6 ✳️ எனை நீங்காதிரு-நர்மதா சுப்ரமணியம் (பெயர் மறைத்து எழுதிய எழுத்தாளர்)

Mark-23 ✳️ தந்தை மண்-நந்தினி சுகுமாரன்(பெயர் சொல்லி எழுதிய எழுத்தாளர்)

Mark-20✳️ அக்னி சாட்சி- (இவங்க நேம் அவர்களாகவே விருப்பம் இருந்தா சொல்லிக் கொள்வதாக உரைத்துள்ளார்)

  ஆவலோடு எதிர்பார்த்த போட்டியின் வெற்றி வாகை சூடிய எழுத்தாளர் கதை‌களை, நடுவர் எழுத்தாளர் மோ.முத்துலட்சுமி மோகன்தாஸ் அவர்கள் வாசித்து மதிப்பெண்ணின் அடிப்படையில் கதையை தேர்ந்தெடுத்து உள்ளார். 

 அதற்கு முன் நடுவரை பற்றி சிறுவுரை.🖇️👉Competition Judge-Introduction

முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள் -2024 என்ற இப்போட்டியில் நிதர்சன உண்மைகளையும், சமூகத்தில் ஏற்படும் சீர்கேடுகள் தங்கள் குடும்ப அமைப்புகளில் தனி மனிதரிடம் பாதித்தோ அல்லது குடும்பமே பாதித்து அதிலிருந்து எவ்வாறு மீள்வது, கையாள்வது, களைவது இத்தகைய அடிப்படை கொண்ட கதைகளை வெகுவாய் எதிர்பார்த்தேன். 

அதில் பாந்தமாய் பொருந்தி போட்டி விதிமுறையில் இருக்க வேண்டிய தேவைகள் இருக்கப் பெற்று, தேர்வான கதை.

வெற்றி பெற்ற கதைகள் மற்றும் எழுத்தாளர்

🌟தீரா காதலே- Anusha David

🌟நம்முள் பூத்த காதல் எ(இ)ங்க-Miruthula Aswin 

🌟முகப்பு இல்லா பனுவல்-Arulmozi Manavalan 

🌟என் உயிரின் ஜனனம் நீயடி -Pavithra Krishnan

🌟அரளிப்பூ-Suba Natrajan(suko) 

 *அரளிப்பூ* -நிறைய அமங்கள வார்த்தைகள் கலந்திருந்தது. படிக்கும் போது அதிகமாக இருப்பதை தவிர்த்திருக்கலாமென உரைத்தார். 

  *அழகிற்கு ஏதடி வர்ணங்கள்* கதை சின்ன காரணத்தால் வெற்றி வாகையிலிருந்து தவறியது. 

*சுடரி இருளில் ஏங்காதே* உங்கள் கதையும் நன்றாக உள்ளதாக அறிவித்தனர் வெற்றி வரிசை தரப்பில் பின் தங்கியுள்ளது என்றார். 

  மற்ற கதைகள் எந்த விதத்திலும் தாழ்ந்ததென்ற அர்த்தமில்லை. ஏன் வெற்றி பெற்ற கதையிலும் எழுத்து பிழை இருந்தது. ஆனாலும் சதவிததில் முன்னுக்கு சென்றிருக்கலாம். 

நிறை குறைகளை மேம்படுத்திக்க கொள்ள அவர்கள் தங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 

*அதிகபட்ச எழுத்து பிழை 

*கோர்வையற்ற காட்சிகள் மாறுபடுதல்

*வாக்கியத்தில் நடைமுறை தமிழும், பேசும் வசனத்தில் தூய தமிழ் என்று கலந்து கட்டியது.

*ஆங்கில கலப்பு இடையிடையே கதையின் பகுதியிலும், அடைப்புகுறியில் எழுத்தாளர் பேசுவதும்

*போட்டிக்கு ஆழமான உணர்வை வாசகரிடம் கடத்தாது

*முரணான கருத்துக்கள்.

    இத்தகைய வரிசையில் பின் தங்கியுள்ளதாக நடுவர் அறிவித்தார். 

மற்றபடி கலந்துக் கொண்ட எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தில் கவனமேற்றி முயன்றால் நிச்சயம் ஒரு நாள் பரிசும், புகழும் பெற இறைவனை வேண்டுகின்றேன்.‌ என்றும் விடாமுயற்சியை மட்டும் கைவிடாதீர்கள்.‌ 

   புதுதளம் என்பதாலும் போட்டியில் வெற்றியோ தோல்வியோ தாங்களும் களத்தில் குதித்து எழுதி தங்கள் பங்களிப்பை கொடுத்த பங்கேற்பாளர், நிறை குறையை ஏற்று தங்கள் எழுத்தை மேம்படுத்தும் ஒரு வாய்ப்பாக கருதுவீர்கள் என்று நம்புகின்றேன். 

