Skip to content
Share:
Notifications
Clear all

தமிழ் உயிர்க்கட்டும்

1 Posts
1 Users
0 Reactions
331 Views
(@santirathevan_kadhali)
Active Member
Joined: 1 year ago
Posts: 8
Topic starter  

என் ஜீவனில் தமிழ் உயிர்க்க வேண்டும்
என் இறுதி மூச்சிலும் தமிழ் மணம் கமழ வேண்டும்..!!

வேற்று மொழியைக் கற்றுத் தேர்ந்தாலும்
என் இதயத்தில் தமிழே நிலைக்க வேண்டும்..!!

ஞாலத்திற்கே அழிவு வந்தாலும்
எம் தமிழ் அழிவின்றி வாழ வேண்டும்..!!

மரணமே என்னை நெருங்கினாலும்
மரண ஓலங்கள் தமிழில் ஒலிக்க வேண்டும்..!!

மறுஜென்மம் ஒன்று இருந்தாலும்
தமிழுக்குச் சேவை செய்தே வாழ வேண்டும்...!!

தமிழ் மொழியை அழித்து மகிழ கயவர்கள் வந்தாலும்
அவர்களை தமிழ் பற்றோடு அடித்து ஒழிக்க வேண்டும்..!!


   
ReplyQuote