Notifications
Clear all
நீக்குகின்றேன் செதில்களை
Praveena-காதல் கவிதைகள்
1
Posts
1
Users
0
Reactions
478
Views
அக்கடை கடக்கும் போதெல்லாம்
ஒவ்வாமை தான் எனக்குள்
நாசியினை கைக்குட்டையால்
நுகர்ந்துகொண்ட பின்னும்
ஒவ்வாமை சமிக்ஜை போகாது
அத்தகைய பாவையான யென்னிடம்
மீன் போன்ற கயல்விழி போன்றவளேயென்ற
ஏக வெள்ளித்திரை வசனத்தை பேசியே
அன்பை கொட்டிவிட்டாய்
காதல்யெனும் மரத்தை வளர்த்துவிட்டாய்
அதனாலோ என்னவோ
எனக்கு பிடிக்காத அக்கடையின் வாடையை
சகித்துக் கொண்டு வாங்கி விடுகின்றேன்
உன் தாயின் கை பக்குவத்தில் பாதியாவது
வரவேண்டுமென்ற ஆசையுடன்
நீக்குகின்றேன் மீன் செதில்களை .
-- பிரவீணா தங்கராஜ் .
Posted : May 16, 2024 4:33 pm
Leave a reply
Forum Information
- 143 Forums
- 2,639 Topics
- 3,148 Posts
- 3 Online
- 2,163 Members
Our newest member: Lashmi
Latest Post: முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-25
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