 இங்கே கதை எழுதிய அனைவரும் கூறியது 'வெற்றியோ தோல்வியோ எங்களுக்கு தீம் பிடிச்சிருக்கு' என்றதே. 'மற்றதை அனுபவங்களாக ஏற்போம்' என்றனர். 

  ஏதேனும் குற்றம் குறை இருந்தாலும் தெரிவியுங்கள். நடுவருக்கு யார் என்ற அறிமுகம் கூட கொடுக்காமல் கதையை மட்டும் வாசித்து சொல்ல சொன்னேன். 

மேலும் எவ்வித வருத்தமும் இல்லாமல் போட்டி நடத்தியதாக நம்புகின்றேன்.‌

   நானுமே தளத்தில் போட்டி நடத்துவதில் புதிதானவள்.

  யாரேனும் தளத்தில் எழுத வேண்டுமென்று எண்ணினால் அணுகவும்.

மீண்டும் சந்திப்போம். 

நன்றி 

பிரவீணா தங்கராஜ்.

 

*கெஸ்ட் ரைட்டர் உங்க கதைகளை வாசிக்க கொடுக்க முடியலை. காரணம் டாக்குமெண்ட் நீங்க அனுப்பலை. அதோட நான் தான் போட்டி கதை மட்டும் முதலில் வாசிக்க கூறிவிட்டேன்‌. 

கலந்து கொண்ட எழுத்தாளர்களின் கதைகள் வாசித்து மேற்கொண்டு அவரை பின்தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்று எண்ணும் வாசகருக்கு pratilipi link, amazon link or blog link இங்கே கொடுகின்றேன். 

வாசகரான உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகின்றேன். 

🌟தீரா காதலே- Anusha David இவங்க இப்ப தான் எழுத ஆரம்பித்து இருக்கின்றார். Readers ஆக இருந்து Writer ஆக பரிணாமம் அடைகின்றார். முதல் கதை எனக்கு இந்தளவு இவங்க எழுதியதே ஆச்சரியம் அளித்தது. தற்போது எழுத்து சம்பந்தமான link இல்லை. 

🌟நம்முள் பூத்த காதல் எ(இ)ங்க-Miruthula Aswin 🖇️👉Miruthula Aswin Blog link

🌟முகப்பு இல்லா பனுவல்-Arulmozi Manavalan 🔗👉அருள்மொழி மணவாளன் பிரதிலிபி link

🌟என் உயிரின் ஜனனம் நீயடி -Pavithra Krishnan 🔗👉பவித்ரா கிருஷ்ணன் பிரதிலிபி lilnk

🌟அரளிப்பூ-Suba Natrajan(suko) 🔗👉சுபா நடராஜன் பிரதிலிபி லிங்க்

 

           மேலும் போட்டியில் கலந்து கொண்டு கதை முடித்தவர்களின் pratilipi link or amazon link  

சுடரி இருளில் ஏங்காதே - Shalini Thangapandian  

விருப்பமில்லா மணமேடை விரும்பியவளோடு - Kani Suresh 🔗👉Kani suresh பிரதிலிபி link

அழகிற்கு ஏதடி வர்ணங்கள் - FaJeeha Mumthaj 🔗👉Fajeeha mumthaj பிரதிலிபி lilnk

காதலின் காலடிச் சுவடுகள் - Padma Sri 

காதலை கண்ட நொடி - Jayalakshmi. S🖇️👉Jayalakshmi.S pratilipi link

 மாண்புறு மங்கையே - Chitra Haridas Chitra Haridas pratilipi link

என் வசம் நீ உன் சுவாசம் நான் - Barani Usha 

             

                                             💖எழுத்தை நேசிப்போம் எழுத்தாளரை அல்ல...💖

Amazon author page link kodutha edit செய்து கொள்வேன். ரைட்டர் choice. நாளை காலையில் முகநூலில் பதிவிடுகின்றேன். 

கோப்பை நேற்று அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. யார் யாருக்கு வந்ததோ இல்லை இனி தான் வரும். மீண்டும் நன்றி அன்பும் ஆதரவும் 🫂❤️

 
Posted : 30/04/2024 11:26 pm
Topic Tags