Skip to content
Notifications
Clear all

ஈகோவினுள்...ஒளிந்துயிருக்கின்றன (படைப்பு மின்னிதழில் பிரசுரமான கவிதை.)

1 Posts
1 Users
0 Reactions
335 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 1 year ago
Posts: 677
Topic starter  

ஒளிந்து கொண்டு இருக்கின்றன
அரையுறக்கத்தில் உந்தன் அணைப்பும்
உன்னிதயத்தில் என் முகப்பதிப்பும்...
கசந்த குழவி இனிப்பை அள்ளி
கொட்டியதாக எண்ணவைக்கும்
சமயலறையில் இடைப்பற்றிய
உந்தன் யிறுக அணைப்பால்
கரண்டியில் துழாவி குழம்பை ருசிப்பார்த்து
கண்களை உருட்டுமென்னை
தாயங்கள் ஆடுகின்றாய் என்பாய் நீ...
மிக பிடித்த பாடல்வரிகளில்
உன் புருவத்தை ஏற்றயிறக்கம் செய்து
என் போலி சினத்தில் குறுநகை செய்திடுவாய்...
சட்டென சங்கமிக்கும் இதழ் ஒற்றலால்
வெட்கம் சிவந்துவோட செய்வாய்...
உந்தன் வருகைக்காக நேரங்களை நெட்டிமுறித்து
இனிய நினைவுகளோடு காத்திருப்பேன்
இவை யெல்லாம்
ஒளிந்து கொண்டு யிருக்கின்றன
நீயும் நானும் போடும் சண்டைகளில்
யார் முதலில் பேசுவது என்ற ஈகோவினுள்...
                             -- பிரவீணா தங்கராஜ் .

படைப்பு மின்னிதழில் பிரசுரமான கவிதை. 


   
ReplyQuote