Skip to content
Notifications
Clear all

பூட்டி வைத்த காதலிது

2 Posts
2 Users
1 Reactions
371 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 1 year ago
Posts: 691
Topic starter  

என் இதயம் சென்று திரும்பும்
உன் மூச்சுக் காற்று அறிந்தும்
கூறவில்லையா உன்னிடம் ?!
என் கண்கள் பார்த்துத் 
திசையை மாற்றிக் கொள்ளும்
உன் ஈர்ப்பு கண்கள் உணர்த்தவில்லையா ?!
உன் இதயத்திடம்
கண்களிலிருந்து இதயத்திற்கு
என் காதலை கடத்திச் செல்லும்
இரத்தச் செல்களை பாதியிலே
வழிமறித்து புறக்கணிப்பது யார் ?
உன் மூளையா ?
நித்தமும் என் தேடலை உணர்ந்தே
உன் பாதையை மாற்றிடாது
வந்திடும் உன் கொலுசொலி பாதம்
உன் தடத்தை பின்பற்றும்
என் வன்பாதம் செல்லுதே...
பஞ்சபூத நிலமவன் கதைக்கவில்லையா ?!
யார் தான் சொல்வது ?
எந்தன் இரும்பு இதயத்திலும்
பூட்டி வைத்த காதலது
மென் பூவுடையாளானா
உன்னை கண்டு சரணடைத்ததை....!
                                 -பிரவீணா தங்கராஜ் .


   
ReplyQuote